Thursday, February 28, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

     டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .
   
    அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி மற்றும் வாகனப் பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழகத்தை ஆள்வது அரசு துறையா?உளவு துறையா?ஓட்டுப்போட்ட மக்களுக்கு சந்தேகம்- பாப்புலர் ஃப்ரண்ட்

                          

     சமீபத்திய மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசின் தலையீடு விஷயத்திலும், அதில் முடிவு எடுக்கப்பட்ட விதத்திலும் ஒரு நல்ல அணுகுமுறையை நாம் பார்க்க நேர்ந்தது. அது, மத உணர்வுகளை காயப்படுத்தும் சினிமா படத்திற்கு எதிரான முடிவானாலும் சரி, விவசாயிகளுக்கான காவிரி நீர் போராட்டத்தின் நிலையானாலும் சரியே.

     ஆனால், இப்படிப்பட்ட அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையிலும் காவல்துறையின் ஒருவிதமான மக்கள் அடக்குமுறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அது முஸ்லிம்கள், தலித்துகள், மனித உரிமை ஆர்வலர்கள் நடத்தும் போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பிரதிபலிக்கின்றது. ஒருவேளை இச்செயல் முதல்வர் அவர்களின் பார்வைக்கு உளவுத்துறையால் சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டதா அல்லது இவ்விஷயங்கள் என்ன மாதிரியாக உளவுத்துறையால் முதல்வரிடம் தெரியப்படுத்தப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியவில்லை.

ஆள்வது யார் என மக்கள் குழப்பம்


     “அ.தி.மு.க.விற்குத் தானே ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தோம்; ஆனால் நாம் ஓட்டுப் போடாத காவல்துறை உளவுத்துறையல்லவா தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது” என மக்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். பரமக்குடி, கூடங்குளம், தர்மபுரி, பெரம்பலூர், சென்னை என விதவிதமான வடிவங்களில் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அணுதினமும் காவல்துறையால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அராஜகங்களே இதற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன.

சுதந்திரதின அணிவகுப்பிற்கு தடை

     முஸ்லிம்களின் சுதந்திரதின போராட்ட தியாகங்களை நினைவு கூறும் விதத்திலும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து சமூக தியாகிகளை கௌரவிக்கும் விதத்திலும் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வந்தது. அ.தி.மு.க தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் கடந்த 2011 மற்றும் 2012 ஆகிய 2 வருடங்களாக தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திரதிக் அணிவகுப்பிற்கு தடை விதித்தது.

     ஆகஸ்ட் 15 அன்று அனுமதி வழங்கப்படாததால், 2011ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தன்றாவது அணிவகுப்பு நடத்த அனுமதி தாருங்கள் எனக் கேட்டோம். காவல்துறை அதற்கும் அனுமதி மறுத்துவிட்டது. அனுமதி மறுத்ததோடல்லாமல் காவல்துறையின் ஆலோசனைப்படி அரசு அவசரமாக ஒரு சட்டமும் இயற்றியது. அதில் “இராணுவம் போன்றோ, போலீஸ் போன்றோ தோற்றமளிக்கும் யூனிஃபார்ம் போட்டு அணிவகுப்பு நடத்தக்கூடாது. கையில் கம்பு (லத்தி) வைத்திருக்கக்கூடாது. அணிவகுப்பிற்கான பயிற்சி எடுக்கக்கூடாது. ஒரு சில அமைப்புகள் அணிவகுப்பு நடத்த முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவேதான் இந்த அவசர சட்டம்” என தமிழ்நாடு மாநகர காவல் சட்டம் பிரிவு 41 ஐ திருத்தி அவசர சட்டம் பிறப்பித்து, கவர்னர் உத்தரவுடன் உடனடியாக அமலுக்கு கொண்டுவந்தது.
காவல்துறையின் அத்துமீறல்கள்
     இதுபோன்ற ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் கூட கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினரால் இழைக்கப்பட்டு வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

     முன்னாள் துணை முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு. ‘ம்’ என்றால் வனவாசம்; ‘ஏன்’ என்றால் சிறைவாசம் என்று கூறுவது போல் பொய் வழக்குகளுக்கும் பஞ்சமில்லை.

     பரமக்குடியிலே காக்கை, குருவிகளை சுடுவதை போன்று தலித் சமூக மக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. * காவல்துறையினருக்கு பாதிப்பு என்ற காரணத்தை முன்வைத்து நடத்தப்படும் போலி என்கவுண்டர்கள் தொடர் கதையாகி வருகின்றன.

     அதேபோன்று கூடங்குளத்திலே பேரழிவுக் காரணியான அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரை மக்கள் ஜனநாயக வழியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செய்து வரும் அறவழிப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது.

     அமைதியாகப் போராடிய இடிந்தகரை கிராம பெண்கள், குழந்தைகள் மீது மிருகத்தனமாக தடியடி நடத்தி இரத்தக்களரியாக்கியது. * சென்னையில் அறவழியில் காவல்நிலைய முற்றுகை நடத்திய முஸ்லிம் பெண்கள் மீது தடியடி நடத்தியது.

     தர்மபுரியில் ஆதிக்க சாதியினரின் தாக்குதலால் உருக்குலைந்த தலித் சமூக மக்கள் மீது அடக்குமுறையை ஏவியது.

     பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சங்பரிவார்களின் ஊர்வலங்களை அனுமதிப்பது. அவ்வாறு ஏன் அனுமதிக்கிறீர்கள் என கேட்ட முஸ்லிம்கள் மீது அண்மையில் மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மீது குற்றவழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது என தொடர்கின்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம்
     பாப்புலர் ஃப்ரண்ட் உருவாக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ம் நாள் “மக்கள் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி காஞ்சிபுரம், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்திருந்தோம். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கேட்டு மனு அளித்திருந்தோம். ஆனால், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய இடங்களில் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என வேண்டுமென்றே கடைசிவரை அலைக்கழித்து விட்டு, பிப்ரவரி 17 அன்று பேரணி துவங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு வாய்மொழியாக அனுமதி அளித்தனர். அதுமட்டுமல்லாது எல்லாவிதமான அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டனர் இந்த காவல்துறையினரும் உளவுத்துறையினரும்.

    வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களை வந்து சேரவிடாமல் தடுக்கும் நோக்கில் சோதனை என்ற பெயரில் திருச்சி நகருக்கு வெளியே 3 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து இடையூறு செய்தனர் திருச்சி காவல்துறையினர்.

     ஒவ்வொரு செக் போஸ்டிலும் இந்த வண்டிகளை நிறுத்தி டிரைவரை வீடியோ எடுத்து, வண்டியை வீடியோ எடுத்து மிரட்டும் சோதனையில் டிரைவரின் முழு விபரங்களையும் வாங்கி, வாகன பொறுப்பாளரின் விபரங்களை வாங்கினர்.

    பேரணி துவங்கும் இடத்திற்கு 2 கி.மீ. முன்பே வாகனங்களை நிறுத்தி அனைவரையும் இறங்கி நடந்து போகுமாறு செய்தனர்.

     பொது இடங்களில் கட்டப்பட்டிருந்த பாப்புலர் ஃப்ரண்டின் ஃப்ளக்ஸ் பேனர்களை மட்டும் காவல்துறையினரே கிழித்து எறிந்தனர். அதன் அருகில் உள்ள மற்ற கட்சி பேனர்கள் அப்படியே இருந்தன.

     முஸ்லிம்களின் முஹல்லாக்களுக்கு டீம் டீமாக சென்ற காவல்படை பேரணிக்கு செல்லக்கூடாது என பொதுமக்களை மிரட்டினர்.

     பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களுடைய வீடுகளுக்குச் சென்று குற்றவாளிகளின் விபரங்களை சேகரிப்பது போல் அனைத்து விபரங்களையும் சேகரித்தனர்.

     பெண்கள் மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் போது, ஆண் காவலர்கள் நடுவீட்டிற்குள் சென்று பெண்களை மிரட்டியுள்ளனர்.

     திருச்சியில் மக்களை பேரணிக்கு ஏற்றி வருவதற்காக ஏற்பாடு செய்த வாகன நிறுவனங்களுக்கு சென்று, உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர்.

     மெகா போன் மூலம் அறிவிப்பு செய்வதற்கும், கொடி, தோரணம் கட்டுவதற்கும் அனுமதி வாங்கித்தான் கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர். * பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளை வலுக்கட்டாயமாக அடைக்கச் சொல்லி காவல்துறையினர் மிரட்டி கடைகளை பூட்ட வைத்தனர்.

     பேரணிக்கு ஒரு நாள் முன்னதாகவும், பேரணி தினத்தன்றும் காலை, மாலை செய்தித்தாள்களில் “பேரணிக்குத் தடை போலீஸ் குவிப்பு” என்ற செய்தி வெளியிட வைத்து பொதுமக்களை பீதி வயப்படுத்தினர்.

     பேரணிக்கு முன்னதாக மிகப்பெரிய போலீஸ் படையை அணிவகுக்கச் செய்து பீதியை ஏற்படுத்தினர். இப்படி திருச்சி காவல்துறையின் அட்டூழியங்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகமுடியும். பேரணியை சீர்குலைக்க சென்னை மாநகர உயர்மட்ட காவல்துறையினரும் உளவுத்துறையினரும் இதற்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்ற அளவில் தங்களால் இயன்ற எல்லா அத்துமீறல்களையும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக நாடு

     நமது இந்திய தேசம் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் தமது கொள்கையை பிரச்சாரம் செய்வதற்கும், அரசின் கொள்கைகளை எதிர்த்து அறவழியில் போராடுவதற்கும் உரிமை உண்டு. இது இந்தியாவின் மிக உயர்ந்த உன்னதமான சட்டமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கும் ஜனநாயக உரிமையாகும். இதனை யாரும் மறுக்க முடியாது.

நாடு காவல்துறைக்குச் சொந்தமானது அல்ல!

     பொதுமக்கள் மிகவும் கண்ணியத்துடன் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். ஆனால், அரசும் காவல்துறையும் அவற்றை மிகவும் மோசமாக அணுகி வருகின்றன. குடிமக்களின் உரிமைகளை சட்டம் தீர்மானிக்க வேண்டும்; மாறாக, அடக்குமுறையும் சர்வாதிகாரமும் தீர்மானிக்கக்கூடாது.

     இந்த நாடு மக்களுக்குச் சொந்தமானது; காவல்துறைக்குச் சொந்தமானது அல்ல. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத்தான் காவல்துறையே அல்லாது, அடக்கி ஆளுவதற்காக அல்ல. மக்களை தொடர்ந்து விளிம்பு நிலையிலேயே வாழவைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மக்களின் நியாயமான உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டியது அரசு மற்றும் காவல்துறையின் கடமையாகும். ஜனநாயக உரிமைகளை அடக்குமுறைகளாலும் சர்வாதிகாரத்தாலும் நீண்ட காலத்திற்கு தடைபோட்டு வைக்க முடியாது என்பதை அரசும் காவல்துறையினரும் உணர வேண்டும்.

விழித்தெழும் நேரமிது!

    ஆகவே, ஜனநாயகத்தின் ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாக்க, நமது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசின் அடக்குமுறைக்கெதிராகவும் சர்வாதிகாரத்திற்கெதிராகவும் மக்கள் விழித்தெழுந்து வீரியமிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணமிது. மக்களின் உரிமைகளை மக்கள் தான் கண்காணிக்க வேண்டும். நாம் கண்காணிப்பில் கவனமற்று இருந்தால் பருந்துகளும் வல்லூறுகளும் கூட நமது உரிமைகளை கொத்தி சென்று விடும் என்பதை நாம் மறந்து விட வேண்டாம். நமது உரிமைகளுக்கு பங்கம் ஏற்படும்பொழுது ஆர்த்தெழுந்து உரிமையை நிலை நாட்ட போராட வேண்டும்.

    மக்கள் சக்திக்கு முன்பு எந்த ஒரு அடக்குமுறையும் நிற்க முடியாது என்பதை உலக சரித்திரம் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.

     மக்களே, அணி திரளுங்கள்! அடக்குமுறையற்ற ஜனநாயகம் படைத்திடுவோம்!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

#184/229, 2வது மாடி, லிங்கி செட்டி தெரு, மண்ணடி, சென்னை 600 001, போன்: 044 64611961

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்



டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .



அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி மற்றும் வாகனப் பேரணி  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்



கர்நாடகா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி , வாகனப் பேரணி, மருத்துவமுகாம்  மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தி

Wednesday, February 27, 2013

வரதட்சணை வாங்குபவன் ஆண் மகனா?


     பிப் 27/2013:  வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தை சீனு என்ற சுதாகர், 24, என்பவருக்கும், ராமநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த கோமதி, 21, என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.  

     அதன் பின் சீனு, வரதட்சணை கேட்டு கோமதியை அடிக்கடி கொடுமை செய்துள்ளனர். கடந்த மாதம், கோமதியின் தந்தை, 10 ஆயிரம் ரூபாய் வரதட்சணையாக  கொடுத்துள்ளார். இருப்பினும், விறகு மண்டி வைக்க இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி அடித்து உதைத்துள்ளார்.

     வரதட்சணை வாங்கி வராததால், கோமதியின் மாமியார், நாத்தனார், கணவர் ஆகியோர் அவரை அடித்து, உதைத்து வாயில் ஆஸீட் ஊற்றியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கோமதியை உறவினர்கள், கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல தனியார் மருத்துவனையில் சேர்த்துள்ளனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி கோமதி நேற்று இறந்துள்ளார்.

     சிந்திக்கவும்:  வரதட்சணை வாங்கி கொண்டு திருமணம் செய்யும் பழக்கத்தை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். வரதட்சணை வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்று இரும்பு கரம் கொண்டு இந்த கொடுமையை ஒடுக்க வேண்டும். பெண்களிடம் வரதட்சணை வாங்கி கொண்டு திருமணம் செய்யும் பழக்கம் இந்தியாவில்தான் இருக்கிறது.  உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த பழக்கத்தை காண முடியவில்லை.

     பெண்களிடம் வரதட்சணை வாங்கி கொண்டு திருமணம் செய்பவன் மிக கேவலமானவன், அருவருப்பானவன், ஆண் மகன் என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவன். இந்த பேடிகளை பெண்கள் புறக்கணிக்க வேண்டும். வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய பெண்கள் சம்மதிக்க கூடாது. இந்த கேவலமான இழி பிறவிகளுக்கு எதிரான தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்மகனும் வரதட்சணை வாங்குவதில்லை என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். thanks, sinthikkavum.

பயங்கரவாதியாக செயல்பட்ட IPS அதிகாரி!


     பிப் 24: கடந்த 2004ல் மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை மோடியை கொல்ல வந்தனர் என்று சொல்லி மோடியின் ஹிந்துத்துவா போலீஸ் சுட்டு கொன்றது.
     இவர்கள் லஸ்கர் தாய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் மோடியை கொல்ல திட்டம் தீட்டி கொண்டிருந்த பொழுது அங்கு சென்ற போலீஸ் உடன் நடந்த மோதலில் சுட்டு கொல்லப்பட்டனர் என்று குஜராத்தின் ஹிந்துத்துவா போலீஸ் எஸ்.பி. G .L . சிங்கா அறிவித்தார்.
     அந்த அப்பாவி பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தீவிரவாதிகள் இல்லை குஜராத் மோடியின் ஹிந்துத்துவா பாசிச போலீஸ்தான் தீவிரவாதிகள் என்று கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களது வழக்கை செப். 2009இல் விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம் இறந்துபோன அந்நால்வரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, “இதுவொரு போலிமோதல் கொலை என்று அறிவித்தது.
     மேலும், அந்த 4 வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முந்திய தினம்  மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று அகமதாபாத் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மோடி அரசு நீதிமன்றம் தனது வரம்பை மீறி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறி நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்ள மறுத்துவிட்டது. இதை எதிர்த்து இறந்து போன அப்பாவிகளின் பெற்றோர் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது.
     இந்த வழக்கை விசாரித்த சிபிஐ போலியாக  என்கவுண்டரில் அப்பாவிகளை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக குஜராத்தின் “கிரைம் ரெக்கார்ட் பீரோ”வின் எஸ்.பி.யான, ஜி.எல்.சிங்காலை, சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய குற்றவாளியாக சிங்கால் சேர்க்கப்பட்டுள்ளர். இது குஜராத் அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இவர் மீது, கொலை செய்தது (302), சாட்சியங்களை அழித்தது (201) உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரியான சிங்கால் தவிர இந்த வழக்கில் மேலும் 20 அரசு அதிகாரிகளும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
     *ஒரு IPS  அதிகாரி சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாதியாக செயல்பட்டிருப்பது இவர்களது IPS படிப்பையே கேள்விகுறி ஆக்குகிறது* thanks, sinthikkavum

ஹலால் சான்றிதழை அரசு வழங்கட்டும் – இலங்கை ஜம்மியத்துல் உலமா!


     கொழும்பு:இலங்கையில் அண்மைக் காலமாக புத்த தீவிரவாதக் குழுக்கள் ஹலால் உணவு விவகாரத்தில் பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

     இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஊடக தொடர்பாளர் பாசில் ஃபாரூக் கூறியது: உலகின் பல நாடுகளில் ஹலால் சான்றிதழ் அளிக்கும் பொறுப்பை அரசாங்கங்களே செய்கிறது. அதே போன்றதொரு முறையை இலங்கையும் செய்யலாம். சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் அரசுகள் ஹலால் சான்றிதழ் வழங்கினால் அந்த கட்டமைப்பின் பின்னால் முஸ்லீம் அமைப்புக்கள் இருப்பதாக சுட்டிக் காட்டிய பாசில் பரூக் அதே போன்ற நடைமுறையை இலங்கையிலும் அமல்படுத்தலாம் என்பதே தமது யோசனை என்றார்.

    ஹலால் சான்றிதழ்களுக்காக பெறப்படும் தொகை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுவதாக புத்த தீவிரவாத குழுக்கள் குற்றம் சாட்டுவதை முஸ்லிம்கள் முற்றிலும் மறுக்கின்றனர்.

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த இந்தியா பணம் அளிக்கிறது:ஹகெல்! – இந்தியா எதிர்ப்பு!


     வாஷிங்டன்:பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இந்தியா பணம் அளிக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள சக் ஹகெல்(chuck hagel) கூறியுள்ளார்.

      2011 ஆம் ஆண்டு ஒக்லஹாமா காமரன் பல்கலைக் கழகத்தில் ஹகெல் ஆற்றிய உரையின் வீடியோவை வாஷிங்டன் ஃப்ரீ பியாகன் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லையில் பிரச்சனையை உருவாக்க இந்தியா பல வருடங்களாக ஆப்கானில் பணம் செலவழிக்கிறது என்று ஹகேல் கூறுகிறார்.

     இக்குற்றச்சாட்டுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள இந்திய தூதரகம், ஹகேலின் கூற்று உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளது. ஆப்கான் மக்களின் அமைதியும், நலனும்தான் இந்தியாவின் நோக்கம். அமெரிக்காவும்(?) இந்தியாவும் இந்த லட்சியத்திற்காகத்தான் செயல்படுகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை அதிபர் ஒபாமா பல முறை பாராட்டியுள்ளார் என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

     பாரக் ஒபாமாவால் பாதுகாப்பு துறை செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் ஹகேல். இவருக்கு எதிராக  குடியரசுக் கட்சிக்கு பெரிய ஆயுதம் கிடைத்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த உறவை பேணுவதாகவும், ஹகேலின் கூற்றின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் குடியரசு கட்சியின் செனட்டர் ஜான் கார்னின் கூறுகிறார்.

     இந்தியன் வம்சா வழியைச் சார்ந்த செனட் உறுப்பினர்களும் ஹகேலின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கூறிவரும் குற்றச்சாட்டுக்கு ஹகேலின் கூற்று பலம் சேர்த்துள்ளது. பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானில் சில குழுக்களை பயன்படுத்தி பாகிஸ்தானில் பிரச்சனையை உருவாக்க இந்தியா முயலுவதாக பாகிஸ்தான் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், அன்று இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தது.

புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிப்பவர்களை பாலியல் வன்கொடுமைச் செய்த இலங்கை ராணுவத்தின் வெறி! – ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு!


கொழும்பு:இலங்கை பாதுகாப்பு படையினர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.

     இலங்கை மனித உரிமைகள் குறித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள கூறியிருப்பது: 2006லிருந்து 2012ம் ஆண்டு வரை, இலங்கை அரசின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை கிரிமினல் விசாரணைகளை நட்த்தவேண்டும். இலங்கை படையினரால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் 2006க்கு பின்னரான கால கட்டத்தில் மிகவும் அதிகரித்தது. இதில் பெரும்பான்மையான வன்முறைகள் அரசியல் ரீதியான நோக்கங்கள் கொண்டவை. இது குறித்து 75 சம்பவங்களை, ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் ஆராய்ந்துள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட 31 ஆண்கள், 41 பெண்கள் மற்றும் மூன்று சிறார்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைகள் ஒரு வருட காலகட்டத்தில், ஆஸ்திரேலியா,  இந்தியா, ஜெர்மனி, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட இந்த நபர்களிடையே நடத்தப்பட்டது.

     பாலியல் வல்லுறவை, இலங்கைப் படையினரும் போலீசாரும், போரின் போதும் போருக்குப் பின்னரும், விடுதலைப்புலிகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு ஒரு சட்டவிரோதமான ஆயுதமாகவே பயன்படுத்தினர்.

   இந்த ஆய்வு, அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக, முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையான நபர்களிடையே மட்டுமே நடத்தப்பட்டதாகவும், தற்போதும் அரசின் சிறைகளில் இருப்பவர்களின் நிலை மிகவும் கவலை அளிப்பதாகவே இருப்பதாக உள்ளது. இந்தக் குற்றச்செயல்களில் அரச படையினர் மற்றும் போலீசார் தவிர, அரசுக்கு ஆதரவான இணை ராணுவக் குழுக்களும் (ஆயுதக்குழுக்கள்) ஈடுபட்டனர் என்று நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் தெரியவருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

     இந்த எல்லா சம்பவங்களிலும், பாலியல் வன்முறை தவிர, இவர்கள் மற்ற வகை சித்ரவதைகள், மனித கண்ணியத்துக்கு கீழான வகையில் நட்த்தப்படுதல் போன்றவற்றுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசு இந்த சம்பவங்கள் குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படகூடிய நியாயமான முறையில் விசாரணைகளை நடத்தி, சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவேண்டும். மேலும், குற்றச்சாட்டுக்கள் பதியப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், மனித உரிமைக்குழுக்களுக்கு நாட்டின் வட பகுதிக்கு செல்ல அனுமதி தரவேண்டும், அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது.

ஆக்கிரமிப்பால் சீர்குலைந்த ஆப்கானில் இருந்து ஈட்டன் கல்லூரிக்கு செல்லும் ரோஹித் ஸமானி!


     லண்டன்:3 வயதான ரோஹித் ஸமானிக்கும், குடும்பத்தினருக்கும் மோதல்கள் நிறைந்த ஆப்கானில் இருந்து தப்பிச் சென்றபொழுது குண்டுச் சத்தமும், துப்பாக்கியின் சீறலும் இல்லாத ஒரு அமைதியான இடம் தேவைப்பட்டது. ஆனால், சிறுவன் ஸமானி, 16 வயது ஆகும் வேளையில் ஒரு புலன்பெயர்ந்தவருக்கு கனவு கூட காணமுடியாத பதவியை எட்டிப் பிடித்துள்ளார்.

     குடும்பத்தினர் பிரிட்டனில் புதியதொரு வாழ்க்கைக்கு துவக்கம் குறித்தபொழுது, ரோஹித் ஸமானி பிரிட்டனில் புகழ்பெற்ற ஈட்டன்(eton) கல்லூரியில் முழு ஸ்காலர்ஷிப்பை பெறும் தகுதியுடைய இளம் விஞ்ஞானியாக மாறியுள்ளார்.

     ஜலாலாபாத் நகரத்தில் ரோஹித்தின் வாழ்க்கைப் பயணம் துவங்கியது. தாலிபான் ஆட்சிக்கு வந்த பின்னால் உள்ள மோதல் சூழல் நிறைந்த காலம். தாழ்வாக பறக்கும் ஆக்கிரமிப்பு அமெரிக்காவின் போர் விமானங்கள், எந்த நிமிடமும், எங்கிருந்தும் சீறிப்பாயும் வெடிக்குண்டுகள். படுக்கும் கட்டிலின் அடியில் கூட வெடிக்க காத்திருக்கும் குண்டுகள். நோய் பாதித்த தாயார், ஏதோ தேவைக்காக கட்டிலில் இருந்து வெளியே வந்த உடனே குண்டுவெடித்தது. மயிரிழையில் தனது தாயார் அப்பொழுது உயிர் தப்பியதாக ரோஹித் ஸமானி கூறுகிறார்.

     இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிவில் எஞ்சீனியரான தந்தை, மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தார். ரப்பர் படகில் ரஷ்யாவில் நதிகளை தாண்டிய பயணம். புகலிடம் தேடி இக்குடும்பம் 3500 கடல் மைல்கள் பயணித்தது. எல்லோரும் மூழ்கிவிடுவோம் என்று ஒரு கட்டத்தில் பயந்தனர். கரையை அடைந்த பிறகு ஒரு வேனில் பயணத்தை தொடரும்போது வேன் ப்ரேக் டவுனாகியது. பின்னர் ஓநாய்கள் உள்ளிட்ட கொடூர மிருகங்கள் காடுகளில் நடைபயணம். இறுதியாக பிரிட்டனின் ஹல்லை வந்தடைந்தனர்.

     அப்பொழுது ஆங்கில மொழி ரோஹித் ஸமானியின் குடும்பத்தினருக்கு அந்நியமொழியாக இருந்தது. ஆனால், ரோஹித் ஸமானியின் அர்ப்பண உணர்வு காரியங்களை எளிதாக்கியது. படிப்பில்ஆர்வம் காட்டிய ஸமானி, ரக்பியிலும், அத்லடிக்ஸிலும் சிறந்து விளங்கினார். நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் போட்டியிட்டு ரோஹித் ஸமானி ஈட்டன் கல்லூரியின் நான்கு தின இண்டர்வியூவில் வெற்றிப் பெற்றார்.

     வேன் ஓட்டுநராக பணிபுரியும் ஸமானியின் தந்தைக்கு ஈட்டன் கல்லூரியின் கட்டணத்தை தாங்க முடியாது. ஆனால், படிப்பில் திறமையை வெளிப்படுத்திய காரணத்தால் கல்வி கட்டணத்தில் 30 ஆயிரம் பவுண்டும், ஸ்கூல் யூனிஃபார்ம் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு 1500 பவுண்டும் ஸ்காலர்ஷிப்பாக கிடைக்கும். ஒரு சர்ஜனாக மாறவேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரோஹித் ஸமானியின் கனவுகளுக்கு இப்பொழுது எல்லைகள் இல்லை.

சேது சமுத்திரம்:தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாத பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க மாநிலங்களவையில் அமளி!


     புதுடெல்லி:சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறக் கோரி மாநிலங்களவையில் மதத்தின் பெயரால் நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபோது திமுக உறுப்பினர் திருச்சி சிவா எதிர்குரல் எழுப்பினார்.

     இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, மாநிலங்களவை நண்பகலுக்குப் பிறகு பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அவையை மூத்த உறுப்பினரான இ.எம்.எஸ். சுதர்சன நாச்சியப்பன் வழிநடத்தினார்.

     அப்போது பாஜக உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் எழுந்து; “ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் கருதும் அதே வழித்தடத்தில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான நிலையை விளக்கி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அந்தத் திட்டம் தொடர்பாக ஆர்.கே. பச்சௌரி குழு அளித்த அறிக்கையை நிராகரித்து விட்டு, மத்திய அரசு சேதுத் திட்டத்தை செயல்படுத்த முற்படுவதை அனுமதிக்க மாட்டோம். எனவே, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுதாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற வேண்டும்.” என்று பேசினார்.

     அவருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, சேதுத் திட்டத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என திமுக உறுப்பினர் திருச்சி சிவா குரல் கொடுத்தார். அவையில் இருந்த பாராளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவும் “இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்” என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

     ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் ஒருபுறமும், அவர்களுக்கு எதிராக திமுக உறுப்பினர் திருச்சி சிவாவும் குரல் எழுப்பியபடி இருந்தனர்.  இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரை சுதர்சன நாச்சியப்பன் ஒத்திவைத்தார்.

முஸ்லிம் இளைஞர்களை சிக்கவைக்க அரசு சதிச் செய்கிறது – பெங்களூர் தீவிரவாத ஜோடிப்பு வழக்கில் விடுதலையான முதீவுர் ரஹ்மான் சித்தீகி!


     பெங்களூர்:கல்வியாளர்களும், உயர் துறைகளில் பணியாற்றுவோருமான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்க அரசும், உளவுத்துறையும் சூழ்ச்சிச் செய்வதாக பெங்களூரில் நேற்று முன் தினம் விடுதலையான டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையாளர் முதீவுர் ரஹ்மான் சித்தீகி தெரிவித்துள்ளார்.

    மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கர்நாடகா பா.ஜ.க அரசு முதீவுர் ரஹ்மான் சித்தீகி உள்பட 12 பேரை கைதுச் செய்து சிறையில் அடைத்தது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சேல்ஸ்மான் முஹம்மது யூசுஃப் நல்பந்தியும் சித்தீக்குடன் விடுதலையாகியுள்ளார்.
     நேற்று குடும்பத்தினருடன் பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதீவுர்ரஹ்மான் சித்தீகி கூறியது: என்னுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று நான் கருதுகிறேன். போலீஸ் கஸ்டடியில் கடுமையான மனோரீதியான சித்திரவதைகளை சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி துப்பாக்கிகளுடன் எங்களை பிடித்ததாக போலீஸ் கூறியது. ஆனால், இரவில் அறைக்குள் நுழைந்து போலீஸ் என்னையும் இதர நான்குபேரையும் கடத்திச் சென்றது. சிறையில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தின. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது.

      பத்திரிகை துறையில் தொடருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதீவுர் ரஹ்மான் சித்தீகி கூறுகையில், “போலீசும், அரசும், பாசிச சக்திகளும் சேர்ந்து எங்களை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தற்போது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். மனித உரிமை கமிஷனின் உதவியுடன் சட்டரீதியான போராட்டம் தொடரும். இவ்வாறு சித்தீகி கூறினார்.

     லஷ்கர்-இ-தய்யிபா, ஹுஜி  போன்ற போராளிக் குழுக்களின் தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம்சாட்டி போலீஸ் கைதுச் செய்த 2 பேர் ஆறு மாத சிறைக்குப் பிறகு ஆதாரங்கள் எதுவுமில்லை என்று என்.ஐ.ஏ கண்டறிந்த பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதான டி.ஆர்.டி.ஒ விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு எதிராகவும் ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்க என்.ஐ.ஏவால் இயலவில்லை.

முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாதாம்! – மத்திய அரசு!


     புதுடெல்லி:தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம் என்று முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.

     நேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பசுதேவ் பட்டாச்சார்யா இதுக்குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “மத்திய அரசுக்கு இக்காரியம் தெரியாது. உதாரணம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதுபோல ஏராளமானபுகார்கள் கிடைத்துள்ளன என்று பட்டாச்சார்யா பதிலளித்தார். இவ்விவகாரத்தில் தலையிட முஸ்லிம் லீக் எம்.பியான இ.டி.முஹம்மது பஷீர் சபாநாயகருக்கு குறிப்பை வழங்கினார்.

     இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி இதுக்குறித்து கூறியது: “அப்பாவிகளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தெரியாது என்று மத்திய அரசு கூறுவது தேசத்திற்கே அவமானம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குறித்து ஏராளமான சம்பவங்கள் தெரியும். 20 வயது முதல் 30 வயது வரையிலான ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய தீவிரமான பிரச்சனையில்பதில் அளித்த அமைச்சரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

     எனது தொகுதியில் கூட ஸக்கரியா என்ற 28 வயது முஸ்லிம் இளைஞரை கர்நாடகா போலீஸ் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து 4 ஆண்டுகள் ஆகிறது. விசாரணை கைதிகளாக இந்திய சிறைகளில் வாடும் இத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் குற்றப்பத்திரிகை கூட அளிக்கப்படவில்லை. நிரபராதிகளின் விவகாரத்தில் அரசு என்னச் செய்யப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

     மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு சவால் விடுக்கும் பொடா, தடா போன்ற சட்டங்களில் உள்ள கடுமையான பிரிவுகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் உள்ளன என்று இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி கூறினார்.

     இதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், “ஆறுமாதத்திற்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காவிட்டால் ஜாமீன் வழங்க தகுதி உண்டு” என்று தெரிவித்தார்.

ரெயில்வே பட்ஜெட்:பயணிகள் கட்டணம் மறைமுகமாக உயர்வு! விலைவாசி உயரும் அபாயம்!


     புதுடெல்லி:பாராளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட 2013-14-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் 5.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது; எனினும் பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறினாலும் முன்பதிவு, டிக்கெட்டை ரத்துச் செய்வது, தட்கல் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

     ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். கடந்த 17 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறை.

     முன்பதிவு, டிக்கெட்டை ரத்து செய்வது உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களும்,தட்கல் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மறைமுகமாக பயணிகள் மீதும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது. பட்ஜெட்டில் பார்சல், லக்கேஜ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. முன்பதிவுக்கான கட்டணம், அதனை ரத்து செய்யும்போது பிடித்தம் செய்யப்படும் தொகை, அதிவிரைவு ரயில்களில் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவை உயர்த்தப்படுகிறது.

     இதன் மூலம் ரயிலில் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யும் பயணிகள் குறைந்தபட்சம் 5 ரூபாயும், ஏசி, முதல் வகுப்பு ஆகியவற்றில் முன்பதிவு செய்யும் பயணிகள் குறைந்தபட்சம் 25 ரூபாயும் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இவை அனைத்துமே மறைமுக கட்டண உயர்வுதான்.

     இரண்டாம் வகுப்பு தத்கல் முன்பதிவுக் கட்டணம் ரூ.15, ஏசி உள்ளிட்டவகுப்புகளுக்கான தத்கல் கட்டணம் ரூ.100 வரையும் உயர்த்தப்படும். முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்படும் போது இரண்டாம் வகுப்புக்கு ரூ.5-ம், ஏசி உள்ளிட்ட பிற பிரிவுகளுக்கு ரூ.50-ம் கூடுதலாக பிடித்தம் செய்யப்படும். இக்கட்டண உயர்வு அனைத்தும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

     இதுபோன்ற கட்டண உயர்வுகளால் ஆண்டுக்கு ரூ.4,683 கோடி கூடுதல் வருவாய்கிடைக்கும் என்று பட்ஜெட் உரையில் பன்சல் தெரிவித்தார். 5.8 சதவீத சரக்குக் கட்டண உயர்வு என்பது உணவு தானியங்கள், நிலக்கரி, உருக்கு, யூரியா, இரும்புத் தாது, டீசல், மண்ணெண்ணெய், கேஸ் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தும். இதனால் நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மேலும் உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் என்றுஅஞ்சப்படுகிறது.

     ரயில்வே நிதிநிலையை சீரமைக்கும் முயற்சியாக முன்பு எப்போதும் இல்லாதவகையில் இந்த பட்ஜெட்டில் ஒரு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ரயிலுக்கான எரிபொருளான டீசல் விலைக்கு ஏற்ப சரக்குக் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். அதாவது டீசல் விலை அதிகரித்தால் சரக்குக் கட்டணமும் உயரும், டீசல் விலை குறைந்தால் அதற்கு ஏற்ப சரக்கு கட்டணம் குறைக்கப்படும். ஆண்டுக்கு இருமுறை இவ்வாறு கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இதற்கு முன்பு ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி கடந்த ஆண்டே இந்தத் திட்டத்தை பரிந்துரைத்திருந்தார். இந்த முறையை அறிவித்துப் பேசிய பன்சல், “டீசலை மொத்தமாக வாங்கிப் பயன்படுத்தும் ரயில்வே உள்ளிட்ட துறைகளுக்கு டீசல் விலை பெருமளவில் உயர்த்தப்பட்டதும், டீசல் விலை மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் ரயில்வேயின் அன்றாட இயக்கச் செலவை அதிகரித்துள்ளது. எனவே இந்த செலவின உயர்வை சமாளிக்க ஒரு வழிமுறையைக் கையாள வேண்டியிருக்கிறது. டீசல் விலை உயர்வால் கடந்த மாதம் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் கூடுதலாகக் கிடைக்கும் என்று கருதப்பட்ட ரூ.6,600 கோடியில் பாதியளவே ரயில்வேக்கு கிடைக்கும்’  என்று குறிப்பிட்டார்.

    “பயணிகள் கட்டணம் கடந்த மாதம்தான் மாற்றி அமைக்கப்பட்டது. எனவே பயணிகள் மீது கூடுதல் சுமையை ஏற்ற விரும்பவில்லை’ என்று பட்ஜெட் உரையில் பன்சல் தெரிவித்தார்.

     பட்ஜெட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சரக்குக் கட்டணம்,முன்பதிவு கட்டணம், தத்கல் கட்டணம் உயர்த்தியதற்காக நான் வருந்தவில்லை.சரக்குக் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்போது சராசரியாக 5 சதவீதம் உயர்த்தப்படுவது இயல்பானதுதான்’ என்று குறிப்பிட்டார்.

Tuesday, February 26, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற யூனிட்டி மார்ச் , பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



கேரளா : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும்  “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு  "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் கேரளா மாநிலத்தில் 15 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். 14 மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்






பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்






கோழிக்கோடு மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்








கொல்லம் மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



காசர்கோடு மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்




கண்ணூர் மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்




இடுக்கி மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்




ஆழப்புலா மாவட்டத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்


மலப்புரத்தில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்



 


மஞ்சரியில் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம்