Thursday, December 1, 2011

பாங்கோசையை முன்மொழிந்தவர்!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உமர்[ரலி] அவர்கள், 'உமரின் நாவின் அல்லாஹ் பேசுகிறான்' என்று நபி[ஸல்] அவர்களால் சிறப்பித்து சொல்லப்பட்ட ஸஹாபி என்பதை நாம் அறிவோம். உமர்[ரலி] அவர்கள் கூற்றிற்கேற்ப, அல்லாஹ் சில வசனங்களை இறக்கியதையும் நாமெல்லாம் அறிந்துள்ளோம். அத்தகைய சிறப்பிற்குரிய உமர்[ரலி] அவர்கள் இன்னொரு நல் அமலுக்கு ஒரு ஆலோசனை கூற அது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, அன்றும்-இன்றும்- நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இவ்வுலகம் உள்ளளவும் அது நடைமுறையில் இருக்கும். ஆம்! அதுதான் அல்லாஹ்வை வணங்க ஐவேளை தொழுகையின் போது அழைக்கப்படும் 'பாங்கு' எனும் அழைப்போசையாகும்.
இதுபற்றிய பொன்மொழி இதோ;

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர்.அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 604

இந்த பொன்மொழி உமர்[ரலி] அவர்களின் பெரும்பாலான சிந்தனைகள், செயல்கள் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் பொருந்திக்கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளதற்கு மற்றொரு சான்றாகும்.
அல்லாஹ் உமர்[ரலி] அவர்களுக்கு கிருபை செய்வானாக!

sahabakkal.

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு.


ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.

அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. 

இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.

ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் துவங்கிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சமூகநீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் நாங்களும் உடனிருக்கிறோம் என முலாயம் கூறினார். 

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: ‘சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையும் முஸ்லிம்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டிய பொழுதும் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் காட்சி தயாராகவில்லை. தேர்தல் காலத்தில் மக்களை முட்டாள்களாக்கும் உபகரணமாகவே காங்கிரஸிற்கு இந்த அறிக்கைகள் மாறின. இரண்டு தடவை வாய்ப்பு கிடைத்த பிறகும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆட்சிபுரிவது யார்? என்பதை கூட அவர்களால் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என கூறும் மத்திய அமைச்சர், அதற்காக ஒரு மசோதா கூட கொண்டுவர தயாராகவில்லை.’ இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு பொதுக்கூட்டம் துவங்கியது. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் செய்யது ஸலாஹுத்தீன், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மெளலானா முஹம்மது வலீ ரஹ்மானி, ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்யா சத்தியோந்திர தாஸ் மகராஜ், 

சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் ஃஹாலிக், அஜ்மீர் ஷரீஃப் காதிம் ஸய்யித் ஸர்வார் ஸிஸ்தி, ஃபதேஹ்பூரி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், ராஷ்ட்ரீய ஸஹாரா எடிட்டர் அஸீஸ் பர்ணி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் மவ்லானா டாக்டர்.யாஸீன் உஸ்மானி, அம்பேத்கர் சமாஜ்வாதி கட்சி தலைவர் பாயி தேஜ்சிங், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸீன் ஹாஷியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இப்பொதுக்கூட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் கலந்துக்கொள்ளவியலாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் வாழ்த்துச்செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றி நவின்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா ‘டெல்லி பிரகடனத்தை’ வாசித்தார்

வீணாகும் மக்கள் பணம், விழிப்பாரா பொதுஜனம்?



Indian Parliment status
பத்து வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது நாடே அதிர்ச்சியில் மூழ்கியது. நாடாளுமன்றத்தின் மீது, நாட்டின் இறையான்மை மீது, ஜனநாயக நெறிமுறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைவரும் கூறினர். உண்மையில் அத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது வேறு கேள்வி. ஆனால் அச்சம்பவத்தின் மூலம் அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக பாஜக, ஆதாயம் பெற்றனர்.
ஜனநாயகம், இறையான்மை என்று கூக்குரல் இட்டவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றனர்.? ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போதும் ஏதேனும் ஒரு பிரச்சனையை கிளப்பி நாடாளுமன்றத்தை முடக்குவதுதான் இவர்களின் வேலையாக உள்ளது. அன்று நாடாளுமன்றத்தின் மீது தாக்குதலை நடத்தியவர்கள் ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கினர் என்றால் இவர்கள் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கியுள்ளனர்.
நமது நாடாளுமன்றும் முறையாக எப்போது செயல்பட்டது என்பதே பலருக்கும் மறந்து விட்டது. ஒவ்வொரு நாளும் அவை பத்து மணிக்கு தொடங்குவதும் பின்னர் பதினொறு மணி வரை ஒத்திவைப்பு, பின்னர் இரண்டு மணி வரை ஒத்திவைப்பு, இறுதியாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு என்பது நமது தேசத்தில் ஒரு சடங்காக மாறியுள்ளது. இடையிடையே பள்ளி குழந்தைகளை ஆசிரியர் கையாள்வது போல் ‘பைட் ஜாயியே, பைட் ஜாயியே’ (அமருங்கள், அமருங்கள்) என்ற சபாநாயகரின் கெஞ்சல் வேறு. உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில் நடக்கும் இந்த கேலிக் கூத்துகளை உலகமே பார்த்து கைகொட்டி சிரிக்கிறது. அப்பாவியான பொதுஜனமோ விரக்தியில் இருக்கிறார்கள்.
சிலர் தங்களுக்குள் ஆவேசமாக பேசி ஆதங்கத்தை தீர்த்து கொள்கின்றனர். இளைஞர்கள் நாடாளுமன்ற கூத்துகளை நகைச்சுவையாக தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். பலரும் தங்களின் விதியை நொந்தபடி அமைதியாக இருந்து விடுகின்றனர். ஆயிரக்கணக்கில் சம்பளம், சுகபோக வாழ்வு என அனைத்தையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் இவர்கள் செய்யும் அடாவடியால் தினமும் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணாகிப் போகிறது. ஏதோ வருகைப பதிவிற்காக கல்லூரிக்கு செல்லும் மாணவனை போன்று பத்து மணிக்கு அவைக்கு சென்று பத்தரை மணிக்கு வெளிநடப்பு செய்யும் இவர்களின் அடாவடிகள் எல்லையை மீறி சென்று கொண்டிருக்கின்றன.
மக்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் பேசுவதற்கு அமைக்கப்பட்டது தான் நாடாளுமன்றம். அதனை நடத்தாமல் முடக்குவதன் மூலம் மக்களின் நலன்கள் புறம் தள்ளப்படுகின்றன. கூச்சல்போடுவது மூலமும் ஒத்திவைப்பு மூலமும் நாட்டின் பிரச்சனைகள் தீர்க்கப்படுமா? இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று பல தொலைக்காட்சி சேனல்கள் விவாத நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் அதே பிரச்சனைகள்தான் அங்கும் விவாதிக்கப்படுகின்றன. அவற்றில் எல்லாம் பங்கு பெற்று தங்கள் கருத்துக்களை தெரிவிப்பவர்கள் அதே முறையை பாராளுமன்றத்திலும் ஏன் பின்பற்றுவதில்லை?
பிரச்சனை இத்துடன் முடிவதில்லை. அதிசயமாக என்றாவது நாடாளுமன்றம் ஒழுங்காக நடைபெறும் போது எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் உள்ளனர்? பல இருக்கைகள் காலியாக இருப்பதை நம்மால் காண முடியும். இருப்பவர்களில் சிலர் தூங்கி கொண்டும் மற்றவர்கள் மௌனமாக இருந்து கொண்டும் நமது நாட்டை வழி நடத்தி செல்கின்றனர்!! இதுதான் நமது நாட்டின் பரிதாபமான நிலை.
ஏதோ தேர்தலில் ஓட்டளித்து விட்டோம் அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்ற மனப்பான்மை பொது மக்களிடம் மாற வேண்டும். தங்களுடைய உறுப்பினரின் செயல்பாடுகளை கவனித்து அது குறித்து கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும். இப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருக்கிறீர்களே, நீங்கள் ஆட்சியில் இருந்த போது இதே பிரச்சனையை ஏன் கையாளவில்லை என்று இயல்பாக எழும் கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும். முறையாக செயல்படாதவர்களுக்கு பொதுவாழ்வில் இருந்து விடுப்பு அளிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதால் கோடிக்கணக்கான பணம் வீணாகிறது. இப்பணத்தை அவையை நடத்த விடாமல் தடுக்கும் உறுப்பினர்களிடமிருந்து வாங்க வேண்டும். வேலைக்கு வராத அல்லது ஒழுங்காக வேலை செய்யாத பணியாளருக்கு சம்பளம் தருவதையோ வேலையில் தொடர்ந்து வைத்திருப்பதையோ எவரும் விரும்புவதில்லை. சாதாரண ஒரு நிறுவனத்திற்கே இந்நிலை என்றால் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில்…
சிந்தனைக்கு…
-:ஏர்வை ரியாஸ்:-
sources onlinethoothu

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகள் தயார் – ஈரான் .


ahmad vahidi
டெஹ்ரான்:இஸ்லாமிய குடியரசான ஈரானை தாக்க முற்பட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிரிகேடியருமான ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.
வாஹிதி கடந்த ஞாயிறு அன்று ஈரானுக்கு எதிராக போர் தொடுத்தால் இஸ்ரேல் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருக்கும் என்றும் ஈரான் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவும் என்றும் கூறியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் எத்தனை போர் கப்பல்களை மற்றும் போர் தளவாடங்களை இழக்க தயார்செய்து வைத்துள்ளது என்ற கேள்விக்கு முதலில் அவர்கள் பதில் கூறட்டும். எதற்காக இந்த ஜியோனிச நாடு எங்களை பயமுறுத்திப் பார்க்க நினைக்கின்றது. எங்கள் நாட்டின் மீது போடா எத்தனை ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளது 10,000? 20,000? 50,000? 100,000? அல்லது 150,000 ? என்று அவர் கேட்டுள்ளார்.
போர் தொடுப்பதற்கு முன்னர் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் எங்கள் பலத்தை முதல் தெரிந்துக் கொள்ளட்டும். மேலும் அவர் போர் தொடுத்தால் நாங்கள் அமெரிக்காவிற்கு உண்மையான போர் எப்படி இருக்கும் என்றும் ராணுவ வீரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும் பாடம் புகட்ட தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வாஹிதி கூறியதாவது; ‘ஈரானின் ராணுவம் எங்கள் நாட்டினுடைய இறையாண்மையை காக்க ஒருபோதும் தயங்காது என்றும் இந்த ஜியோனிச நாடு மீண்டும் மீண்டும் ஈரானை பயமுறுத்த முற்பட்டால் ஈரானின் “பாசிஜ் ராணுவம்” அதற்கு பழி தீர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி டெஹ்ரான் மீது போர் தொடுக்கப் போவதாக கூறிவருகிறது. ஆனால் ஈரானோ இந்த குற்றக் சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வருவதுடன் தாங்கள் அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளதால் அது போன்று எந்த அணுஆயுதமும் தயார் செய்யவில்லை என்றும் மேலும் சர்வதேச அணு சக்தி நிறுவனத்தில் உறுப்பினராக இருப்பதாகவும் எனவே ஆக்கப் பூர்வமான காரியங்களுக்காக அணு தொழிநுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள தங்களுக்கு அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல்தான் அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்து போட மறுத்து வருவதாகவும் சர்வதேச அணு சக்தி நிறுவனம் இஸ்ரேலில் சென்று சோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் சமீபத்தில் அணுஆயுதத்தை சுமந்து சென்று தொலை தூரத்தை தாக்கும் ஏவுகணையை தயாரித்து சோதனை செய்துள்ளதாகவும் அது 10,000  கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கக்கூடிய தன்மையுடையதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற அனுஆயதம் ஏற்றிசெல்லும் ஏவுகணைச் சோதனைகள் ஏன் மேற்குலகிற்கு ஆபத்தானதாக தெரியவில்லை? என்றும் ஈரான் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source-online thoothu

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐற்கு மாற்ற வேண்டும் : எஸ்.டி.பி.ஐ கோரிக்கை.



பரமக்குடியில் தலித்துகள் மீதான் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை தலா ஒரு இலட்சம் என தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ சார்பாகவும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதோடும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அறிவித்த நிவாரண தொகை தலா ஒரு இலட்சத்தை ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்தியும் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டதை வரவேற்கிறேன்.

அதே சமயம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க அரசு நியமித்த நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரனை ஆணையத்தை பாதிக்கப்பட்ட மக்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஏற்க்கவில்லை என்பதை மனதில் கொண்டு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க சி.பி.ஐக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டுமெ என மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு மாநில ஊடக தொடர்பாளர் தன்வீர் செய்திக்குறிப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அலுவலகத்திலேயே அடைந்து கிடக்கலாமா?


நகர வாழ்க்கைச் சூழ்நிலையில், வியர்க்க விறுவிறுக்க வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்! வெயிலுக்கு முன்பாகவே அலுவலகத்தை அடைந்து, பகல் முழுக்க ஏசி அறையில் அடைந்துகிடந்து மாலையில் வீடு திரும்புவதுதான் பெரும்பாலானோரின் வாடிக்கையாகிப் போனது. இதனால், சருமத்தில் வெயில் படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது!
'' 'ஆஸ்டியோபெரோசிஸ்’ (Osteoporosis) என்னும் 'எலும்பு திண்மைக் குறைவு நோய்’ ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமே, நம் சருமத்தில் சூரிய ஒளி படாமல் இருப்பதுதான். உடலுக்குத் தேவையான 'வைட்டமின் டி’ சத்து குறையும்போது, எலும்புகள் பலவீனப்பட்டு வலுவிழந்து போய்விடும். இயற்கையிலேயே சூரிய வெளிச்சம் மூலம் 'வைட்டமின் டி’ கிடைக்குமாறு பழக்கப்படுத்திக் கொண்டால் பெரும்பான்மையான நோய்கள் நம்மை நெருங்காது, ஆரோக்கியமே நம்மை அரவணைத்துக் கொள்ளும்'' என்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளரும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பழனி. தொடர்ந்து பேசியவர்...
''சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி-தான் நம் உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும். அந்த வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைக்காதபோது, இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு, கை எலும்புகளை இந்நோய் மிக விரைவில் தாக்கும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும், 50 வயதைக் கடக்கும் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினரையும், இந்த நோய் மிக எளிதில் தாக்குகிறது. மெனோபாஸ் ஸ்டேஜை அடையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இதனால், எலும்புகளில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழந்துபோவதால் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்டோஸ்டெரோன் (Testosterone)  என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் இந்த நோய் எளிதில் தாக்குகிறது.
இந்த நோய் தாக்கும். உடம்பில் ஜீரண சக்தி (Malabsorption syndromes) குறைபாடு இருந்து, ஊட்டச் சத்துக்கள் உடம்பில் சேராமல் போகும்போது இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், கால்சியம் குறைபாடு, சிறுநீரகப் பாதிப்பு, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிப்பு, ஆஸ்துமா நோய்க்காக எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு வகை மாத்திரைகளாலும் ஆஸ்டியோபெரோசிஸ் நோய் ஏற்படலாம்.
இந்த நோய்க்கு வலி, கட்டி போன்று எந்த அறிகுறியும் இல்லை. அதனால் எளிதில் இந்த நோய் பாதிப்பைக் கண்டறிய முடியாது. நமக்குத் தெரியாமலே நமது எலும்பில் பாதிப்பினை ஏற்படுத்துவதால், இது ஒரு 'சைலன்ட் கில்லர்’! விபத்தின்போது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா என்று டாக்டர் எக்ஸ்ரே எடுத்து பார்க்கும் போதுதான் ஆஸ்டியோபெரோசிஸ் பாதிப்பு உள்ளதே பலருக்கும் தெரியவருகிறது. மிகவும் பலவீனமாக இருப்பவர்கள் தும்மினாலோ அல்லது குனிந்து ஒரு பொருளை எடுப்பதனாலோகூட எலும்பு முறிவு ஏற்படலாம்'' என்றவர், இந்த நோய் வராமல் தடுக்கும் வழிகளையும் கூறினார்.
''எந்த நேரமும் அலுவலகத்திலேயே அடைந்து கிடக்கக் கூடாது. சூரிய ஒளி தினமும் நம் சருமத்தில் படுமாறு பார்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். அல்லது வைட்டமின் - டி சத்துள்ள மாத்திரைகள் சாப்பிடலாம். கால்சியம் சத்து மிகுந்த பால், தயிர், வெண்ணெய், சோயா பீன்ஸ், புதினா கீரை வகைகள் மற்றும் பச்சைக் காய்கறி வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 60 வயதைக் கடந்த ஆண்கள், 50 வயதைத் தாண்டியப் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஆஸ்டியோபெரோசிஸ் நோயால் பாதிப்படைந்தவர்களின் முறிந்த எலும்பினை நேராக்கி ஆபரேஷன் செய்து இணைக்கலாம். அல்லது எலும்பினை பசை போட்டு ஒட்ட வைக்கும் 'வெஸ்டிபுலர் நியூரோனிட்ஸ்’ (Vestibular neuronitis) சிகிச்சை அளிக்கலாம்.
உலகில், மூன்று நிமிடத்திற்கு ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு சில மிகப்பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே
இதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அலுவலகமே கதி என கட்டிப் போட்ட கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல், வெளியே வெயிலில் சிறிது நேரம் இருக்கும்படியான பணிகளையும் விரும்பி ஏற்று செய்யுங்கள். குழந்தைகளையும் வெயிலில் ஓடியாடி விளையாட விடுங்கள். எலும்புகள் திண்மைக் குறைவு அடையாமல், திடகாத்திரமாக இருக்கும்!'' என்கிறார் டாக்டர் பழனி.
JO.
thedipaar.com

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை. சர்வதேச ஆய்வில் தகவல்..


உலகத்தில் மக்கள் பாதுகாப்புடன் வாழ ஏற்ற நகரங்கள் எது என்று ஆண்டுதோறும் மெர்சர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் 221 நகரங்களில் ஆய்வு நடத்தியது.
 
இதில் பெல்ஜியத்தில் உள்ள லக்சம்பர்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை நகரம் 108-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தனி மனித பாதுகாப்பு மிகுந்த நகரங்களில் சென்னைக்கே முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பெங்களூர்.
 
மெர்சர் நிறுவன ஆய்வுப்படி சர்வதேச அளவில் இதற்கு 117-வது இடம் கிடைத்துள்ளது. டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு 127-வது இடம் கிடைத்துள்ளது. 2 நகரங்களும் ஒரே இடத்தில் உள்ளது. மும்பை 142-வது இடத்தை பிடித்துள்ளது.  
 
இதே போல் அமைதியான சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி கொண்ட வாழ்வதற்கு ஏற்ற நல்ல நகரங்கள் எது என்பது பற்றியும் மெர்சர் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
 
இதில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரம் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூகுரிச் நகரம், 3-வது இடத்தை நியூசிலாந்தின்- ஆக்லாந்து நகரம் பெற்றுள்ளது. வழக்கமாக முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் இந்த ஆண்டு 25-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெங்களூருக்கு 141-வது இடம் கிடைத்துள்ளது.
 
இந்தியாவைப் பொறுத்தவரையில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் பெங்களூர் முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லி 2-வது இடத்தையும், மும்பை 3-வது இடத்தையும், சென்னை 4-வது இடத்தையும், கொல்கத்தா 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.
 
சர்சதேச அளவில் டெல்லி 143-வது இடம், மும்பை 144-வது இடம், சென்னை 150-வது இடம், கொல்கத்தா 151-வது இடத்தில் உள்ளது.
as
source-thedipaar.com

உலக எயிட்ஸ் தினம்


மனித குலத்தின் இறையாண்மைக்கும், விஞ்ஞான அறிவுக்கும் விடப்பட்ட சவால், "எய்ட்ஸ்'. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணத்தை சிறிது காலம் தள்ளிப்போட மட்டுமே மாத்திரைகள் உள்ளன.

இந்த நோய் பாதிப்பால், மனிதநேயமும், குடும்ப உறவுகளும் குப்பைக்கு சென்று கொண்டிப்பது வேதனைக்குரிய ஒன்று. எய்ட்ஸ் பாதித்தோரை, ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பதும், குடும்பத்தில் இருந்து வெளியேற்றுவதும் வாடிக்கையாக அரங்கேறுகிறது. அத்தகைய புறக்கணிப்பு, மனிதநேய மாண்பு சிதையுற்றும், சீரழிந்தும் இருப்பதையே நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய சூழலில், எய்ட்ஸ் பாதித்தோருக்கு அன்பும், ஆதரவும் கொடுத்து பாதுகாக்க வேண்டியது அவசியம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு, நாட்டின் அனைத்து பகுதியிலும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. விழிப்புணர்வு மூலம் நோய் பாதித்தோரை அரவணைக்கும் சூழ்நிலையை உருவாக்க முடியும்.உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துதான் எய்ட்ஸ் நோய் என்பதை நினைவூட்டும் நாள் (டிச. - 1)
thanks to yarlmuslim

எகிப்து தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிம்கள் முன்னிலை



எகிப்தில் இடம்பெற்ற முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி முன்னிலை பெற்றுள்ளது. எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல்கட்ட தேர்தல் முடிவடைந்தது. எகிப்து தலைநகர் கெய்ரோ, அலக்சான்ட்ரிய போன்ற முக்கிய நகரங்களில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் தாம் முன்னிலை பெற்றுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அறிவித்துள்ளது. கட்சி அடிப்படையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு 40 வீத ஆசனங்கள் முன்னிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது. வேட்பாளர்கள் அடிப்படையிலும் அந்தக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

எகிப்த்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் கிளர்ச்சியின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின் அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஹொஸ்னி முபாரக் ஆட்சிக் காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
thanks to yarlmuslim

துபாய் அழைப்பு: நூதன முறையில் மோசடி!


தஞ்சாவூரைச் சேர்ந்தவர் உத்திரபதி. இவரது மகன் ராஜா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயிக்கு வேலை சென்றார். அங்கு அவர் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது தனது குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்திரபதியின் பக்கத்து வீட்டுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர், துபாயில் இருந்து ராஜா பேசுவதாக கூறினார். அவர் தனது தந்தைக்கு விமானம் மூலம்  விலை உயர்ந்த பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், இதற்கான வரி கட்டணமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மதுரை விமான நிலையத்துக்கு வரும் கணேசன் என்பவரிடம் கொடுக்குமாறு தனது தந்தையிடம் கூறிவிடும்படியும் சொல்லிவிட்டு, இணைப்பைத் துண்டித்து விட்டார்.

இது பற்றி பக்கத்து வீட்டுக்காரர் உத்திரபதியிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துடன் உத்திரபதி மதுரை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு ஒருவர் தன் பெயர் கணேசன் என்று கூறி உத்திரபதியிடம் ரூ.1 லட்சத்து 80ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டார். அதன்பின் அவர் உத்தரபதியிடம், "சிறிது நேரம் இங்கேயே இருங்கள், உங்கள் மகன் அனுப்பிய பொருட்களுடன் வருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. அதன்பின்தான், தான் ஏமாற்றப்பட்டதை உத்திரபதி உணர்ந்தார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து பெருங்குடி காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் விமான நிலையத்துக்கு வெளியில் வைத்து முதியவரை நூதன முறையில் ஏமாற்றிய மர்ம நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.