Friday, June 29, 2012

ராகிங் செய்தால் பாஸ்போர்ட் பெற முடியாது !


 கோவை - ராகிங் குற்றம் செய்தவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
கோவை மாவட்டக் காவல்துறை, ராகிங் தடுப்புக் கூட்டத்தினை கவுண்டம்பாளையத்தில் 26.06.2012 அன்று நடத்தியது. இதில் பல்கலைக்கழக டீன், கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காவல்துறை கண்காணிப்பாளர் உமா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ” ராகிங் செய்வது மிகக் கடுமையான குற்றம், இந்தக் குற்றத்தினைச் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்” என்றும், அவர்கள் படிப்பினை தொடர முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ” ராகிங் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாது என்றும், பாஸ்போர்ட் பெற முடியாது” என்றும் தெரிவித்தார். ராகிங் சம்பந்தமாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம் என அவர் தெரிவித்தார். 

thanks to asiananban

ராகிங் செய்வதை கல்லூரிகள் மறைத்தால் கல்லூரிக்கு பொறுப்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் அதிகாரி உமா.


செல்போனில் பேசியதால்தான் அண்ணா மேம்பால விபத்து-பஸ் டிரைவர் கைது !


 Bus Driver Arrested Anna Flyover Bus Accident
சென்னை: செல்போனில் பேசியபடி மாநகரப் போக்குவரத்துக் கழக டிரைவர் பஸ்ஸை ஓட்டியதால்தான் விபத்து நேரிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா மேம்பாலத்தில் பஸ்சை விபத்துக்குள்ளாக்கியதாக பஸ் டிரைவர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன. சென்னை பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் நேற்று பிற்பகல்
சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவற்றை உடைத்துக் கொண்டு மேலிருந்து விழுந்தது.
இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்தனர். சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்த விபத்து நேற்று பரபரப்பைக் கிளப்பி விட்டு விட்டது.
பஸ் டிரைவர் பிரகாஷும் இந்த விபத்தில் படுகாயமடைந்தார். அவர் இடதுபக்கம் பஸ்சைத் திருப்பியபோது செல்போனில் பேசியபடியே வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களும், விபத்தை நேரில் பார்த்தவர்களும் கூறினர்.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர். டிரைவர் பிரகாஷ் வைத்திருந்த இரு செல்போன்களையும் வாங்கி பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது விபத்து நடந்த சமயத்தில் அவர் செல்போனில் பேசியது நிரூபணமானது. இதையடுத்து பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
அவரை பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கை குறித்து தற்போது போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
thanks to asiananban

ஆமா...நான் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கத்தான் போனேன்: விடுதலையான சுர்ஜித்சிங் பேட்டி !


 I Went Pakistan Spy Says Surjeet Singh
அட்டாரி: பாகிஸ்தானுக்கு தாம் உளவு பார்க்கவே சென்றதாக 30ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் நாடு திரும்பிய சுர்ஜித்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியா வந்து சேர்ந்த சுர்ஜித்சிங் அட்டாரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:30 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எனது குடும்பத்தினரையும் குழந்தைகளையும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். சரப்ஜித்சிங்கும் கூட
நன்றாகத்தான் இருக்கிறார். அவரிடம் இருந்து எனக்கு எந்த செய்தியும் வரவில்லை. அவருடைய விடுதலைக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன். வாரம் ஒரு முறை சரப்ஜித்சிங்கை சந்தித்துப் பேசினேன். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன். அது எப்படி என்பது பின்னர்தான் தெரியவரும் என்றார்.
இச்சந்திப்பின் போது நீங்கள் எதற்காக எல்லை கடந்து பாகிஸ்தானுக்கு சென்றீர்கள்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுர்ஜித்சிங், ஆமாம்.. நான் உளவு பார்க்கத்தான் அங்கு சென்றேன்" என்றார்.
thanks to asiananban

கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்


A book prescribed for kindergarten in Manipur portrays a bearded man said to be the Prophet wearing turban and holding a book
இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் அந்த KG புத்தகத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டன.

