Wednesday, February 29, 2012
போலீஸ் விளையாட்டு!
Wednesday, February 29, 2012
No comments
ஈரானுக்கு முழு ஆதரவு - ரஷ்யா
Wednesday, February 29, 2012
No comments
ஈரான் மீது போர் தொடுக்கும் எந்த நாடாக இருந்தாலும் அவற்றை ரஷ்யாவும் எதிர்க்கும் என ரஷ்ய பிரதமர் வி ளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.அணு ஆயுதங்கள் இரு ப்பதாக கூறி ஈரான் மீது அழுத்தங்கள் தருவது தேவை யற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.வெளிநாட்டு கொள் கை பற்றிய புட்டின் வெளியிட்ட கட்டுரையொன்றில் ஈ ரான் மீது போர்த்தொடுக்கும் நாடுகள் கடுமையான விளைவை எதிர்நோக்கவேண்டி இருக்கும் எனவும் ஐநாவின் அனுமதியின்றி சிரி யா மீது தாக்குதல் நடத்தவும் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
thanneerkunnam.net
பல வருடங்களாக நடத்தும் சட்டரீதியான போர் என்னை தளர்த்தி விட்டது – கண்ணீருடன் ஸாக்கியா ஜாஃப்ரி
Wednesday, February 29, 2012
No comments
அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பல வருடங்களாக தொடரும் சட்டரீதியான போர் என்னை தளரச்செய்துவிட்டது என்று குல்பர்க் சொஸைட்டியில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி கூறுகிறார்.
“இனி எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எப்பொழுதும் என்னை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் நிற்கின்றனர். இந்த வயதில் என்னால் இயலாது” – மகன் தன்வீர் ஜாஃப்ரி, மகள் நஸ்ரின், பேரப் பிள்ளைகளான தவ்ஸீஃப் ஹுஸைன், ஸுபின் ஹுஸைன் ஆகியோருடன் குல்பர் சொஸைட்டியில் கரியும், புகையும் படர்ந்த தனது பழைய பங்களாவில் இருந்துகொண்டு 70 வயதான ஸாக்கியா ஜாஃப்ரி கண்ணீர் மல்க கூறுகிறார்.
குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
சாஃப்ட்வர் பொறியாளரான கணவர் நஜீப் ஹுஸைனுடன் அமெரிக்காவில் வசிக்கும் மகள் நஸ்ரினுடன் செல்ல ஸாக்கியா ஜாஃப்ரி விரும்புகிறார். தற்போது ஸாக்கியாவுடன் வசிக்கும் அவரது மகள் நஸ்ரின் வருகிற மார்ச் 11-ஆம் தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருக்கிறார். மகளுடன் ஸாக்கியாவும் செல்கிறார். ஆறு மாதம் அங்கு தங்குவார். சூரத்தில் larsen & toubro நிறுவனத்தில் எக்ஸ்க்யூடிவ் பொறியாளராக பணியாற்றும் மகன் தன்வீருடன் குஜராத் இனப்படுகொலைக்கு பிறகு ஸாக்கியா வசித்து வந்தார். அமெரிக்காவிற்கு செல்ல ஸாக்கியா தீர்மானித்து இருந்தாலும் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தொடர் நடவடிக்கைகள் குறித்த கவலையில் உள்ளார். இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் நகலை வருகிற மார்ச் 15-ஆம் தேதி ஸாக்கியாவிடம் அளிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.
சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் உட்பட வேறு எவருக்கும் அறிக்கையின் நகலை வழங்கமுடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. தான் இந்தியாவில் இல்லாதது வழக்கை பாதிக்கும் என்ற கவலையும் ஸாக்கியாவுக்கு உண்டு.
2002-ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களை நரேந்திர மோடியால் ஒரு போதும் மறைக்க முடியாது என்று ஸாகியா ஜாஃப்ரியின் மகள் நஸ்ரின் கூறுகிறார். குல்பர்க் சொஸைட்டியில் தீயில் எரிந்து கிடக்கும் வீடுகள் இனப்படுகொலையின் ஆதாரங்கள் ஆகும். அதனை யாரும் மறக்கமுடியாது எனவும் நஸ்ரின் கூறுகிறார்.
குஜராத் இனப்படுகொலை நடக்கும் வேளையில் நஸ்ரின் அமெரிக்காவில் இருந்தார்.
மும்பையை சார்ந்த டீஸ்டா ஸெடல்வாட், டெல்லியில் இருந்து ஹர்ஷ் மந்தர், குஜராத் பி.யு.சி.எல் தலைவரும் மனித உரிமை ஆர்வலருமான டாக்டர் ஜெ.எஸ்.பந்தூக்வாலா உள்பட பலர் குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது நினைவு தினத்தில் குல்பர்க் சொசைட்டிக்கு வருகை தந்தனர்.
thanks to asiananban.blogspot.com
இனி எங்களுக்கு அணு உலையே வேண்டாம் : ஜப்பான் அலறல் !
Wednesday, February 29, 2012
No comments
டோக்கியோ: இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. மேலும் இனி ஒரு அணுஉலை விபத்து வெடித்தாலோ, ஏற்கெனவே சேதமடைந்த புக்குஷிமா உலையிலிருந்து மீண்டும் கதிர்வீச்சு வெளிப்பட்டாலோ அதைச் சமாளிக்கும் நிலையில் ஜப்பான் இல்லை எனவும் அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் அணுஉலைகள் குறித்த மாயையில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு ஜப்பானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று கூறிக் கொண்டு எக்கச்சக்கமாய் அணுஉலைகள் அமைத்த வளர்ந்த நாடுகள், இப்போது பயத்தின் விளிம்பில் நிற்கின்றன. செர்னோபில் கோரத்துக்குப் பிறகு தனது நாட்டில் அணு உலைகளையே அமைக்காமல் நிறுத்திவிட்ட ரஷ்யா, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் மட்டும் அவற்றை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த அணுஉலைகளை அமைக்கிறது.
ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் புதிய அணுஉலைகளை இனி நிறுவுவதில்லை என அறிவித்துவிட்டன.
பீதியில் டோக்கியோவை காலி செய்ய தயாராக இருந்த ஜப்பான்..
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நில நடுக்கத்தின் காரணமாக புக்குஷிமா அணுஉலை சேதமடைந்த போது, அந்த மின் நிலையத்தின் அதிகாரிகளும், அரசும் பீதியடைந்துவிட்டார்களாம்.
இந்த அணுமின் நிலையம் முற்றாக சேதமடைந்து, அதன் விளைவாக பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு தலைநகர் டோக்கியோ முழுவதையும் காலி செய்ய வேண்டிய ஒரு சூழல் கூட கடைசி தருணத்தில் தான் தவிர்க்கப்பட்டதாக இந்த பெரும் விபத்து குறித்த சுயாதீனமான அறிக்கையை தயாரித்துள்ள நிபுணர்கள் குழு கூறியுள்ளது.
இந்த அறிக்கைய எழுதிய குழுவின் தலைவரே இதனை மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
"அணு உலை பாதுகாப்பு எனும் மாயையயில் சிக்கியிருந்த அரசாங்கம் இப்படியான ஒரு பேரழிவை எதிர்கொள்ள தயாரான நிலையில் இல்லை," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும், நாட்டின் உணவுச் சங்கிலியில் கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்ற கவலை நீடிப்பதை ஜப்பான் அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த விபத்துக்குப் பிறகு புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதில்லை என்று ஜப்பான் முடிவுசெய்துள்ளது.
இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத புக்குஷிமா!
இதற்கிடையே, சுனாமி பாதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும் இன்னும் புக்குஷிமா அணுஉலையின் கதிர் வீச்சு பாதிப்பு அகலவில்லை. இந்த அணுஉலை மையத்துக்குள் பணியாற்ற பணியாளர்கள் தயங்கி வரும் நிலையில், அணு உலையைக் குளிர்விப்பதற்கான நீரேற்றுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
வெப்பம் அதிகரித்தாலும், ஒரேயடியாகக் குறைந்தாலும் உடனடியாக கதிர்வீச்சு பெருமளவு தாக்கும் ஆபத்து இன்னும் நீடிக்கிறதாம்.
சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு நேற்று இந்த நிலையத்தைப் பார்வையிடச் சென்றது. இந்த அணுஉலையின் இப்போதைய நிலை, இனி வரவுள்ள ஆபத்துகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.
அணுஉலை செயல்படாத நிலையிலும், வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர, தினசரி பல மில்லியன் கேலன் தண்ணீரை செலுத்தி வருகின்றனர் பணியாளர்கள். இன்னொரு பக்கம், உலையிலிருந்து கதிர்வீச்சு மிக்க 10000 டன் நீர் மாதந்தோறும் இந்த உலையிலிருந்து கசிந்தபடி இருப்பதாகவும், இதைச் சுத்தமாக்குவது தங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும் அணுஉலை நிர்வாகத்தினர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மட்டுமே 4வது அணு உலையிலிருந்து ஒரே நாளில் 8 டன் கதிர்வீச்சு நீர் (radioactive water) வெளியேறியதாகவும், இதுதான் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டதென்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அணுஉலையிலிருந்து எரிபொருளை முற்றாக அகற்றும் வரை இந்த அச்சமான சூழல் நிலவும் என அதன் புதிய மேலாளர் தெரிவித்தார். இந்த உலையின் கசிவுகளை முற்றாக அடைக்க 6 வருடங்கள் ஆகும் என்றும், எரிபொருளை முழுமையாக அகற்ற 25 ஆண்டுகள் ஆகும் என்றும் புகுஷிமா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
thanks to asiananban.blogspot.com
ஈரானின் அடுத்த எச்சரிக்கை. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம்.
Wednesday, February 29, 2012
No comments
உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம், ஈரான் கடும் எச்சரிக்கை.எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது
அறிந்ததே.இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மீது போர் தொடுக்கப்படுமானால் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று ஈரானின் இராணுவத்துறை அமைச்சர் ஜெனரல் அஹம்மது வதீதி எச்சரித்துள்ளார்.
"எங்களைத் தாக்கி அழித்துவிடலாம் என்று இஸ்ரேல் கருதினால் அது தப்புக்கணக்கு. அப்படி ஒரு தாக்குதல் எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டால், இஸ்ரேலை முற்றிலுமாக அழித்துவிடுவோம்." என்ற அமைச்சர் வதீதி எவ்வகையான தாக்குதல் என்பதைத் தெரிவிக்கவில்லை.
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் அமைச்சரின் பேட்டியால் மேலும் பதற்றம் கூடியுள்ளது.
thanks to asiananban.blogspot.com
சென்னை வேளச்சேரி ENCOUNTER கொலைகள் உண்மை அறியும் குழு - இடைகால அறிக்கை .
Wednesday, February 29, 2012
No comments
சம உரிமை பெற்றிட ....!!! முஸ்லிம் சமுகமே திரண்டுவா ....!!!
Wednesday, February 29, 2012
No comments
அஸ்ஸலாமு அழைக்கும் ....
முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு மத்தியில் 10 % மாநிலத்தில் 7 %
வேண்டும் என்ற முழக்கத்துடன் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா
கோவை , மதுரை, சென்னை, தஞ்சாவூர், நெல்லை,
ஆகிய இடங்களில்
வரும் ஏப்ரல் 22 ,2012 மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
நடத்த தீர்மானித்துள்ளது....
சம உரிமை பெற்றிட ... முஸ்லிம் சமுகமே திரண்டுவா .... என அழைக்கிறது......
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா
(இன்னும் சில தினங்களே உள்ளன)
Tuesday, February 28, 2012
அதிரையில் SDPI நடத்திய மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் .(VIDEO PART)
Tuesday, February 28, 2012
1 comment
நெல்லை மாவட்டம் , பத்தமடையில் நேசனல் விமன்ஸ் பிரண்ட்(NWF) சார்பில் பெண்களுக்கான மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Tuesday, February 28, 2012
No comments
நெல்லை மாவட்டம் , பத்தமடையில் நேசனல் விமன்ஸ் பிரண்ட்(NWF) சார்பில் பெண்களுக்கான மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 26/02/2012(ஞாயிறு) அன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட நேசனல் விமன்ஸ் பிரண்ட்(NWF) தலைவர் சகோதரி. மும்தாஜ் ஆலிமா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நேசனல் விமன்ஸ் பிரன்ட் ஏன் ? எதற்கு ? என்ற தலைப்பில் சகோதரி . அனீஸ் பாத்திமா அவர்கள் NWF இன் அவசியத்தையும், அது செய்து வரும் பணிகளையும் விளக்கினார்கள். பின்னர் "இஸ்லாத்தின் அடிப்படைகள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய NWF இன் மாநில தலைவர் சகோதரி. A. பாத்திமா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களான ஈமான் , கலிமா , தொழுகை , ஷிர்க், புறம் பேசுதல், வட்டி மற்றும் மறுமை வாழ்க்கை குறித்து எளிமையான நடையில் விளக்கினார்கள். பின்னர் "குடும்ப உறவுகள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய NWF இன் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரி. N. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்கள் இன்றைய காலத்தில் குடும்பங்களில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு அதனை களைவதற்கு இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களும் இருநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்ட இப்பொதுகூட்டம் ஒரு மாநாடு போன்று திடல் முழுவதும் மக்கள் குழுமி மார்க்க விளக்கம் பெற்று சென்றனர்.
