Thursday, August 16, 2012

பர்மாவில் 8 லட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - சவூதி அரேபியாவில் நடந்த மாநாட்டில் ஆய்வு...............!!


 
சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்காவில் இரண்டு நாள் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சி உச்சி மாநாட்டில் இரு புனித பள்ளியின் காவலரும், சவூதி மன்னருமான அப்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்,

57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நஜாத் அவர்கள் உட்பட இஸ்ல
ாமிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்,

ஆரம்பமாக மாநாட்டில் சிரியா மற்றும் மியன்மாரில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்போவதாக இக்சானொக்லு குறிப்பிட்டார், மியன்மாரில் தொடரும் இன வன்முறையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த மாநாட்டில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் அவர்களை மையமாக வைத்து பல சுற்றுகள் பேசப்பட்டது, மேலும் அஹமதி நிஜாத் அவர்கள் கூறுகையில் உலகளாவிய அளவில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பதை தெளிவாக விவரித்திருந்தார், முன்னதாக அவர் திங்களன்று புனித நகரான மதீனாவுக்கு சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் செய்தியாளர்களை சந்தித்த அஹமதி நிஜாத் அவர்கள்.... இன்றைய உலகம் மிகவும் நுட்பமான நிலையில் இருப்பதாக எதிரி நாடுகளை பற்றி கருத்து தெரிவித்திருந்தார்,

சவூதி அரேபியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த கூட்டமைப்பின் அவசர கூட்டமாகவே இந்த மாநாடு இடம்பெறுகிறது, இந்த மாநாட்டுக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் இம்மாத ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு முன்னர் 1997 (பாகிஸ்தான்), 2003 (கட்டார்), 2005 (சவூதி) ஆகிய ஆண்டுகளிலும் அவசர கூட்டங்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் நாடுகளில் அரசியல் பதற்றம், வன்முறைகளுக்கு மத்தியிலேயே இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டின் போது விமானத்தில் வந்த அனைத்து நாட்டு தலைவர்களும் நேரடியாக மாநாடு நடைபெறும் அரச அரண்மனைக்கு வருகை தந்தனர், அரண்மனையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் மாற்றி விடப்பட்டது, அரண்மனையை சுற்றி பல அடுக்கு பாதுக்காப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

0 comments:

Post a Comment