Tuesday, January 31, 2012

ஜனவரி 30௦ முன்னிட்டு அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய 'தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம்' .



அதிரையில்  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேச தந்தை 'மகாத்மா காந்தி' அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30௦ அன்று தீவிரவாத எதிர்ப்பு  நாள் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினத்தில் 'ஷஹித் பழனிபாபா அரங்கத்தில்' தக்வா பள்ளி அருகில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது . 

இதில் 
1 .  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்   நகர தலைவர் சகோ.ப.அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமைதாங்கி தலைமையுரையாற்றினார் .
2 . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின்   நகர செயலாளர் சகோ.A.T. அப்துல்லாஹ் B.com ,D.C.P , அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும்
3 .

 சிறப்பு விருந்தினராக வருகை தந்த  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்   மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.A .பக்ருதீன் அவர்களும் ,
ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயலாளர் சகோ.முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்களும் 
SDPI  யின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்களும் இந்தியாவில் தீவிரவாதம் யாரால் உருவாகிறது என்பதை பற்றி மிக சிறப்பான  முறையில் உரையாற்றினார்கள் .



இதில் 300௦௦ க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு பயன்யடைந்தனர்.

Sunday, January 29, 2012

பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா !



பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும்
பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியச் செறிவூட்டலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதை யாராலும் தாக்க முடியாது எனவும் ஈரான் சமீபத்தில் அறிவித்தது.இதையடுத்துத் தான், ஈரானின் மிக பாதுகாப்பான அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் வகையிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் கொண்டிருப்பதாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

மொத்தம் 20 அடி நீளம் கொண்ட இந்த "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டு, 5,300 பவுண்டு வெடிப்பொருட்களை தாங்கி செல்லும் சக்தியும், பூமியில் 200 அடி ஆழத்திற்கு ஊடுருவும் திறனும் கொண்டது.போர்டோவில், ஈரான் நிறுவியுள்ள அணுசக்தி நிலையம், பூமிக்கடியில் 212 அடி ஆழத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து அப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது:மொத்தம் 20 குண்டுகளைத் தயாரிக்க அமெரிக்கா, 330 மில்லியன் டாலர் செலவழித்துள்ளது. இந்த வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது, ஈரானின் தற்போதைய பாதுகாப்பான அணுசக்தி நிலையங் களை தாக்கும் அளவிற்கு அவற்றின் திறன் இல்லை எனக் கண்டறியப் பட்டது.அதனால் அவற்றின் சக்தியை அதிகரித்து தயாரிப்பதற்காக, கூடுதலாக 82 மில்லியன் டாலர் நிதியை அரசிடம் கோரியுள்ளது பென்டகன். 2009ல், அமெரிக்க விமானப் படையின், பி -2 உளவு விமானத்தில் இந்த ரக குண்டுகளைப் பொருத்தும் ஒப்பந்தத்தை, போயிங் விமான நிறுவனம் வாங்கியிருந்தது.இவ்வாறு அந்த பத்திரிகை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















thanks to asiananban.blogspot.com

புற்றுநோய் & மகப்பேறு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்(NWF)



ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5 லட்சம் பேர் புற்றுநோயினால் இறக்கின்றனர். உலகில் உள்ள மொத்த கர்பப்பை புற்றுநொயாளிகளில் 26 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். தமிழகத்தில் 1990களில் 10 சதவீதமாக இருந்த மார்பக புற்றுநோய் 2011ல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் பெண்களிடையே அதிகரித்து வரும் புற்றுநோயின் அபாயம் குறித்து அவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவிட்டதனை கருத்தில் கொண்டு NWFன் சார்பாக இப்புற்றுநோய் மருத்துவ விழிப்புணர்வு முகாம் இலவசமாக நடத்தப்பட்டது.
NWFன் நெல்லை மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையேற்று நடத்திய இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi


புற்றுநோய் மற்றும் மகப்பேறு குறித்த விழிப்புணர்வு உரையாற்றுவதற்காக முறையே நெல்லை Peace Health Centre சேர்ந்த Dr.R.அன்பு ராஜன் அவர்களும், நெல்லை ராயல் மருத்துவமனையைச் சேர்ந்த Dr..மங்கையர்க்கரசி அவர்களும் இம்முகாமிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi
மருத்துவர் அன்புக்கரசி புற்று நோய் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்
விழிப்புணர்வு உரைக்கு பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தில் புற்றுநோய் மற்றும் மகப்பேறு குறித்து பெண்களிடையே நிலவும் சந்தேகங்களுக்கு இரு மருத்துவர்களும் மிகத் தெளிவாகவும், அழகாகவும் பதிலளித்தனர்.

முகாமில் கலந்து கொண்ட பெண்களும் எந்தவித தயக்கமுமின்றி பெண்களுக்கே உரிய பல்வேறு நோய்கள் குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகங்களையும், மேலும் ஆரோக்யமாக வாழ்வதற்கான பல யோசனைகளையும் பல்வேறு கேள்விகளின் மூலம் கேட்டு விளக்கம் பெற்றனர்.


கேள்வி-பதில் நேரத்திற்கு பின்னர் மருத்துவர்களை நேரில் சந்தித்து விளக்கம் பெற விரும்பியவர்களுக்கான தனி-நபர் ஆலோசனை நடைபெற்றது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றனர்


முகாமில் கலந்து கொள்ளும் பெண்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காக அவர்களின் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு போட்டிகளும், நல்ல பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் சில வீடியோ காட்சிகளும் தனி அறைகளில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முகாமின் இறுதியில் மேடைக்கு அழைத்து பரிசு வழங்கப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட பெண்களிடையே நிலவும் ஆரோக்யம் குறித்த தேடுதலுக்கு நம்மால் இயன்ற ஒத்துழைப்பு அளிக்கும் வண்ணம் மருத்துவம் மற்றும் ஆரோக்யமாக வாழ்வது குறித்த பல்வேறு அரிய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைவிட ஆர்வமுடன் பல பெண்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தீர்ந்து போன சில குறிப்பிட்ட புத்தகங்களை கூட மீண்டும் தங்களுக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு ஆர்வத்துடன் கோரினர்.

NWF Medical Awareness Camp at Nellai Eruvadi


Book Stall on NWF medical awareness camp Eruvadi



Children's playing section during Women's Medical Camp, Eruvadi

பிரான்சை தொடர்ந்து.. கொலன்டிலும் அமலுக்கு வருகிறது.. புதிய தடைச்சட்டம்!..

கொலன்டில் ... இஸ்லாமிய பெண்கள் 

பர்தா அணிய தடை!....


பிரான்சை தொடர்ந்து, நேற்று கொலன்ட் உள்நாட்டு அமைச்சகம் அடுத்த 
ஆண்டு முதல் பர்தா அணிய தடைசெய்யும் சட்டம் பூரணமாக அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
பொது இடங்களில் முகத்தை மறைத்தபடி செல்லுதல், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாதபடி ஆடைகளை அணிந்து அதற்கு மதரீதியான விளக்கங்களை சொல்லுதல் போன்ற விடயங்களை ஏற்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது.
thanks to qahtaninfo.blogspot.com

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய தாவா பயிற்சி முகாம் .








அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 21 /1 /2012 அன்று மாலை 4 .௦30 மணியளவில் A.L.M ஸ்கூல் லில் இஸ்லாமிய தாவா பயிற்சி முகாம் நடைபெற்றது ,இதில் பிற மத சகோதர்களுக்கு இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துக் கூறுவது என்பதை பற்றி பல ஆண்டுகள் தாவா களத்தில் அனுபவம் வாய்ந்த அறிவகம் மதரசா தாய்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தோடு இணைத்து பயிற்சிவித்தனர் .இதில் 100 க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
thanks to adiraipfi

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட்டின் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் .

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட்டின் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் .
 அதிராம்பட்டினத்தில் வருகின்ற 30 /01 /12 அன்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக காந்தி படுகொலை செய்யப்பட்ட தினமான ஜனவரி 30 ம் தேதி மாபெரும் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது .இதில் 
A.பகுருதீன் (மாநில செயற்குழு உறுப்பினர் -பாப்புலர் ப்ரண்ட் ) மற்றும் D.செய்யத் இப்ராஹிம் உஸ்மானி (அறிவகம் முதல்வர் தேனீ ) ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் .எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது .
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா .
அதிராம்பட்டினம் 


Saturday, January 28, 2012

அதிரையில் SDPI நடத்திய பழனிபாபா அவர்களின் நினைவு தின தெருமுனை பிரச்சாரம்.








   அதிராம்பட்டினத்தில் SDPI யின் சார்பாக ஷஹீத் பழனிபாபா அவர்களின் நினைவாக ஜனவரி 28 ஆம் நாள் மாபெரும் நினைவு தின தெருமுனை பிரச்சாரம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் நடைபெற்றது .
இதில் SDPI யின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்களும் ,திருவாரூர் மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் அவர்களும் சிறப்புரையாற்றினர் .தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் Z .முஹம்மத் இலியாஸ் அவர்களும் ,அதிரை நகர செயலாளர் முஹம்மத் அவர்களும் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .