Friday, December 30, 2011

அமெரிக்காவின் நெருக்கடிகளை வேடிக்கை பார்க்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை



ஈரானின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் எண்ணை வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் துணை அதிபர் முகமது ரெஷா ரகிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:-   

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பாராளுமன்ற தீர்மானத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டால் ஈரான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. 

ஈரானின் ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாக மற்ற அரபு நாடுகளில் இருந்து செல்லும் அனைத்து எண்ணைக் கப்பல்களையும் விடாமல் தடுத்து வழி மறிப்போம் என தெரிவித்தார்.   

உலகில் எண்ணை வளம் மிக்க முதல் 5 நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்குள்ள ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாகதான் அனைத்து எண்ணை கப்பல்களும் தற்போது சென்று வருகின்றன. 
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment