Tuesday, July 10, 2012

PFI சார்பாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை புர்த்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது!




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்களை புர்த்தி செய்து கொடுத்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக நெல்லை மேற்கு மாவட்டம் முழுவதும் நேற்று முஸ்லிம்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்களை புர்த்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக 07.07.2012ஞாயிற்றுக்கிழமை) அன்று கடையநல்ல்லுரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்திலும்,அல்லிமூப்பன் தெருவில் உள்ள பிலால் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்தும் காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்பு கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் அதை புதுப்பிக்குவர்க்கும், இதுவரை கல்வி உதவித் தொகை வாங்காமல் இருப்பவர்களும் திரளாக வந்து விண்ணப்ப்ப்படிவங்களை புர்த்தி செய்து அப்படிவங்களை வாங்கிச்சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம B.A,BL மேற்பார்வையிட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் யாரிடமும் முகம் சுளிக்காமல் மிகச் சிறப்பாக தங்களது பணிகளை செய்தார்கள்.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்கள் 700க்கும் மேலான படிவங்களை புர்த்தி செய்து கொடுத்தார்கள்.

Monday, July 9, 2012

4வது நாளாக நாளையும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளை கடந்த மூன்று நாட்களாக செக்கடி மேட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமை நடத்தி வருகிறது. இன்றுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டது.


மூன்று நாட்களும் ஆண்களும் பெண்களும் கட்டுகடங்காத கூட்டமாக வந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேவைகளை பெற்றனர்.






பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்களும் பொருமையாகவும் நிதானமாகவும் அதே நேரத்தில் துரிதமாகவும் சேவைகளை செய்தனர். என்றபோதும், இன்னும் அதிரையின் பலப்பகுதியிலிருந்து மக்கள் வரவேண்டியுள்ளது. 


என்பதை கருத்தில் கொண்டு, 4வது நாளாக நாளையும்(10/07/12 செவ்வாய்கிழமை) கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் நீட்டிகப்பட்டு நடைபெற இருக்கிறது.என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகரத் தலைவர் சலீம் அதிரை போஸ்ட்டிடம் தெரிவித்தார்.


கல்வி உதவித்தொகை பெறத் தகுதிகள்
1. மாணவ /மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  
2. மாணவ /மாணவியரின் முந்தைய மதிப்பெண் 50% சதவிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில்  இரண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவைகள்:
1. முகவரிச் சான்றிதழ் நகல் (ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை)
2. மாணவ /மாணவியரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு 
3. சாதிச் சான்றிதழ் நகல்
4. வருமானவரிச் சான்று அல்லது ரூ.10 மதிப்புள்ள நிதிமன்ற சாரா முத்திரை தாளில்  மாணவ /மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறுதி பிரமாண பத்திரம்.
5. மாணவ /மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி சேமிப்பு  கணக்கின் நகல்.
தொடர்புக்கு: 9842716214,9042455496. 
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
SDPI  அலுவலகம் அருகில்,
செக்கடிமேடு, நடுத்தெரு 
அதிரை 
thanks to adirapost for news .

Saturday, July 7, 2012

பள்ளி மாணவிகளை ஏமாற்றும் சில இளைஞர்கள்!




காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.]
நள்ளிரவு வரை படிப்பு, மீண்டும் அதிகாலையில் எழுந்து படிப்பு, அவசர கதியில் சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் அவலநிலையில் தான் இன்றைய மாணவ செல்வங்கள் உள்ளனர்.
நம்மை விட உயர்ந்த பதவிக்கு வரவேண்டும், நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அனைத்து பெற்றோரையும் தற்போது ஆட்டி படைக்கிறது. பெற்றோரின் வேகத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா?
இதனால் மாணவ- மாணவிகள் எப்போதும் டென்ஷன், பரபரப்பு என ஒரு விதபதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். அவர்கள் நாளைக்கு என்ன படிக்க வேண்டும், வீட்டில் என்ன சொல்வார்கள் என்று பயந்து கொண்டே அடுத்த அடுத்த பிரச்சினையை நினைத்து கொண்டே ஒரு வித அச்சத்தில் உறைந்து போய் விடுகின்றனர்.
விடுமுறை நாட்கள் என்றாலும் விடாதகறுப்பு போல சிறப்பு வகுப்புகள், டியூஷன் என்று பாடாய் படும் இவர்களை குறிவைத்து தற்போது சேலத்தில் வாலிபபட்டாளம் ஆதரவு அலை என்ற பெயரில் காதல் ரசத்தை சொட்ட விடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு தங்களது மகளை கொண்டு வந்து விடும் பெற்றோர்கள் பஸ் வந்ததும் அவர்களை ஏற்றி அனுப்பி விட்டு அத்தோடு சென்று விடுகிறார்கள். அப்போது பஸ்சில் இருக்கும் கூட்டத்தின் போது புத்தக பை மூட்டைகளை தூக்கி கொண்டு பயணிக்கும் சில மாணவிகளுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களின் புத்தகபையை வாங்கி கொள்கிறார்கள். தினமும் இது தொடரவே நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு மொபைல் எண்கள் மாற்றி கொள்கிறார்கள். பின்னர் இரவில் மெசேஜ், சாட்டிங் என்று இவர்களின் பழக்கம் விரிவடைந்து முடிவில் காதல் என்ற குண்டை தூக்கி போடுகிறார்கள்.
பொறுப்பை உணர்ந்த சில மாணவிகள் இதை வேண்டாம் என்கிறார்கள். ஆனால் எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, நிம்மதியே இல்லை என்று இருக்கும் மாணவிகள் இந்த காதல் வலையில் எளிதில் சிக்கி கொள்கிறார்கள். விளைவு அந்த மாணவி மூலம் மேலும் பல மாணவிகள் பழக்கம் ஆகிறார்கள்.
அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி கொண்டு அவர்களும் மெசேஜ் அனுப்பி கொள்கிறார்கள். காதலில் விழுந்த மாணவி படிப்பா…? பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டு காதலனின் போலியான ஆசைவார்த்தைக்கு தங்களை பலிகொடுக்கிறார்கள்.
காலையில் பெற்றோர் வந்து பஸ் அனுப்பி வைக்க வந்தால் மாணவிகள் சிலர் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், நான் பஸ் ஏறி செல்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றதும் அருகில் இருக்கும் 1 ரூபாய் நாணயம் போட்டு காதலனிடம் நீண்ட நேரம் பேசுகிறார்கள். இதே போல் மாலை நேரத்திலும் பேசுகிறார்கள்.
உதாரணமாக சேலம், பழைய பஸ்நிலையத்தில் தினமும் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. காலையில் அவதிஅவதியாக பள்ளிக்கு வரும் மாணவிகள் கை நிறைய 1 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து காதலர்களிடம் பேசிசெல்வதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.
பின்னர் படிபடியாக காதல் மோகத்தில் மாணவிகள் வகுப்பை கட்அடித்து விட்டு காதலனுடன் பைக்கில் முகத்தில் ஷாலை மறைத்துக் கொண்டு ஏற்காடு, மற்றும் நகரில் உள்ள கோவில்களில் ஊர் சுற்றுகிறார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஏற்காடுக்கு அழைத்து சென்று வாலிபர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களுக்கு குழந்தைகள் உருவாகாமல் தடுக்க அதற்கான மாத்திரைகளையும் கொடுப் பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படிப்பு டென்சனில் இருந்து விடு பட காதலித்து காமத்தில் விழுந்த பள்ளி மாணவிகள் ஏராளமான பேர் உள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் சில வக்ககிர புத்தி கொண்ட வாலிபர்கள் அதை தங்களது செல்போனில் படம் பிடித்து, அதை தங்கள் நண்பர்களிடம் காட்டி அவர்களையும், அந்த பெண்ணுடன் சேர வைக்கும் ஒரு மோசமான சீரழிவும் தற்போது அரங்கேறி வருகிறது. இதைப்பற்றி வெளியில் சொன்னால் அவமானம் என்றும் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்றும் பயந்து பெண்கள் மிரட்சியில் உள்ளனர். இதனால் பள்ளி செல்லும் வயதிலே மாணவிகள் சோர்வுடன், காணப்படுகிறார்கள்.
படிப்பு சுமையே மாணவிகளை இந்த பாதைக்கு அழைத்து செல்கிறது என்று சொல்ல முடியாது. காதல் மோசடியில் ஏராளமான மாணவிகள் சிக்கி தற்போது காமத்தில் மூழ்கியுள்ளனர். மாணவிகளின் அறியாமையே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
காதல் வந்து விட்டாலே மாணவிகளின் நடத்தையில் சில மாறுதல்கள் தெரிந்து விடும். அது போன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் அவரி டம் பேச்சு கொடுத்து மகளின் மனதில் இருக்கும் பிரச்சினைகள் என்ன? அதற்கு தீர்வு என்ன? என்று சிந்தித்து செயல்பட்டால் அவர்களை மீண்டும் நல்ல பாதைக்கே கொண்டு வந்து விடலாம்.
அது போல் பள்ளி மாணவிகளும் நம் பெற்றோர் நம்பிக்கையின் பேரில் நம்மை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்களே, அவர்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்ககூடாது என்று செயல்படவேண்டும் . இவ்வாறு பெற்றோர், மற்றும் மாணவிகள் செயல்பட்டால் காதல் என்ற வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.


thanks to facebook நண்பர்கள் .

செய்திகள் அறிவோம் ''இஸ்லாம்தான் இறுதியான தீர்வு'' - தானியல் ஸ்ட்ரீக்


 சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக சென்ற மாதம் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவர் நேரடியாக சுவிட்சர்லாந்து அரச தொலை காட்சியில் தோன்றி, தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் ''Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,'' - நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இவரை பற்றி சுவிட்சர்லாந்து அரசு தொலை காட்சி இவரைப்பற்றி கூறும்போது; ''He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur'an, prays five times a day and goes to a mosque!'' - இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும், பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர், சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார், ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார், அல் குர்ஆன் படிக்கிறார்'' என்று குறிப்பிடுகிறது.

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றும், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்திய இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது. ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 3,11,000 என்று கூறுகின்றது.

இங்கு 100 க்கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருக்கின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடை செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு

பொருட்களை பதுக்கும் ரேஷன் கடைகாரனுக்கு ஆப்பு வைக்கலாம் வாங்க…!




ரேஷன் கடைகளில் பொருள் ஒன்றை வாங்கச் சென்றால் சில கடைகளில், பொருளை பதுக்கி வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
ரேஷன் கடைக்கு சென்று பொருள் ஒன்றை கேட்கும் போது அவர்கள் அப் பொருள் ஸ்டாக் தீர்ந்து போச்சு… இனும் வரலை என்று பதில் சொல்கிறார்களா?
அவர்கள் உண்மை தான சொல்கிறார்களா, இல்லை பதுக்கி வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள ”உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை” ஓர் இலகுவான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முறை:
உங்கள் மொபைல் போனில் [PDS] இடைவெளி [மாவட்ட குறியீடு] இடைவெளி [கடை எண்] என டைப் செய்து 9789006492 என்ற எண்னுக்கோ அல்லது 9789005450 என்ற என்ணுக்கோ எஸ்.எம்.எஸ். பண்ணுங்க.
மாவட்ட இலக்கம், கடை இலக்கம் என்பவற்றை உங்கள் ரேஷன் கார்டில் இருந்து அறிந்துகொள்ள வழிமுறை கீழே உள்ளது.

என்ன… பொருட்களை பதுக்கும் ரேஷன் கடைக்காரனுகளுக்கு ஆப்பு வைக்க ரெடியா…


thanks to facebook நண்பர்கள் .

