அதிரையில் கடந்த சில வாரங்களாக கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் கொசுத்தொல்லையாலும் பகலில் ஈக்களின் தொல்லையாலும் காலரா, டெங்கு, டைஃபாய்டு உள்ளிட்ட உயிர்ப்பறிக்கும் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
தமிழக தலைநகர் சென்னையில் காலரா உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வரும் இவ்வேளையில் நோய்களின் மூலக்காரணியான ஈ மற்றும் கொசுக்களின் தொல்லை நமதூரிலும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நமதூரில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் மர்மக் காய்ச்சல்கள் பொது மக்களை வாட்டி வதைத்து வருவதை போல் இந்த ஆண்டும் பரவாமல் தடுக்க அதிரையின் சுகாதாரத்தின் மீது அக்கரையுடைய நமதூர் சேர்மன் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு மந்த கதியில் நடக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

0 comments:
Post a Comment