Saturday, December 17, 2011

கூகிள் ஒரு ரகசிய உளவாளி .


இணையத்தில் தேடுவதற்காக அனைவரும் பயன்படுத்தும் கூகிள் தனக்கு போட்டியே இல்லாமல் செய்வதற்காக நாளும் பல விதமான சேவைகளை அள்ளிக் கொடுத்து வருகிறது, கூகிளின் இந்த வளர்ச்சி நமக்கு பயனுள்ளதாக  இருந்தாலும் பல விதங்களில் கூகிள் நம்மிடம் இருந்து பல தகவல்களை தெரிந்து கொள்ளவும் செய்கிறது எப்படி என்பதைப்பற்றித்தான் இன்றைய சிறப்புப்பதிவு.

படம் 1
கூகிள் கொடுக்கும் சேவைகளில் ஒன்றான ஜீமெயில் பலவிதங்களில் நம்மைப்பற்றிய தகவல் எடுக்க வாய்ப்பு இருக்கிறது, நமக்கு  என்ன பிடிக்கும் யாரெல்லாம் நம் நண்பர்கள் என்பது முதல் தற்போது நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பது வரை நம்மைப்பற்றிய அத்தனை செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருக்கிறது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

படம் 2
கூகிளின் ஜீமெயில் பயன்படுத்தும் பயனாளர்கள் கூர்மையாக கவனிக்க  வேண்டிய விசயம் ஒன்று இருக்கிறது. முன்பெல்லாம் நம் ஜீமெயில் கணக்கில் வரும் இமெயிலை திறந்தும் வலது பக்கத்தில் ஏதோ ஒரு விளம்பரம் வரும் இதை நாம் எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும் தற்போது கூர்ந்து கவனித்தால் நமக்கு வந்திருக்கும் இமெயிலுக்கு  தகுந்தற்போல் விளம்பரம் கூகிளில் காட்டப்படுகிறது ( ஆங்கில மொழியில் வரும் இமெயிலுக்கு மட்டுமே சரியாக காட்டுகிறது). இதைக்கூட ஏதோ Catching Script வைத்து கொடுக்கின்றனர் என்று வைத்துக்கொண்டாலும் சில நேரங்களில் நமக்கு இமெயிலில் படங்கள் வருகிறது என்று  வைத்துக்கொள்வோம் அப்போது வரும் விளம்பரங்கள் தான் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது என்ன காரணம் தெரியுமா ? , நம் இமெயிலில் அதிகமாக எந்ததுறை சார்ந்த இமெயில் வருகிறதோ அதற்கு இணையான அல்லது தொடர்புடைய விளம்பரங்கள் காட்டப்படுகிறது. இதைத்தவிர நாம் ஜீமெயிலை திறந்து வைத்துக்கொண்டு இணையத்தில் உலாவினால் நாம் எந்தெந்த தளங்களை எல்லாம் பார்த்தோம் என்று Web history-ல் சேமிக்கப்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் விட இன்னொரு அதிசயம் இருக்கிறது அது என்னவென்றால் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக் கொண்டு கூகிள் தேடல் பயன்படுத்தினால் தான் நம் தகவலை  சேமிக்கின்றனர் என்று இல்லாமல் நாம் தொடர்ச்சியாக ஒரே IP முகவரியில் இருந்து கூகிள் தேடல் பயன்படுத்துகிறோம் என்றால் வழக்கமாக நாம்  எந்தெந்த தளங்களுக்கு செல்வோமோ அதை முதலில் பட்டியலிட்டு காட்டுகிறது. IP முகவரி வைத்துக்கூட கூகிள் Intelligent ஆக செயல்படுகிறது கூடவே அந்தெந்த பகுதியின் விளம்பரங்களையும் அசாதாரணமாக காட்டுகிறது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது நம்மை அறியாமல் நம் தகவல்களை பார்க்கும் ஒரு உளவாளியாக கூகிள் உள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
thanks to winmani.wordpress

0 comments:

Post a Comment