Friday, December 16, 2011

குற்றப்பின்னணி உடைய 3000 வெளிநாட்டவர்களை தேடும் மலேசிய போலீஸ்.


மலேசிய அரசு, குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. கைரேகை பதிவின் மூலம், வெளிநாட்டவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 
மலேசிய குடியுரிமை துறை அதிகாரிகள் குறிப்பிடுகையில், "தோட்ட தொழிலாளர்கள், ஓட்டல் வேலை செய்பவர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் என, மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டினரில் பலர், பல்வேறு பெயர்களில் பாஸ்போர்ட் மற்றும் விசா வைத்துள்ளனர்.
இன்னும் பலர், தங்கள் சொந்த நாட்டில் குற்றம் செய்து விட்டு, மலேசியாவில் வேறு பெயர்களில் நடமாடி வருகின்றனர். இது போன்ற பின்னணி உடைய, 3 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். அவர்களை தேடும் பணி நடக்கிறது. இதற்காக, சர்வதேச போலீசாரின் உதவியையும் கோரியுள்ளோம்' என்றனர்.

AS
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment