13 Feb 2013
வாஷிங்டன்:அமெரிக்க உளவு அமைப்பான செண்ட்ரல் இண்டலிஜன்ஸ் ஏஜன்சியின்(சி.ஐ.ஏ) தலைமை பதவிக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் முன்மொழியப்பட்ட ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1996-1999 காலக்கட்டத்தில் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் சி.ஐ.ஏவின் ஸ்டேஷன் தலைவராக இருக்கும் வேளையில் பிரன்னன் இஸ்லாத்தை தழுவியதாக முன்னாள் எஃப்.பி.ஐ ஏஜண்டான ஜான் கோண்டோலோ கூறியுள்ளார். 2008-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோண்டோலோ ட்ரெண்டோ ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். இஸ்லாத்திற்கு எதிரானவராக கருதப்படுவர் கோண்டோலோ என்பது குறிப்பிடத்தக்கது.
ரியாதில் வைத்து இஸ்லாத்தை தழுவிய பிரன்னன், ஹஜ்ஜின் போது சவூதி அதிகாரிகளுடன் மக்கா மற்றும் மதீனாவுக்கு சென்றார். சவூதி அதிகாரிகளுடனான பழக்கம் அவரது மனதில் மாற்றத்தை உருவாக்கியது. அவரது மதமாற்றத்திற்கு ஆதரமான வீடியோ காட்சிகளும் உள்ளதாக கோண்டோலோ கூறுகிறார்.
அமெரிக்க அரசின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த நபர் தாம் பிரன்னன். இவருக்கு வயது 57. மக்கா மற்றும் மதீனாவுக்கு சென்றிருந்ததாக 2010-ஆம் ஆண்டு நியூயார்க் பல்கலைக் கழக மாணவர்களுடன் கலந்துரையாடும்போது பிரன்னன் தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment