B.A. (மலையாளம்) மூன்றாமாண்டு பாடத்தில், "மாப்லாஸ்"களுக்கு (மலப்புரத்தில் வாழும் "மலபார்" முஸ்லிம்கள்) எதிராக "கேரள சம்ஸ்காரம்" என தலைப்பிட்டு 31ம் பக்கத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலமான 1921ல், 500 முதல் 600 ஹிந்துக்களை, மாப்லாஸ்கள் கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், 1883ல், 2000 ஹிந்துக்களை "காட்டாய மத மாற்றம்" செய்ததாகவும் ஆதாரமற்ற செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
இது போன்ற "மத துவேஷ கருத்துக்களை" அறிந்த CFI மானவரமைப்பினர், இந்த கட்டுரையை சமர்ப்பித்துள்ள பிரியதர்சன்லால் என்பவர், "ஆர்.எஸ்.எஸ்." தொடர்புடையர் என்பதையும் கண்டறிந்தனர்.
அதை தொடர்ந்து, பல்கலைக்கழக வாசலுக்கு சென்று மேற்படி பாடப்புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதியை "தீ" வைத்துக்கொளுத்தியதுடன் அடுத்தக்கட்ட போராட்டத்தையும் அறிவித்தனர்.
அதை தொடர்ந்து, "காலிகட்" பல்கலைக்கழக துணைவேந்தர் ஊரில் இல்லாத நிலையிலும், அவசரமாக கூடிய "பல்கலைக்கழக நிர்வாக கமிட்டி" மேற்படி ஆட்சேபகரமான பகுதியை உடனே நீக்கிவிடுவதாக அறிவித்தனர்.
மேலும், கேரளாவின் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட புத்தகங்களை திரும்ப பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment