Sunday, February 17, 2013

கஷ்மீரில் ஊரடங்கு தளர்வு!

Kashmir as curfew is lifted
ஸ்ரீநகர்கஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை முதல் தளர்த்தப்பட்டது. பாராளுமன்றத் தாக்குதலில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அநியாயமாக கஷ்மீர் இளைஞர் அப்ஸல் குரு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டு இந்திய அரசால் படுகொலைச் செய்யப்பட்டார்.
அப்ஸல் குருவுக்கு ஆதரவாகவும் அவரது உடலை சொந்த மாநிலமான கஷ்மீரில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
     பொது அமைதியைக் குலைக்கும் வகையில் யாரேனும் வதந்திகளைப் பரப்பக்கூடும் எனக் கருதி அனைத்து இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
    இருப்பினும் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்தும் குறைவாகவே உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
     அப்ஸல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல் சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 25 போலீஸார் உள்பட 60 காயமடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment