Wednesday, February 27, 2013

ஹலால் சான்றிதழை அரசு வழங்கட்டும் – இலங்கை ஜம்மியத்துல் உலமா!


     கொழும்பு:இலங்கையில் அண்மைக் காலமாக புத்த தீவிரவாதக் குழுக்கள் ஹலால் உணவு விவகாரத்தில் பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

     இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஊடக தொடர்பாளர் பாசில் ஃபாரூக் கூறியது: உலகின் பல நாடுகளில் ஹலால் சான்றிதழ் அளிக்கும் பொறுப்பை அரசாங்கங்களே செய்கிறது. அதே போன்றதொரு முறையை இலங்கையும் செய்யலாம். சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் அரசுகள் ஹலால் சான்றிதழ் வழங்கினால் அந்த கட்டமைப்பின் பின்னால் முஸ்லீம் அமைப்புக்கள் இருப்பதாக சுட்டிக் காட்டிய பாசில் பரூக் அதே போன்ற நடைமுறையை இலங்கையிலும் அமல்படுத்தலாம் என்பதே தமது யோசனை என்றார்.

    ஹலால் சான்றிதழ்களுக்காக பெறப்படும் தொகை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுவதாக புத்த தீவிரவாத குழுக்கள் குற்றம் சாட்டுவதை முஸ்லிம்கள் முற்றிலும் மறுக்கின்றனர்.

0 comments:

Post a Comment