20 Feb 2013
புதுடெல்லி:சட்டவிரோதமாக ஆயுத விற்பனையில் ஈடுபட்ட சில ராணுவ அதிகாரிகளை இன்னும் பணியில் தொடர அனுமதிப்பது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்னல் மற்றும் லெப்டினன்ட் கர்னல் நிலையிலான மூன்று ராணுவ அதிகாரிகள் சட்டவிரோதமாக ஆயுத விற்பனையில் இடைத்தரகர்களாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றதித்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.நிஜ்ஜார் மற்றும் எம்.ஒய் இக்பால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பராஸ் குஹத் ஆஜராகி, “ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் சில காலத்துக்குப் பின் பயன்படுத்தப்படாது. அவை ராணுவ வீரர்களுக்கு விற்பனை செய்யப்படும். இது போல் தங்கள் சதக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை வெளியாருக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக குறிப்பிட்ட 3 ராணுவ அதிகாரிகளும் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் இரண்டு முதல் நான்கு ஆண்டுகால சம்பளம் திரும்பப் பெறப்பட்டது” என்று
தெரிவித்தார்.
தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “தவறிழைத்த அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அதிர்ச்சி தருவதாக உள்ளது. அவர்கள் ஆயுதத் தொழிலையே நடத்தி வந்தது போல் தோன்றுகிறது. அவர்களை இன்னும் பணியில் தொடர அனுமதிப்பது ஏன்” என்று அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதன்பின், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
0 comments:
Post a Comment