Showing posts with label athirchi news. Show all posts
Showing posts with label athirchi news. Show all posts

Tuesday, October 11, 2011

உயிருள்ள தவளைகளை உண்ணும் மனிதன்! (வீடியோ இணைப்பு) பாருங்கள் ரசியுங்கள ருசிக்காதீர்கள்!



வயோதிபர் ஒருவர் உயிருள்ள தவளைகளை உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளார். இவர் இது பற்றி குறிப்பிடுகையில் தனக்கு எலிகள் மற்றும் தவளைக்குஞ்சுகளை ருசுத்து உண்ணுவது ரொம்பவும் பிடிக்கும் எனக்கூறுகிறார்.

இதற்காக உயிருள்ள தவளைக்குஞ்சுகளை தேடிப்பிடித்து சாப்பிட்டு வருகிறார் இந்த வயோதிபர். இதைவிட இன்னுமொரு வயோதிபர் சிறுவர்கள் முன்னிலையில் உயிருள்ள தவளை ஒன்றை பிடித்து வாய்க்குள் போட்டு மென்று விழுங்கும் காட்சி அடங்கிய காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது

Friday, October 7, 2011

நீண்ட காலமாய் வாழும் இரு முகம் கொண்ட அதிசய பூனை!

பிராங்க மற்றும் லூயி என பெயர் கொண்ட பூனை ஒன்று இரு முகங்களை கொண்டுள்ளது.அவரது எதிர்காலம் பற்றி நிறைய சந்தேகங்கள் – பிராங்க் மற்றும் லூயி பூனை இரண்டு முகங்கள், இரு வாய், இரு மூக்குகள், மூன்று கண்களை பிறந்தார். இப் பூனையின் எஐமான் மார்ட்டி ஸ்டீவன்ஸ் (Marty Stevens) ஆவார். இப் பூனையின் வயது 12 ஆண்டுகளாகும். இவ் அதிசயம் 2012ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Wednesday, August 31, 2011

எஜமானன் இறந்ததும் சோகத்தில் உயிரை விட்ட நாய்!(வீடியோ இணைப்பு)


வாலை குலைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா என்று பாடி இருக்கின்றார் மகாகவி பாரதியார். கணவன் இறந்தமையை அறிந்த கணத்திலேயே உயிரைத் துறக்கின்ற மனைவியை நாம் இலக்கியப் பாத்திரங்களூடாக கேள்விப்பட்டு இருக்கின்றோம். எஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்து விட்டது இந்நாய். எஜமானனின் பெயர் ஜோன். இராணுவ வீரர். திடீர் மரணம் அடைந்து விட்டார். இவரது சடலம் வீட்டில் பிரேதப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இவர் இறந்து விட்டார் என்பதை உணர்ந்து கொண்ட செல்லப் பிராணியான நாய் பிரேதப் பெட்டிக்கு அருகில் உயிரை மாய்த்துக் கொண்டது.

Tuesday, August 2, 2011

தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய நபர் பரிதாப மரணம்


இங்கிலாந்தில் தொடர்ந்து 12 மணி நேரம் வெறித்தனமாக வீடியோ கேம் ஆடிய வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
லண்டனை சேர்ந்த கிரிஸ் ஸ்டெயின்போர்த் என்ற வாலிபருக்கு வீடியோ கேம் என்றால் எல்லாவற்றையும் மறந்து விடுவார். மணிக்கணக்கில் வீடியோ கேம் ஆடுவார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் எக்ஸ்பாக்ஸ் என்ற வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். நேரம் போனதே தெரியவில்லை. திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிஸ் இறந்தார்.
பிரேத பரிசோதனையில் அவரது ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்து போனதால் மரணம் நிகழ்ந்துள்ளது என்று டாக்டர்கள் கூறினர்.
இதுகுறித்து கிரிஸின் தந்தை டேவிட் கூறுகையில்,”வீடியோ கேம் விளையாடுவது தவறில்லை. வீடியோ கேமை நான் குறை சொல்ல மாட்டேன். எதற்கும் எல்லை உண்டு. வெறித்தனமாக விளையாடினால் ஆபத்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கண்ணீருடன் கூறினார்.
எக்ஸ்பாக்ஸ் தயாரித்த நிறுவனம் கூறுகையில்,”கல்வி விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் பொறுப்புள்ள விளையாட்டுகளையே நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். வீடியோ கேம் விளையாடும்போது, அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். வேறு பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று பரிந்துரை செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Monday, May 9, 2011

அமெரிக்காவின் உளவுபார்க்கும் இயந்திரமாக பேஸ்புக் – ஜூலியன் அசாஞ்சே அதிர்ச்சித் தகவல்


இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவின் பயங்கரமான உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
பேஸ்புக், பாரிய தனிநபர் தரவுகளின் தொகுப்பெனவும், இது அதன் பாவனையாளர்களால் பராமரிக்கப்படுகின்ற போதிலும் அமெரிக்க உளவுச் சேவைக்கு பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ரஸ்ய நாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பேஸ்புக் மட்டுமன்றி கூகுள், யாஹூ உட்பட மற்றைய பெரிய அமெரிக்க நிறுவனங்களும் அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுகின்றன.
பாவனையாளர்கள் புதிய நண்பர் ஒருவரை பேஸ்புக்கில் இணைக்கும்போது அவர்கள் தாமாகவே அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுவதுடன் அவர்களுக்கான தரவுத்தளத்தினையும் பெருக்குகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
செவ்வியின் நிறைவுப் பகுதியில் ஊடகங்களையும் அவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Monday, May 2, 2011

கை விரல்களால் முட்டைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார்.

பரந்துபட்ட உலகில் சாதிக்க துடிப்பவர்கள் ஏராளம். அதில் சாதித்தவர்களும் நிறையவே உண்டு.
30 sec
4 egg
Guinness World Record
தனது கை விரல்களால் முட்டைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார். 30 sec 4 முட்டைகளை உடைத்து கின்னஸ் (Guinness World Record) சாதனை படைத்துள்ளார்.

Thursday, April 21, 2011

இணையம் என்னும் வசியக்காரன்….ஒரு பகீர் ரிப்போர்ட்!


இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்? கேள்விக்கு விடையை கொடுக்க அவரவரின் மனோநிலைதான் முடியுமென்றாலும் கழுகு தனது சிறகடிப்பில் கண்டறிந்த விடயங்களை இக்கட்டுரையின் மூலம் உங்களுக்கு கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்…!

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நன்மைக்கே, நன்மைக்கே.. என்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதனோடு சில தீமைகளையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. அவற்றுள் இந்த இண்டெர்னெட் என்பது மறுக்கவொன்னா நன்மைகளையும், சேர்க்கவொன்னா தீமைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் இதற்கு அடிமைபட்டுக் கிடப்பது எவ்வகையில் நியாயம்? அது தாங்க இண்டெர்னெட் அடிக்‌ஷன்..
இண்டெர்னெட் அடிக்‌ஷன் என்றால் என்ன?
இணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளில் அதிக கவனம் செலவழித்து விட்டு ஜீவனுள்ள, கூடவே இருக்கும் உறவுகளுக்கு நேரம் ஒதுக்காமல், வேலை செய்யுமிடத்திலும் சரிவர கவனம் செலுத்த முடியாமலும், ஒரு விதமான மன அழுத்தத்துடனே இருப்பது.
Types of internet addiction:
1. Always want to open any kind of websites
2. chat rooms
3 .Interactive games
4. Database search engine
5. Pornography
6. cybersex
சரி, ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
உங்களுக்குள்ளாகவே சில கேள்விகளைக் கேட்டு அதற்கு உண்மையான பதில்களும் கொடுத்து விட்டு பின்பு தொடருங்கள்.
1.இதற்கு முன்பாக செய்த அல்லது இனி செய்யப் பொகும் ஆன்லைன் ஆக்டிவிட்டிகளையே அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
2.அதிகப் படியான நேரத்தை ஆன்லைனில் செலவிட்டால்தான் உங்களுக்கு ஒரு சேட்டிஸ்வேக்‌ஷன் கிடைக்கிறதா?
3.நான் அதிகமான இணையத்தைப் பயன்படுத்துகிறேன், இதைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டா?
4.நீங்கள் இணையத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, இணைய வசதி தடைப்பட்டால், அதன்பின்பு நீங்கள் moody யாகவோ, restless ஆகவோ, இல்லை ஒரு விதமான மன அழுத்தத்துடனோ காணப்படுகிறீர்களா?
5.இணையத்தில் நீங்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் செலவிட்ட நேரத்தை விட தற்பொழுது, அதிகமான நேரத்தை செலவிடுவதாக உணர்கிறீர்களா?
6.இப்படிச் செய்வதால், நீங்கள் உங்கள் ரத்த உறவுகளையோ, இல்லை.. வேலை, படிப்பு என்று எதையாவது இழந்திருக்கிறீர்களா?
7.இதைச் செய்வதற்காக உங்கள் குடும்ப உறுப்பினரிடமோ இல்லை உங்கள் மேலதிகாரிகளிடமோ அடிக்கடி பொய் சொல்ல நேரிடுகிறதா?
8.உங்கள் முக்கிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது ஒரு வடிகாலாக அமைகிறதா?
மேலே கூறியுள்ள எட்டு கேள்விகளில் ஐந்துக்காகவாது நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்தால், இது கவலைக்குரிய விஷயமே.. எனவே இது தொடர்பாக நீங்கள் உங்களை ஆராய்ந்து, ஒழுங்கு படுத்திக் கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.
Matrimoniyal lawyers சொல்கிறார்கள், தற்பொழுது படித்தவர்கள் கொண்டு வருகின்ற விவாகரத்து வழக்குகளில் இந்த இண்டெர்னெட் அடிக்‌ஷன் ஒரு மோசமான பங்கை வகிக்கிறது என்பது நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது. பெரும்பாலும் 30+ வயதுடைய ஆண்களும் பெண்களுமே இந்த அவல நிலையை அடைகிறார்கள்.
இத்தகைய பழக்கம் உடையவர்கள், எப்பொழுதும் சோஷியல் ஆக்டிவிடிகளில், அதாவது உறவினர் திருமணம், பிறந்த நாள் விழாக்களில் பங்கு பெற விரும்புவதில்லையாம். அத்தோடு தங்களுடைய அன்றாடத் தேவையான வேலைகளைக் கூட விருப்பமில்லாமல் செய்வது.
பள்ளிக்கு அனுப்பிய தன்குழந்தையைக் கூட கூப்பிட செல்லாமல், மறந்து இரவு வரையிலும் இணையத்தில் செலவிட்ட தாயின் கதையைப் படித்தவுடன் மனது மிகவும் கனத்துத்தான் பொய் விட்டது.
இப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுபினர்களிடம் அடிக்கடி சொல்கின்ற ஒரு விசயம் என்னவென்றால், நான் இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது சந்தோசமாக இருக்கிறேன், என் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள், லீவ் மீ அலோன் என்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இப்பழக்கத்திற்கு உட்பட்டவர்கள் ரியல் டைம் நண்பர்களை, உறவினர்களைத் தவிர்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட சிலர், தான் எப்பொழுதும் ஆன்லைனில் இருப்பதைப் பெருமையாகவும் எடுத்துக் கொள்கிறார்களாம். இது இப்பழக்கத்தின் ஆரம்ப நிலையாம்.
இது தவிர்த்து சில அதி பயங்கரமான நிகழ்வுகளும் உண்டு. தேவையற்றஅதிகப்படியான இணைய நண்பர்களைச் சம்பாதிப்பது, சிலர் ஒரு படி மேலே போய், இத்தகைய சில அநாவசியமான நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, தங்களின் செக்சுவல் நீட்ஸைப் பூர்த்தி செய்து கொள்வது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.
சரி, பெரியவர்கள் தான் இப்படி என்றால், ஐயகோ, பள்ளி/கல்லூரிக் குழந்தைகளையும் இந்த இண்டெர்னெட் வலை விட்டு வைக்கவில்லை என்பது மறுக்கமுடியா உண்மை. சரி இவர்கள் பாடம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்காகத் தானே பயன்படுத்துகிறார்கள் என்றாலும், ஒரு சர்வே சொல்கிறது, அதாவது 85% மாணவர்கள் இதனால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லையாம், ஏனென்றால், பெரும்பான்மையான வெப்சைட்கள் அவர்கள் பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே கொடுப்பதில்லை. அத்தோடு அவர்கள் நேரத்தயும் வீணடிக்கிறது ஆன்லைன் கேம்ஸ் என்ற உருவத்தில்..
சரி இதற்கு என்னதான் தீர்வு என்று பார்ப்போமேயானால், முதலில் நாம் இப்பழக்கத்திற்கு உட்பட்டு இருப்பதாக உணர்ந்தால், முதலில் நம் தப்பை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். பின்பு இதற்கு தகுந்த முறையில் மருத்துவர்களை அணுகி சிகிச்சைமுறைகளைப் பெற வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே.. எனவே இண்டெர்னெட் வசதியை அளவோடு பயன்படுத்தி நாம் பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் வளமாக வாழ்வோம்..