Sunday, March 24, 2019

சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : அனைவரும் விடுதலை என்ற தீர்ப்பு நீதித்துறையை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது.

என்.ஐ.ஏ (NIA) ஒரு நேர்மையற்ற நிறுவனம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது!*
சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்தா மற்றும் மற்ற மூன்று நபர்கள் விடுதலை என்ற NIA நீதிமன்ற தீர்ப்பு நீதித்துறையை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), அரசின் அழுத்தத்திற்கு உள்ளாகும் நேர்மையற்ற நிறுவனம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார்.
12 வருடங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு என்பது இந்துத்துவ தீவிரவாத குழுக்களால் நடத்தப்பட்டு 68 அப்பாவி மக்களின் உயிரை பறித்த, இந்த தேசத்தின் மிக மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றாகும்.
நீதிபதி முன்பு சுவாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்த போதிலும், அவருக்கு தண்டனை பெற்றுத் தருவதிலிருந்து NIA தோல்வி அடைந்துள்ளது, இத்தகைய செயல்பாடுகள் புலனாய்வு நிறுவனத்தின் திறமை குறித்தும் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது. NIA நீதிமன்றம் இதற்கு முன்பு அஜ்மீர் ஷரீஃப், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் மாலேகான் போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத தாக்குதல் வழக்குகளிலும் இவரையும் மற்ற பலரையும் விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெயர்களை கொண்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுவதற்கு ஆர்வம் காட்டியது போல் எந்தவொரு ஹிந்துத்துவா தீவிரவாத வழக்குகளை சார்ந்த குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட NIA ஆர்வம் காட்டவில்லை.
நமது தேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மதத்திற்கு ஏற்றாற் போல் தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு வெவ்வேறு முறையில் அணுகப்படுகின்றது என்பதற்கு இந்த அனைத்து வழக்குகளும் உதாரணமாகும். குறிப்பிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களை தண்டிப்பதில் நமது நீதிமன்றங்கள் மிகவும் முனைப்புடன் செயல்படுகின்றது. கோத்ரா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட அதே நாளில் தான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் எந்த ஒரு நபருக்கும் தண்டனை வழங்கப்படாத சம்ஜவுத்தா தீர்ப்பு வெளி வந்துள்ளதை E.அபுபக்கர் நினைவு கூர்ந்துள்ளார்.
இத்தகைய இரட்டை நிலைக்கு குற்றஞ்சுமத்திய அரசின் மனோபாவம் காரணமாக வேறுபாடாக இருந்தபோதிலும், இது நமது தேசத்தின் நீதித்துறை நிர்வாகத்தின் மீது அவமதிப்பையே கொண்டுவரும். தேர்தல் போட்டியில் இருக்கும் பாஜக அல்லாத கட்சிகள் சம்ஜவுத்தா குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பை குறித்து தமது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று E.அபுபக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். NIAவின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ள இந்த சமீபத்திய தீர்ப்பின் வெளிச்சத்தில், காங்கிரஸ் மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் தாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் இத்தகைய புலனாய்வு அமைப்பை கலைப்பதற்கு தயாராக இருக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
*இப்படிக்கு*
*டாக்டர். முஹம்மது ஷம்மூன்,*
*தலைவர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,*
*பாப்புலர் ஃப்ரண்ட், தலைமையகம், புது தில்லி.*

Saturday, March 23, 2019

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 26 முதல் 29 வரை சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி, எஞ்சிய ஒரு சில பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் அமைக்கும் பணி நிறைவடைந்ததையொட்டி, சோதனைக்காக சிக்னல் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 26  முதல் 29 வரை சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும். இதில், தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கலந்துகொண்டு இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளம், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட், கேட் கீப்பர் அறை, சிக்னல்கள் போன்றவற்றில் ஆய்வை நடத்துவார் எனவும் தென்னக ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.





















Thursday, March 21, 2019

"தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்"

"தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்"
சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது.
குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது.
அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன
நம் நாட்டில் மும்பை ;கோவா; புனே;டெல்லி;பெங்களூரு; சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள்
“நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்.
உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.
‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள்.
ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும்.
இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.
இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன.
அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை - வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.
ஆண்குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இந்த தொழிலுக்காக குறி வைத்து கடத்தபடுகிறார்கள்
குழந்தைகள்தொலைந்துவிட்டால்...நாம் என்ன செய்ய வேண்டும்
விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்குக் காணாமல்போன குழந்தைகளுக்கு முதல் இரண்டு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள் காவல் துறையினர்.
எனவே, குழந்தை காணாமல்போனது உறுதியானால் உடனடியாக அவசர எண் 100, ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குக் குழந்தையின் அங்க அடையாளங்கள், உடையின் நிறம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்யுங்கள். புகைப்படம் மிகமிக அவசியம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் இணையம் வழியாக மாநகரக் காவல் துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
வீட்டின், அலுவலகத்தின் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அக்கம்பக்கத்தில் யார் மீது சந்தேகம் என்றாலும் அவர்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் தகவலைச் சொல்லுங்கள்
. இவையெல்லாம் முதல் ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முழுவதுமாக தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்.
கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தொடங்கி, சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், ‘ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு ஆகிய இருசக்கர வாகன அணியினரும் களமிறக்கப்படுவார்கள்
எந்த கடுமையான சட்டமும் யாரையும் கட்டுப்படுத்தாது. ஏனென்றால் நம் நாட்டில் சட்டத்திற்குள் ஓட்டை இல்லை ஓட்டைக்குள் தான் சட்டமே இருக்கிறது. நம் குழந்தைகளை முடிந்த வரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
.இது அரசியல் பதிவு அல்ல. குழந்தைகளின் பாதுகாப்பை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த Group active members எல்லாருமே இந்த பதிவை படிக்கனும் தங்கள் கருத்துக்களையும் குழந்தைகளின் பாதுக்காப்பிற்கான ஆலோசனைகளையும் பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
- ஜி.அர்ச்சனாLLM. , PGDFL. , MBA. , DHE. ,
 அரசு சிறப்பு குற்றப் பொது வழக்கறிஞர்
மாவட்ட விரைவு வழி மகளிர் நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்டம்