வியன்னா:ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீனின் பதவியை உயர்த்துவதற்கு 27 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியனில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று ஆஸ்திரியா அறிவித்துள்ளது.
ஐ.நாவில் உறுப்பினர் அல்லாத கண்காணிப்பு நாட்டின் அந்தஸ்தை வழங்கக்கோரி ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், சமர்ப்பித்த மனுவின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரியாவின் அறிவிப்பு நம்பிக்கையளித்துள்ளது. தற்போது வெறும் ஒரு கண்காணிப்பு பதவி மட்டுமே ஃபலஸ்தீனுக்கு ஐ.நாவில் உள்ளது. இதன் தரத்தை உயர்த்துவதை தாங்கள் ஆதரிப்பதாக ஆஸ்திரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொது அவையில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரித்து வாக்களித்தால் ஃபலஸ்தீனுக்கு கண்காணிப்பு பதவி கிடைக்கும். 130க்கும் மேற்பட்ட நாடுகள் ஃபலஸ்தீனை ஆதரிக்கும் என கருதப்படுகிறது. ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை வகிக்கும் நாடான பிரான்சு அறிவித்துள்ளது. பிரான்சின் தீர்மானம் தங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளதாக ஐ.நாவில் ஃபலஸ்தீனுக்கான பிரதிநிதி ரியாத் மன்சூர் கூறியுள்ளார்.
ஃபலஸ்தீனை ஆதரிப்போம் என்றும் அமைதிக்கு ஆதரவான முயற்சி என்றும் ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் ஃபலஸ்தீனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.ஆனால், மஹ்மூத் அப்பாஸ் இம்முயற்சியில் இருந்து பின்வாங்கவேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது. நன்றி, தூது
0 comments:
Post a Comment