Friday, July 6, 2012

மஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்!! TISS!!


புதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் TISS அறிக்கை கூறுகிறது.
சில வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போலீஸ் கைது செய்கிறது என்று TISS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
15 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர். தடா, மோக்கா போன்ற தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் கீழும், அஃபிஸியல் சீக்ரெட் சட்டத்தின் கீழ் உளவாளிகள் என முத்திரைக் குத்தப்பட்டும் இவர்களில் பெரும்பாலோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் கடுமையான குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று TISS ஆய்வறிக்கை கூறுகிறது.
25.4 சதவீதம் பேருக்கு வழக்குகளை வாதிட வழக்கறிஞர்கள் இல்லை.
TISS க்காக க்ரிமினாலஜி அண்ட் ஜஸ்டிஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வர்கில் டாக்டர்.விஜய் ராகவனும், ரோஷ்னி நாயரும் ‘மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார சூழல் மற்றும் மறுவாழ்வுக்கான தேவைகள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்
thanks to sinthikkavum.net

விஞ்ஞானத்தில் உண்மையாகி வரும் உண்மை! god particle!!



ஜெனீவா: விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.
தாங்கள் தேடிக்கொண்டிருந்த ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்தாம் கண்டுபிடித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆரம்பக்கட்ட முடிவாகும்.
Big Bang எனப்படும் பெருவெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் உருவானது என்கிறது இக்கோட்பாடு.
பெருவெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும்(mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்புகொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி  இந்த பிரபஞ்சம் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத துகள்தாம் ஹிக்ஸ் போஸான். இதனை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் அனைத்து கோட்பாடுகளும் தகர்ந்துவிடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின.
பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்த மாபெரும் வட்டச் சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத்துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத்துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத்துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே.
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத்தான் CERN நடத்தியது.
இதற்காகத்தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணு துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்(GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
நோபல் பரிசுப் பெற்ற விஞ்ஞானியான லியோன் மார்க்ஸ் லெடர்மன்(leon marx lederman) ஹிக்ஸ் போஸானுக்கு ‘தெய்வீகத் துகள்(god  particle)’ என பெயரிட்டார்.
அறிவியல் உலகில் புரியாத புதிராக திகழ்ந்ததால் அவர் இப்பெயரை சூட்டினார். தனது புத்தகத்தில் லெடர்மன் ஹிக்ஸ் போஸானை ‘தெய்வீகத் துகள்’ என அழைக்கிறார். அணு இயற்பியல் விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.
பிரபஞ்சத்தைக் குறித்த ஸ்டாண்டர்ட் மாடல் கோட்பாட்டின் பல வெற்றிடங்களை நிரப்ப ஹிக்ஸ் போஸானைக் குறித்த இனி வரும் நாட்களில் நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என கருதப்படுகிறது.
thanks to sinthikkavum.net

பிரேசிலில் இரண்டு பெண்களை உயிருடன் இழுத்துச் சென்ற அனகோண்டா. (வீடியோ இணைப்பு)


சில மாதங்களுக்கு முன் பிரேசிலில் அனகோண்டா பாம்புகள் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பெண்களை இழுத்து சென்றது அங்குள்ள தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்ப பட்டது.மிகவும் பசிகொண்ட இந்த வகை பாம்புகள் ஒருகாளை மாட்டை முழுதாக விழுங்க கூடியதெனவும் அது ஜீரணிக்க இரண்டு வாரங்கள்
எடுக்கும் என்றும் தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவிக்கிறார்.
thanks to asiananban

ருவாண்டா குடியரசில் 482 பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்.




மத்திய ஆப்பிரிக்காவில் ருவாண்டா குடியரசில் 482 பேர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். சர்வதேச இஸ்லாமிய இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த (WORLD ASSEMBLY OF MUSLIM YOUTH (WAMY) மருத்துவக் குழுவொன்று அண்மையில் ருவாண்டாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. மருத்துவ முகாம்களை நடத்திய இக்குழு பல்வேறு உதவிகளை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது. தலைநகர் கைகாலியிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள கீபோஸ்கோ மாவட்டத்தில் மருத்துவக்குழு மேற்கொண்ட மனித நேய தொண்டு அவ்வட்டார மக்களை மிகவும் ஈர்த்தது.

‘அர்ரிஸ்வான்’ என்ற அக்குழுவினர், இஸ்லாத்தைப் பற்றியும் விளக்கம் அளித்தனர். ‘கினியா ருவாண்டா’ மொழியில் அச்சடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்தனர். இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த தவறான கருத்துகளைக் களைந்து, இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்பதை விவரித்தனர். இதையடுத்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளிப்படையாகவே இஸ்லாத்தில் இணைந்தவண்ணம் உள்ளனர். (அல்முஜ்தமா)

Tuesday, July 3, 2012

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு?



புதுடெல்லி: வட்டியில்லா கடன் வழங்கி ஏழைகளுக்கு ஆறுதலை அளித்துவரும் மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் முடிவு சாவு மணியை அடிக்க உள்ளது.
மத்திய நிதியமைச்சகம் கொண்டுவரும் மைக்ரோ ஃபினான்ஸ் மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் செயல்படும் வட்டியில்லா வங்கிகள் பூட்டவேண்டிய சூழல் உருவாகும்.

இச்சட்டத்தின் படி வட்டி அடிப்படையிலான மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும். அது மட்டுமல்ல லாபத்தை நோக்கமாக கொள்ளாமல் இயங்கும் வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு தாங்க முடியாத லைசன்ஸ் ஃபீஸ் கட்டும்படி புதிய சட்டம் கூறுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா தற்பொழுது நிதி விவகார நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.
மைக்ரோ ஃபினான்ஸ்(சிறுகடன்) நிறுவனங்கள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு இம்மசோதா மூலம் திட்டமிட்டுள்ளது. மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்நிறுவனங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கியில் பதிவுச்செய்ய வேண்டும். இதன் மூலம் இந்நிறுவனங்கள் வழிகாட்டுதல்கள், முதலீடு மற்றும் கடனுக்கான வட்டி விகிதத்தை கட்டளையிடும் அதிகாரம் ரிசர்வ் வங்கி வசம் செல்லும். 


இந்த அதிகாரத்தை உபயோகித்து ரிசர்வ் வங்கி, கடன் மற்றும் முதலீட்டின் வட்டி விகிதத்தை தெரிவிக்கவும், ரிடேர்னை ஃபயல் செய்யவும் ஒவ்வொரு மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனத்திடமும் கோரும். அப்பொழுதும் இஸ்லாத்தின் அடிப்படையில் இயங்கும் வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களால் ரிசர்வ் வங்கி கோரும் வட்டி விகிதத்தை தெரிவிக்க இயலாது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் சட்டத்தை பின்பற்றவில்லை என்று கூறி வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்துச் செய்யப்படும்.
அல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் க்ரெடிட் லிமிட்டடிற்கு (எ.ஐ.சி.எல்)இதே கதிதான் ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்த வங்கியில்லா நிதி நிறுவன மசோதா அமலுக்கு வந்ததுடன் வட்டி விகிதத்தை அறிவிக்க ரிசர்வ் வங்கி கோரியது. அப்பொழுது வட்டியில்லா நிறுவனமாக இயங்கி வந்த எ.ஐ.சி.எல்லிற்கு அது இயலவில்லை. இதன் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் எ.ஐ.சி.எல்லின் லைசன்ஸ் ரத்துச் செய்யப்பட்டது. இதே ஆபத்துதான் இந்தியாவில் இயங்கும் வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு காத்திருக்கிறது.


கேரளாவில் 500க்கும் மேற்பட்ட வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல சொசைட்டி/ட்ரஸ் சட்டத்தின் படி இயங்குகின்றன. சில நிறுவனங்கள் பதிவுச் செய்யப்படாமலும் இயங்குகின்றன. மைக்ரோ ஃபினான்ஸ் மசோதா அமலுக்கு வந்தால் பதிவுச்செய்ய தீர்மானித்தால் வட்டியில்லா மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களால் இயங்க முடியாது. 
கொள்ளை வட்டியை ஏழைகளிடமிருந்து பிழிந்து எடுக்கும் வட்டி அடிப்படையிலான மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய அரசால் கொண்டுவரப்படும் மசோதா, வறுமையில் வாடும் மக்களை வட்டி எனும் அரக்கனிடமிருந்து காப்பாற்ற முயலும் இஸ்லாமிக் மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களை அழிக்க உதவும் என இந்தியன் அசோசியேசன் ஃபார் இஸ்லாமிக் எக்ணாமிக்ஸின்  எக்ஸ்க்யூடிவ் செயலாளர் முஹம்மது சுட்டிக்காட்டுகிறார்.
ரிட்டேன் கோரும் பொழுது வட்டி விகிதத்தை தெரிவிக்கவேண்டும் என்ற சட்டத்தில் இஸ்லாமிக் மைக்ரோ ஃபினான்ஸ் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பதே இப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாகும். லாப நோக்கமற்ற வட்டியில்லா நிறுவனங்களை கடுமையான லைசன்ஸ் தொகையை கட்டுவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று முஹம்மது கோரிக்கை விடுத்துள்ளார்.

மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி.


மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.

உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மிஸ்டு கால் மூலமாக காதல் வலையில் சிக்குபவர்களிடையே பொருத்தங்கள் எதுவும் தேவை இல்லை. நிறம், அழகு, சாதி, குலம், குடும்பம், கல்வி, குணம், கலாச்சாரம், செல்வம் போன்ற எல்லைகள் எதுவும் இல்லை. இங்குள்ள ஒரே தகுதி குரல் மட்டுமே. அக்குரலில் காதல் தழும்புகிறதா? எனில் பூவின் மீது வண்ணத்துப் பூச்சிக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே மோகமும் பற்றிக்கொள்ளும். பூவிற்கும், வண்ணத்துப் பூச்சிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பின் ஆயுளே மிஸ்டுகால் மூலமாக உருவாகும் காதலுக்கும் பொருந்துவதால் வாழ்க்கை தடம்புரண்டு போய்விடுகிறது.

மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில்

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்….!!!

ஆனால் என்ன செய்ய! பாழாய் போன மனம் வசீகரிக்கும் குரலில் வலுவிழந்து விடுகிறதே.

யாரோ அழைத்திருக்கிரார்களே…. முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு! சிலர் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து பேசச் சொன்னால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடலாம். ஆனால், தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

கடிதங்கள் மூலமாகவும், பார்வை மூலமாகவும் பெண்களை வீழ்த்திய காலம் மாறிப்போய் மிஸ்டு கால்கள் மூலமாக பெண்களை வெகு விரைவாக எவ்வாறு தங்கள் வலையில் சிக்கவைக்கின்றார்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது விஞ்ஞானப்பூர்வமாக சில உண்மைகள் புலப்படுகின்றன.

1.வசீகரிக்கும் குரல் காதலுக்கு முக்கிய காரணியாக மாறும்பொழுது ஐம்புலன்களும் அதில் ஒன்றி விடுகின்றன.

2.கடிதத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ இல்லாத ஈர்ப்பு கேள்விப் புலனுக்கு உண்டு.

3.தன்னை ஒருவர் விரும்புகிறார் என்பதை கேட்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். இது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள பலகீனமாகும்.

4.காதலுடன் வாழ்வில் குறுக்கிடும் நபர் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றதொரு கற்பனையை தாமாகவே வளர்த்துக்கொள்ளுதல்

அழையா விருந்தாளியின் மனசு!

மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும். தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.

அழையா விருந்தாளியாக வீட்டின் வாசலை தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு. எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 99 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.

இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.

இதற்கு என்ன காரணம்?

1.வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு தேவையான கல்வி நமது குடும்பங்களில் இருந்தோ, கல்வி நிலையங்களில் இருந்தோ , மார்க்க நிறுவனங்களில் இருந்தோ கிடைப்பதில்லை.

2.நவீன காலக்கட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக உருவாகும் அபாயங்கள் குறித்து இந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுப்பதில்லை.

3.தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சமூகம் அலட்சியமான போக்கை கையாண்டு வருகிறது. காலத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பழைய சம்பிரதாயங்களில் இருந்து மாத்தி யோசிக்க சமூகம் தற்பொழுதும் தயாராகவில்லை.

4.தன் மீதான அதீத நம்பிக்கையில் வளரும் இந்த தகாத உறவுகள் வெகுவிரைவில் தீவிரமடைந்துவிடுகிறது.

5.பெண்களில் தீவிரமாக காணப்படும் எதனையும் எளிதில் உள்வாங்கும் குணம் பாலியல் ரீதியான தவறுகளை புரிய துணைபுரிகின்றது.

6.நவீன காலக்கட்டத்தில் பெண்களுக்கு கிடைத்துள்ள பொருளாதார சுதந்திரம் செல்ஃபோன் தொடர்புகளை அதிகரிக்க செய்கிறது.

7.தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் எந்த மோசமான காட்சிகளையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காணும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புதிய தலைமுறையினருக்கு இடையே ஆண்-பெண் உறவுகள் குறித்த பார்வையில் கலாச்சார வீழ்ச்சியை உருவாக்க இது காரணமாகிறது.

8.இல்லற வாழ்க்கையில் தம்பதியினர் இடையே பரஸ்பர அன்பும், பிணைப்பும் வறட்சியாக காணப்படுவதால் தாம்பத்தியம் குறித்த கனவு மாளிகைகள் தகர்ந்து போகின்றன. இல்லற வாழ்க்கையில் வெறும் உடல் இச்சை மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பொழுது வெகுவிரைவில் திருமண வாழ்க்கை சலித்துப் போகிறது.

9.வளைகுடாவாசிகளைப் பொறுத்தவரை திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு விடுகிறது. விடுமுறை முடிந்து கணவன் வெளிநாட்டுக்கு திரும்புகையில் தம்பதியினர் இடையே உண்மையான அன்பும், நேசமும், காதலும் முறையாக பரிமாறப்படாத சூழல் உருவாகிவிடுகிறது. இத்தகையதொரு சூன்யமான சூழலில் வரும் மிஸ்டுகால்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

10.ஒரு குழந்தை பிறந்த உடன் தாம்பத்தியத்தின் வசந்தம் அணைந்து போவதைத் தான் பொதுவாக காண்கிறோம். முற்றிலும் இயந்திர மயமாகிப்போன வாழ்க்கையில் புதிய வசந்தங்களை மனம் தேட துவங்குகிறது.

தொடர்கதையாகும் துயரங்கள்!

மிஸ்டு கால் மூலமாக இளம்பெண்களின் அந்தரங்க வாழ்வில் ஊடுருவும் ஆசாமி உடனான உறவில் ஒரேயொரு அடிப்படையாக அமைவது செல்ஃபோன் நம்பர் மட்டுமே. இந்த ஆசாமி, குடிகாரனாகவோ, போதைப் பொருளுக்கு அடிமையானவனாகவோ, பெண்களை ஆபாச வலையில் சிக்கவைத்து அதன் மூலம் சம்பாதிப்பவனாகவோ, மனநோயாளியாகவோ, ரெளடியாகவோ இருக்கலாம்.

மேலே கூறப்பட்ட நபர்களுக்கு காதலும், பாலியலும் எல்லாம் ஆதாயமும், பொழுது போக்குமாகும். முறையான வழிகாட்டுதல்கள் இன்றி பாலியல் வக்கிரத்திற்கு அடிமையாகிப் போன விடலைப் பையன்களும் இதில் அடங்குவர். இத்தகைய நபர்கள் மிஸ்டுகால்களை விடுத்து காதில் ஓதும் மந்திரங்களை நம்பும் இளம் பெண்கள் வரப்போகும் துயரங்களை விலைக் கொடுத்து வாங்குகின்றனர்.

சிம் கார்டை மாற்றுவதன் மூலம் மிஸ்டுகால்களை தொடுத்து இளம் பெண்களின் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தப்பித்து விடுகின்றார்கள்.

தற்பொழுது குறைந்த கட்டணத்தில் இணையதளம் வாயிலாக இயங்கும் சட்டமுறையற்ற தொலைபேசி கார்டுகள் மூலமாகவும் அழைத்து தொந்தரவு கொடுக்கின்றனர். இதில் அழைத்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால் அனாமதேயர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிடுகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு சிலரே சைபர் செல்லில் புகார் அளிக்கின்றனர். திருமணமான பெண்களுக்கோ மிஸ்டுகால்கள் பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. இங்கே சில பெண்கள் துயரங்களுக்கு அப்ரூவர்களாக மாறிவிடுகின்றார்கள். இரண்டு குடும்பங்களிலும் சண்டைகளும், சச்சரவுகளும் உருவாகின்றன. குழந்தைகள் கவனிப்பாரற்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றார்கள். இறுதியாக தற்கொலையில் அபயம் தேடும் அவலநிலைக்கு மிஸ்டுகால்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் செல்கிறார்கள்.

இதுவெல்லாம் ஏதோ ஒரு சில சம்பவங்கள் என்று கூறி நாம் தப்புவிக்க முயலக்கூடாது.

செல்ஃபோன்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடும்ப உறவுகள் தகர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ திருமண உறவுகள் விவகாரத்தை நோக்கிச் சென்றுள்ளன. எத்தனையோ இளம்பெண்கள் ஓடிப்போய் கடைசியில் ஆபத்துகளில் சிக்கியுள்ளனர். மன நல மருத்துவமனைகளும், குடும்ப நீதிமன்றங்களும் இதற்கு சாட்சியம் வகிக்கும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு அது மாறாத வடுவாக மாறிவிடுகிறது.

உண்மையில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற சமூகரீதியான உணர்வுதான் இன்று ஒழுக்க விழுமியங்கள் ஓரளவு பேணப்படுவதற்கு காரணமாகும்.

புதிய தலைமுறையினர் இதுக்குறித்து எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. விளைவு – துயரங்கள் தொடர்கதையாகிறது.

தீர்வு என்ன?

காலம் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணிமனையாகும். மாற்றங்கள் காலத்தின் புத்தாடைகள். இந்த ஆடைகளில் சில பொருத்தமாக அமையலாம். சில பொருந்தாது போகலாம். மனித சமூகம் தீமைகளில் குப்புற விழுந்த போதெல்லாம் விழுமியங்களின் வேத பாடங்கள் அவர்களை சீர்திருத்தியன. இனி வேத பாடங்களும் வரப்போவதில்லை. இறைத்தூதர்களும் வரமாட்டார்கள். ஆகவே, இந்த புதிய உலகம் விழுமியங்களில் உருவாக்கும் சீர்கேட்டிற்கு புதிய பரிகாரங்கள் தேவைப்படுகின்றன.

நீண்ட சொற்பொழிவுகளும், புத்தகங்களும் எழுதி நவீன தலைமுறையை நாம் சீர்திருத்தலாம் என கனவு காணத் தேவையில்லை. கொள்கைகளையும், கோட்பாடுகளையும் புதிய யுக்திகளை பயன்படுத்தி இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டியது சான்றோர்களின் பொறுப்பாகும்.

இன்றைய காலக்கட்டத்தில் தாம்பத்திய-குடும்ப வாழ்க்கையின் பரிசுத்தத்தை பேண திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங்கும், திருமணத்திற்கு பிந்தைய கவுன்சிலிங்கும்(மனவளத் துணை ஆலோசனை) மிகவும் உசிதமான ஒரு தீர்வாக கருதப்படுகிறது.

கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் அண்மைக் காலமாக திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங்கை கட்டாயமாக்கியுள்ளனர். அதிகரித்து வரும் விவாகரத்தை குறைக்கவே இத்திட்டம். இதனால் அதிகமான பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய கவுன்சிலிங்குகளில் முக்கியமாக கீழ்க்கண்டவை கவனிக்கப்பட வேண்டும்:

1.பரஸ்பர நம்பிக்கை- இது தகர்ந்துவிட்டால் குடும்பத்தின் நெடுந்தூண் சரிந்துவிடும்.

2.வாழ்க்கை பரிசுத்தம், உயர் பண்புகள், உணர்ச்சிப்பூர்வமான உறவு ஆகிய விழுமியங்களின் மகத்துவம்

3.ஆறுதல் இல்லாத இல்லற வாழ்வில் நிம்மதி இருக்காது

4.இத்தகைய உறவுகளில் தற்காலிகமாக மட்டுமே நிம்மதி கிடைக்கும்

5.இல்லற வாழ்வு என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல. உடல் சார்ந்த ஈர்ப்புடன் அங்கு இரக்கமும், இயல்பான நேசமும், பரஸ்பர அன்பும் இழையோட வேண்டும்.

6.இல்லற வாழ்க்கையை நேர்த்தியாக கொண்டு செல்வதில் இல்லற பங்காளிகளில் ஒருவருக்கு மட்டும் கடமை அல்ல. இருவருக்கும் சமமான பங்குண்டு.

7.இவ்வுலகின் உத்தரவாதமில்லாத குறுகிய கால வாழ்க்கையில் கிடைக்கும் அற்ப இன்பத்தை அனுபவிக்க மரணத்திற்கு பிந்தைய நிரந்தர வாழ்வின் இனிமையை இழந்துவிடக் கூடாது.

இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய இறைநம்பிக்கைக்கான பயிற்சியை(அத்தர்பியத்துல் ஈமானிய்யா) குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஊட்டி வளர்த்து பெற்றோரும் முன்மாதிரிகளாக மாறும்பொழுது இத்தகைய சஞ்சலங்களும், சபலங்களும் நெருங்க முயலும்பொழுது சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உணர்வு ஏற்படும்.

ஆகவே தவறிய அழைப்புகளில் தடுமாறாமல், தடம் புரளாமல் தனித்தன்மையை பாதுகாப்போம்.

அ.செய்யது அலீ

Monday, July 2, 2012

ஐதராபாத்தில் பிரணாப் முகர்ஜி பேசிய அரங்கில் தீப்பிடித்தது: சதி வேலையா?: விசாரணைக்கு உத்தரவு !


ஐதராபாத்தில் பிரணாப் முகர்ஜி பேசிய அரங்கில் தீப்பிடித்தது: சதி வேலையா?: விசாரணைக்கு உத்தரவு
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் தனது பிரசாரத்தை சென்னையில் தொடங்கினார். நேற்று அவர் ஆந்திராவில் ஆதரவு திரட்டுவதற்காக ஐதராபாத்துக்கு சென்றார்.ஐதராபாத்தில், மாநில சட்டசபை கட்டிட வளாகத்தில் உள்ள ஜூபிளி அரங்கில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு பேசி ஆதரவு திரட்டினார். பின்னர் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக அங்குள்ள நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.
 
அவர் பேசி முடித்து விட்டு சென்ற சில நிமிடங்களில் அந்த அரங்கில் திடீரென தீப்பற்றியது. இதில், அந்தப் பகுதியே புகை மண்டலமாகியது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 
இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், இதில் ஏதாவது சதி வேலை உள்ளதா என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
 
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அஜய் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜூபிளி அரங்கு தீ விபத்து குறித்து முறையான, விரிவான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை அளிக்குமாறு அவருக்கு முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.   
thanks to asiananban

அமெரிக்கா எதிரி நாடுதான் 74% பாகிஸ்தானியர் கருத்து: கருத்து கணிப்பில் தகவல்


பாகிஸ்தானில் உள்ள 74 சதவீதம் பேர், அமெரிக்காவை எதிரியாகத்தான் பார்க்கின்றனர் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து அல் கய்தா தலைவர் ஒசாமாவை சுட்டுக் கொன்றது, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தும் போது ராணுவ வீரர்கள் பலியானது உள்பட பல்வேறு விஷயங்களில் அமெரிக்கா மீது பாகிஸ்தான் அதிருப்தியில்
உள்ளது.
இதுகுறித்து பியூ ஆராய்ச்சி மையம் பாகிஸ்தான் மக்களிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் அறிக்கை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை, 1,206 பாகிஸ்தானியர்களிடம் நேரடியாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்கா மீதான எண்ணம் பற்றி அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 74 சதவீதம் பேர், அமெரிக்காவை தங்கள் எதிரியாகவே கருதுவது தெரிய வந்தது.
இது கடந்த ஆண்டு 69 சதவீதமாக இருந்தது. 3 ஆண்டுக்கு முன் 64 சதவீதத்துக்கே இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அமெரிக்கா மீதான வெறுப்பு பாகிஸ்தானியர்களிடம் அதிகரித்து வருவது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காதான் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று 50 சதவீத மக்கள் கூறியுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2009ம் ஆண்டு 72 சதவீதமாக இருந்தது.
இப்போது அமெரிக்கா நிதியுதவி தேவை என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
thanks to asiananban

சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வோர் 6 மாதங்கள் ஆனாலும் ஜாமீன் கேட்கக்கூடாது. கருணாநிதி !


 தமிழகம் முழுவதும் ஜுலை 4-ம் தேதி நடக்கும் அறப்போராட்டத்தில் கைதாகி சிறைக்கு போனால், ஜாமீன் கேட்க கூடாது என்று தமது கட்சியினருக்கு திமுக தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.  
அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து வரும் 4-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. 
இந்நிலையில்,சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரத்தில் நேற்று நடந்தது. 

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "திமுகவின் வரலாறு போராட்ட வரலாறு.ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள்.ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம்.ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம்.என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க,தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும்,அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.
 

தொடர்ந்து நாங்கள் நடத்துகின்ற இந்த இயக்கம் மக்கள் பிரச்னைக்காக,அதுவும் திராவிட மக்களுக்காக, அடிமைப்படுக்கிடக்கின்ற ஒரு சமுதாயத்தை எழுச்சி பெற செய்வதற்காக தொடங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.
 


திராவிட இயக்கம் தற்போது திமுகவாக இருந்தாலும்,திராவிடர் கழகம்,நீதிகட்சி என்று பல்வேறு நிலைகளில் திராவிடர்களை எழுச்சிபெறச் செய்தது.அண்ணா ஆட்சியில் இருந்த காலத்திலும்,அவரது மறைவுக்கு பிறகும்,அந்த ஆட்சியை தொடர்ந்து நானே 5 முறை முதலமைச்சராக இருந்து நடத்தி பல தியாகங்களை,போராட்டங்களில் ஈடுபட்டு,நெருக்கடி கால கொடுமைகளை அனுபவித்தோம்.
 

இன்று எனக்கு முன்னால் நாங்கள் எதற்கும் தயார்.நெருப்பில் இறங்கவா, பட்டினிகிடக்கவா என்று கூறும் வீர வாலிபர்களை,திராவிட செல்வங்களை திமுக இயக்கம் பெற்றிருக்கிறது.இந்த போராட்டம் ஏன்?எப்படி நடத்துவது? என்பதாக இந்த கூட்டம் நடக்கிறது.
 

முதலிலேயே, மிகுந்த கவனத்துடன் இந்த போராட்டத்தை அறப்போராட்டம் என்றேன்.அறப்போராட்டம் என்றால்,அகிம்சா போராட்டம் ஆகும்.நம்மை நாமே தியாகத்திற்கு உட்படுத்துகிற போராட்டம் ஆகும்.வன்முறை போராட்டம் என்பது பிறரை தாக்கும் போராட்டம் ஆகும்.
 

இந்த போராட்டத்தில் அறவழியைத்தான்,அமைதி வழியைத்தான்,அண்ணா வழியைத்தான் கடைபிடிப்போம்.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை கடைபிடிப்போம்.நான்கு நான்கு பேராக அணிவகுத்து களத்திலே நின்று, பொதுமக்களுக்கு இன்னல் வராமல்,போலீசுக்கும் சிக்கல் வராமல் எல்லோருக்கும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
 

உங்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம்,உறுதியாக களம்கண்டு நமது போராட்டத்தை அறவழியில் நடத்த வேண்டும்.ஏனென்றால்,இப்போதே ஒரு தவறு நடக்கலாம்.தானே ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு வன்முறை வழக்கு போடலாமா? என்று இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
 

சொல்வேறு, செயல்வேறாக இருக்க கூடாது.சொன்ன சொல்லை நாம் காப்பாற்ற வேண்டும்.6 மாதம் ஜெயிலில் இருப்பேன் என்று கூறிவிட்டு,ஜெயிலுக்கு போனால் மறுநாளே ஜாமீன் கேட்ட கூடாது.போராட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு போனால் யாரும் ஜாமீன் கேட்க கூடாது.
 

நாம் தியாக திருவிளக்காய்,எதையும் தாங்கும் இதயமாய்,அண்ணாவின் தம்பியாய், பெரியாரின் சீடராய் அனைவரும் இருக்க வேண்டும்.எந்த வழக்கு போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல்,சிறுத்தை கூட்டமாக,சிங்க கூட்டமாக இருக்க வேண்டும்.
 

நாம் நடத்தும் போராட்டத்தை யாராவது அடக்க நினைத்தால்,அவர்கள்தான் அடங்கிப் போக வேண்டும்.நாம் போராட்டத்தை அறவழியில் நடத்துவோம்.அமைதி வழியில் நடத்துவோம்.எந்த வகையிலும்,அந்த போராட்டத்தில் வன்முறை தலைகாட்டக்கூடாது.
 

இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி இங்கே கூறினார்கள்.ஆட்சி எப்படி நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.எனவே, இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க, புத்தி சொல்ல, அறிவுறுத்த,இந்த போராட்டம் அறவழியில் நடத்துவது அவசியம். அதற்கு தயாராக இருங்கள்" என்றார்.

thanks to asiananban

ருஷ்டிக்கு எதிராக கம்ப்யூட்டர் கேமை தயாரித்துள்ள ஈரான் !


Iran's new video game- Verdict on Salman Rushdie
டெஹ்ரான்:இமாம் கொமைனியின் மரணத்தண்டனை ஃபத்வாவில் இருந்து சல்மான் ருஷ்டி தப்பினாலும் ஈரான் ருஷ்டியை சும்மா விட தயாரில்லை. சாத்தானிய வசனங்கள்’ என்ற பெயரால் எழுதப்பட்ட நூலில் முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைவைனின் இறுதித்தூதரை அவமதித்த ருஷ்டிக்கு ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் இமாம் கொமைனி 23 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த ஃபத்வாவை(மார்க்க தீர்ப்பு) புதிய
தலைமுறைக்கும் கம்ப்யூட்டர் கேம் மூலமாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானியன் அசோசியேசன் ஃபார் ஸ்டுடன்ஸ்(ஐ.ஐ.எ.எஸ்) ருஷ்டியைக் குறித்து கம்ப்யூட்டர் கேமை தயாரிப்பதாக தெரிவித்துள்ளது.
டெஹ்ரானில் நடைபெறும் 2-வது சர்வதேச கம்ப்யூட்டர் கேம்ஸ் கண்காட்சியில் ருஷ்டி கேம் குறித்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டது. ஆனால், கேமின் உள்ளடக்கம் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. 3 மற்றும் 4-வது தலைமுறையைச் சார்ந்த ஈரானிய இளம் தலைமுறையினருக்கு ருஷ்டி இறைத்தூதரை அவமதித்தது குறித்து அறிய கம்ப்யூட்டர் கேம் உதவிகரமாக இருக்கும் என்று நம்புவதாக ஐ.ஐ.எ.எஸ் பிரதிநிதி முஹம்மது தாகி பகீரியன் தெரிவித்துள்ளார்.

thanks to asiananban