Saturday, August 11, 2012

அதிரையில் பயங்கரம் : ஜாமீனில் வந்த வாலிபர் கொலை


அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(47) மீனவர், இவரது மகன் அரவிந்தன்(21), அதிராம்பட்டினம் சேதுரோட்டை சேர்ந்தவர் தமிழ்ச்செல் வம் மகன் மாரிமுத்து(21).

அரவிந்தனும், மாரிமுத்துவும் நண்பர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயில் திருவிழாவுக்காக டிஜிட்டல் போர்டு வைப்பது தொட ர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதை ராமகிருஷ்ணன் தட்டிக்கேட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 28&8&11ல் ராமகிருஷ்ணனை வெட்டிக்கொன்றார். இந்த வழக்கில் மாரிமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடை க்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வந்தார். 

இனி அதிரையில் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என கருதிய மாரிமுத்து குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு குடிபெயர்ந்து விட்டனர். அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ரேஷன் கார்டை தொண்டி முகவரிக்கு மாற்றவேண்டும் என நேற்று மாரிமுத்து அதிராம் பட்டினம் வந்தார்.

இதற்காக அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரியை பார்த்து விட்டு இரவு 9.30 மணிக்கு ஊர் திரும்புவதற் காக கிழக்கு கடற்கரை சாலை பஸ் ஸ்டாப்புக்கு வந்தார்.
இதை தெரிந்து கொண்ட அரவிந்தன் தனது நண்பர்கள் கிருஷ்ணகுமார்(21), கணேசன் ஆகியோருடன் அங்கு வந்து மாரிமுத்தை தாக்கி னார். 3 பேரும் சேர்ந்து கைகளால் அடித்து உதை த்தனர். அந்த பகுதியில் கிடந்த ஹாலோ பிளாக் செங்கல், கருங்கற்களை எடுத்து முகம், தலையில் சரமாரியாக அடித்தனர். இதில் மாரிமுத்து முகம் சிதைந்தது. மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
குற்றுயிராக அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். மாரிமுத்து செத்து விட்டார் என கருதிய 3 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.

அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது மாரி முத்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவரை அதிரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த அதிரை இன்ஸ்பெக்டர் செங்கமல கண்ணன் மற்றும் போலீ சார் இரவோடு இரவாக அரவிந்தன், கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறை வான கணேசனை தேடி வருகிறார்கள்.பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் அதிரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


2 comments:

  1. பழிக்கு பழி, சரிதான்.

    ReplyDelete
  2. இராஜேஸ்வரி - மலேசியாAugust 12, 2012 at 9:24 AM

    கழுதை உழவுக்கு வந்தாலும், கரைஊர்தெருவான் என்னதான் ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் நேருக்கு வரமாட்டான், அப்படியே நேருக்கு வந்தாலும் அடுத்தவனை நேருக்கு வரவிடமாட்டான்.

    ReplyDelete