Saturday, December 17, 2011

டைம் சஞ்சிகையின் இவ்வருட நாயகனாக அர்தூகான் தெரிவு




erdogantime



டைம் சஞ்சிகையின் வாசகர்கள் 2011 இன் நாயகனாக துருக்கிப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகானைத் தெரிவு செய்துள்ளனர். அதேபோல இதற்கு முரணாக, இவ்வருடத்தின் பிரபல்யம் குறைந்த நபரும் அவரே என அவர்கள் வாக்களித்துள்ளனர் என்பது சுவாரசியமான விடயம்.
கடந்த மாதம் டைம் சஞ்சிகை அர்தூகானை அதன் முன் அட்டையில் பிரசுரித்திருந்தது. ‘அர்தூகானின் வழி‘ (Erdogan’s Way) என்று அதற்கு தலைப்பும் இட்டிருந்தது.
‘‘துருக்கியின் இஸ்லாமிய ஆதரவு தலைவர் தனது (மதச் சார்பற்ற, ஜனநாயக, மேற்குடன் நட்புறவுள்ள) நாட்டை, பிராந்தியத்தின் அதிகார மையமாக மாற்றியமைத்துள்ளார்... ஆனால், அவரது முன்மாதிரி அறபு வசந்தத்தை காப்பாற்றுமா?‘‘ என அதன் முன் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த்து.
கடந்த செப்டம்பரில் அறபு புரட்சி நடந்த நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அவர், எகிப்திய தலைநகர் கெய்ரோவுக்கும் விஜயம் செய்தார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை முன்னிட்டே டைம் சஞ்சிகை அவர் பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி http://www.meelparvai.net

0 comments:

Post a Comment