அதிரையில் இன்று PFI நடத்தும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும்   வழிகாட்டுதல் நிகழ்ச்சி
1ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவ,மாணவிகளுக்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை முலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டைப் போல்   பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த ஆண்டு அதிரையில் கல்வி உதவித்  தொகை  பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை நாளை (07-07-1012)சனிக்கிழமை காலை10.00 மணி முதல் மாலை 5.00  மணி வரை பூர்த்தி செய்தலும் அதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடத்த இருக்கின்றது.எனவே முன்பு கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் அதை புதுப்பிக்கும்படியும்,இதுவரை கல்வி உதவித்தொகை  வாங்காமல் இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் PFI  அன்புடன் அழைக்கிறது. 
கல்வி உதவித்தொகை பெறத் தகுதிகள்
1. மாணவ /மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  
2. மாணவ /மாணவியரின் முந்தைய மதிப்பெண் 50௦% சதவிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில்  இரண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவைகள்:
1. முகவரிச் சான்றிதழ் நகல் (ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை)
2. மாணவ /மாணவியரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு 
3. சாதிச் சான்றிதழ் நகல்
4. வருமானவரிச் சான்று அல்லது ரூ.10 மதிப்புள்ள நிதிமன்ற சாரா முத்திரை தாளில்  மாணவ /மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறுதி பிரமாண பத்திரம்.
5. மாணவ /மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி சேமிப்பு  கணக்கின் நகல்.
தொடர்புக்கு: 9842716214,9042455496. 
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
SDPI  அலுவலகம் அருகில்,
செக்கடிமேடு, நடுத்தெரு 
அதிரை 

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தனியார் கல்விக் கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையும் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் எதிர்ப்பும்.


 தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு  தனியார் தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம் ருபாய் வரை உயர்த்தியுள்ளது.  இது ஏற்கனவே கல்வி கட்டண கொள்ளையில் ஈடுப்பட்டு வரும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை அதிகரிக்கவே செய்யும்.  இதனால்  சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் கல்விப்பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

மேலும், சமீபத்தில் இந்திய மருத்துவ குழுமத்தால் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட 20 மருத்துவ கல்லூரிகளில் 11 மருத்துவ கல்லூரிகள் தனியார் மருத்துவ கல்லூரிகள் ஆகும். இது தனியார் மருத்துவ கல்லூரிகளின் பெருக்கத்தையும் அரசு  மருத்துவ கல்லூரிகள்  நடத்துவதிலிருந்து விலகி ஒட்டுமொத்த கல்வியையும் தனியார் வசம் ஒப்படைக்கும் விதமாக படிப்படியாக விலகுகிறதோ என்கிற ஐயம் ஏற்பட்டுள்ளது.

அரசின் இத்தகைய செயல்பாடுகளை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக  கண்டிப்பதோடு   தற்போது அறிவித்துள்ள கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது.  

நாள்: 5.07.2012                                                                                இப்படிக்கு,
                                                                                               
                                                                                                   Z. முஹம்மது தம்பி
                                                (மாநில தலைவர், கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா )
                                                                                                          

     

Friday, July 6, 2012

இந்தியாவில் இயங்கிவரும் பத்திரிக்கைகள் இந்துத்துவா சிந்தனையை திட்டமிட்டே விதைத்து வருகின்றன.மறுபுறம் சிறுபான்மையினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றன!





"இந்துத்துவா"வை அதாவது பாசிச சக்திக்கு உதவும் வகையில் வெகுஜனமக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் காரணிகளாக உள்ள ஜோதிடம் குறித்து வெளியிடாத பத்திரிக்கைகளை பார்க்க முடியாது! இந்த ஜோதிடப் பித்தலாட்டத்திலும் ரகரகமாக தினசரி,வார,மாத ராசிபலன்கள் என்றும் அப்புறம் குருபெயர்ச்சி,ராகு-கேது பெயர்ச்சி,சனிபெயர்ச்சி பலன்கள் என்றும்,இந்த இந்த ராசிக்கு தோஷம்,அதற்கு பரிகாரம் இதுவென்றும், இந்த கோயிலுக்கு போனால் புள்ளை பிறக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கல்யாணம் நடக்கும்,இந்த கோயிலுக்கு போனால் கண்டிப்பாக கர்ப்பம் அடைவாய் என்றும் தோஷம் போகும் என்றும் சொல்லாத பத்திரிக்கைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் ! ஜோதிடத்திலும் பெயரை மாற்றிகொண்டால் சொர்க்கவாழ்வு கிடைக்கும், எண ஜோதிடம், வாஸ்து ஜோதிடம்,என்று " பீலா " விடாத பத்திரிக்கைகளை காண்பது அரிதாகும்!




இப்படி தொடர்ந்து உண்மைகள் இல்லாத கற்பனைகளை ஊடக உலக மேதாவிகள் வெளியிட்டு, உழைக்கும் மக்களிடம் நம்பிக்கையை விதைத்து வருகின்ற பத்திரிக்கைகள், மறுபுறம் பாசிச சுரண்டலுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதை காணலாம்.




இதுமட்டுமின்றி, புளிய மரத்தில் புள்ளையார் உருவம் தெரிந்தது, மாங்காய் மரத்தில் மாரியம்மாள் தெரிகிறார் என்றும் முருங்க மரத்தில் பால் வடியும் அதிசயம், மக்கள் பக்திப் பரவசத்துடன் பூசை செய்தனர் . என்றோ, பாம்பு வந்து சாமிக்கு பூஜை செய்தது. {பாவம் பிராமணர்கள் பாம்பு பூஜை செய்ய வந்துவிட்டால், அப்புறம் கோயிலில் அவர்களுக்கு என்ன வேலை ?} என்றோ வெளியிட்டு வேடிக்கை காட்டவும் தவறுவதில்லை!




வித்தைகள் காட்டும் மோசடி,மோடி மஸ்தான் பேர்வழிகளை அவதார புருஷனாகவும், ஆன்மீகக் குருக்களாகவும் காட்டி மக்களை மடையர்களாக்கவும் தவறுவதில்லை.! அப்புறம், அலகு குத்துவது, பல்லக்கு தூக்குவது,சாமி அப்படியே தெருவுக்கு தெரு ஊர்வலமாய் (வீதிஉலா))வந்து, அருள் பாலித்து.... இந்திய உழைக்கும் மக்களை காத்து ரட்சிப்பது!



இந்தியாவை சொர்க்கபுரியாகி, சுகபோகத்தில் திளைக்க வைத்தது போலவே, நம்ப வைக்கும் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிடவும் தவறுவதில்லை!




எந்தவித பொறுப்பும் இல்லாத ஊர்சுத்தி ஆசாமிகளை, ஆன்மீக குரு வருகிறார்!! அருளுரை தருகிறார்! உபதேசம்,சொற்பொழிவு கேட்க வாருங்கள் என்றும், பாதபூஜை செய்ய வாருங்கள்! வேள்வி செய்ய வாருங்கள்! பஜனைபாட வாருங்கள்! என்று சலுகை விளம்பரம் கொடுத்து ,செய்திகளை வெளியிட்டும் " இந்துத்துவா சிந்தனையை " பரப்பவும், பாசிசச் சக்திகளுக்கு உதவவும், உழைக்கும் மக்களின் செல்வத்தை , நேரத்தை, உழைப்பை சுரண்டவும் பாடுபட்டு வருகின்ற இந்திய பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஜனநாயகத்தின் கேடுகளை வளர்க்கும்,பாசிச சக்திகள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்!




இதைமட்டுமா செய்கின்றன ? இந்துத்துவ சிந்தனைக்கு எதிரானவர்களை நிந்திப்பது, சிறுபான்மையினரை " தீவிரவாதிகளாக தேச விரோதிகளாக" சித்தரிப்பது, இந்துத்துவ வாதிகளை அவர்கள் எத்தனை கொலைகள்,கொடுமைகள் செய்தாலும் கண்டுகொள்ளாமல் அவர்களை தேச பக்தர்களாக காட்டுவது, போன்ற எண்ணற்ற காரியங்களை இந்திய பத்திரிக்கைகள் செய்துவரவும் தவறுவதில்லை!

தீவிர வாத செயல்கள் நடைபெறும்போது பத்திரிக்கைகளின் பார்வையை அடுத்து 

thanks to jm kani