Saturday, December 17, 2011

பிரிட்டனில் 5 வயது சிறுவனின் பெரிய மனசு (வாழ்க்கையே விடுகதைதான்)



இறந்த பின்பு நான்கு பேரின் உயிர்களைக் காப்பாற்றி தன் பெயரை நிலை நிறுத்திக் கொண்டுள்ளான் பிரிட்டனில் ஒரு சிறுவன். லண்டனில் டெய்லி மெயில் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

துடிப்பும் சுறுசுறுப்பும் பேச்சுத்திறனும் கொனண்ட 5 வயதான லூக்கா கியோவன்னினி என்ற இச் சிறுவன் பிரிட்டனில் செஸயரில் ஸ்டொக் போர்ட் எனும் இடத்தைச் சேர்ந்தவன்.

விளையாட்டுக்களிலும் அதிக ஈடுபாடு கொண்ட இச் சிறுவனுக்கு திடீரென்று மூளையில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. மர்மமான ஒரு நோயினால் அவனது மூளை பாதிக்கப்பட்டது. அது என்னவென்று கண்டுபிடிக்கப்படாத நிலையில் மரணத்தை தழுவப்போகிறான் என்பது அவனது பெற்றோரை உலுக்கியது. என்றாலும் துணிச்சலான அத் தம்பதிகள் இறக்கப்போகும் தம் மகனின் மூலம் 4 பேரின் உயிரைக் காக்கும் படியான ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதன் விளைவாக அந்தச் சிறுவனின் இதயத்தைப் பொருத்திக்கொண்ட இதய நோயாளியான சிறுமி ஒருவர் சுகமாகி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியுள்ளார்.

இன்னொரு இடத்தில் ஆஸ்பத்திரியில் டயலிஸிஸ் மூலம் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த 35 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் சிறுவன் லூக்காவின் ஒரு சிறுநீரகத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இதன் பயனாக இந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையினை தன் இரு குழந்தைகளுடன் குதூகலமாக அவரால் கொண்டாட முடியும்.

இன்னொரு இடத்தில் இரண்டு வயத சிறுவன் ஒருவன் லூக்காவின் வயிறு, ஈரல், கணையம் முதலியவற்றை இரவலாக பெற்று சாதாரண பையனைப் போல உணவு உட்கொண்டு சுகதேகியாக வாழப்போகிறான்.

மற்றும் 33 வயதான இன்னோரு மனிதர் சிறுவனின் சிறு நீரகம் ஒன்றைப் பெற்று தன் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ளப் போகிறார்.

இவ்வாறாக மாற்று உறுப்புக்களை பெற்றுக் கொண்டவர்களின் மகிழ்ச்சியில், ஒரு துணிச்சலான, பெருந்தன்மையான, துன்பியலான கதை மறைந்து கிடக்கிறது.

லூக்கா இறந்து விட்டதாக அறிவிக்கப்படும் முன்னரே அவனுடைய 35 வயதான தாய் - பெயர்- விக்கி - சிறுவர் பாடசாலையின் ஆசிரியர், தந்தை - பெயர் - ரென்ஸோ 38 வயதான நிதித்துறை ஆலோசகர். இருவரும் தம் மகனின் உறுப்புக்களை அவை தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்கி உதவுவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

இப்போது சில வாரங்களே ஆன நிலையில் தாங்கள் செய்த காரியத்தால் அவர்கள் ஆறுதல் அடைகிறார்கள்.

"லூக்காஸ் ஒரு பெருந்தன்மையான பையன், நாங்கள் செய்த காரியத்தை அவன் அங்கீகரிக்கவே செய்வான்" என்கிறார்கள் அவர்கள்.

"எமது மகனின் இழப்பு எங்களுக்கு பெரும் துன்பத்தை தந்தாலும் எமது பையனால் பல பேர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்" என்று ஆறுதல் அடைகிறார்கள். உண்மையில் லூக்கா மரணத்தின் பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
yarlmuslim

0 comments:

Post a Comment