Tuesday, September 27, 2011

எஸ்.எம்.எஸ்களில் இருந்து இன்று முதல் விடுதலை!

டெல்லி: இந்த வாரத்தில் இருந்து தேவையில்லாத தொலைபேசி விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "தேவையற்ற அழைப்புகளின் பதிவு" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லதுwww.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம். தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ. 2. 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ரத்த தானம் வேண்டுபவர்கள் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். மட்டுமே இனி அனுப்ப முடியும்.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு SDPI சார்பாக போட்டியிடும் சித்திக் (மச்சான்) அவர்களின் பேட்டி!

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்ற தலைவர்பதவிக்கு SDPI சார்பாக எல்லோராலும்செல்லமாக அழைக்கப்படும் சித்திக் மச்சான்என்கின்ற A.அபூபக்கர் சித்திக் மாநிலச் செயலாளர்SDPI அவர்கள் போட்டியிடப் போவதாக நேற்றுSDPI தலைமையகம் தெரிவித்துள்ளது


இது குறித்து SDPI யின் மாநில செயலாளரும்வேட்பாளருமாகிய A . அபூபக்கர்சித்திக் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பேட்டியளித்த அவர்இந்ததேர்தலின் மூலமாக நீதி நிலைநாட்டப்படும்எந்த மக்களுக்கும் பாரபட்சம்இல்லாமல்அதாவது இந்து முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளை பெற்று தறுவதற்கு முயற்சிகள் செய்வோம் என்றும்மேலும் அவற்றை முழுமையாக பெற்றுத்தர போராடதயாராகுவோம்அதே போல எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவுக்கு பாரபட்சம்பார்க்காமல் எங்களுடைய கட்சி செயல்படும்

நமது ஊரில் பாசிசம் தலை எடுக்காத அளவுக்கு என்னென்ன வழிகள் இருகின்றதோஅவற்றை தடுக்க முயற்சிகள் எடுப்போம் என்றும்முத்துப்பேட்டையில் உள்ளபொதுவான பிரட்சனைகளான குளங்கள்சாலைபராமரிப்புகள், சுகாதார சீர்கேடுகள்குறித்தும் நல்ல முடிவுகள் எடுக்கப்படும்  என்று அவர் தெருவித்தார். 

மேலும் SDPI கட்சியானது பணத்திற்கோ அல்லது பதவி, பட்டத்திற்கோ துனைபோகாது என்பதை உறுதிபட நான் இங்கே கூறுகிறேன். 

இந்த அரசியல் களத்திற்கு SDPI இறங்கியதற்கு முக்கிய காரணமே பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! நமது சமுகத்திற்கு எதாவது இந்த அரசியல் மூலம் செய்யலாம் என்ற ஓர் ஏக்கத்தில்தான் இந்த அரசியலில் இறங்கி உள்ளோம் . அதற்காக முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் என்னை மனமார ஏற்று என்னை வெற்றிபெற செய்யும்படி தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

நன்றி : http://muthupettaiexpress.blogspot.com