Thursday, March 29, 2012

மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்க்க இஸ்ரேல் சதி!

தடுக்கமுடியாத நிலையில் முஸ்லிம்கள்! - டாக்டர் ஷேக் யூசுப்..
இஸ்ரேல் ராணுவத்தின் கொடிய அராஜகத்தால் ஃபலஸ்தீன் மக்கள் கடுமையான பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாக பைத்துல் முகத்தஸின்(மஸ்ஜிதுல் அக்ஸா) இமாமும், நீண்டகாலம் ஃபலஸ்தீன் மார்க்க விவகார அமைச்சராக பணியாற்றியவருமான டாக்டர் ஷேக் யூசுஃப் ஜுமா ஸலாமா கூறினார்.

கேரள மாநிலம் ஃபாரூக் கல்லூரியில் ரவ்ழத்துல் உலூம் அரபிக் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார் அவர். அப்பொழுது அவர் கூறியது.

மஸ்ஜிதுல் அக்ஸாவை தகர்ப்பதற்கு இஸ்ரேலின் சதித்திட்டம் சக்திவாய்ந்ததாகும். அதனை தடுக்க கூட முடியாத நிற்கதியான சூழலில் ஃபலஸ்தீன் மக்கள் உள்ளனர். பரிசுத்த நகரத்தின் கண்ணியத்தை சீர்குலைக்க மது, ஆபாசம் போன்றவற்றை பரப்பும் மோசமான வழிகளையும் இஸ்ரேல் ராணுவம் கடைப்பிடிக்கிறது. ஒரு நாட்டை கலாச்சார ரீதியாக அழிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி பைத்துல் அக்ஸாவை தகர்க்க முயற்சிக்கிறார்கள். பல வருடங்களாக மேற்கொள்ளும் ரகசிய திட்டமாகும். மஸ்ஜித் தானே இடிந்து விழுந்ததாக காட்டுவதற்கு இவ்வாறு அவர்கள் முயற்சிக்கிறார்கள். மஸ்ஜித் நிலைப்பெற்றிருக்கும் இடத்தில் ஸாலமன் ஆலயத்தை கட்டுவதும் அவர்களின் அஜண்டாவாகும். இத்தகைய ரகசிய திட்டங்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மண்ணில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் சியோனிஸ்டு வன்முறையாளர்கள் கிறிஸ்தவர்களையும் சும்மா விடுவதில்லை. அண்மையில் இருபது முஸ்லிம் மஸ்ஜிதுகள், ஆறு கிறிஸ்தவ சர்ச்சுகளை இஸ்ரேலிய ராணுவம் தீக்கிரையாக்கியது. இரு பிரிவினரும் இணைந்தே ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம்.

பைத்துல் அக்ஸாவிற்கு முஸ்லிம்கள் எச்சரிக்கையோடும், பதுங்கியும் வருகின்றார்கள். மஸ்ஜித் எப்பொழுதும் இஸ்ரேல் ராணுவத்தின் பலத்த கண்காணிப்பில் உள்ளது. மஸ்ஜிதுக்கு வருபவர்கள் அச்சம் காரணமாக திரும்பிச்செல்வது வழக்கமாகும்.

ஹமாஸ்-ஃபதஹ் அமைப்பினர் இடையே இடைவெளி ஏறக்குறைய நீங்கியுள்ளது. இவர்கள் இடையேயான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது. மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் யாஸிர் அரஃபாத்துக்கும், ஷேக் அஹ்மத் யாஸீனுக்கும் இடையே நல்ல உறவை பேணினார்கள். அரபு வசந்தம் மாற்றத்தின் குரல் ஆகும். பல கால மாக ஒரு சமூகம் விரும்பிய புரட்சியாகும்.

இந்தியாவுக்கும் ஃபலஸ்தீனுக்கும் இடையேயான நல்லுறவு பல தசாப்தங்கள் பழமையானது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய அணிசேரா கொள்கை இந்த உறவை பலப்படுத்தியது. துவக்கம் முதலே ஃபலஸ்தீன் விவகாரத்தில் இந்தியா எங்களுடன் தான் இருந்து வருகிறது. நேருவை கெளரவிக்கும் விதமாக காஸ்ஸாவில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் நேரு கார்னர் உள்ளது. நேருவின் நூற்களும் இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஷேக் யூசுஃப் ஜுமா ஸலாமா அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இருந்து பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர். 1998 முதல் 2006 வரை இரண்டு தடவை ஃபலஸ்தீனில் மார்க்க விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஃபலஸ்தீனில் முதன் முதலாக திருக்குர்ஆன் ஓதும் போட்டி இவரது பதவிக் காலத்தில் நடந்தது. ஃபலஸ்தீன் பல்கலைக்கழக பேராசிரியராகவும் சேவை புரிந்துள்ள ஷேக் ஸலாமாவிற்கு 58 வயது ஆகிறதுthanks to qahtaninfo

வளைகுடா நாடுகளை கைப்பற்ற இக்வானுல் முஸ்லீமின் திட்டம் ?



அரபு வசந்தம் என்று சொல்லப்படும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மக்களின் புரட்சியால் அதிகம் பயன் பெற்ற அமைப்பு இக்வானுல் முஸ்லீமின் ஆகும். அவ்வமைப்பு வளைகுடா நாடுகளை கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளதாக துபாய் காவல்துறை தலைவர் ஜெனரல் தஹி கல்ஃபான் தெரிவித்துள்ளார். 


 சமீபத்தில் ஏற்பட்டமக்கள் எழுச்சிக்கு பிறகு நடந்த தேர்தலில் எகிப்து, துனிசியா ஆகிய நாடுகளில் இக்வானுல் முஸ்லீமின் என்று சொல்லப்படும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு பெரு வெற்றி பெற்றது. மன்னராட்சியை கொள்கையளவில் எதிர்க்கும் இவ்வமைப்பு இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற சித்தாந்தம் கொண்டது.

இச்சூழலில் குவைத் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கல்ஃபான் தனக்கு கிடைத்த தகவல்களின் படி வளைகுடா நாடுகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இக்வானுல் முஸ்லீமின் திட்டமிட்டிருப்பதாக கூறினார். மேலும் 2013ல் குவைத்தில் ஆரம்பித்து 2016க்குள் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.


மேற்கத்திய உளவு நிறுவனங்களின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாம் இதை கூறுவதாக கல்ஃபான் கூறியுள்ளார். 2016ல் அனைத்து வளைகுடா நாடுகளிலும் தற்போது உள்ள அரச குடும்பத்தினர் அரசர்களாக இருந்தாலும் உண்மையான அதிகாரம் தங்களிடமிருக்குமாறு இக்வானுல் முஸ்லீமின் திட்டமிடுவதாக கல்ஃபான் கூறினார்.


துபையில் சிரிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களை சிரியாவுக்கு நாடு கடத்தியமைக்கு கத்தாரில் உள்ள இக்வானுல் முஸ்லீமின் ஆதரவு தலைவர்களுள் ஒருவரும் பிரபல மத தலைவருமான யூசுப் அல் கர்ளாவி விமர்சனம் செய்திருந்தார். அதை தொடர்ந்து யூசுப் அல் கர்ளாவியை கைது செய்ய போவதாக கல்ஃபான் சொன்னதை அடுத்து இக்வானுல் முஸ்லீமுடன் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
thanks to qahtaninfo

சவூதி அரேபிய துணை தூதர் ஏமன் நாட்டில் சுட்டுக்கொலை !



ஏமன் நாட்டில் சவூதி அரேபிய துணை தூதர் மர்ம நபர்களால் கடத்திச்செல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு ‌கொலை செய்யப்பட்டார்ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான ஏடன் துறைமுகம் பகுதியில் மன்‌சவுரா நகரில் சவூதி அரேபியா துணைத்தூதர் அப்துல்லா-அல்-காலி்த், இவர் தனது காரில் பணி நிமித்தமாக காரில் சென்று கொண்டிருந்தார்.. 
அப்போது வாகனம் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால்சுட்டுக்கொன்றதாக, ஏமன் பாதுகாப்புப்படை அதிகாரி தெரிவித்தார்.

சவூதி துணை தூதர் கொல்லப்பட்டது இது இரண்டாவது முறை. இது தொடர்பாக சவூதி வெளியுறவு அமைச்சகத்துடன் ஏமன் அரசு தொடர்பு கொண்டு வருகிறது.thanks to qahtan info

