Tuesday, January 17, 2012

என் உயிருக்கு ஆபத்து வந்தால் சந்திக்க தயார்: முஷாரப்.

 பாகிஸ்தானில் எனது உயிருக்கு ஆபத்து வந்தால் அதை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அந்த நாட்டு முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபராக முஷ்ராப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தேச விரோத குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முஷாரப் ஆதரவு கட்சி தோல்வி அடைந்துவிட்டது. அதனால் அவர், அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 
மேலும் இனிமேல் தாம் பாகிஸ்தானில் இருந்தால் புதிய அரசு கைது செய்யும் என்று கருதிய முஷாரப், பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். கடந்த 4 ஆண்டுகளாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என்று நாடு நாடாக அலைந்துகொண்டியிருந்தார். 

இந்த நிலையில் அவரது கட்சிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்பாடு ஏற்படலாம் என்று தெரிகிறது. இதனால் தேர்தலில் வெற்றிபெற்றால் மீண்டும் பாகிஸ்தான் அதிபராகலாம் என்ற எண்ணத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பப்போவதாக அறிவித்துள்ளார்.

 இதனால் வெளிநாடுகளில் வசித்த பெனாசீர் பூட்டோவுக்கு ஏற்பட்ட கதி முஷராப்புக்கும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முஷாரப் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் பாகிஸ்தான் மக்களுக்கு ஒரு மாற்றம் தேவையாக இருக்கிறது. 

பாகிஸ்தானுக்கு நான் தேவையாக இருக்கிறது என்று உணருகிறேன். பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாகிஸ்தான் மிகவும் பின்தங்கிவிட்டது என்றும் நான் நினைக்கிறேன். பாகிஸ்தானில் பெரும்பான்மையான மக்கள் ஆதரவுடன் ஒரு அரசியல் மாற்றம் தேவையாக இருக்கிறது. இந்த அரசியல் மாற்றமானது புதிய அரசை உருவாக்கும் நிலையில் இருக்க வேண்டும். இதில் நான் பங்கு பெற வேண்டும் என்று முஷராப் மேலும் கூறினா.

0 comments:

Post a Comment