Wednesday, June 27, 2012

"கர்நாடகா : பாங்கு சொல்ல தடை விதித்த 3 நாட்களில் இஸ்லாத்தை ஏற்ற மூவர்!











கர்நாடக மாநிலத்தில் கடந்த 17ந்தேதி முதல் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள், கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். பெங்களூருவை சேர்ந்த

"மேகநாதன் தாகூர்" என்பவர் தனது பெயரை "முஹம்மத் யூசுப்" என்று மாற்றிக்கொண்டார்.

அவரது மற்ற இரண்டு சகோதரர்களான

"சரவணத் தாகூர்" "முஹம்மத் யூனுஸ்" என்றும்

"ஜூவால தாண்டன்" தனது பெயரை "முஹம்மத் யாகூப்" என்றும் மாற்றம் செய்துக்கொண்டனர்.

அதே நேரம் இவர்களது தாயார் "சுமத்ரா தேவி" மட்டும் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. தந்தை "காஷி நாத் தாகூர்" பல ஆண்டுகளுக்கு முன்பே மரணித்து விட்டார். படத்தில் உள்ள முஹம்மத் யூசுப் கூறுகையில், தனக்கு ஜமீல் என்ற நெருங்கிய முஸ்லிம் பல மாதங்களாக இஸ்லாத்தின் பல விஷயங்களை போதித்து வந்ததாகவும் "நரகத்தின் அச்சம் மற்றும் சொர்கத்தின் ஆசை" தான், நான் இஸ்லாத்தை ஏற்க முக்கிய காரணம் என்றார், யூசுப். ஒரு பக்கம், ஒலி பெருக்கியில் அதிகாலை பாங்கு சொல்வதையும் பொறுக்க முடியாதவர்கள் உள்ள அதே பெங்களூருவில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் படைத்தவர்களும் இருப்பதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.

maruppu net

Tuesday, June 26, 2012

ஈரானை தாக்கினால் இஸ்ரேல் அழிந்துபோகும் – ஈரான் தூதர் !


to self-terminate by attacking Iran-Iranian envoy to Spain
மாட்ரிட்:சுயமாக தன்னை அழித்துக்கொள்ள தயாரானால் மட்டுமே இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று ஸ்பெயினில் ஈரானின் தூதர் முர்தஸா ஸஃபரி தெரிவித்துள்ளார்.ஈரானை தாக்குவோம் என்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான வாய்சவடாலை முற்றிலும் நிராகரித்த முர்தஸா இவ்வாறு தெரிவித்தார்.ஸ்பெயின் தொலைக்காட்சி சேனலான டி.வி3 க்கு பேட்டி அளித்தார் முர்தஸா. இஸ்ரேலோ,
அமெரிக்காவோ தற்பொழுது ஈரானை தாக்கும் சூழல் இல்லை. ஆப்கானிலும், ஈராக்கிலும் எவ்வாறு வெளியேறுவது என அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. அதனிடையே அவர்கள் இன்னொரு போருக்கு தயாராவார்கள் என்று கருதவில்லை. ஆனால், ஈரானை தாக்க இஸ்ரேல் முயன்றால், அதற்கு வலுவான பதிலடிக் கொடுக்க ஈரானால் இயலும். சியோனிஸ்டுகளின் தோல்வி உறுதியாகும் என்று முர்தஸா கூறினார்.
thanks to asiananban

டாக்டர்.மு​ஹம்மது முர்ஸி எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்வு! – மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து !


Celebrations in Egypt as Mursi wins presidency.கெய்ரோ:எகிப்திய குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில் இன்று மதியம் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல்
கமிஷனின் தலைமையகத்தில் எகிப்து அதிபர் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது.
முஹம்மது முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் 12.3 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 8 லட்சம் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
6 தினங்களாக அதிபர் தேர்தலின் முடிவை அறிய காத்து தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்கள் இம்முடிவை ‘அல்லாஹ் அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்ற தக்பீர் முழக்கத்துடன் வரவேற்றனர்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து!
டாக்டர் முஹம்மது முர்ஸி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து எகிப்து முழுவதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை காத்திருந்த எகிப்து மக்கள், முடிவு வெளியானதும் மகிழ்ச்சி தாங்கமுடியாமல் வீதிகளில் இறங்கி பட்டாசுகளை கொளுத்தியும், வாகனங்களை ஓட்டியும் நள்ளிரவு வரை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
முஹம்மது முர்ஸியின் பெரிய கட் அவுட்டுகளையும், படங்களையும் ஏந்தியவாறு மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். சில நகரங்களில் அனைத்து சாலைகளும் கொண்டாட்ட பேரணிகளால் நிறைந்திருந்தது. பெண்களும், குழந்தைகளும் உள்ளிட்டோர் வெற்றிப் பேரணிகளில் பங்கேற்றனர்.

thanks to asiananban

வரம்பு மீறினால் புரட்சி தொடரும்' - எகிப்தின் ஜனாதிபதிக்கு அவருடைய மகன் எச்சரிக்கை..!



எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸிக்கு அவரது மகன் அப்துல்லாஹ் முர்ஸி எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘வரம்பு மீறினால் புரட்சி 
தொடரும்’ என அறிவுறுத்தியுள்ளார்.


முஹம்மது முர்ஸியின் மகன் அப்துல்லாஹ் முர்ஸி தனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது: “அல்லாஹ்விற்கு கட்டுபடும் தோறும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நீங்கள் வரம்பு மீறினால் புரட்சி தொடரும். புரட்சிக்கு மாற்றமான முடிவுகளை நீங்கள் எடுத்தால் புரட்சி தொடரத்தான் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார வேளையில் முஹம்மது முர்ஸி இவ்வாறு எகிப்திய மக்களிடம் கூறினார்: “எனக்கு தவறு நேர்ந்தால் என்னை திருத்துங்கள்” என்று.

.........................................................

தேசிய ஒன்றுமைக்கான அழைப்பினை எகிப்தின் புதிய ஜனாதிபதி மொஹமட் மூர்சி விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக மூர்சி பதிவாகியுள்ளதுடன், அனைத்து எகிப்தியர்களுக்கும் தாம் ஜனாதிபதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடந்தவாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி சார்பாக போட்டியிட்ட மூர்சி 51.73 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஹொஸ்னி முபாரக்கின் பதவிக் காலத்தில் பிரதமராக பதவி வகித்த அஹமட் ஷபீக் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

எகிப்தின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மூர்சிக்கு பல்வேறு உலக தலைவர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே எகிப்தின் ஆளும் இராணுவப் பேரவை தன்னிச்சையாக அதிகாரங்களை சுவீகரித்துள்ளமை மற்றும் தேர்தல் முடிவுகள் எகிப்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Monday, June 25, 2012

முஸ்லிம் சிறைவாசிகளுக்கான போராட்டம் - சென்னை


முஸ்லிம் சிறைவாசிகளுக்கான போராட்டம் - சென்னை

25 ஜூன், 2012


சென்னை: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்லாம்யில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவி நஃபீஸா பானு சிறப்புரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கை கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக மாலை 4 மணிக்கு எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து துவங்க இருந்த இப்பேரணி காவல்துறையினரின் கிறுபிடியால் அரை மணி நேரம் தாமதமாக துவங்கப்பட்டது. இப்பேரணிக்காக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகள் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று இராஜரத்தினம் மைதானத்திலிருந்து காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி வரை பேரணி நடத்த அனுமதி கோரினர். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் காவல்துறை அதிகாரிகள் கடைசி நிமிடத்தில் இவ்வழியாக பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்க முடியாது என தடுத்தனர்.




உயர் அதிகாரிகள் ஏற்கனவே வாய்மொழியாக அனுமதி வழங்கிவிட்டார் என எடுத்துக்கூறியும் அப்பகுதி உதவி ஆணையர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காவல்துறையினருக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக நிர்வாகிகள் தாங்கள் கைது செய்யப்பட்டாலும் பராவாயில்லை திட்டமிட்டபடியே பேரணியை நடத்துவோம் என்று உறுதியாக இருந்த பின்னர் காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பா. புகழேந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.







முஸ்லிம் சிறைவாசிகளுக்கான ஆர்ப்பாட்டம் - மதுரை




 மதுரை: முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வீரியத்துடன் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியை முன்னிட்டு 7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதுண்டு. ஆனால் இது முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் விதிவிலக்காக இருக்கின்றது. சென்ற தி.மு.க ஆட்சியின் போதும், இப்போது ஆ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 1 வருடம் நிறைவடைந்த போதிலும் முஸ்லிம் கைதிகளிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது.

முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகளாக  இருக்கும்போதே தண்டனை காலமான 7 வருடங்களை பூர்த்தி செய்துவிட்டனர். இருந்த போதிலும் தமிழக அரசு இது தொடர்பாக பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. இதனை கருத்தில் கொண்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பத்தில் ஒளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினருமான முஹம்மது யூசுஃப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். 

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மீட்பதற்கான போராட்டம் - நெல்லை


25 ஜூன், 2012

 

கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை அதிகாரிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு, கருணையில் கூட அரசின் அப்பட்டமான பாரபட்சம் ஆகியவற்றால் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுவிட்டது. மேலும், விசாரணை சிறைவாசிகளாக இருந்தபோது ஜாமீன் கூட மறுக்கப்பட்டு நீண்ட நெடும் சிறைவாசத்தை அப்போதே தண்டனையாக அனுபவித்து விட்டு அவர்கள் தண்டனைக்கைதிகளாக இப்போதும் சிறையில் வாடி வருகின்றனர். 




பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 200க்கு மேற்பட்டவர்களில் ஒருவர் கூட மத ரீதியாக குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கோ, தண்டனைகளோ சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமன்னிப்பில் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்பது தற்போதைய அ.தி.மு.க. அரசின் கொள்கைக்கு விரோதமானதல்ல என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். அரசின் பொது மன்னிப்பு என்பது முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாது மற்ற சிறைவாசிகளுக்கும் கிடைத்திட வேண்டும். ஆகவே விடுதலைக்குத் தகுதியுள்ள அனைத்து சமூகங்களை சேர்ந்த ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திட வேண்டும் எனவும், 

முஸ்லிம் சிறைவாசிகளின் அவலம் நீங்கிட வேண்டுமெனில் அரசு வழங்கிடும் விடுதலை ஒன்றே தீர்வு என்ற நிலையில் 7 ஆண்டுகள் கழிந்த 49 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திடுமாறு பாதிக்கப்பட்ட பெண் சமூகத்தின் சார்பாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இந்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கின்றது. 

சிறை சித்திரவதையை விளக்கும் படம் 

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் V.S.T.பள்ளிவாசலில் இருந்து பேரணியாக தொடங்கி ஆஸாத் வீதி வழியக பஜார் திடலில் நிறைவடைந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.கைசர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டதிற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் N.ஜன்னத் ஆலிமா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட தலைவர் M. மும்தாஜ் ஆலிமா வரவேற்புரையாற்றினார்.

 இந்நிகழ்ச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S.பாத்திமா கனி, தூய சவேரியர் கல்லூரியின் உதவி பேராசிரியர் P.சாந்தி ஆகியோர் கோரிக்கையுரையற்றினார். இறுதியாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட செயலாளர் நஸ்ரத் நன்றியுரையற்றினார். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், நீதியாளர்கள், முஸ்லிம் பெண்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 1000 மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர் 




மாநில செயற்குழு உறுப்பினர் ஜன்னத் அவர்கள் உரையாற்றிய பொழுது 

எழுத்தாளர் சாந்தி அவர்கள் உரையாற்றிய பொழுது  


NWF  மாவட்ட செயலாளர் நுஸ்ரத் நன்றியுரை ஆற்றுகிறார்