Monday, November 28, 2011

சவூதியிலிருந்து 3 மில்லியன் வெளிநாட்டவ​ர் திருப்பி அனுப்பப்பட இருக்கிறார்கள்!




சவூதி அரேபியாவின் தொழிலாளர் நல அமைச்சகம், வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் 20 விழுக்காடு தான் இருக்கவேண்டும் என்ற உச்சவரம்பை நிர்ணயித்துள்ளதால், அடுத்த ஒருசில வருடங்களில் சவுதி அரேபியா 3 மில்லியன் வெளிநாட்டவர்களை படிப்படியாக திருப்பி அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.
தற்போது சவுதி அரேபியாவில் 8.42 மில்லியன் வெளிநாட்டவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது சவுதியின் மக்கள் தொகையை கணக்கிடும்போது (18.7 M) 31 விழுக்காடாகும். இந்த 31 விழுக்காடு, 20 விழுக்காடாக குறைக்கப்படும்போது 2.9 M வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
தகுதியுள்ள வளைகுடா நாட்டைச்சேர்ந்தவர்களை, கம்பெனிகள் வேலைக்கு அமர்த்துவதற்கு நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்ற GCC மாநாட்டில் தொழில் அமைச்சகர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சமீபத்தில் சவுதியின் தொழிலாளர் நல அமைச்சர் ஆதில் ஃபகீஹ் அவர்கள், Nitaqat என்ற புதிய திட்டத்தை உருவாக்கி சவுதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமான வெலை வாய்புகளை உருவாக்கி அதிலே ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள் என்பது குற்ப்பிடத்தக்கது.
எற்கனவே வளைகுடா நாட்டில் நிலைகொண்டவர்களும், புதிதாக வளைகுடா நாடுகளுக்கு சென்று வேலை செய்யப்போகிறவர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!


வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால "குறிக்கோள் விசா" (ஂஇஷிஒந் Vஇஸ​) கோரி விண்ணப்பிக்கலாம்.

இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, November 27, 2011

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?

 பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள்,  தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள்  என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம்.கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா?  பார்ப்போம்

விஞ்சான பார்வை:
மன்னார் வளைகுடா கடலின் தரைபகுதியில்  70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு  உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன. 1982 ஆம் ஆண்டில் வில்லியம் வெஸ்டால் மற்றும் லௌரீ என்ற இரு ஆய்வாளர்கள் இதை  கண்டுபிடித்தனர். 1994 ஆம் ஆண்டில் இந்த வண்டல் குவியல்களின் அடிப்பகுதியில் எரிமலைகள் இருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டது.

ஏதாவது சிறிய நிலநடுக்கம் ஏற்ப்பட்டாலும் இந்த வண்டல் குவியல்கள் சரிந்து சுனாமி பேரலைகளை உருவாக்கும்
 , அதேநேரம் அந்த மணல் திட்டுகளின் அடியில் இருக்கும் எரிமலையும் வெடிக்ககூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய அணுசக்திக் கழகம் இந்த வண்டல் குவியல்களினால் ஏற்பட உள்ள  பேரிழிவு பற்றி  ஆய்வு செய்ய  இன்றளவும் மறுத்து வருகிறது. இதுதான் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த ஒரு தெளிவான விஞ்சான பார்வை.

வரலாற்று பார்வை:
 காமராஜர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும், தமிழக முதல்வராகவும்  இருந்த காலத்தில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அவருக்கு பின்னால் அண்ணா, எம்.ஜி.ஆர்,  கருணாநிதி ஆட்சிகளில் மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. அதனாலேயே கருணாநிதி வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொன்னார்.

அந்த காலகட்டங்களில் பலநல்ல திட்டங்கள் வட மாநிலங்களை  நோக்கி கொண்டு சொல்லப்பட்டன.
   அதில் ஒன்றுதான் போபால் ஆனால் போபால் விசவாய்வு கசிவால் விழித்துக்கொண்ட வட இந்தியர்கள்  இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் திட்டங்களை  தமிழகத்தை நோக்கி தள்ளிவிட்டனர். அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  என்கிற தாமிர உருக்கு ஆலை, மற்றும் ஆறுமுகநேரி DCW என்கிற தாரங்கதாரா கெமிக்கல் வொர்க்ஸ், போன்றவைகள் அடங்கும்.

இந்த ஆலைகளின் முதலாளிகள் குஜராத்திகள் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
 உண்மைகள் இப்படி இருக்க  அணுவுலைக்கு எதிரான இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் கீழ்த்தரமான வேலையை  தினமலர் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த அணுவுலை ஆபத்தானதில்லை என்று போலியான வாதங்களை முன்வைத்தும், அதே நேரம் இந்த போராட்டத்தை பற்றியும் அதை நடத்தும் மக்கள் தலைவர்களை பற்றியும் தினமலர் இழிவான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக அந்த போராட்டத்தின் தலைவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக ஒரு குற்றச்சாட்டையும், அதில் ஈடுபட்டுள்ள ஒரு பாதிரியாரின் சொத்து கணக்கு பற்றியும் அவர்களது வீட்டு முகவரி தொலைபேசி இலக்கங்களையும் தினமலரில் வெளியிட்டு அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்க திட்டமிடுகிறது. 
இதே அணு உலை காஞ்சி சங்கரமடத்திற்கு அருகாமையிலோ அல்லது  ஸ்ரீரங்கத்திலோ நிருவப்படுமே ஆனால் தினமலரின் வேடம் சேதுசமுத்திர திட்டத்தில் ராமர் பாலம் என்றது போல் கலைந்திருக்கும்.

ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது  தினமலர்
. அதே நேரம் மும்பையில் தமிழர்களை, குஜராத்திகளை  ஹிந்துத்துவா சிவசேனைகாரர்கள்  அடித்து துரத்தியபோது மவுனம் காத்தது, கர்நாடகா தண்ணீர் தராதபோதும், தமிழகத்துக்கு நன்மைதரும் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த தடையாக ராமர் பாலம் கதை சொல்லியும்  ஹிந்துதுவாவுக்கு ஆதரவாக செயல்பட்டது.

இவ்வளவு நாளும் மவுனம் காத்த மக்கள் இப்போது ஏன் எதிர்கிறார்கள்
ன்று தினமலர் ஒரு பொய்யான கேள்வியை முன்வைகிறது.கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது முதல் மக்கள் எதிர்ப்பு என்பது இருந்தே வந்தது. விஞ்சான வளர்ச்சி அடைந்த ஜப்பானில் அணு உலையினால் ஏற்ப்பட்ட ஆபத்தை பார்த்ததும் ஜப்பானுக்கே இந்த கதியாஎன்று அஞ்சிய மக்களின் போராட்டம் மேலும்  வலுவடைந்தது. 

மேலும் 
போபால் விசவாய்வு கசிவு நடந்து 25 ஆண்டுகளை கடந்தும் அந்த மக்களுக்கு சரியான நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் ரஷ்யாவால் வடிவமைக்கப் பட்ட மற்றைய அணுவுளைகளால் ஏற்ப்பட்ட விபத்துக்கள், கூடங்குளம் பகுதி நிலநடுக்கம், மற்றும் சுனாமிக்கு வாய்ப்புள்ள பகுதி போன்ற காரணங்களே எல்லாராலும் இந்த திட்டம் வெறுக்கப்பட காரணமாக அமைந்தது.

கூடங்குளம் அணுமின் நிலையம் எவ்வளவு ஆபத்தானதோ! அதுபோல் தினமலர் என்கிற விஷ செடியும் தமிழகத்துக்கு ஆபத்தானது.
 அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தோடு தினமலருக்கு எதிரான போராட்டங்களையும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். தினமலர் என்கிற விஷ மலரை வாங்குவதை தமிழர்கள் நிறுத்த வேண்டும்.தமிழர் விரோத இந்த பத்திரிக்கையை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும்.

அன்பான வாசகர்களே! கீழ்க்கண்ட தொலைபேசிக்கு தொடர்புகொண்டு கூடங்குளம் பிரச்சைக்கு நமது ஆதரவை தெரிவிப்பதோடு தினமலருக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நடத்த சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை வைப்போமாக. 
S.P. உதயகுமார் இவரது மொபைல் எண்: 98656 83735. இவரது நாகர்கோவில் தொடர்பு எண்: 04652 2406567 இ-மெயில்: drspudayakumar@yahoo.com, spudayakumar@gmail.com.   

மலத்தின் ருசி என்ன ?



நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களிடம் ஒரு நாள் யூதன் ஒருவன் நடுநிசியில் சென்று "முஹம்மதே !மலம் என்ன ருசியுடையது ?" என்று கிண்டலாக கேட்டான் .அதற்கு நாயகம் (ஸல் ) அவர்கள் ;அமைதியுடனும் பொறுமையுடனும் "மலத்தின் ருசி இனிப்பானது " என்று பதிலளித்தார்கள் .மீண்டும் அந்த யூதன் (நீங்கள்)-அதைச் சாப்பிட்டு பார்த்தீர்களா?
சாப்பிட்டு இருந்தால்தானே ருசியை அறிய முடியும் "என்று ஏளனமாகக் கேட்டான் .அக்கேள்விக்கு மிகவும் நிதானத்தோடு பெருமானார் (ஸல் )அவர்கள் ,அவனிடம் "மலத்தில் ஈ மொய்ப்பதை நீர் பார்க்கவில்லையா ?ஈக்கள் இனிப்பான பொருளின் மீது மொய்க்கும் என்பதும் உமக்குத் தெரியாதா? "என்று விளக்கம் தந்தார்கள் .இப் பதிலே கேட்டு அந்த யூதன் திகைத்து விட்டான் .பெருமானார் (ஸல் )அவர்களை அவமானப்படுத்துவதற்காக வேண்டி நடிநிசியில் சென்று மலத்தை பற்றி கேட்கும்  பொழுது அமைதியாகவும் ,அதுவும் மலத்தின் ருசியை பற்றி விளக்கமாகவும் சொன்னது தான் அவனுடைய திகைப்புக்கு காரணம் ."இவர்கள் சாதாரண மனிதராக இருக்க முடியாது ;எவ்வளவு  பொறுமை ?எவ்வளவு அமைதி ?நையாண்டி செய்வதற்காக வந்த என்னிடத்தில் எவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்கள் ? இது போன்று மனிதரை நான் பார்த்ததே இல்லை " என்று கூறியவராக புனிதமான தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு "வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹுத்தாலவைத் தவிர வேறு நாயன் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராகவும் அவனுடைய அடியாராகவும் இருகிறார்கள் " என்று நான் சாட்சி கூறுகிறேன் என்று கூறி புனித தீனுல் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டார் .

சேற்றிலிருந்து மின்சாரம் - இஸ்ரேல் சாதனை


சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது.இதுகுறித்து இஸ்ரேலை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் ஜிஆர்பிஎல் தரப்பில் கூறப்படுவதாவது,

ஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கான இயந்திரங்களை பயன்படுத்த சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும்.

இயற்கை எரிவாயு தயாரிப்பு உலை மூலம் சேறு, சகதியை வெப்பமூட்டுவதன் மூலம் அது வாயுவாக வெளிப்பட்டு டர்பைன்கள் வழியாக மின் உற்பத்தியாகும். சேறு, சகதி மட்டுமின்றி தண்ணீரில் நனைந்த குப்பைகளில் காணப்படும் சகதியிலும் மின் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜிஆர்பிஎல் தெரிவித்துள்ளது.
yarlmuslim

யார் இந்த ஆங் சான் சூகி.


மரணப்படுக்கையில் இருந்த கணவரைப் பார்க்க்ப்போனால், தாய்நாட்டை மறந்துவிட வேண்டியதுதான் என்ற நிலையில் ,தேசமே பெரிது என எண்ணி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருபவரும்,உலக முன்வரிசை போராளியுமான ஆங் சாங் சூகியை, இந்த வாரம் அமெரிக்க வெளி விவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சந்திக்க வருகிறார்.இதை அடுத்து, உலக அரசியல் வரலாற்றில் ஒரு பரபரப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில் ஆங்சாங்சூகியின் கதையை கொஞ்சம் தெரிந்துகொள்வோமா...

இன்றைக்கு மியான்மராக உள்ள அன்றைய பர்மாவில் மக்களாட்சி மலர போராடியவர்தான் ஆங்சான்.இவரது மகள்தான் ஆங் சான் சூகி.இவர் 1945ம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்து அன்புடன் அப்பா என்றழைக்கப்பட வேண்டிய நேரத்தில் ,அதவாது அவரது இரண்டாவது வயதில் இவரது தந்தை ஆங்சான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் காரணமாக சிதறி சின்னபின்னமான ஆங் சானின் குடும்பம் பல இடங்களில் இடம் பெயர்ந்தது.ஆங் சாங் சூகி இந்தியாவிலும்,இங்கிலாந்திலும் படிப்பையும் வாழ்க்கையும் தொடர்ந்தார்.பல்வேறு பட்டங்கள் பெற்ற நிலையில் ஆராய்ச்சி மாணவரான மைக்கேல் ஆரிசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கணவர் இரண்டு குழந்தைகள் என்று வாழ்க்கை லண்டனில் நீரோடை போல போய்க்கொண்டு இருந்தது.

அப்போது உடல் நலிவுற்ற தன் தாய் "கின் கி'யை பார்ப்பதற்காக மியான்மருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆங்சான் சூகி பயணம் மேற்கொண்டார்.வந்தவருக்கு தன் தாயின் உடல் நிலையைவிட, அதிர்ச்சி தந்த விஷயம் நாட்டில் தாண்டவமாடிய வறுமையும்,ஏழ்மையும்தான். மேலும் மியான்மர் உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டு ஏழ்மை நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்து.மக்கள் சிரமத்தில் இருந்தனர்.அந்த நேரம் நாட்டுவிடுதலைக்காக போராடியவர்கள் ஐயாயிரம் பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது போன்ற சம்பவங்களலால் உலுக்கி எடுக்கப்பட்ட ஆங் சான் சூகி உறுதியான மற்றும் இறுதியான ஒரு முடிவெடுத்தார்.

தனது தாய்நாட்டின் விடுதலைக்காக போராட முடிவு செய்த,ஆங் சான் சூகி ஜனநாயக லீக் கட்சியை துவங்கி தலைவியானார்.மக்கள் இருகரம் நீட்டி அள்ளி அணைத்து தங்கள் இதயத்தில் ஏந்திக்கொண்டனர்.ஆனால் ராணுவ ஆட்சியாளர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆங் சான் சூகியை வீட்டுக்காவலில் தனிமைச் சிறையில் வைத்தனர்.

யாரையும் பார்க்ககூடாது,தொலைபேசி வசதி கூட கிடையாது,சேதமடைந்த,பழமையான வீட்டில் பல நேரம் மின்சாரம் இருக்காது,பெரும்பாலும் மெழுகுவர்த்தி வெளிச்சம்தான், இரண்டு வயதான பெண்கள்தான் உதவிக்கு என்ற நிலையில் ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல இருபது ஆண்டுகள் அந்த தனிமைச் சிறையில் வாடினார்.

ஆனாலும் நம்பிக்கையை விடமால் ஜனநாயக முறையில் போராட்டத்தை தொடர்ந்தார். கடிதங்களால் மக்களிடம் நம்பிக்கை வளர்த்தார்.இந்த நிலையில் 1990 ல் நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் 485 இடத்தில் போட்டியிட்டு 392 இடங்களில் ஜெயித்து காட்டினார். ஆனால் இந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்த ராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகியின் கட்சிக்கு தடைவிதித்தும் பார்த்தது. போட்டிக்கு 32 கட்சிகளை வளர்த்துவிட்டது. ஆனாலும் மக்கள் ஆங் சான் சூகியின் பக்கமே நின்றனர்.

இடையில் புற்றுநோய் ஏற்பட்டு மரணப்படுக்கையில் இருந்த தனது கணவரை காண விரும்பிய ஆங் சான் சூகிக்கு மியான்மர் அரசு அனுமதி மறுத்துவிட்டது.,பின் ஒரு கடுமையான நிபந்தனை போட்டது லண்டனில் இருக்கும் தனது கணவரைப் பார்க்கலாம் ஆனால் பிறகு திரும்ப தனது தாய்நாட்டிற்கு வரக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.

கணவரா? தேசமா? என்ற கேள்விக்கு முன் தேசமே பெரிதென முடிவெடுத்து கடைசிவரை கணவரை பார்க்காமலேயே இருந்துவிட்டார்.இதே போல பிள்ளைகளையும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பார்க்க முடியாத நிலை நீடித்திருந்தது.

இவை அனைத்தையும் நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் தாங்கிக்கொண்ட ஆங் சான் சூகிக்கு கடந்த 90 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதை அடுத்து உலக நாடுகளின் பார்வையில் விழுந்த ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடிக்கும்,கட்டாயத்திற்கும் உள்ளான ராணுவ அரசு கடந்த 2010ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது.

ஆங் சான் சூகி விடுதலையான போது அவருக்கு வயது 65.நாடி,நரம்புகள் தளர்ந்து வாடி வதங்கிப்போனவர் வாழ்க்கை அத்துடன் முற்றுப்புள்ளியானது என்று நினைத்தவர்கள் மனதில் மன்விழும் வகையில் மீண்டும் பினிக்ஸ் பறவையாக எழுந்துவிட்டார்.

தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இன்றைக்கு இல்லாவிட்டால் நாளை,நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள்,நான் இல்லாவிட்டால் இன்னொருவர் என்று இந்த மியான்மரில் ஜனநாயக கொடியை பறக்கவிட்டே தீர்வோம் என்று சூளுரைத்துள்ள ஆங் சான் சூகியை இந்த வாரம் அமெரிக்க வெளி விவாகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சந்திக்க வருவதாக சொல்லியுள்ளார்.அமெரிக்கா வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் இப்போதுதான் மியான்மர் வருகிறார் அதுவும் ஆங் சான் சூகியை சந்திக்க.

இந்த சந்திப்பு மியான்மர் மக்களின் நிம்மதி கனவை நனவாக்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பலருக்கு வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்,வெகு சிலருக்குதான் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்

அந்த வெகு சிலரில் ஒருவர் ஆங் சான் சூகி.
yarlmuslim

நீதிக்காக மக்களின் உரிமைகள் - கருத்தரங்கம்



சமூக நீதி மாநாட்டின் முதல் நாள் இரண்டாம் அமர்வாக "நீதிக்காக மக்களின் உரிமைகள்" என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், தேசிய பொருளாளர் கே.பி.ஷரீஃப். தேசிய செயற்குழு உறுப்பினரும் தேஜஸ் நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கோயா, ஊடக தொடர்பாளர் அனீஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உட்பட இந்தியாவிலிருந்து பிரமுகர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். இதை பற்றி முழு செய்தி தொகுப்பு பின்னர் வெளியிடுகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.




Saturday, November 26, 2011

சிறுவனின் தொண்டையில் 60 நாட்கள் உயிர்வாழ்ந்த 4 அங்குல அட்டை



சுமார் 4 அங்குலம் நீளமுள்ள அட்டை பூச்சி, 16 வயது நிறம்பிய சிறுவனின் சுவாசக்குழலில் சுமார் 2 மாத காலமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகும், அது உயிராக இருந்தது.

டோ ஜியாவான் என்ற 16 வயது நிரம்பிய சிறுவன் இரண்டு மாதங்களாக தொண்டை புண்ணால் அவதியுற்றான். அச்சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு  மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், 4 அங்குல நீளமுள்ள அட்டை பூச்சி அவன் தொண்டையில் உயிரோடு இருப்பதாக கண்டறிந்தனர். 

பின்பு, அறுவை சிகிச்சையின் காரணமாக அச்சிறுவனுக்கு அளித்த மயக்க மருந்தின் மூலம் கூட அது இறக்கவில்லை என்பது மிக ஆச்சரியமான ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரோடு அந்த பூச்சி அகற்றப்பட்டது.
yarlmuslim

முஸ்லிம்களுக்காக புதிய கையடக்க தொலைபேசி




தினம் தினம் புதுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறது மொபைல் உலகம். அந்த புதுமைகள் வாடிக்கையாளர்களின் வசதிகளை நாளுக்கு நாள் பெருக்கி வருகிறது. அதன் அடிப்படையில் இப்போது டோல்மோல்.காம் மற்றும் என்மேக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து என்மேக் குரான் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த மொபைல் முஸ்லிம் சமுதாய மக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஓர் அற்புதமான வசதியின் மூலம் எங்கிருந்தாலும், குரான் வாசகங்களை எந்த நேரத்திலும் கேட்டு பயன் பெறலாம். இந்த குரான் 29 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் 29 மொழிகளில் குரானை கேட்கலாம்.

இதில் தொழுகை நேரத்தை குறித்துவிட்டால் போதும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த மொபைல் தானாகவே சைலன்ட் மோடிற்கு மாறிவிடும். இதனால் தொழுகை செய்யும்போது இடையூறு ஏற்படாது.

இந்த குரான் என்மேக் மொபைலில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ள உதவும் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. குரான் என்மேக் மொபைலின் கீப்பேடில் அரபிக் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரபி மொழியிலும் எளிதாக டைப் செய்யலாம்.

இந்த மொபைல் 150 நிமிடங்கள் டாக் டைமினையும், 4 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். 2.0 இஞ்ச் திரையை கொண்டுள்ள இந்த மொபைலில் கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் ஏற்கனவே மலேஷியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.
yarlmuslim

செருப்படி வாங்கிய 10 பிரபலங்கள் : பிளாஷ்பேக்



சமீபத்தில் ஹர்விந்தர் சிங் எனும் வாலிபர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமை தாக்கியதும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவாரை தாக்கியதும் பரபரப்பாய் பேசப்பட்டது. இச்சூழலில் இந்நேரம் வாசகர்களுக்காக சமீப காலங்களில் பொதுமக்களிடத்தில் தாக்குதலுக்குள்ளான பிரபலங்களை பற்றிய ஒரு பிளாஷ் பேக்...


ஜார்ஜ் புஷ்


பொதுமக்களிடம் செருப்படி வாங்கிய கலாச்சாரத்தை துவக்கி வைத்த பெருமை அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையே சாரும். தன்னுடைய ஆட்சிகாலத்தில் பொருளாதார தடை எனும் பெயரில் 6 இலட்சம் ஈராக்கிய குழந்தைகளை கொன்ற புஷ் செல்வாக்கிழந்திருந்தார். அச்சூழலில் விடை பெறும் பயணமாக டிசம்பர் 2008 ல் ஈராக் வந்த புஷ் பத்திரிகையாளர்களிடம் பேசி கொண்டிருந்த போது புஷ்ஷின் தவறான ஈராக்கிய கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த முந்ததர் அல் ஜைதி எனும் பத்திரிகையாளர் புஷ்ஷை நாய் என்று திட்டியதோடு தன் 10 அளவு ஷூவை புஷ்ஷை நோக்கி வீசினார். குறி தவறிய போதும் நேரடி ஒளிபரப்பாக இருந்ததால் ஜைதி உலக புகழ் பெற்றதோடு ஈராக்கிய மக்களின் விடை கொடுக்கும் முத்தம் தான் தன் செருப்படி என்றார்.


ப.சிதம்பரம்


உலக அளவில் செருப்படி கலாசாரத்தை துவக்கி வைத்த பெருமை புஷ்ஷுக்கு என்றால் இந்தியாவில் நம்ம உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு அப்பெருமை சாரும். பத்திரிகையாளர்கள் சிபிஐ 1984 சீக்கிய கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லருக்கு எப்பங்குமில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்ததை பற்றி கேட்ட போது பதிலளிக்க மறுத்ததால் ஜர்னைல் சிங் எனும் பத்திரிகையாளர் தன் பாதணிகளை சிதம்பரத்தை நோக்கி வீசினார்


மன்மோகன் சிங்


அஹமதாபாத்தில் ஏப்ரல் 2009 தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் பேசி கொண்டிருந்த போது 21 வயது கணிப்பொறி இஞ்சினியரிங் படிக்கும் மாணவன் ஷூவை வீசினான். எவ்வித நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்று பிரதமர் பெருந்தன்மை காட்டியதும் பிஜேபியின் வெறுப்பு கலாசாரத்தை மோடி தூண்டி விட்டார் என்று காங்கிரஸ்காரர்கள் குறை கூறியதும் சுவையான காட்சிகள்.


பி.எஸ்.எடியூரப்பா


ஏப்ரல் 2009ல் கர்நாடகாவிலுள்ள ஹசன் எனும் இடத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அவரை நோக்கி வீசப்பட்ட செருப்பு குறி தவறி அவரின் மேடையில் விழுந்தது. செருப்பு வீசிய 34 வயது நபர் கைது செய்யப்பட்டார்.


எல். கே. அத்வானி


அதே ஏப்ரல் 2009ல் மத்திய பிரதேசத்தில் ஒரு பொது கூட்டத்தில் பிஜேபி மூத்த தலைவர் அத்வானி பேசிய போது முன்னாள் பிஜேபி நிர்வாகி ஒருவர் அத்வானியின் மீது மர செருப்பை வீசினார். மேலும் வீசியவர் அத்வானி ஒரு போலி இரும்பு மனிதர் என்றும் பிரதமர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றும் கூறினார்.


ஒமர் அப்துல்லா


2010 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்றத்தின் போது காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா உரையாற்றிய போது பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் துறையை சார்ந்த ஒருவர் தன்னுடைய ஷூவை ஒமர் அப்துல்லாவை நோக்கி வீசினார். பின்னர் அவர் மன நிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது.


சுரேஷ் கல்மாடி


மற்றவர்கள் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்ட போது காமென்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி தில்லியில் உள்ள சிபிஜ கோர்டில் ஷூவால் தாக்கப்பட்டார். மேலும் தாக்கியவர் இரும்பு கம்பியை கொண்டு கல்மாடியை தாக்க திட்டமிட்டார் என்றும் குற்ற பிண்ணணி உடையவர் என்றும் காவல்துறை கூறியது


எஸ்.பி.எஸ். ரத்தோர்


ருசிகா மானபங்க வழக்கில் குற்றவாளியான ஹரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர் நீதிமன்றத்தில் இருந்து தன்னுடைய காரை நோக்கி சென்று கொண்டிருந்த போது 29 வயது மாணவர் உத்சய் சர்மா மூன்று முறை அவர் முகத்தை குறு கத்தியால் கீறியது பரபரப்பை ஏற்படுத்தியது


பிரசாந்த் பூஷன்


நடத்தப்பட்ட சம்பவங்களிலேயே ஜனநாயக உரிமையான பேச்சுரிமை குறித்த விவாதத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியது. காஷ்மீரின் நிலை குறித்து முடிவெடுக்க காஷ்மீரிகளுக்கே உரிமை உண்டு என்று கருத்து தெரிவித்தமைக்காக இந்து வலது சாரி குழுக்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.


அர்விந்த் கேஜ்ரிவால்


பிரசாந்த் பூஷன் தாக்குதலுக்கு பின் சில நாட்கள் கழித்து அன்னா ஹசாரேவின் குழுவிலுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் லக்னோவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போது ஊழல் விவகாரத்தில் மக்களை தவறாக திசை திருப்புகிறார். என்று கூறி செருப்பை வீசினார். இது குறித்து கருத்து தெரிவித்த அன்னா ஹசாரே செருப்பை மட்டுமல்ல குண்டுகளை தாங்க தம் குழு தயார் என்றார்.