Wednesday, September 28, 2011
"புராக்" வாகனப்பயணமும் அறிவியல் நிரூபணமும்!
1. புராக் விமானத்தில் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சிக்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?
Movement Of Masses-Popular Front!
Wednesday, September 28, 2011
No comments
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப்பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட டெக்கன் கிரோனிக்கலை கண்டித்து மறுப்பு செய்தி அனுப்பியதும் புதன்கிழமை (28.09.2011) அன்று வெளியிடப்பட்ட மறுப்பு செய்தி.
டெக்கன் கிரோனிக்கல் வெளியிட்ட மறுப்பு செய்தி
அவதூறை பரப்பும் போது முக்கிய பக்கத்தில் அதுவும் அதிக வரிகளில். மறுப்பை வெளியிடும்போது மட்டும் சிறிய வடிவில். இது தான் இன்றைய பத்திரிக்கையின் நிலை.
அவதூறை பரப்பும் போது முக்கிய பக்கத்தில் அதுவும் அதிக வரிகளில். மறுப்பை வெளியிடும்போது மட்டும் சிறிய வடிவில். இது தான் இன்றைய பத்திரிக்கையின் நிலை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மாபெரும் கருத்தரங்கம் திருமா எம்.பி, அப்துர்ரஹ்மான் எம்.பி, தெஹ்லான் பாகவி ஆகியோர் கருத்துரை
Wednesday, September 28, 2011
No comments
முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றிடவும் நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் மீண்டும் தனி வாக்காளர் தொகுதிகளை (இரட்டை வாக்குரிமை)அமைக்க கோரியும் சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் துணை அமைப்புகளான இசுலாமிய சனநாயகப் பேரவை, சமூக நல்லிணக்க பேரவை சார்பாக வரும் டிசம்பர் 11 -ல் சென்னையில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற உள்ளது. இதை விளக்கி "மாபெரும் கருத்தரங்கம்" சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஜுலை 30- ல் நடைபெற்றது.
இமாம் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, முஸ்லிம் லீக்கை சேர்ந்த எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி, SDPI ன் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.இதில் சிந்தனையாளர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது – மத்திய திட்டக் குழு
Wednesday, September 28, 2011
No comments
டெல்லி:நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தினசரி நகரங்களில் ரூ.32-க்கும், கிராமங்களில் ரூ.26-க்கும் அதிகமாக செலவிடுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்காக வழங்கப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெற முடியாது.
அதே நேரத்தில், சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.3,860-ஐத் தாண்டினால் அந்தக் குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு தானியங்களுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5.50, பருப்பு வகைகள், பால் மற்றும் சமையல் எண்ணெய்க்காக நாள் ஒன்றுக்கு முறையே ரூ.1.02, ரூ.2.33 மற்றும் ரூ.1.55 செலவிட்டால் போதுமானது என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது.
நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.49.10-க்கும் அதிகமாக செலவு செய்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
மாதம் ஒன்றுக்கு மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக முறையே ரூ.39.70 மற்றும் ரூ.29.60 செலவிடுபவர்களை ஏழையாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீடு தற்காலிகமானதுதான் என்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் தெண்டுல்கர் குழு அறிக்கைபடி இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் திட்டக்குழு தெரிவித்துள்ளது.
நன்றி
www .thoothuonline .com
Tuesday, September 27, 2011
கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?
ஆஃப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத் தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஆப்கானிஸ்தான் காபூலில் கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான்.
ஆனால் அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணமல்ல. தீவிரவாதத்தால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை சோவியத் படைகள் ஆக்கிரமித்து இருந்த போது முஜாகிதீன்களை உருவாக்கியது அமெரிக்கா தான். அவர்களுக்கு பல ஆண்டுகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஊக்குவித்தது அமெரிக்கா. இப்போது தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானை பலிகடா ஆக்க நினைப்பது தவறு.
பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் சில சட்டதிட்டங்கள் உள்ளன. அவற்றை இருநாடுகளும் பின்பற்றுவது நல்லது. பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
அமெரிக்கா தாராளமாக பாகிஸ்தானுடனான உறவை முறித்துக் கொள்ளட்டும். அது அவர்களது இஷ்டம். ஆனால் அதனால் நஷ்டம் பாகிஸ்தானுக்கு கிடையாது, அமெரிக்காவுக்குத்தான் என்று கடுமையாக பதிலளித்தார். அதற்கும் மேலாக, உலக அளவில் தீவிரவாதிகளை வளர்த்து ஆளாக்குவதே அமெரிக்காதான் என்றும் மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார்.”
மேலும் அவர் கூறுகையில்; “அமெரிக்கா பாகிஸ்தானின் பொறுமையை சோதித்துப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்படி அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தானை குறை சொல்வதைத் தொடர்ந்தால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படும்.
அமெரி்க்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு அதனிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. அமெரிக்காவே ஹக்கானி அமைப்பை உருவாக்கிவிட்டு தற்போது அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் கூறுகிறது.
அமெரி்க்காவின் சிஐஏவுக்கு உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. ஹக்கானி அமைப்பு சிஐஏவுக்கு பிடித்தமான ஒன்று தான்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகளை விட பாகிஸ்தான் தான் அதிகமான மக்களை இழந்துள்ளது. அமெரிக்கா தன் விருப்பத்திற்காக எந்த நாட்டையும் அழிக்க முடியாது. எங்களாலும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்த முடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. அமெரி்ககாவில் ஒரு 9/11 தாக்குதல் தான் நடந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் அது போன்று 311 தாக்குதல்கள் நடந்துள்ளது.” என்றார்.
ஹினாவின் இந்த ஆவேசப் பேச்சால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
நன்றி : தூது ஆன்லைன்
Subscribe to:
Posts (Atom)