Monday, January 9, 2012

ஐரோப்பாவை மிரட்டும் 2012ம் ஆண்டு

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான உறவுக்கு 2012ம் ஆண்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2012ம் ஆண்டிற்கான செயல்திட்டங்களை கடந்தாண்டு டிசம்பர் மாதம் அரசு உருவாக்கிய போது, சுவிட்சர்லாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான நிறுவனத் தொடர்பைத் தெளிவுபடுத்துவது தான் முதலாவதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த 1972ஆம் ஆண்டில் தடையில்லா வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் உருவாகியது. இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைச் செய்த படியே, இன்று வரை 120 ஒப்பந்தங்கள் உருவாகிவிட்டன.
இவை தொழில்நுட்பம் சார்ந்ததும் சாராததுமாக தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒப்பந்தங்களாகும். ஷென்கென் ஒப்பந்தத்தின்படி மக்களும் விருப்பம் போல் வந்து போயினர்.
இந்த ஒப்பந்தங்கள் தவிர, இரண்டாம் நிலைக்கும் அப்பாற்பட்டு வேறு பத்து ஒப்பந்தங்களுக்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக உறுப்பு நாடுகளின் நிதி நெருக்கடி காரணமாகப் புதிய வரிக்கொள்கையை உருவாக்குவதில் இந்த பேச்சுவார்த்தை முனைப்பாக நடக்கிறது.
இது தவிர மின்சார விற்பனை, வேளாண்மை போன்றவை குறித்தும் புதிய ஒப்பந்தங்கள் உருவாக உள்ளன. ஏனென்றால் இதுவரை மின்சாரச் சந்தை குறித்து ஒப்பந்தம் எதுவும் உருவாக்கப்படவில்லை. இனி புதிதாக திட்டவட்டமாக ஓர் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அணுசக்திக்கு எதிர்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில் புதுப்பிக்கப்படும் சக்தி குறித்து அனைவரும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். ஐரோப்பாவுக்கு மின்சார வழங்குவதிலும், விற்பனையிலும் முக்கிய இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்து இனி அதனை விற்பதில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது.
நாற்பதாண்டுகளாக பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் வழக்கறிஞராகப் பணிபுரியும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஜுன் ருசோட்டோ, ஒப்பந்தம் இல்லாமல் சுவிஸ் தன் மின்சாரத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பது சிக்கலான பணி என்பதை விளக்கினார்.
thanks to coolswiss.com

0 comments:

Post a Comment