இம்பாலை மையமாகக் கொண்ட பிரைம் பப்ளிகேசன் திங்கட்கிழமைக்குள் தங்களது அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என PSO அமைப்பு கெடு விதித்துள்ளது.
பேபிலா ஜஸ்ஸல் என்ற எழுத்தாளரின் அந்த புத்தகத்தில் தாடியுடன் ஒரு மனிதர் தலைப்பாகை அணித்து கையில் புத்தகம் போன்ற ஒரு பொருளை வைத்துக் கொண்டு அவர்தான் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல் ) அவர்கள் என சித்தரிப்பது போல கார்ட்டூன் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
சில தனியார் பள்ளிகளில் இந்த GK  புத்தகம் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இருந்த போதும் இது மணிப்பூர் அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்படவில்லை.
புத்தகத்தின் 51-ம் பக்கத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மற்ற ஐந்து கடவுள்களுடன் இருப்பது போல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
யாரும் முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் போல எந்த வரை படத்தையும் வரையக் கூடாது இது இஸ்லாத்திற்கு எதிரானது என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவின் தலைவர் முப்தி அர்ஷத் ஹுசைன் கூறினார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் போல சித்தரித்து வரைவது  இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது என PSO அமைப்பு கூறியுள்ளது. “முஹம்மது நபி(ஸல்) அவர்களை சித்தரித்து வரைவதை இஸ்லாம் தடை செய்துள்ளது” என PSO வின் தலைவர் முஹமது ஃபர்ஹானுதின் கூறினார்.
PSO அமைப்பு அந்த புத்தகத்தை தடை செய்துள்ளது போல அரசாங்கமும் அந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என PFI  கோரிக்கை விடுத்தது.
பிரைம் பப்ளிகேசன் தங்கள் அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க தவறினால் அப்பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களுக்கும் தடை விதிக்கப்படும் என PSO கூறியுள்ளது.
“அவர்கள் மிகப் பெரிய தவறை இழைத்து விட்டார்கள் , அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அது இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவது போன்றது. அவர்கள் எங்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என PSO வின் ஆலோசகர் ரகுமான் கூறினார்.
thanks to asiananban

சிரியாவை தாக்கமாட்டோம்: எர்துகான்


Turkey has no intention to attack Syria -erdogan
இஸ்தான்புல்:துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தேசிக்கவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார். துருக்கியை தாக்குவதற்கு அரசோ, பொதுமக்களோ விரும்பவில்லை. எந்தவொரு நாட்டின் மீதும் எவ்வித பகைமையும் துருக்கி சமூகத்திற்கு இல்லை.சிரியா வான் எல்லையில்
அத்துமீறி பறந்ததாக கூறி துருக்கி விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து எர்துகான், சிரியாவை தாக்க தயங்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். துருக்கி விமானம் தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் பறக்கவில்லை என்றும், தவறுதலாக சிரியா வான் எல்லைக்குள் நுழைந்த போதும், விமானக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக திரும்பி விட்டதாகவும்,
சர்வதேச வான் எல்லையில் வைத்துதான் சிரியா ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்பட்டது.
அதேவேளையில் ரஷ்யா அதிபர் விளாடிமீர் புடீன் துருக்கி விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எர்துகானிடம் நடத்திய தொலைபேசி உரையாடலில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
thanks to asiananban

Wednesday, June 27, 2012

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல்.




 வட சென்னை மாவட்டம் லாலா குண்டா பகுதியில் குடிபோதையில் பெண்களை கேலி செய்து இழிவுபடுத்திய தமுமுக வினரை தட்டிக் கேட்டதால் எஸ்.டி.பி.ஐ யினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. லாலாகுண்டா பகுதியில் உள்ள எஸ்.எம். தெருவில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அப்பகுதியில் செல்லும் பெண்களை த.மு.மு.க கும்பல் கேலி செய்து வந்தது. அதே போல் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அப்பகுதியில் வரும் பெண்களை இடிப்பது, கேலி செய்வது போன்ற ஈன செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து பொதுமக்கள் பலர் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை அணுகி புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (24/06/2012) அங்கு சென்ற எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர்கள் ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர்கள் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை தாக்கியதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நேற்று (25/06/2012) குடிபோதையில் திரண்ட நூற்றுக்கணக்கான தமுமுக மற்றும் மமக குண்டர்கள் அப்பகுதியில் இருந்த செயல்வீரர்கள் மூன்று பேர் மீது உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பி, கல், பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அப்பகுதியில் இருந்த எஸ்.டி.பி.ஐ யின் ஆதரவாளர்கள் கடைகள், வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து விபரம் அறியச்சென்ற எஸ்.டி.பி.ஐ யின் நிர்வாகிகள் மீது அக்கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. இதனால் எஸ்.டி.பி.ஐ இராயபுரம் தொகுதி துணைத் தலைவர் நியாமத், 48 வது வட்ட பொருளாளர் ஹபீஸ், செயல்வீரர்கள் நவ்சாத் மற்றும் நூர்தீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இராயபுரம் தொகுதி செயலாளர் கோல்டு ரபீக் மீதும் கொடுர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹபீஸ் என்பவரை தமுமுக குண்டர்கள் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அதேபோல் நூர்தீன் என்பவரை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியதில் தோல்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அக்குண்டர்களே காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலிஸ் அதிகாரிகள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இருந்தும் அங்கு கூடியிருந்த தமுமுக, மம கட்சி குண்டர்கள் தொடர்ந்து குடி போதையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். 