Tuesday, March 27, 2012

வினா தாள் வெளியானதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்




வினா தாள் வெளியானதை கண்டித்து கர்நாடக மாநிலம் பாந்ட்வாளில் தாலுகா அலுவலகம் முன்பு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பாந்ட்வாளில் உள்ள PU தேர்வாணையத்தின் கவனக்குறைவால் தேர்வு வினாத் தாள் வெளியாகியுள்ளது.கடந்த செவ்வாய் கிழமை (மார்ச் 20 ) அன்று கணித தேர்வுக்கான வினா தாள் வெளியாகியது, இதனைத் தொடர்ந்து சில ஆசிரியர்களின் பொருப்பற்ற தன்மையிளால் வேதியல் பாடத்தின் தேர்வு வினாத்தாள்களும் வெளியான. இருந்த போதும் இதற்கு எதிராக கல்லூரி நிர்வாகமோ அல்லது PU தேர்வாணையமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு பொறுப்பற்ற தன்மையையே தொடர்ந்து காட்டிவருகின்றனர். இது போன்ற வினா தாள்களின் கசிவினால் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பலவீனமாகவே மாறும் நிலை உருவாகும். கல்லூரி நிர்வாகமோ மாணவர்களின் எதிர்காலத்தில் எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் தொடர்ந்து இதுபோன்ற செயல்களை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள்.

இதனை கண்டிக்கும் விதமாக  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாந்ட்வால் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தை பாந்ட்வால் தாலுக்கா நிர்வாகக் குழு தலைவர் திரு.நவாஸ் அஹமது அவர்கள் கண்டன ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாந்ட்வால் தாலுக்காவின் செயலாளர் திரு.தாரிஃப், கர்நாடகா மாநில செயலாளர் திரு.முஹம்மது து ஃ பல், மேலும் மண்டல குழு உறுப்பினர் திரு.முகம்மது ரியாஸ் ஆகியோர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.   
thanks to CFI

அமெரிக்காவிடம் அளவுக்கதிகமான அணு ஆயுதங்கள் : அதிபர் ஒபாமா ஒப்புதல்


சியோல் :எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே அணு ஆயுதங்கள் உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தென்கொரிய தலைநகர் சியோலில், அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாடு துவங்குவதற்கு முன்னதாக அதிபர் ஒபாமா கூறியதாவது: எங்களிடம் தேவைக்கு அதிகமாகவே அணு ஆயுதங்கள் உள்ளன. 1,500 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அணுகுண்டு பொருத்தப்பட்ட 5 ஆயிரம் ஏவுகணைகள் உள்ளன. எனவே, தான், அணு ஆயுதங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இந்த விஷயத்தில், ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட உள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இது தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன் அளித்து வருகின்றன.அணு ஆயுதம் தயாரிப்பதற்குரிய பொருட்கள் தேவையான அளவில் கிடைக்கின்றன. இவை பாதுகாப்பற்ற நிலையில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பெற்று அணுகுண்டு தயாரிக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர். அணு குண்டுகள், பயங்கரவாதிகளின் கையில் சிக்கி விடுமோ என்ற அச்சுறுத்தல் தான், உலகத்தை ஆட்டிப் படைக்கிறது.மேலும், அணுஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள் பாதுகாப்பற்ற முறையில் சில இடங்களில் உள்ளன என்பதும் எங்களுக்கு தெரியும்.எனினும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எந்த வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் தன்மை படைத்திருப்பதால், அணு ஆயுதங்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அந்த எண்ணத்தில் இங்கே 53 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் அணு ஆயுதக் குறைப்பு பற்றி வலியுறுத்தப்படும்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

கட்டி தழுவினார் ஒபாமா : இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கை, ஒபாமா கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

கிலானி மறுப்பு:சியோல் மாநாட்டில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி குறிப்பிடுகையில், " வடகொரியாவின் அணு சக்தி திட்டத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த காலங்களில் இது போன்ற தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது முடிந்து போன விவகாரம். அணுசக்தி பொருட்களால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்குரிய உபாயங்களை உலகம் கண்டறிய வேண்டும்' என்றார்.

வடகொரியாவுக்கு எச்சரிக்கை:வடகொரியா பல்வேறு நவீன ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் அணுகுண்டை சுமந்து செல்ல வல்ல ராக்கெட்டை சோதனை செய்து வருகிறது. இந்த ராக்கெட் சோதனை தென்கொரியாவின் எல்லைப்புற ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கக்கூடாது. மீறினால் அந்த ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம் என, தென் கொரிய ராணுவ அதிகாரி யூன் வோன் ஷிக் தெரிவித்துள்ளார்.
thanks to asiananban

வறுமை குறைந்துள்ளதாக மத்திய அரசின் பொய் பிரச்சாரம்


 புதுடெல்லி:இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறும் அரசின் அறிவிப்புகளை பொய் என்று கூறியுள்ளார் தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் சக்ஸேனா. நம் நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 37.5 சதவீதமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை 30 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய திட்டக்குழு கடந்த வாரம் தெரிவித்தது. 
அதாவது, கிராமங்களில் தனி நபர் சராசரி வருமானமாக ஒரு நாளைக்கு ரூ.22க்கு கீழும், நகரங்களில் ரூ.28க்குக் கீழும் வருமானம் பெறுபவர்களை வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக (ஏழைகள்) கருதலாம் என சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக திட்டக்குழு மேற்கோள் காட்டியது.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஏழைகளை மதிப்பிடுவதற்கான அளவீடு மிகமிகக் குறைவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, புதிய முறையில் ஏழைகளை கணக்கிடுவதற்காக நிபுணர் குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
இந் நிலையில், ஏழைகள் எண்ணிக்கை சுமார் 70 சதவீதமாக இருக்கலாம் என்றும், இதைக் கண்டறிவதற்காக பல்வேறு கோணங்களில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் தேசிய ஆலோசனை கவுன்சில்(என்.ஏ.சி) உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் சக்சேனா கூறியதாவது: ஏழைகள் எண்ணிக்கை குறைந் துள்ளதாக மத்திய அரசு கூறியிருப்பது தவறு. குறிப்பாக, சத்துணவு, சுகாதார வசதி, பாது காக்கப்பட்ட குடிநீர், கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் ஏழைகள் எண்ணிக்கை 70 சதவீதம் வரை இருக்கும். எனவே, பல்வேறு கோணங்களில் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்றார் அவர்.
thanks to asiananban

ஏமாற்றம் தரும் தமிழக பட்ஜெட் – SDPI


சென்னை:தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2012-13 நிதியாண்டு பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது என்று SDPI தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் எந்த உருப்படியான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மின்வெட்டின் காரணமாக இருளில் மூழ்கி இருக்கும் தமிழகத்தில் அதனை உடனடியாக சரி செய்வதற்கான தீர்வுகள் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை.
குண்டு மின்சார பல்புகளை ஒழிக்கும் திட்டத்தையோ அல்லது மின்சார விரயத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தையோ அறிவித்திருந்தால் கூடுதல் மின்சாரம் சேமிக்கப்பட்டிருக்கும்.
அந்நிய நாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கு 20,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நலிந்து போயிருக்கும் உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க உருப்படியான திட்டம் இல்லை.
பட்ஜெட் குறித்து முதல்வர் ஏற்கனவே அறிவித்துவிட்டதால், பட்ஜெட்டின் அறிவிப்புகள் தற்போது முக்கியத்துவம் பெறவில்லை.
ஏற்கனவே பல்வேறு வகையான உயர்வும், சொத்து மதிப்பு உயர்த்தப்படுவதும் பொது மக்களைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதுபோல் அரசு நிர்வாகத்தில் நிலவும் சீர்கேடுகள், அரசுத் துறையில் புரையோடிப்போய் கிடக்கும் லஞ்ச லாவண்யங்களை ஒழிப்பது குறித்து எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றத்திற்குரியது.
முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான எந்த உருப்படியான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள அரசு, நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு சொத்துக்களை மீட்க திட்டமிடாதது வருந்தத்தக்கது.
முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின்படி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி அறிவிப்புகள் இல்லாதது முஸ்லிம்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.
மொத்தத்தில் இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில்துறையினர், முஸ்லிம்கள் என பொது மக்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது.
இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள், கோதுமை மற்றும் ஓட்ஸ் ஆகிய உணவுப் பொருட்களுக்கு வரி நீக்கம் ஆகியவை வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
thanks to asiananban

அவுரங்காபாத்:முஸ்லிம் இளைஞர் என்கவுண்டரில் படுகொலை!


அவுரங்காபாத்:அவுரங்காபாத்தில் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2008-ஆம் ஆண்டு அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட நபர் கொல்லப்பட்டதாக போலீஸ் கூறுகிறது. இவருடைய இரண்டு கூட்டாளிகளை கைது செய்ததாக போலீஸ் கூறுகிறது.

அவரங்காபாத்தில் குல்மோகன் காலனியைச் சார்ந்த கலீல் என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். ஹிமாயத்பாக் பகுதியில் உத்தவ் ராவு பாட்டீல் சவுக்கில் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.
முஹம்மது ஷபீர், அப்ரார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு பா.ஜ.க உறுப்பினர் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீஸ் கூறுகிறது. தீவிரவாத எதிர்ப்பு படையைச் சார்ந்த ஷேக் ஆரிஃபிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக என்கவுண்டரில் போலீஸ் கூறும் கதை என்பதால் இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
thanks to asiananban

சம்ஜோதா:கமல் சவுகானின் பயண ஆவணங்களை காணவில்லை!


புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான கமல் சவுகானின் பயண ஆவணங்களை காணவில்லை. சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டுவெடிப்பை நிகழ்த்த கமல் சவுகான் 2007 பிப்ரவரி 18-ஆம் தேதி இந்தூரில் இருந்து டெல்லிக்கு  இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற பயண ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.

கமல் சவுகான் இந்தூர் ரெயில்வே ஸ்டேசனில் நிரப்பி அளித்த விண்ணப்ப படிவம், பழைய ரெயில்வே ஸ்டேசனில் ஓய்வறையை பயன்படுத்தியதை தெரிவிக்கும் ரிட்டயர் ரூம் பதிவேடு ஆகியவற்றை பரிசோதிக்க முயன்ற என்.ஐ.ஏ அவை காணாமல் போனதை கண்டறிந்துள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுகள் அடங்கிய சூட்கேசுகளுடன் தனது சக தோழர் லோகேஷ் சர்மாவுடன் ரெயிலில் தான் டெல்லிக்கு சென்றதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட கமல் சவுகான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருந்தான்.
இதனைத் தொடர்ந்து சவுகானின் பயண ஆவணங்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ குழு இந்தூருக்கு சென்றது. பிப்ரவரி 18-ஆம் தேதி நிஜாமுத்தீன் ஸ்டேசனுக்கு சென்ற இருவரும் அங்கு ஓய்வறையில் தங்கியதாக சவுகான் கூறியிருந்தான். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஸ்டேசனை அடையும் வரை இருவரும் ஓய்வறையில் காத்திருந்தனர். ஆனால், இருவரும் பெயரை எழுதி கையெழுத்திட்ட அன்றைய ரிட்டயரிங் ரூம் ரெஜிஸ்டரையும் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ரெயில்வேயின் பதிவேடுகளில் இருந்து ஆவணங்கள் காணாமல் போனதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. விசாரணையில் முக்கிய ஆவணமாக கருதப்படவேண்டிய சவுகானின் கையால் எழுதப்பட்ட இந்த ஆவணங்கள், இவர் கைது செய்யப்பட்ட பிறகு வேண்டுமென்றே நீக்கம் செய்யவோ அல்லது அழிக்கவோ செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளையில், இந்த ஆவணங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் என்.ஐ.ஏ ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்தியன் ரெயில்வேயின் உதவியை என்.ஐ.ஏ நாடியுள்ளது. பொய் பெயரை உபயோகித்து பயணித்திருக்க வாய்ப்பு இருப்பதால் கையெழுத்து நிபுணர்களின் உதவியை நாடுவோம் என்று என்.ஐ.ஏ கூறுகிறது.
thanks to asiananban

உலகில் அதிகம் பேர் வேலை செய்யும் நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!




உலகில் அதிகம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனம் எது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. சுமார் 32 லட்சம் பேர் அமெரிக்க இராணுவத்தில் வேலை பார்க்கின்றனர்.



அடுத்த இடத்தில் இருப்பது சீன இராணுவம். இதில் இருப்பவர்களோ 23 லட்சம் பேர். அமெரிக்க தன் படையில் வேலை செய்யும் சிவிலியன்களையும், மகவும் அவசரமாகத் தேவை ஏற்படும் போது மட்டுமே படைக்கு அழைக்கப்படும் ரிசர்வ் துருப்புக்களையும் தனது மொத்த படை எண்ணிக்கையில் சேர்த்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை படைவீர்ர்களின் எண்ணிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் மொத்தம் 21 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். மெக் டோனால்ட்டில் 19 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். ஆனால் இந்த நிறுவனங்களின் பல கிளைகள் தனிப்பட்ட முகவர்களால் நடத்தப்படுகின்றன.
இந்திய ரயில்வே


ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ள பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவையில் 17 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். சீனாவின் தேசிய பெட்ரோலிய நிறுவனத்தில் 16 லட்சம் பேரும், மற்றொரு அரச நிறுவனமான மின்தொகுப்பு நிறுவனத்தில் 15 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்.

இந்தப் பட்டியலில் 14 லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய ரயில்வேவுக்கு எட்டாவது இடமும், 13 லட்சம் பேர் கொண்ட இந்திய இராணுவத்துக்கு 9 ஆவது இடமும் கிடைத்துள்ளன. ஆப்பிள் ஐ போன், ஐ பேட் போன்றவைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள பாக்ஸ்கான் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 12 லட்சம்.
thanks to qahtaninfo