Thursday, November 17, 2011

மஸ்ஜித் அமைவிடத்தில் பன்றித்தலை புதைத்து ரத்தம் கொட்டினர் - சுவிஸில் சம்பவம்



மேலைநாடுகளில் “இஸ்லாமோ போபியோ“ என்ற முஸ்லீம் வெறுப்பு மனப்பான்மை பல இடங்களில் தளிர்த்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக மஸ்ஜித் , திருக்குரான் போன்றவற்றை இழிவுபடுத்தும் செயல்களும் தொடங்கியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் சோலோதுன் மாநிலத்தில் உள்ள கிராங்கெஸ் மாநகரத்தில் மஸ்ஜித்  கட்டுவதற்கு ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் சில இஸ்லாம் வெறுப்பாளர்கள் ஓர் பன்றியையும் நான்கு பன்றிகளின் தலைகலையும் புதைத்து விட்டனர். மேலும் 120 லிட்டர் பன்றி ரத்தத்தையும் அங்கு கொட்டியுள்ளனர்.  முஸ்லீம்களுக்கு பன்றி மத விரோதமான விலங்கு என்பதால் இனி அந்த இடத்தில் மசூதி கட்டப்படமாட்டாது. அந்த இடத்தின் புனிதம் பன்றியால் கெட்டுவிட்டது என்பது இச்செயலைச் செய்தவர்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். 

இஸ்லாம் மத விடயங்களில் அருவருக்கத்தக்க வகையில் தலையிடுவதும் மத விரோதமான செயல்களில் ஈடுபடுவதும் சுவிஸ்ஸின் இஸ்லாமிய சென்ட்டரல் கவுன்சிலைச் சேர்ந்தர்களுக்கு வருத்தத்தை அளித்தது. இவர்கள் மேலை நாடுகளில் இஸ்லாமிய மதத்தினர் வாழப் பெருந்தடைகள் உருவாக்கப்படுவதாக நம்புகின்றனர். மசூதி கட்ட இருந்த காலி இடம் இருக்கின்ற கிராங்கெஸ் மாநகரத்தின் மேயரான போரிஸ் பங்கா இந்தச் செயலைக் கடுமையாகச் சாட்டினார். “இது மிகவும் கேவலமான, அருவருக்கத்தக்க செயல்” என்று கண்டித்தார். 

சுவிட்சர்லாந்தில் இஸ்லாம் தீவிரமாய் இருப்பதைத் தடுக்கவே இச்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவிக்கிறது. 

0 comments:

Post a Comment