காயமடைந்து அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை நேரில் சென்று ஆருதல் கூறினார் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக்


இதனைப் பார்த்த காவல்துறை மம கட்சி குண்டர்களை விட்டு விட்டு எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது கடுமையான தடியடி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளை அணுகி தமுமுக, மம கட்சி குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவித்தனர். அதேபோல் வட சென்னை மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்த 500க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் தமுமுக வினருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென தலைமையிடம் அனுமதி கோரினர். ஆனால் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுதியளித்து தொண்டர்களை அமைதிப்படுத்தினர். மேலும் ஆளுங்கட்சி கூட்டணி என்ற அடிப்படையில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட கட்டப்பஞ்சாயத்து காவல்துறை மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ தீர்மானித்துள்ளது. குடிபோதையில் பெண்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் சமுதாயப்பணியில் ஈடுபட்டு வரும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய தமுமுக வினரை அப்பகுதி மக்கள் அனைவரும் வன்மையாக கண்டித்துள்ளனர். அதேபோல் 4 பேரை அடிப்பதற்கு நூற்றுக்கணக்கில் ஆட்களை திரட்டிய தமுமுக குண்டர்களின் வீரத்தையும் பொதுமக்கள் நேரில் பார்த்தனர்.

(தமிழ முஸ்லிம் இயக்கத்தலைவர்கள் மத்தியில் நல்லுறவு இருக்கும் நிலையில், இது போன்ற தலைமைக்கு கட்டுப்படாத சில நபர்களால் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் சமூக இயக்கங்கள் மீதான வெறுப்பை ஏற்படுத்துகிறது. எனவே தமுமுக தலைமையகம் தனது உறுப்பினர்கள் பற்றிய மறு ஆய்வு செய்யவேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்

ஹைதராபாத்தில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்


ஹைதராபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பள்ளி செல்வோம் பிரச்சார நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் பள்ளி செல்வோம் பிரச்சாரம் நாட்டின் பல பாகங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 250 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்டின் ஆந்திர மாநில தலைவர் முஃப்தி அப்துல் சுபுஹான் கூறும்போது "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கல்விக்கான பணிகளை மட்டும் செய்வதில்லை மாறாக இரத்த தான முகாம், இலவச மருத்துவ முகாம், மக்கள் மத்தியில் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறது." என அவர் கூறினார்.
 
Mufti Abdus Subhan Sab Distributed school kits

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பேராசிரியர் அப்துர் ரஹ்மான் கூறும்போது "இந்தியாவின் கல்வி தரத்தை மென்மேலும் உயர்த்த வேண்டும். வெறும் வாய்மொழி பாடங்களாக நடத்துவதை விட செயல்முறையிலான பாடதிட்டங்களை அதிக அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக சமூக சேவைகளில் பங்காற்றுவதற்கான படிப்புகளில் அதிக அளவில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் " இவ்வாறு கூறினார்.



 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஆரிஃப் அஹமது, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் டாக்டர் செய்யது பரகத்துல்லாஹ் பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஹைதராபாத் நிர்வாகி செய்யது முபஷ்ஷிர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Participate school childrens in this program


Popular Front Distributed school Kits

பாப்புலர் ஃப்ரண்ட் உருவாக்க இருக்கும் மக்கள் எதிர்ப்பு சக்தி

கோழிக்கோடு: "இறைவன் கேரளாவை பாதுகாத்தான்" என்ற தலைப்பில் ஒரு மாதகாலம் நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "மக்கள் எதிர்ப்பு சக்தி" என்ற நிகழ்ச்சியை வருகின்ற ஜூன் 29 தளச்சேரி அருகே நடத்த இருக்கின்றது.
Fazal the Martyr
ஷஹீத் முஹம்மது ஃபஜல்

சமீப காலமாக மலையாள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் அதிக அளவில் விவாதிக்கப்பட்ட விஷயம் என்.டி.எஃப் (இன்று பாப்புலர் ஃப்ரண்ட்) உறுப்பினரான சகோதரர் ஃபஜல் அவர்களின் கொலை வழக்கை பற்றித்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்னால் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர் ஃபஜல் அவர்கள் மர்ம நபர்களால் மார்சிஸ்டு கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால படுகொலை செய்யப்பட்டார். அப்போது கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி இக்கொலைக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் தான் என்று கூறி திசை திருப்ப முயற்சித்து வந்தனர்.

தற்போது சி.பி.ஐ அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கபட்ட நிலையில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வழக்கின் குற்றப்பத்திரிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ.எம்-ன் கிரிமினல் அஜண்டாவை குறித்தும் தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் வகுப்பவாத செயல்களில் அதிக அளவில் சி.பி.ஐ.எம் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்களை சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சி.பி.ஐ.எம்-ன் கோர முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஒரு மாத காலமாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. இப்பிரச்சாரத்தின் இறுதியாக வருகின்ற ஜுன் 29 தளச்சேரியில் மக்கள் எதிர்ப்பு சக்தி என்ற ரீதியில் ஓர் நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் மற்றும் கேரள மாநில தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மக்களை பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியின் போது உறுதி மொழி எடுத்துகொள்ள இருக்கின்றனர்.

thanks to chennaipfi

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்தார் !


 Finance Minister Pranab Mukherjee R
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தமது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்துக்கு மாலையில் சென்ற பிரணாப் முகர்ஜி அதன் பினன்ர் மாலை 4.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக்
கொடுத்தார்.
பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று பிரியாவிடை அளிக்கப்பட்டது. இன்று நிதி அமைச்சர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்யும் நிலையில் அடுத்த நிதி அமைச்சர் யார் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக பிரதமர் மன்மோகன்சிங்கே நிதி அமைச்சக பொறுப்பையும் தம் வசம் வைத்துக் கொள்ளக் கூடும் என்றே தெரிகிறது. மன்மோகன்சிங்கிடம் தமது பொறுப்புகளை பிரணாப் ஒப்படைக்கக் கூடும்.
அப்படி மன்மோகன்சிங்கே கூடுதல் பொறுப்பை ஏற்கும் நிலையில் பிரதமர் அமைச்சகத்துக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும். ஏனெனில் பல்வேறு அமைச்சர் குழுக்களுக்கு பிரணாப் முகர்ஜிதான் தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2ஜி, 3ஜி ஏலம் விடுவது தொடர்பாக அமைச்சர்கள் குழுவுக்கும் பிரணாப் முகர்ஜிதான் தலைவராக இருந்தார்.
thanks to asiananban

பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ !


 How Jaya Raided Admk Councillors Recent Meeting
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய்
பதில் பேச முடியாமல் நின்றாராம்.
சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்ததால் அதிர்ச்சியாகி விட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தவிர இவர்களை விட வேறு யாருமே தேவையில்லை என்ற அவல நிலை. வேறு வழியில்லாமல் ஒட்டுமொத்த கவுன்சிலர்களையும் கூப்பிட்டு வைத்து அத்தனை பேரையும் திட்டித்தீர்த்து விட்டாராம் ஜெயலலிதா.
ஒவ்வொரு கவுன்சிலரும் செய்த தவறுகளை பட்டியல் போட்டு வைத்து ஒவ்வொருவராக நிற்க வைத்து ரெய்டு விட்டதால் அத்தனை பேரும் அரண்டு போய் விட்டனராம்.
திமுக கட்டிய கட்டடத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு சாத்துப்படி
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிட்டி தியாகராயர் அரங்கத்தில்தான் இந்த ரெய்டு கூட்டம் நடந்தது. கவுன்சிலர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். செல்போன், ஜெயா டிவி ரிப்போர்டர்கள், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுக்குக் கூட உள்ளே வர அனுமதியில்லை. நேரம் காலம் தெரியாமல், வழக்கம் போல ஜெயலலிதாவை வரவேற்று ஏகப்பட்ட பேனர்களைக் கட்டி வைத்து விட்டனர். ஜெயலலிதா வந்தபோது இவற்றைப் பார்த்து டென்ஷனாகி விட்டார். எது எதற்கெல்லாம் பேனர் வைப்பது என்ற விவஸ்தையே இல்லையா என்று திட்டித் தீர்த்த ஜெயலலிதா, திட்டுவதற்காக வந்துள்ளேன். இதைப் போய் வரவேற்கிறீர்களே என்று கோபத்துடன் கூறியபடி உள்ளே வந்தார்.
ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தனர். பின்னர் பேசத் தொடங்கிய ஜெயலலிதாவின் பேச்சில் சூடு பறந்ததாம்.
முந்தைய திமுக ஆட்சியின்போது மாநகராட்சியில் கொள்ளை அடித்த அந்தப் பீடைகள் எப்போது ஒழியும் என்று காத்திருந்த மக்கள் நமக்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்தப் பீடைகளை நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். மக்களின் வெறுப்பை சம்பாதித்து ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒரு பிடி பிடிக்க பாதி கவுன்சிலர்களுக்கு வயிற்றைக் கலக்கி விட்டதாம்.
வீட்டுக்கு மின்இணைப்பு தருவதற்கும் கவுன்சிலர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்னைக் கேட்காமல் கனெக்ஷன் தரக்கூடாதுனு ஒரு மின்வாரிய அதிகாரியை மிரட்டி இருக்கீங்க. அந்த அதிகாரி மின்துறை அமைச்சரிடம் புகார் சொல்லி இருக்கிறார்.
பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க
அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் எனக்கு மாசம் இவ்வளவு மாமூல் தந்துடணும்னு டிமாண்ட் பண்றீங்க. வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் கொட்டியிருக்கிற வீடுகளுக்கே போய் அடாவடி வசூல் பண்றீங்க. கழிவுநீர் இணைப்புக்கும் ஹோட்டல் நடத்த அனுமதி வாங்குவதற்கும் வசூல் வேட்டை நடத்துறீங்க. டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டிக்காரர்களிடமும் பணத்தைப் பிடுங்கிக்கிட்டு இருக்கீங்க. ரோடு போடுற கான்ட்ராக்டர்கிட்ட கட்டாயம் கமிஷன் கட்டியாக வேண்டும்னு நீங்க ஆர்டர் போட்டதால், பல இடங்களில் வேலை நின்றுவிட்டது என்று வாங்கியுள்ளார்.
64வது வார்டு கவுன்சிலர் சுந்தர் பெயரைக் கூறி எழுந்திருக்கச் சொன்ன ஜெயலலிதா, குப்பை அள்ளுற தனியார் கம்பெனியிடம், குப்பை கிடந்தா கிடக்கட்டும். அதை நீ அள்ளாம இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனா, எனக்கு மாசம் 50 ஆயிரம் கொடுத்துடுனு மிரட்டியிருக்கீங்க. பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க...என்று கடுமையாக டோஸ் விட ஆடிப் போய் விட்டாராம் சுந்தர்.
அதேபோல 63வது வார்டு கவுன்சிலர் அலிகான் பஷீர் என்பவரை நிற்கச் சொன்ன ஜெயலலிதா, மாநகராட்சி பெயரையும் சின்னத்தையும் போட்டு போலியா ரசீது அடிச்சு பார்க்கிங் கட்டணத்தை வசூல் பண்ணிட்டு இருக்கீங்க.. கார்ப்பரேஷனுக்கு வர வேண்டிய வருமானத்தை வீட்டுக்கு சுருட்டிட்டுப் போயிருக்கீங்க.. என்று புகார் பட்டியலைப் படிக்க அவர் அமைதியாக நின்றாராம்.
இவர் சசிகலாவுக்கு நெருக்கமானவராம். சசிகலாவுக்கு அடிக்கடி புதுப் படங்களின் டிவிடிகளைக் கொடுத்து நட்பைப் பெற்று இதன் மூலம் கவுன்சிலர் சீட்டை வாங்கியுள்ளாராம். மேலும், சென்னையில் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வென்ற நிலையில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியை இழந்ததற்கு, இந்தத் தொகுதியில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜெ. அன்பழகனுடன் ரகசியமாக கூட்டுவைத்து அலிகான் பஷீர் செயல்பட்டதாக உளவுத்துறை அம்மாவிடம் அறிக்கை கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
இதை விட பெரிய அசிங்கம் இருக்கா...
ஜெயலலிதா அடுத்து ரெய்டு கொடுத்த கவுன்சிலர்தான் இங்கு குறிப்பிடத்தக்கவர். அவரது பெயர் ராஜலட்சுமி. 173வது வார்டு கவுன்சிலர். அவரது பெயரைச் சொல்லி ஜெயலலிதா கூறியபோது, இந்த அசிங்கத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல. பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்க. அவங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு விபசாரம் நடத்துறதுக்கு சப்போர்ட்டா இருக்கீங்க. இதைவிட அசிங்கம் இந்த உலகத்துல எதுவும் இருக்காது என்று கடும் உஷ்ணப் பார்வை பார்த்தபடி ராஜலட்சுமியை கடுமையாக சாடினார். இதைக் கேட்டு ராஜலட்சுமி ஆடிப் போய் அமைதியாக நின்றார்.
கவுன்சிலர்களிலேயே அதிக அளவிலான புகார்கள் 114வது வார்டு கவுன்சிலர் முகம்மது அலி ஜின்னா மீதுதான் வாசிக்கப்பட்டதாம். சகல மோசடிகள், முறைகேடுகளிலும் இவர் ஈடுபட்டுள்ளாராம். இவர் வேறுயாருமல்ல, 2009 லோக்சபா தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மகனும் தப்பவில்லை
இதேபோல மாதவரம் 27வது வார்டு உறுப்பினர் கண்ணதாசன் மீதும் புகார் வாசித்தார் ஜெயலலிதா. இவர் அமைச்சர் மூர்த்தியின் மகன் ஆவார்.
கவுன்சிலர் போல ஆக்ட் கொடுத்த குப்பம்மா
ஜெயலலிதா அடுத்த பிடித்த நபர்தான் சுவாரஸ்யமானவர். 93-வது வார்டு குப்பம்மா யாரு, எழுந்திரி என்று அவர் சொல்ல, குப்பம்மா எழுந்துள்ளார். அவரைக் கோபத்துன் பார்த்த ஜெயலலிதா, உன் கணவர் வேலாயுதம்தானே கவுன்சிலர். ஆனா, நீ கவுன்சிலரா ஆக்ட் பண்றியா என்று கோபத்துடன் கேட்க, அப்போதுதான் அத்தனை பேருக்கும் தெரிந்தது, குப்பம்மா உண்மையிலேயே கவுன்சிலரே இல்லை என்று.
ஓவர் ஆக்ட் பண்ணாதே...
அடுத்து 38வது வார்டு சந்தானத்தைப் பிடித்து கடுமையாக திட்டியுள்ளார் ஜெயலலிதா. அதைக்கேட்டு பயந்து போன சந்தானம்,தனது இரு கைகளால் கன்னத்தில் புத்தி போட்டுக் கொண்டு, புத்தி வந்துருச்சும்மா என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூற, கோபமாகிப் போன ஜெயலலிதா, ஓவர் ஆக்டிங் கொடுக்காதே என்று அதட்டலாக கூறினார்.
தொடர்ந்து ஜெயலலிதா மொத்தமாக அத்தனை பேரையும் எச்சரிக்கும் வகையில் பேசியபோது,
பெண் கவுன்சிலர்களின் கணவர், மகன்கள், சகோதரர்களின் தலையீடுகள் பற்றியும் எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவர்களின் அத்துமீறல் அதிகமாகி வருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கையை நான் எடுப்பேன்.
எம்.ஜி.ஆர் இருந்தபோது கூட கைப்பற்ற முடியாத சென்னை மாநகராட்சியை நாம் கைப்பற்றி இருக்கிறோம். ஆனால், உங்களுடைய அடாவடியால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்​திருக்கிறீர்கள். 2014-ல் அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எந்த மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டார்களோ அவர்களே உங்களின் அடாவடியால் நம்மை இந்தத் தேர்தலில் வீழ்த்தி விடுவார்கள். ஜூலை 31-க்குள் நீங்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்துக் கட்டிவிடுவேன்.
சட்டப்படி மாநகராட்சியைக் கலைத்துவிட்டு சிறப்பு அதிகாரியை வைத்து ஆறு மாதம் மாநகராட்சியை நடத்துவேன். அதன் பிறகு தேர்தல் நடத்தும்போது நல்லவர்களுக்கு மட்டுமே ஸீட் கொடுப்பேன் என்று தெளிவான எச்சரிக்கையைக் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றாராம் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 169 கவுன்சிலர்களில் 100க்கும் மேற்பட்டோர் டோஸ் வாங்கினராம்.
'அம்மா'விடம் திட்டு வாங்கி விட்டுச் சென்ற அத்தனை கவுன்சிலர்களும் உளவுத்துறை போலீஸார் மீது கடும் காட்டத்துடன் இருக்கிறார்களாம். அதேசமயம், இவர்கள் அத்தனை பேரும் உடனடியாக திருந்தும் திட்டத்திலும் இல்லையாம். மாறாக, வழக்கம் போல நடை போடப் போவதாக பலரும் சவால் போல கூறி வருகிறார்களாம். நாங்கள் மட்டுமா மோசமாக இருக்கிறோம், எங்களிடம் பங்கு வாங்கிய எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களையும் நாங்கள் பட்டியல் போட்டுத் தரத் தயார். அவர்களையும் கூப்பிட்டு அம்மா ரெய்டு விடட்டும் என்று கோபத்துடன் கூறுகிறார்கள்.
எப்படியோ, விரைவிலேயே மாநகராட்சி அதிமுகவில் பெரும் பூகம்பம் வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
thanks to asiananban

தரையில் படுத்த மதுரை ஆதீனம்... தலையேயே காட்டாத நித்தியானந்தா


Madurai Aadheenam and Nithyanantha
மதுரை: மதுரை ஆதீன மடத்தில் இன்று போலீஸார் சோதனை நடத்தியபோது தனது அறையை விட்டு நித்தியானந்தா வெளியே வரவே இல்லையாம். அதேபோல மதுரை ஆதீனத்தை 
போலீஸார் அணுகியபோது தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தரையில் படுத்துக் கொண்டாராம். இருப்பினும் விடாத போலீஸார் அவரை கூப்பிட்டு விசாரணை நடத்தினராம்.மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில்
விளக்குத்தூண் போலீஸார் நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் புலித் தோல், யானைத் தந்தம் உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளக்குத்தூண் போலீஸார் இன்று அதிரடி ரெய்டில் இறங்கினர். கோர்ட் வாரண்ட்டைக் காட்டி விட்டு உள்ளே புகுந்தனர் போலீஸார். இதையடுத்து நித்தியானந்தாவுடன், மதுரை ஆதீனம் அவசர ஆலோசனை நடத்தினார். போலீஸாரை நுழைய அனுமதிக்காமல் இருக்க முடியாது என்று தெரிந்ததும், இருவரும் சரி வரச் சொல்லுங்கள் என்று கூறி விட்டு தத்தமது அறைக்குள் புகுந்து கொண்டனராம்.
அப்போது 2வது மாடியில் மதுரை ஆதீனம் இருப்பதாக தெரிந்து அங்கு போலீஸார் போனார்கள். அப்போது தரையில் படுத்துக் கிடந்தாராம் மதுரை ஆதீனம். என்ன என்று போலீஸார் விசாரித்தபோது தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறினாராம் ஆதீனம். இரு்நதாலும் விடாத போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதேபோல முதல் மாடியில் உள்ள தனது அறைக்குள்ளேயே இருந்து கொண்டாராம் நித்தியானந்தா. அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. அவருடன் வேறு யாரேனும் இருந்தார்களா என்பது தெரியவில்லை.
thanks to asiananban

மலேசியாவில் மொட்டை அடித்து கொண்ட "டிவி' பெண் வர்ணனையாளர் சஸ்பெண்ட் !


கோலாலம்பூர்:மலேசிய நாட்டு "டிவி' பெண் வர்ணனையாளர் மொட்டை அடித்து கொண்டதால், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் பிரபல "என்டிவி7' சேனலில் வர்ணனையாளராக, ராஸ் அடிபா முகமது ரட்சி என்பவர் பணிபுரிந்தார். மலேசியாவில் நடந்த புற்றுநோய் ஒழிப்பு பிரசாரத்திற்காக, இவர் தலைமை மொட்டையடித்து கொண்டார். மறுநாள் பணிக்கு மொட்டை தலையுடன் வந்த ராஸ் அடிபாவை,பணி செய்ய
"டிவி' நிர்வாகம் மறுத்து விட்டது.

நாங்கள் என்ன வழுக்கை தலை நபரையா பணிக்கு வைத்துள்ளோம். பழையபடி முடி வளர்ந்த பிறகு தான் ராஸ் அடிபா பணிக்கு வர வேண்டும். விக் வைத்து கொண்டால் செயற்கையாக தெரியும், எனவே, தற்போதைக்கு அவர் பணி செய்ய அனுமதியில்லை' என,"டிவி' நிர்வாகம் கூறிவிட்டது.

thanks to asiananban

இராமநாதபுர​ம் காவல்துறையி​ன் சூழ்ச்சி முறியடிப்பு – கைது செய்யப்பட்​ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்​கள் விடுதலை !


Ramanathapuram Press Conference - 2பெரியப்பட்டிணம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது


“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மணிப்பூர், இராஜஸ்தான், டெல்லி என இந்திய தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஒரு தேசிய பேரியக்கம். அதன் அடிப்படையில் இங்குள்ள உறுபினர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று சுய முன்னேற்ற வகுப்புகளில் கலந்து கொள்வதும், அவர்கள் நம் தமிழ்நாட்டிற்கு வருவதும் எதார்த்தமான ஒன்று.
அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிராமத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுய முன்னேற்ற மற்றும் நல்லொழுக்க வகுப்புகள் கடந்த 6 நாட்களாக நடந்து வருகின்றது. இயற்கையான சூழ்நிலை, அமைதியான சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் நம் தமிழகத்திற்கு சுய முன்னேற்றம் மற்றும் நல்லொழுக்க வகுப்பிலே கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்களை சேர்ந்த எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் 22 பேர் வந்து பங்கெடுத்தனர்.
இதில் தனி மனிதனை பன்படுத்துதல், சுய முன்னேற்றம், நேரம் பேணுதல், செய்தி தொடர்பு பரிமாற்றம், யோகாசனம், மெல்லோட்டம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்கல்வி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மேலாண்மை ஆகிய வகுப்புகள் கொடுத்து பண்படுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் நேற்று (25.06.2012) மதியம் 2 மணி அளவில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ் குமார் உத்தரவின் பேரில் ஒரு உதவி எஸ்.பி,  4 டி.எஸ்.பிகள், 12 இன்ஸ்பெக்டர்கள், 26 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையின் 17 காவல் வாகனங்களில் வந்து இறங்கி, அத்துமீறி உள்ளே நுழைந்து வெளிமாநில உறுப்பினர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த 8 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பெரியபட்டிணம் என்பது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய ஒரு கிராமம். இங்குள்ள மக்களை பீதிவயப்படுத்தும் விதமாக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறையின் சிறுபான்மை விரோதப் போக்கையும், பாரபட்சத்தையும் தெளிவாக காட்டுகின்றது. இத்துணை பெரிய காவல் படையுடன் அங்கே வந்து பீதியை கிளப்பியது திட்டமிட்டே காவல்துறையின் சில கறுப்பு ஆடுகள் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதை தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது.
காவல்துறையின் இந்த மோசமான செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.
கைது செய்ததற்கு பிறகு எந்த வித முகாந்திரமும இல்லாததால் நேற்று இரவே கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளனர்.
இவ்வாறு தவறான உள்நோக்கம் கொண்டு சிறுபான்மை சமூகத்திற்கு தேசிய அளவில் என்ன வகையான அநீதி இழைக்கப்படுகின்றதோ அதே போன்ற சூழ்நிலையை தமிழகத்திலும் காவல்துறையின் சில கறுப்பு ஆடுகள் உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் காவல்துறையின் இந்த செயல் நிச்சயமாக தமிழக காவல்துறைக்கு ஒரு இழுக்கை ஏற்படுத்தும் செயலாகும். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு அத்துமீறி சுய முன்னேற்ற வகுப்பிற்குள் நுழைந்து பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை கைது செய்து, பீதியை கிளப்பி, பாப்புலர் ஃப்ரண்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.” என்றார்.