2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிப்பதற்கு சமூக ஊடகங்களை பெரிதும் நம்பியவர் தான் இந்த ஒபாமா. ஆனால் பொறுப்பான அப்பாவாக இனம்காட்டவோ என்னவோ பேஸ்புக் பயன்படுத்துவதில் இருந்து தனது மகள்களைத் தடை செய்துள்ளார்.
ஏனெனில் தங்களது சொந்த விடயங்களை பிறர் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் ஒபாமா. 13 வயதான அவரது மூத்த மகளான Malia க்கும், 10 வயதான இளைய மகளான Sasha க்கும் பேஸ்புக் பயன்படுத்த போதுமான வயது வரவில்லை என்கிறார் அப்பா.
சமூக வலைத்தளம் ஒன்றில் உள்ள முதலாவது ஜனாதிபதியாக அறியப்பட்டவர் தான் இந்த ஒபாமா. பேஸ்புக்கில் உள்ள இவரது பக்கத்தை 24 மில்லியன் மக்கள் லைக் பண்ணியுள்ளார்கள். ஆனால் தனது மகள்கள் மட்டும் பேஸ்புக்கில் வலம் வருவதை இவர் விரும்பவில்லை.
கடற்கரையில் மகள்களுடன் குளிக்கும் படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றியுள்ளார் ஒபாமா. ஆனால் மகள்கள் பேஸ்புக் பயன்படுத்தும் போது குடும்ப விவகாரம் வெளிச்சத்துக்கு வருகிறது என்று கூப்பாடு போட்டுள்ளார் இந்த அமெரிக்க ஜனாதிபதி.
மகள்களுக்கு 18 வயதாகும் வரை அவர்கள் பேஸ்புக்கில் இணைந்து கொள்ளமுடியாது என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார் ஒபாமா.
thanks to yarlmuslim
0 comments:
Post a Comment