Tuesday, December 13, 2011

அமெரிக்க சி.ஐ.ஏ. புத்தி


பாகிஸ்தானின் ஷாம்சி விமான தளத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அங்கிருந்த உபயோகமற்ற கருவிகள், பொருட்களை தீ வைத்து அழித்து விட்டுத் தான், அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.கடந்த நவம்பர் 26ம் தேதி, பாக்., எல்லையில் நிகழ்ந்த நேட்டோ தாக்குதலை அடுத்து, பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள, ஷாம்சி விமான தளத்தைக் காலி செய்யும் படி, அமெரிக்காவுக்கு பாக்., நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விமான தளத்தை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சி.ஐ.ஏ., பயன்படுத்தி வந்தது. நேட்டோ விவகாரத்தை, மேலும் தீவிரமாக்க விரும்பாத அமெரிக்காவும், சொன்னபடி நேற்று முன்தினம் விமான தளத்தைக் காலி செய்து வெளியேறியது.ஆனால் அதற்கு முன்பாக, விமான தளத்தில் இருந்து எந்த ஒரு தகவலும், பொருளும் பாகிஸ்தானுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில், குறியாக இருந்த அமெரிக்கப் படை, அத்தளத்தில் இருந்த உபயோகமற்ற கருவிகள், பொருட்கள் என அனைத்தையும் தீ வைத்து அழித்து விட்டது.இதுகுறித்து, பாக்., ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுபோன்று நடப்பது வழக்கமான ஒன்று தான் என தெரிவித்தார். தற்போது, ஷாம்சி விமான தளம், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது. 
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment