18 Feb 2013
கொழும்பு:இலங்கையில் முஸ்லிம்கள் உணவு பொருட்களில் ஹலால் முறையை ஒழிக்கவேண்டும் என்று அந்நாட்டின் புத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தலைநகரான கொழும்புவின் மகரகமாவில் புத்த தீவிரவாத அமைப்பான பொதுபலசேனாவின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல்வேறு துவேச தீர்மானங்களை அவ்வமைப்பு நிறைவேற்றியுள்ளது.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும், இலங்கையில் பல பிரச்சனைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்றும் எனவே உலமா சபையை தடைச்செய்யவேண்டும், போன்றவை அக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அக்கூட்டத்தில் பேசிய தீவிரவாத புத்த சாமியார் ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஒருமாத காலத்திற்குள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment