Wednesday, February 13, 2013

உலக கட்டப்பஞ்சாயத்து அமைப்புக்கு எதிரான போராட்டம்!


     பிப் 13/2013:ர்வதேச விதிமுறைகளை இலங்கைக்காக உடைத்தெறிந்த ஐ.நா. அதிகாரிகளை கண்டித்து சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. 

     இந்த இயக்கத்தின் தலைவர் திருமுருகன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பின் பழ.நெடுமாறன், PFI மற்றும் SDPI கட்சி, TMMK மற்றும் மமக  MLA ஜவஹருல்லா, விடுதலை சிறுத்தைகள், வேல்முருகன், மணியரசன், விடுதலை ராஜேந்திரன் உள்பட 39 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

    சிந்திக்கவும்: இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. சபை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதன்மூலம்  மேற்குல நாடுகளின் கை பொம்மை ஐநா என்பதை மீண்டும் நிரூபித்தது.

    ஐரோப்பிய வல்லாதிக்க நாடுகள் வளங்களை பறிக்க மற்றும் பொருளாதார ரீதியாக தாங்கள் கால்பதிக்க விரும்பும் நாடுகளில் நடக்கும் சிறிய உள்நாட்டு பிரச்சனைகளில் கூட ஐநாவை மூக்கை நுழைக்க வைக்கும். அந்த நாடுகளுக்கு படைகளை அனுப்பும் அல்லது பொருளாதார தடைகளை  கொண்டு வரும்.

    ஆனால் இலங்கையில் நடந்த இறுதிகட்ட யுத்தத்தில் தமிழீழ போராளிகளும், பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் என்கிற சிறிய பகுதிக்குள் வளைக்கப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிந்தும் ஐநா மக்களை பாதுக்கக்க யாதொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. போர் நிறுத்தம் கொண்டு வரப்படவில்லை என்றால், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் சாக நேரிடும் என்பதை அறிந்தும் ஐநா மவுனம் காத்தது.

    போர் விதிமுறைகளை மீறி இலங்கை பயங்கரவாத அரசு கனரக ஆயுதங்களையும், விசவாய்வு மற்றும் கொத்து குண்டுகளையும் வீசி மக்களை கொல்லும் பொழுது ஐநா அதை வேடிக்கை பார்த்தது. ஐநாவை பொறுத்த வரையில் ஈழத்தமிழர்கள் விசயத்தில் பேச மேற்குலக வல்லாதிக்க   அரசுகளின் நெருக்கடிகளோ, யாழ்பாணத்தில் கனிம வளங்களோ இல்லை.

     தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற பெயரில் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட கானொளியில் இடம்பெற்றுள்ள தமிழர் படுகொலை காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்தது. இருந்தும் ஐநாவால் இலங்கைக்கு எதிராக உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. வல்லரசுகளுக்கு கூஜா தூக்க, அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுக்கவும் உள்ள கட்டப்பஞ்சாயத்து அமைப்பாகவே ஐநா செயல்பட்டு வருகிறது.
 
*மலர் விழி*

0 comments:

Post a Comment