Thursday, February 3, 2011

நான் போலீஸ் இல்லை பொருக்கி!!!

கொச்சி,பிப்.3:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னை சிக்கவைத்தது முஸ்லிம் என்ற ஒரேக் காரணத்திற்காகத்தான் என அவ்வழக்கில் சமீபத்தில் விடுதலையான அப்துல் கலீம் தெரிவித்துள்ளார். கொச்சியில் ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: "கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்தவுடன் சிலமணி நேரங்களுக்குள்ளாகவே போலீசார் என்னைத் தேடிவந்தனர். என்னைக் கைதுச் செய்தபிறகு விசாரணை நடத்த போலீசாருக்கு விருப்பமில்லை. மாறாக, எப்படியாவது குண்டுவெடிப்பை நடத்தியது நான் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் அவர் குறியாக இருந்தனர்.

இதற்காக அவர்கள் என்னை கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாக்கினர். என்னை தனிமைச் சிறையில் அடைத்தனர். ஐந்து அல்லது ஆறுதினங்கள் என்னை அவர்கள் நிர்வாணமாக சிறையில் அடைத்தனர். எனது மர்மஸ்தானங்களிலும், தலையிலும் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தனர். 18 மாதம் நான் சிறையில் வாடினேன். பட்டப்படிப்பை தொடர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அவர்கள் என்னைக் கைதுச் செய்தனர். சிறையிலிருந்து நான் முதலில் விடுவிக்கப்பட்ட போதிலும் போலீசாரின் கொடுமை தொடர்ந்தது. பின்னர் நான் மருத்துவம் படிப்பதற்கு மெரிட்டில் அட்மிஷன் கிடைத்தது. ஆனால், என்னை பயங்கரவாதி என அழைத்து போலீஸ் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் என்னை மருத்துவம் படிக்க அனுமதிக்கவில்லை.

பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட எனது சகோதரர் காஜாவை நான் சந்திக்கப் போனபொழுது என்னை போலீசார் டார்ச்சர் செய்தனர். சிறையில் எனது சகோதரனுக்கு மொபைல் போனை கொண்டு கொடுத்ததாக கூறி அவர்கள் என்னை மீண்டும் சிறையிலடைத்தனர். எனது உறவினர்கள் உள்பட பலரையும் பொய்வழக்கில் சிறையிலடைத்தனர்.

வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வழக்கில் என்னை குற்றவாளியாக சேர்த்தபொழுது வீட்டை காலிச் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையிலிருக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுவாமி அஸிமானாந்தாவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தார். சக மனிதர்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்ள இஸ்லாம் கற்றுத் தருகிறது. அதனடிப்படையில்தான் நான் அஸிமானந்தாவுடன் நடந்துக் கொண்டேன். மூன்று தினங்கள் மட்டுமே எனக்கு அஸிமானந்தாவுடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

எவரும் தீவிரவாதிகளாக மாறுவதற்கு விரும்புவதில்லை. அவர்களை சமூகம்தான் அவ்வாறு ஆக்குகிறது. உண்மையான பயங்கரவாதிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை கைதுச்செய்து பயங்கரவாதிகளாக மாற்ற போலீஸ் முயற்சி செய்கிறது. நான் இனிமேல் எல்.எல்.பி(சட்டப்படிப்பு) படிப்பை தொடரப் போகிறேன். எனது அனுபவத்தை உலகம் முழுவதும் அறிவிக்க விரும்புகிறேன்." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.

இதுதான் தலையை விட்டு! விட்டு!! வாலை பிடிப்பதோ??

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டதைப் போல, இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலால் ரூ.1.76 லட்சம் கோடி வரை நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ராசாவுக்குப் பிறக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றார். இப்போது மத்திய அரசின் மற்றொரு அங்கமான சிபிஐ ராசாவை கைது செய்திருக்கிறது. எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றால் ராசாவை ஏன் கைது செய்ய வேண்டும்?.அத்தோடு இந்த பிரச்சனை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் போது இருந்து தொடங்குகிறது. அவர்கள்தான் இந்த ஊழலில் முக்கிய வூற்று கண் எனவே அவர்களும் இதில் கைது செய்யப்பட வேண்டும். ஒரு முழுமையான விசாரணை தேவை? வெறும் கண்துடைப்பாக எய்தவன் இருக்க அம்பை கைது பண்ணுவது எந்த பிரோஜனத்தையும் ஏற்படுத்தாது. இந்த வழக்கில் கருணாநிதியையும், நிரா ராடியாவிடம் தொலைபேசியில் பேசிய கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். ஏன் இதில் பயன் அடைந்த தரகு வியாபாரிகள் முதல் இதை எடுத்து ஆதாயம் அடைந்த பணமுதலைகள் வரை ஏன் ஒரு தெளிவான நடவடிக்கை இல்லை. இது ஒரு பாரபட்சமான விசாரணை தானே தவிர வேறு இல்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்!

புதுடெல்லி, பிப்.3- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறி இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. டெலிபோன் துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று 4- வது முறையாக ஆ.ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து மதியம் வரை நீடித்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் ஆ. ராசாவை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்தனர்.

ராசாவின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோ லியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை முன்னாள் அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது.

Wednesday, February 2, 2011

உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? படியுங்கள் இதை!

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்: அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்

இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத்தூக்கியுள்ளன!! ப.சிதம்பரம்!!!

புதுடெல்லி,பிப்:இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத் தூக்கியுள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இவ்வமைப்புகளின் பங்கினைக் குறித்து சந்தேகிக்கப் படுவதாக அவர் கூறினார். மலேகான், சம்ஜோதா, மக்கா மஸ்ஜித், அஜ்மீர் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் உள்பட பல்வேறு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் உள்நாட்டு பாதுகாப்பைக் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட மாநில முதல்வர்கள் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார் அவர். ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு பல்வேறு புது பெயர்களில் அமைப்புகளை துவங்கி செயல்படுத்தி வருவதாக சொன்னார்

மலேகான் குண்டுவெடிப்பு!! ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது!

மும்பை,பிப்.2: 2008-ம் ஆண்டில் நடைபெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரவீண் முத்தலிக் கைதுச் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்துவந்த பிரவீணை கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் லோககில் வைத்து மஹாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைதுச் செய்தனர். மஹாராஷ்ட்ரா சட்டவிரோத செயல் தடுப்புச்சட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 14-ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவருடன் சேர்த்து மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மலேகானில் குண்டுவெடிப்பு நிகழும்பொழுது இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்தின் அந்தரங்கச் செயலாளராக பணியாற்றியவர்தான் பிரவீண். இவ்வழக்கில் சதித்திட்டத்தை வெளிக்கொணர்வதில் பிரவீணின் கைது உதவிகரமாக இருக்கும் என மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பை திட்டமிடுவதற்கு புனே, நாசிக், பஞ்ச்வாதி ஆகிய இடங்களில் நடந்த ரகசிய கூட்டங்களில் பிரவீண் முத்தலிக் பங்கேற்றுள்ளார். குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை பாதுகாப்பாக வைத்திருந்த வாடகை அறையின் சாவி பிரவீண் முத்தலிக் வசமிருந்துள்ளது. அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்தான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ஃபாரன்சிக் பரிசோதனையில் உறுதியானதாக ராகேஷ் மரியா தெரிவித்தார்.

மெக்கானிக் எஞ்சினீயரிங் பட்டதாரியான பிரவீண் முத்தலிக் அபினவ் பாரத் என்ற பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராவார். இவ்வழக்கின் குற்றவாளிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் தற்போதும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். பயங்கரவாத பெண் சாமியார் பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோரை முன்னரே ஏ.டி.எஸ் கைதுச் செய்திருந்தது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி வடக்கு மஹாராஷ்ட்ராவின் நாசிக் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறுபேர் கொல்லப்பட்டிருந்தனர். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தொழுகைக்காக செல்லும் மஸ்ஜிதின் அருகில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இந்து பாரம்பரியத்தை அறிவியல் ரீதியாக பாதுகாக்கவே பாடுபட்டேன்!! சுவாமி நித்யானந்தா!


தன்னை சிலர் பிளாக்மெயில் செய்து வருவதாக நித்யானந்தா கூறியுள்ளார். பெங்களூர் பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில், நான் யாரையும் மெஸ்மரிசம் செய்யவில்லை. இந்து பாரம்பரியத்தை அறிவியல்ரீதியாக பாதுகாக்கும் என்னை குற்றவாளியாக ஜோடிக்க முயற்சி்ப்பதன் மூலம் அந்தப் பாரம்பரியத்தையே கொச்சைப்படுத்த முயன்றனர். என் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரஞ்சிதாவை பாதிக்கப்பட்டவர் போல காட்ட முயற்சித்தனர். பின்னர் கோபிகாவை பாதிக்கப்பட்டவர் போல காட்ட முயற்சி நடந்தது. என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்ளும் பொய்யானவை.

எனக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த யாராலும் பாதிப்பு வந்ததே இல்லை. அதற்காக கர்நாடக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பொய்யான வீடியோவை உருவாக்கி என்னை சிலர் பிளாக்மெயில் செய்து வருகின்றனர். என்னிடம் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டினர். சிலர் எனது பக்தர்களை மிரட்டி பணம் பறித்தனர். எனக்கு உலகம் முழுவதும் 1 கோடி பக்தர்கள் உள்ளனர். சில பவர்புல் மனிதர்களால் எனது உயிருக்கு ஆபத்து நிலவுகிறது என்றார்

Tuesday, February 1, 2011

சாமி அச்சிமானந்தா !!! hindu terror in india........


முபாரக்கை எகிப்து நீதியின் முன்னால் நிறுத்தும்: இஃவானுல் முஸ்லிமீன்!!!




கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை அபகரித்த ஹுஸ்னி முபாரக்கை எகிப்து நாட்டு மக்கள் நீதியின் முன்னால் நிறுத்துவார்கள் இஃக்வானுல் முஸ்லிமூன் தலைவர் முஹம்மது கானேம் தெரிவித்துள்ளார். லண்டனில் பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டின் முடிவை தீர்மானிக்கும் மக்களின் உரிமைகளை முபாரக் நீண்டகாலமாக அபகரித்துள்ளார். போக்கிரிகளின் துப்பாக்கி முனையில் அவர் எகிப்தை ஆட்சிபுரிந்தார். இதற்கெதிராகத்தான் எகிப்து நாட்டு மக்கள் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்த சர்வாதிகாரியை ஆட்சியை விட்டு அகற்றாமல் மக்கள் அடங்கமாட்டார்கள் என முஹம்மது கானேம் தெரிவித்தார்.


சிலரை மாற்றி தந்திரங்களை மேற்கொண்டு வருகிறார் முபாரக் என தெரிவித்த கானேம் போராட்டத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் .ஆயிரத்திற்குமேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான பணம் மதிப்புடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.


இவையெல்லாம் ஒரு தனி மனிதருக்கும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் நிகழ்ந்துள்ளது. எகிப்து நாட்டு மக்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அவர் அடங்கியிருக்கமாட்டார்கள். முபாரக் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுவதையும் காண்பதற்காகத்தான் எகிப்திய மக்கள் காத்திருக்கின்றனர்.



தற்பொழுது எகிப்தின் வீதிகளில் நடைபெறும் மக்கள் எழுச்சி ஏதோ எதேச்சையாக உருவானது அல்ல. நாட்டிற்கு நல்லதை நாடியவர்கள் முபாரக்கை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்க முபாரக் தயாராகவில்லை. இறுதியாக மக்கள் அவருக்கான தீர்ப்பை எழுத உள்ளனர்.



அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எவருக்கும் எகிப்திய மக்களை திருப்தி படுத்த இயலாது. அமெரிக்காவிடமிருந்து எங்களுக்கு எவ்வித உதவியும் தேவையில்லை. அது ஒருபோதும் எங்களுக்கு உதவாது. புரட்சி தற்பொழுது துனீசியாவிலிருந்து எகிப்தை வந்தடைந்துள்ளது. அல்லாஹ்வின் கருணையினால் இப்புரட்சி அரபுலகம் முழுவதும் பரவும் என நம்புவதாக முஹம்மது கானேம் தெரிவித்தார்.


செய்தி:

தேஜஸ் மலையாள நாளிதழ்

இஸ்ரேல் என்னும் பயங்கரவாதம் ...


வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு கருப்பு நாள் 1 மார்ச் 2008.
யூத இஸ்ரேலியர்களின் 12 மணி நேரக் கொலை வெறித்தாக்குதலில் 55 பாலஸ்தீன காஸாவின் பொது மக்கள் உயிரிழந்த ஒரு கொடுர நாள், இதில் குழந்தைகளும் பொதுமக்களுமாக கொல்லப்பட்டவர்கள் 45 பேர். 10 பேர் பாலஸ்தீன வீரர்கள். பள்ளிக்கு செல்லும் பச்சிளம் பாலகர்கள், மைதானத்தில் கால்பந்து விழையாடி கொண்டிருந்த சிருவர்கள், வீட்டுக்குள் இருந்த பெண்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை
இப்படி ஒரு கொடுர இனப்படுகொலை நடத்துவதற்கு  மாடன் வில்னை Matan Vilnai என்ற இஸ்ரேலிய துனை பாதுகாப்பு அமைச்சர் முடிவு எடுத்தவுடன். அதி நவின தொழில் நுட்ப ஆயுதங்கள் அடங்கிய பண் முனைத் தாக்குதல் நடத்த கூடிய F16 மற்றும் அபெசெஸ் Apaches போன்ற விமானங்களின் மூலமாக மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகள், ஏவுகணைகள், கொத்தாக வெடிக்கும் Cluster bombs  போன்ற சகலவிதமான ஆயுதங்களுடன் ஓர் போர்களத்தில் எதிரிகளை தாக்குவதை விட கொடுரமான முறையில் பாலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அடல்லா என்பவரின் ஒருவரின் வீட்டில் மட்டும் ஒரு டன் வெடிமருந்து அடங்கிய ஏவுகனைகளால் F16 விமானம் மூலம் தாக்குதல்  நடத்தப்பட்டது. ஒரு துரும்பு கூட மிஞ்சாத அளவிற்கு குண்டு வீச்சினால் நொருக்கப்பட்டது அவரின் வீடு, அதில் அவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர்களும் கொல்லப்பட்டனர்.
12 மணி நேரத்திற்குள் பாலஸ்தீன வான்வெளியில் 30 தடவை வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்பட்டது, 50 சக்தி வாய்ந்த குண்டுகளும் , மேலும் பலவிதமான வெடிக்கும் கொத்து வெடிகுண்டுகளும் பாலஸ்தீன மக்களின் மீது வீசப்பட்டது, மேலும் கண்ணில் கண்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றார்கள். மிகவும் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அறிவிக்கப்படாத போர் ஒன்றினை பொது மக்கள் மீது நடத்திவிட்டு தனது கொலை வெறியை தீர்த்துக்கொண்டது. 


இறந்தவர்களின் விபரங்கள்.





 1- Eyad Al Ashram, Male, 26
2- Musleh Abu Ali, Male, 17
3- Jakline Abu shbak, Female, 17                                      
4- Eyad abu Shabk, Male,14
5- Basam Muhammad Ubaid, Male, 45
6- Basam Ubaid, Male, 15
7- Hamza Al jamal, Male,40
8- Abdallah Abd Rabu, male, 4
9- Ibrahim Alzain, Male, 25
10- Mustafa Zaghloul, Male, 32
11- Hamada Abd Al hameed, male, 29
12- Saeed Al hasheem, Male, 23
13- Husain Al batsh, Male, 27
14- Samah Zaydan Asalya, Female, 17
15- Salwa Zaydan Asalya, Female, 23
16- Tala't Dardona, Male, 29
17- Mustafa Abu Jalala, Male, 28
18- Hasan Safi, Male, 25
19- Abdallah Abu Shaira, Male, 18
20- Mutasim Abd Rabu, Male, 24
21- Hamada Saleh Al abad, Male, 16
22- Mustafa Manon, Male, 22
23- Muhammad Sleem, Male, 24
24- Muhammad Abdalrahman Shhab, male, 23
25- Ali Al kitnani, Male, 15
26- Tal'at Dardona, Male, 17
27- Sana Ghad Al abed Saleh, Female, 16
28- Ahmed Albatsh, Male, 16
29- Muslih Muhamad Muslih,Male, 17
30- Thabet Junied, Male
31- Sultan Al zain, Male
32- Mustafa Abu Jalala, Male
33- Muhammad Al atar, Male
34- Nael Abu Alon, Male, 20
35- Muhammad Abd Al mouti Sleem, Male,
36- Saed Dabour, Male, 28
37- Hamada Saed, Male
38- Mahmoud Rayan, Male
39- Jedjad Hatem Abu Hlayal, Male
40- Thari Abu Aubaid, Male
41- Tamer Weshah, Male
42- Ahmed Saleh Abd Al rahman
43- Muhammad Abd Al qader Oqylan
44- Hasan Abu Harb
45- Abd Al rahman Atallah, Male, 60 
46- Ibrahim Attalah, Male,30
47- Sua'd Atallah
48- Unknown
49- Unknown
50- Unknown
51- Unknown
52- Unknown
53- Unknown in Khanyonis City
54- Unknown in KhanYonis City


























பாலஸ்தீன மக்கள் இன படுகொலையை கண்டு உலக நாடுகள் அச்சத்தில் உறையவில்லை மாறாக அமைதிகாத்தது, ஏனென்றால் இது முதல் முறை அல்ல , யூதர்கள் பாலஸ்தீனிய மக்களை தொடர்ந்து கொல்வதும் ,அப்பாவி மக்கள் செத்து மடிவதும் வாடிக்கையாகி விட்டது. 


மேலை நாடுகளில் ஒரு சிறு விபத்து நடந்தால் கூட அது பூதகரமாக ஊடகங்களில் காட்டப்படும், ஆனால் பாலஸ்தீனத்திலும், இலங்கையிலும், கொஸாவாவிலும்,காஷ்மீரிலும் எத்தனை மனித உயிர்கள் மாண்டாலும் யாருக்கும் கவலையில்லை


இங்கு நடப்பது உலக பயங்கரவாதம், இஸ்ரேலியர்கள் மனித குலவிரோதி என எதிர்ப்பதற்கு யாரும் தயாராக இல்லை. மாறாக அமெரிக்காவையும், யூரோப்பாவையும் தனது ஆட்சி பொம்மையாக மாற்றி கொண்டும் தான் விரும்பியபடி ஆட்சி அதிகாரங்கள் செலுத்தி  வருகின்றனர் யூதர்கள்.
இது வரை இஸ்ரேலை ஒதுக்கி வைத்திருந்த இந்தியா போன்ற நடு நிலை நாடுகள் கூட இன்று இஸ்ரேலை ஒரு நாடாக அங்கிகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது தொழில் நுட்பத்தை வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது,
 இந்தியாவில் உள்ளூர் மக்களை ஒடுக்குவதற்கு இஸ்ரேலிய பயங்கரவாத நாட்டிலிருந்து பேரழிவு ஆயுதங்களை வாங்கி வருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பயங்கரவாத இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்குமான வணிக மற்றும் தொழில் நுட்ப ஒப்பந்த உறவுகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது மிகவும் பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்திய அரசால் இயக்கப்படும் பல சித்திரவதை கூடங்களும் இஸ்ரேலின் மொஸாத் உளவுத்துறையினரால் பயிற்சி அளிக்கப்பட்டவை தான்.
உயர் சாதி பிராமணர்கள் குனாதிசயத்தில் யூதர்களைப் போன்றவர்களாக இருப்பதாலும் மேலும்  யூதர்களும் ,பார்பானியர்களும் ஒரே மூலத் தோற்றதிலிருந்து –ஆசியாவின் காஜர் சமுக கூட்டத்திலிருந்து வந்தவர்களாக இருப்பதாலும் இந்தியாவில் இயல்பாகவே இவர்களின் பொது எதிரியாக உள்ள இஸ்லாமியர்களையும், வர்ணாசிரமத்திற்கு எதிராக செயல் படுவோர்களையும் இன அழிப்பு செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாகவே ஆட்சியிலும், அதிகாரத்திலும் பார்பனர்கள் மட்டுமே மேலோங்கி இருப்பதால் யூதர்களுடனான உறவு என்பது இந்தியாவில் அதிகமாக வளர்ந்து வருகிறது.