thanks to Mohideen Abdul Kader
அமெரிக்காவின் 50 லட்சம் ரகசிய இமெயில்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ் !
Tuesday, February 28, 2012
No comments
சிறிது காலம் அமைதியாக இருந்த விக்கிலீக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் ‘ஸ்டிராட்ஃபோர்’ உளவு நிறுவனத்தின் 50 லட்சம் ரகசிய இமெயில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ச் (40) நடத்திவரும் இணைய இதழ் ‘விக்கிலீக்ஸ்’. ஈராக் போர், ஆப்கன் போர் தொடர்பாக அமெரிக்க அரசு மிகமிக ரகசியமாக வைத்திருந்த முக்கிய ஆவணங்களை இந்நிறுவனம் 2010-ம் ஆண்டு வெளியிட்டது. கியூபாவின் குவான்டனாமோ சிறையில் நடக்கும் கொடுமைகள் தொடர்பான ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டது. இவ்வாறு லட்சக்கணக்கான ரகசிய தகவல்கள், மெயில்கள், அரசு உத்தரவுகள், ரகசிய பேச்சுகள் ஆகியவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்காரம், செக்ஸ் முறைகேடு புகார்களும் சுமத்தப்பட்டன. இங்கிலாந்தில் அசாஞ்ச் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்தில் இருந்து அவரை நாடுகடத்துமாறு ஸ்வீடன் போலீசார் கூறிவருகின்றனர். இதை எதிர்த்து அசாஞ்ச் வழக்கு தொடர்ந்துள்ளார். ரகசிய தகவல்கள் வெளியிடுவதை சிறிது காலம் நிறுத்தியிருந்த விக்கிலீக்ஸ் தற்போது அமெரிக்காவின் ‘ஸ்டிராட்ஃபோர்’ உளவு நிறுவனத்தின் 50 லட்சம் இமெயில்களை வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச உளவு நிறுவனம் ‘ஸ்டிராட்ஃபோர்’. பிரபல நிறுவனங்கள், விஐபிக்கள் பற்றிய தகவல்களை உளவு பார்த்து அரசு மற்றும் பிற அமைப்புகளுக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இமெயில்களைத்தான் விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இவை 2004-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த டிசம்பர் வரை பரிமாறப்பட்ட இமெயில்கள். ஸ்டிராட்ஃபோர் நிறுவனம் யார் யார் மூலம் ரகசிய தகவல்களை திரட்டுகிறது, இதற்காக அவர்களுக்கு தரப்படும் சம்பள விவரம், தகவல் சேகரிக்க ஸ்டிராட்ஃபோர் பயன்படுத்தும் வழிகள் ஆகியவை இதன்மூலம் அம்பலமாகியுள்ளன.
போபால் விஷவாயு கசிவு சம்பவம் நடந்த யூனியன் கார்பைடு கம்பெனியின் துணை நிறுவனமான டவ் கெமிக்கல் கம்பெனி மற்றும் அரசு உளவு ஏஜென்சிகள், அமெரிக்க உள்துறை அமைச்சகம், அமெரிக்க கடற்படை உள்பட பல்வேறு அமைப்புகளுக்கும் ஸ்டிராட்ஃபோருக்கும் உள்ள தொடர்பு பற்றிய தகவல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
thanks to asiananban.blogspot.com
நியு சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
Tuesday, February 28, 2012
No comments
புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப் பற்றி எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான செய்தியை வெளியிட்ட தி நியு சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு அவர்களுக்கு பதில் கடிதத்தையும் அனுப்பியுள்ளது பாப்புலர் ஃபரண்ட்.
டெல்லியில் வெளிவரும் பத்திரிக்கையான தி நியு சண்டே எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 26 ஞாயிற்று கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் அப்பத்திரிக்கைக்கு பதில் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகள் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
தி நியு சண்டே எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி முழுக்க முழுக்க கற்பனை செய்யப்பட்டதும் ஜோடிக்கப்பட்டதுமேயாகும். இஸ்ரேலுடனான உறவை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இதற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம் எடுத்துள்ளது எனவும் இதனால் காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை நோட்டமிட்டு வருவதாக கூறியுள்ளது அப்பத்திரிக்கை.
இஸ்ரேலுடனான உறவை கண்டித்து தீர்மானம் எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் எத்தனையோ மதச்சார்பற்ற அமைப்புகளும், முஸ்லிம் அமைப்புகளும் இத்தகைய உறவை வன்மையாக கண்டித்திருக்கிறது. ஜியோனிச காரர்களின் ஊடுறுவதால்தான் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக மேலும் அவர் கூறினார்.
10 வருடங்கள் ஆகியும் இரத்தக்கரையோடு இருக்கும் குஜராத்!
Tuesday, February 28, 2012
No comments
சென்னை: குஜராத் இனப்படுகொலை நடைபெற்று நேற்றோடு 10 வருடங்கள் கடந்து விட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குஜராத் கலவரத்தால் வீட்டை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவித்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எந்த அரசாங்கமும் நரவேட்டை நாயகனான நரேந்திர மோடியிடம் இருந்து குஜராத் மக்களை இன்று வரை பாதுகாக்க இயலவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்.
தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிறுபான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எந்த அரசாங்கமும் நரவேட்டை நாயகனான நரேந்திர மோடியிடம் இருந்து குஜராத் மக்களை இன்று வரை பாதுகாக்க இயலவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும்.
![]() |
| அஹமதாபாத் பாப்பு நகர் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள் |
கலவரத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் கல்லறைகள் இன்றும் அந்த கொடூர நிகழ்வை சித்தரித்துக்கொண்டிருக்கிறது. சமூகத்திலிருந்து முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் செயல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கலவரத்தில் உயிர் பிழைத்த எண்ணற்ற முஸ்லிம்களால் இதுவரை தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்ப முடியவில்லை. வலுக்கட்டாயமாக முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சொந்த மண்ணிலேயே முஸ்லிம்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
குஜராத்தை தற்போது ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களே கலவரத்திற்கு காரணம் என்பது தெளிவான உண்மை. இருந்த போதிலும் அவர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ நீதி வேண்டி தவித்துக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. நீதி வழங்குவதற்கு பதிலாக கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் மீது அரசியல் விளையாட்டை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பக்கம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என பிரச்சாரம் செய்து பிற மக்களின் ஒட்டுக்களை சேகரித்து வரும் நரேந்திர மோடி, மறுபுரம் முஸ்லிம்களின் இறந்த உடல்களை காட்டி முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு துடித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இவர்கள் இருவருக்கும் மத்தியில் முஸ்லிம்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரம், நீதி, பாதுகாப்பு என்பது இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். பாராளுமன்றமும், நீதிமன்றங்களும், சட்டமன்றங்களும் மக்களை பாதுகாக்கும் வகையில் தங்களது பணிகளை நேர்மையாக நிறைவேற்றி நீதியை நிலை நாட்டவேண்டும். அதன் மூலம் குஜராத் கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட நரேந்திர மோடியை சட்டத்திற்கு முன் நிறுத்தி தகுந்த முறையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நீதிக்காக ஏங்கும் மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு !
Tuesday, February 28, 2012
No comments
பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ்இயேசுவின் முக்கிய சீடராவார்.
இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.
யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும்.
யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.
யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.
thanks to qahtaninfo.blogspot.com
Monday, February 27, 2012
திருவாரூரில் SDPI யின் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்! 300௦ பேர் கைதாகி விடுதலை .
Monday, February 27, 2012
No comments
SDPI நடத்திய மாபெரும் ரயில் மறியல் போராட்டம் இன்று மதியம் 1.30 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. திருவாரூர், நாகை, தஞ்சை தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த SDPI யின் தொண்டர்கள் அனைவரும் விஜயபுரம் – பள்ளிவாசல் அருகே கூடியிருந்தனர்.
A. அபுபக்கர் சித்திக் தலைமையில் (மாநில செயற்குழு உறுப்பினர்) அனைத்து தொண்டர்களும் கண்டன கோஷங்கள் எழுப்பிவாறு திருவாரூர் ரயில்வே நிலையம் சென்றடைந்தனர்.
காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை தற்போது உள்ள மீட்டர் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற அறிவித்த தென்னக ரயில்வே நிர்வாகம் பல வருடங்கள் ஆகியும் இதுவரை அகல ரயில்பாதை அமைக்காததை கண்டித்து கண்டன உரையினை A. அபுபக்கர் சித்திக் அவர்கள் ஆற்றினார்கள்.
கூடியிருந்த காவல் துறையினர் SDPI தொண்டர்களை ரயில்வே நிலையம் உள்ளே விடாதவாறு வெளியே தடுத்து அனைவரையும் கைது செய்து, விஜயபுரம் பி.ஆர்.எம். வாசு நிவாஸ் கல்யாண மண்டபத்தில் அடைந்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட SDPI தொண்டர்களும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தின் முன்னிலையினை M. தப்ரே ஆலம் பாதுஷா – திருவாரூர் மாவட்ட தலைவர், S. அப்துல் அஜிஸ், M. நெய்னா முகமது, வழக்கறிஞர் A.R முகமது பைசல் – திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர் அணித்தலைவர் மற்றும் பலர் நிகழ்த்தினார்கள்.
நாச்சிக்குளம் – நடுத்தெருவைச்சார்ந்த ஹனீபா அவர்கள் இந்த போராட்டத்தினை பற்றி கூறும் போது, அனைத்து தரப்பு மக்களின் தேவையினை அரசாங்கம் நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அமைந்தது இந்த போராட்டம் என்றார்.
SDPI யின் மாவட்ட ஊடக பொறுப்பாளர் M. ஜெகபர் அலி அவர்களின் கருத்தானது, அகல ரயில்வே பாதை மட்டும் இன்றி மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளையும், அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பதினை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் அல்லாஹ்வின் உதவியால் இந்த போராட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று கூறினார்.
திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் S. அப்துல் அஜிஸ் அவர்கள் நமது சிறப்பு செய்தியாளரிடம் கூறும் போது, அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் பொருட்டு SDPI யின் இந்த போராட்டம் நியாயமானது, நேர்மையானது, அகல ரயில் பாதை வந்தால் பொது மக்கள் அனைவருக்கும் பயன் அடைய வாய்ப்புள்ளது. தற்போது உள்ள அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
இறுதியாக, மண்டபத்தில் கூடியிருந்த தொண்டர்களிடம் மாநில
செயற்குழு உறுப்பினர். A. அபு பக்கர் சித்திக் அவர்கள் உரையாற்றும் போது, மத்திய அரசாங்கம் மார்ச் மாதத்திற்குள் காரைக்குடி திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தின் பணியினை உடனே துவங்க வேண்டும் அப்படி இல்லையென்றால் இதனை விட பெரும் போராட்டம் அரசாங்கத்திற்கு ஏதிராக நடைபெறும் என்றார்.
செயற்குழு உறுப்பினர். A. அபு பக்கர் சித்திக் அவர்கள் உரையாற்றும் போது, மத்திய அரசாங்கம் மார்ச் மாதத்திற்குள் காரைக்குடி திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தின் பணியினை உடனே துவங்க வேண்டும் அப்படி இல்லையென்றால் இதனை விட பெரும் போராட்டம் அரசாங்கத்திற்கு ஏதிராக நடைபெறும் என்றார்.
இந்த போராடத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்தது, மற்றும் அனைத்து கட்சியினரும் பாராட்டுதலை அளித்தனர். இப்போராட்டத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை. அரசன், தலைமை கொள்ளை விளக்க பேச்சாளர். பா. தமிழ்ப்பிரியன், மாவட்ட துணை செயலாளர். இரா. பாரதி, ஒன்றிய செயலாளர். ஆறு. ராமச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர். செல்வம், நகரச்செயலாளர். ம. கார்த்திக் போன்றவர்கள் கலந்துக்கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)











