இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்து வரும் தப்லீக் ஜமாத் என்ற குழுவினர் கொழும்பில் தங்கி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கொழும்பிலுள்ள கிராண்ட்பாஸிலுள்ள தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் தங்கியிருந்தனர்.
வியாழக்கிழமை தலைமையகம் வந்த காவல்துறையினர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு உள்ளிட்ட 161 நாடுகளிலிருந்து வந்துள்ள தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
”சுற்றிப்பார்ப்பதற்கான விசாவில் வந்து வேறு எந்த வேலைகளிலும் ஈடுபடக்கூடாது என ஆணை இருப்பதால் இவர்கள் வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக” குடிவரவு அதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்தார். தப்லீக் ஜமாத்தினரைச் சார்ந்த நிர்வாகிகள் இதனை அமைச்சர் பௌஸியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ”இந்தப் பிரச்னையை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேயிடன் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக” இலங்கை ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
மேற்கு மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவிக்கையில், ”தப்லீக் ஜமாத் என்பது முஸ்லிம்களிடையே மட்டும் இஸ்லாமிய ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒரு அமைப்பு. அதற்கு எதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை” என்று கூறினார்.

thanks to asiananban.blogspot.com
0 comments:
Post a Comment