Wednesday, May 30, 2012

மம்தா தலைமையில் நடந்த ஐபிஎல் வெற்றிவிழாவில் வன்முறை. போலீஸ் தடியடி!


Why a Mamata victory rally closely resembles a circus
 கொல்கத்தாவில் நடந்த ஐ.பி.எல். வெற்றி விழாவில் வெடித்த வன்முறையால்,  போலீசார் தடியடி நடத்தியதை தொடர்ந்து பலர் காயமடைந்தனர். சென்னை அணியுடன் நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  அணி கோப்பையை வென்றது.இந்த வெற்றி விழாவை கோலகலமாக கொண்டாட  மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா முடிவு செய்தார். 

அதன்படி இன்று காலை 11 மணியளவில் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் வெற்றி  விழா தொடங்கியது. காம்பிர் தலைமையிலான ரசிகர்கள் திறந்த வாகனத்தில் அழைத்து  வரப்பட்டனர். தொடர்ந்து வீரர்களுக்கு தங்கப்பதக்கமும், நீல நிற சால்வையும்   அணிவிக்கப்பட்டன. 


இதனைத் தொடர்ந்து அணி உரிமையாளர் ஷாரூக்கான் மேடையில் குத்தாட்டம் போட்டு  ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.வண்ண, வண்ண வான வேடிக்கைள்  காண்பிக்கப்பட்டன.
 

இந்நிலையில் இந்த வெற்றி விழாவை கண்டுகளிக்கவும்,பேரணியில் பங்கேற்கவும் சுமார்  1 லட்சம் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.அவர்கள் பேரணியாக வெளியேறியபோது பெரும்  நெரிசல் ஏற்பட்டது.இந்நேரத்தில் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளு,  முள்ளு ஆகி,பின்னர் மோதல் வெடித்தது.
 

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.  இதில் பலர் ரத்தக்காயங்களுடன்,கண்ணீர் விட்டு அழுதபடி சென்றனர்.அதனை பார்த்து  ஆத்திரமுற்ற ரசிகர்களில் மற்றொரு தரப்பினர்,தடுப்பு வேலிகøள் உடைத்து எறிந்து  ரகளையில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

thanks to asiananban 

ஜூலை 9-ம்தேதி இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை !

கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
 
பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து அரசு கம்ப்யூட்டர்களை பாதுகாப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமெரிக்காவின் எப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜுலை 9-ம் தேதி அன்று, தனது பாதுகாப்பு வளையத்தை மூட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
எப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு இணையதளத்தை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அப்பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.
 
அவ்வாறு வைரசால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜுலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று கூகுள் தற்போது எச்சரிக்கை 
விடுத்துள்ளது.

Saturday, May 26, 2012

யேசு சிலுவையில் அறையப்படவில்லை, நபி வருகையை அவர் எதிர்வு கூறினார்: - தோலாலான நூல்

யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது.

 மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய்யுமென ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

 சிரியக் (Syriac) மொழியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

 இது 5 ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டுக்குரியதெனவும் இதில் முஹம்மது நபி அவர்களின் வருகை தொடர்பிலும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது.

 எனினும் கிறிஸ்தவ உலகம் இத்தகைய நற்செய்தி நூல் இருப்பதனையே மறுத்து வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந் நற்செய்தியின் 41 அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் தெரிவிக்கின்றது.

 'God has hidden himself as Archangel Michael ran them (Adam and Eve) out of heaven, (and) when Adam turned, he noticed that at top of the gateway to heaven, it was written "La elah ela Allah, Mohamad rasool Allah,"' meaning Allah is the only God and Mohammad his prophet.

 மேலும் யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையென அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.

 துருக்கிய அதிகாரிகள் இப்புத்தகத்தினை 2000 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றினர்.

 இவ்வருடம் பெப்ரவரி மாதம் வத்திக்கான் இப்புத்தகத்தினைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு துருக்கியிடம் கேட்டுக்கொண்டமையை அடுத்தே இது தொடர்பில் சர்ச்சை எழுந்தது.

 இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

 இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது நகைப்புக்குரிய செய்தியெனவும் தெரிவித்துள்ளன.

 கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் ஈரான் பயம் கொண்டுள்ளதாகவும்,எனவே தான் இத்தகைய போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


THANKS TO MANITHAN.COM

உண்மை உரைத்த அதிகாரியை உயிரை எடுத்த பா ஜ க!!


 பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் வீடு நிர்மாண கூட்டுறவு சங்கங்களில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதால் தாக்கப்பட்ட தணிக்கை பிரிவு அதிகாரி மகந்தேஷ் மருத்துவமனையில் சிகிட்சை பலனளிக்காமல்மரணமடைந்தார்.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகந்தேஷ்(42). இவர் கர்நாடக கூட்டுறவுச் சங்கத்தில் தணிக்கைத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பெங்களூர் சாமாராஜ் பேட்டையில் மனைவி பூர்ணிமாவுடன் வசித்து வந்தார்.
அரசியல்வாதிகளுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் நில ஒதுக்கீடு செய்ததில் வீட்டு நிர்மாண கூட்டுறவு சங்கங்கள் பெரும் முறைகேடுகளை புரிந்துள்ளதை மகந்தேஷ் கண்டுபிடித்தார்.
இந்நிலையில் மகந்தேஷ் கடந்த 17-ம் தேதி சககார நகர் கூட்டுறவு சங்கத்தில் ஆவணங்களை சரிபார்த்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு வாகனத்தில் வந்த கும்பல் மகந்தேஷ் வந்த காரை வழிமறித்தது அவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிட்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். 
பெங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் அரசு கண்காணிப்பில் உள்ளன. ஊழலை கண்டுபிடித்த அரசு அதிகாரி தாக்கப்பட்டு பல தினங்கள் கழிந்த பிறகும் குற்றவாளிகளை பிடிக்க முடியாத கர்நாடகா மாநில பா.ஜ.க அரசின் காவல்துறையில் கையாலாகத்தனத்தால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். மகந்தேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் சதானந்த கவுடா வருகை தந்தபொழுது அங்கு கூடியிருந்த மக்கள் பா.ஜ.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 
thanks to sinthikkavum.net

உணவு சப்ளைக்கு விண்வெளி ஓடம்! ஸ்பேஸ் எக்ஸ்!!


வாஷிங்டன்: விண்வெளியில் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை SPACE X என்ற நிறுவனம் சொந்தமாக்கியுள்ளது.
SPACE X என்ற கலிபோர்னிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆளில்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தேவையான உணவும் உபகரணங்களுமாக சுமார் ஐநூறு கிலோ எடையுள்ள சரக்குகளை சுமந்து செல்கிறது.
இது காலம் வரை அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாசா அமைப்பு மட்டுமே அமெரிக்காவின் விண்வெளி பயணங்களை மேற்கொண்டு வந்தது. ஆனால் இன்றைய பரிசோதனை வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து நாசா படிப்படியாக தனது பணிகளில் சிலவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு விண்கலங்களை இயக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க நாசா அமைப்பு விரும்புகிறது. அதற்கான பரிசோதனை முயற்சிதான் இன்றைய தனியார் ஏவுகணை மற்றும் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஆகும். 
விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்ட சரக்கு விண்கலம் அடுத்த இரண்டு நாட்கள் விண்வெளியில் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. அது அங்கே சென்று அடைந்ததும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை நிறுத்தி அதில் இருக்கும் சரக்குகளை இறக்கிக்கொண்டு அதை மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்புவார்கள்.
அது மீண்டும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினால், எதிர்காலத்தில் இதைப்போன்ற தனியார் விண்கலங்கள் மூலம் சரக்குகளை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டிருக்கிறது. இவ்வகையான பணிகளை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் மற்ற கோள்களுக்கு மனிதர்களை அனுப்புவது போன்ற புதிய  சோதனைகளில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் வேறு சில தனியார் நிறுவனங்களும் இந்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
thanks to sinthikkavum.net

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “ கல்வி விழிப்புணர்வு மற்றும் மேற்ப்படிப்பு வழிகாட்டி முகாம்”

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 25-05-2012 அன்று மாலை 7 மணியளவில் பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் “ கல்வி விழிப்புணர்வு மற்றும் மேற்ப்படிப்பு வழிகாட்டி முகாம்” நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத்தலைவர் I.ரிஹாருத்தீன் B.E., தலைமை தாங்கினார் , மாநில துனை தலைவர் A.சாகுல் சஹீத் B.E., அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்த நிகழ்ச்சி துவங்கியது, திரு. பைரோஸ்கான் (பெற்றொர் ஆசிரியர் கழக துனைத்தலைவர், பெரியபட்டிணம்), திரு. சேகு இபுராஹிம் (கிராம கல்வி குழு தலைவர்) , பெரியபட்டிணம் ஜமாத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாலர் C.A . ரவூஃப் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் மாவட்டத்தலைவர் வழக்கரிஞர். ரவிச்சந்திர ராமவன்னி B.Sc., B.L., கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பொதுச்செயலாலர் அப்துல் சத்தார் MSW.,MBA.,, அல்-கலம் கல்வி அறக்கட்டளையின் தலைமை ஆசிரியர் திரு. காதர் இபுராஹிம் M.A.,B.Ed.,M.Phil.,, பேராசிரியர் ஜவகர் ஃபரூக் M.A.,B.Ed.,M.Phil.,, மவ்லானா ஜஹாங்கிர் அரூசி ஆகியோர் சிரப்புரை ஆற்றினார்கள் ,

அதனைத்தொடர்ந்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாமும் சாதிக்கலாம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது, நூலை தேசிய பொதுச்செயலாலர் C.A . ரவூஃப் வெளியிட வழக்கரிஞர். ரவிச்சந்திர ராமவன்னி B.Sc., B.L., அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த +2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மானவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் பெரியபட்டிணம் அரசு மேல்னிலைப்பள்ளியில் படித்து முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடையம் வழங்கப்பட்டது,
மேலும் கடந்த 23-05-2012 அன்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டப்பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது .
இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட குழு உறுப்பினர் S.தமிமுல் அன்சாரி DCE நன்றியுறையாற்றினார்.

கல்வி கட்டணமா? கவலை வேண்டாம் !! அருகிலுள்ள தரமான பள்ளியில் இலவசமாக பெறுங்கள்

தொடக்க கல்வி முதல் மேல்நிலை உயர்நிலை வகுப்புகள் உட்பட அனைத்து குழந்தைகளும் பள்ளிபடிப்பை தொடரவும் பள்ளிக்கூடம் செல்வதையும் உறுதிசெய்ய பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டின் துவக்கத்தில் "கோ டு ஸ்கூல் - பள்ளி செல்வோம் " பிரசாரத்தை தொடக்கிவைக்கிறது.


பெரும்பாலான மாநிலங்களில் கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்குவதால் இந்த பிரச்சாரம் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் நாடெங்கும் உள்ள பாப்புலர் பிரான்ட் யூனிட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் பாப்புலர் பிரான்ட் செயல்வீரர்களால் அந்தந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிடும் களப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பிரசாரத்தின்போது கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போஸ்டர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது, மாணவர்களை தேடி வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுப்பு மேற்கொள்வது, பள்ளிகூடத்தில் குழந்தைகளை சேர்த்துவிடுவதற்கு உதவிகள் மேற்கொள்வது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி மீண்டும் பள்ளியில் சேர்பதற்கு ஆலோசனை வழங்குவது, மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் நோட்டு புத்தகங்கள் உட்பட அனைத்தும் வழங்குவது, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வது பெற்றோருக்கான ஆலோசனை வழங்குவது போன்ற சேவைகள் உள்ளூர் அளவில் செய்யப்படுகிறது.

குறிப்பாக கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு கல்வியில் தன்னிறைவு பெற்ற கிராமமாக "சர்வ சிக்ஷா கிராம் " திட்டமும் நாடுமுழுவதும் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஸ்கூல் சலோ பிரசாரதின் முக்கியமான அம்சம் என்னவெனில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களிடம் "கல்வியுரிமை சட்டம்" குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதாகும், கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் கல்வி நிலையங்களில் இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளூர் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்குவதை கட்டாயப்படுத்துகிறது . ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எட்டு ஆண்டுகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள பள்ளிகூடத்தில் கல்வி வழங்கப்படும், இதற்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 , 2012 மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலவச கட்டாய கல்வி பெறுவதற்கான குழந்தைகளின் உரிமை சட்டம் 

2009 , ஏப்ரல் 1 ,2009 முதல் அமுலுக்கு வருகிறது
இச்சட்டத்தின்படி மாணவர்களிடம் எந்தவித கல்வி கட்டணத்தையும் வசூலிக்க கூடாது, இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசாங்கத்திடமிருந்து திரும்பபெற்றுக்கொள்ளலாம்.
இச்சட்டத்தின்படி பள்ளிகல்வியை தடுக்கும எந்த கட்டண சுமையையும் அரசாங்கமே ஏற்கும் அதுபோல குழந்தைகளின் எட்டு ஆண்டுகள் பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் மாணவர் சேர்கை முதல் மாணவர் வருகையை உறுதிப்படுத்துவது உட்பட அனைத்து பொறுப்புகளும் அரசை சாரும்.

ஒரு சில சான்றிதல்கள் இல்லை என்று கூறியோ சேர்கை முடிந்துவிட்டது என்று கூறியோ அல்லது ஏதாவது தகுதி தேர்வு என்ற பெயரிலோ மாணவர்களை திருப்பி அனுப்ப முடியாது. குறைபாடுள்ள குழந்தைகள் கூட அனைவருக்கும் பொதுவான மையநீரோட்ட பள்ளிக்கொடத்தில்தான் கல்வி கற்பிக்கப்படவேண்டும்.

எல்லா தனியார் பள்ளிகூடங்களிலும் (சிறுபான்மை அந்தஸ்துள்ள பள்ளிகூடங்கள் தவிர) பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ளவர்கள் மற்றும் பின்தங்கிய சமுதாயங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். எவ்வித கட்டுபாடின்றி மாணவர் சேர்கை நடைபெறவேண்டும் அனைத்து இடங்களும் முழுமையாக நிரப்பப்படவேண்டும். இந்த குழந்தைகளையும் எவ்வித பாகுபாடுமின்றி மற்ற குழந்தைகளோடு சமமாக நடத்தப்படவேண்டும் மற்ற குழந்தைகளுக்கு ஆகும் சராசரி கல்வி கட்டணத்தை அரசு மானியமாக வழங்கும்.
ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி முற்றிலும் இலவசம் என்பதை இந்த சட்டம் உறுதிப்படுத்துகிறது. கல்வியாண்டின் எந்த நேரத்திலும் பள்ளிகூடம் சென்று இந்த சட்டம் மதிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்ப மாணவர்களுக்கு உரிமை உண்டு.
ஏழை குழந்தைகளை பிரித்துவைத்து வெவ்வேறு இடத்திலோ அல்லது வெவ்வேறு நேரத்திலோ பயிற்றுவிக்கவில்லை என்பதை தனியார் மற்றும் அரசு உதவி பெறாத அனைத்து பள்ளிகளும் உறுதிசெய்ய வேண்டும்.
மேற்குறிய குழந்தைகளின் உரிமைகள் ஏதேனும் மறுக்கப்பட்டால் பஞ்சாயத் மற்றும் கல்வி துறை அதிகாரிகளிடமோ அல்லது குழந்தை உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்திடமோ முறையிட முடியும். இறுதியில் நீதிமன்றத்திற்கு கூட எடுத்து செல்ல முடியும் காரணம் ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவது இன்று சட்டமாக்கப்பட்டுள்ளது அது அவர்களின் அடிப்படை உரிமையாகும்.
எனவே தங்கள் பகுதிகளில் வசிப்பவர்கள் யாரும் கல்வி பெறாமல் விடுபட்டு போகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என பாப்புலர் பிரான்ட் அனைத்து மக்கள் இயக்கங்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
மேலும் மொத்த மாணவர் சேர்கையில் இருபத்தைந்து சதவீதம் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்
thanks to popularfront of india

Friday, May 25, 2012

உஸாமாவை கொலைச் செய்ய உதவிய டாக்டருக்கு 33 ஆண்டு சிறை !


Pak doc sakhil afridi gets 33 years jail for helping CIA trace Osama bin Laden
இஸ்லாமாபாத்:உஸாமா பின்லேடனை கொலைச்செய்ய அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவுக்கு உதவியதாக கூறப்படும் டாக்டருக்கு பாகிஸ்தானில் 33 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உஸாமாக் குறித்த தகவல்களை சேகரிப்பதற்கு டாக்டர் ஷகீல் அப்ரிதி ஆபோட்டாபாதில் போலி தடுப்பூசி முகாம் நடத்தியதன் மூலம் தேசத்துரோக
குற்றம் இழைத்ததாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
ரகசியமாக வெளிநாட்டு உளவு அமைப்பிற்கு உதவியை ஒப்புக்கொள்ள இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. உஸாமாவை கொலைச் செய்ததாக அமெரிக்கா அறிவித்த உடனேயே தேசத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய வழக்கில் அப்ரிதி கைது செய்யப்பட்டார்.
கைபர் மாவட்டத்தில் பழங்குடியினர் நீதிமன்றம் அப்ரிதி குற்றம் செய்தார் என்பதை கண்டுபிடித்துள்ளதால் 3500 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. சி.ஐ.ஏவிற்கு உதவ அப்ரிதி, டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்தார் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா கடந்த ஜனவரியில் தெரிவித்திருந்தார்.
அப்ரிதியை கைது செய்த உடன் அவரை விடுதலைச் செய்யக்கோரி அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் அறிக்கை விட்டார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் விருப்பங்களை அப்ரிதி பாதுகாத்தார் என ஹிலாரி கூறினார்.
thanks to asiananban

மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – ஈரான் !


Representatives of the P5+1 group meet with Iran's negotiating team (R) in Baghdad
பாக்தாத்:ஈரான் அணுசக்தி திட்டங்களை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி மேற்கத்திய நாடுகள் தடைகளை தீவிரப்படுத்தி வரும் வேளையில் பாக்தாதில் ஐந்து வல்லரசுகள் மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகியநாடுகளுடன் ஜெர்மன் பிரதிநிதியும்
பாக்தாத் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ளார்.
பி5+1 என சுருக்கமாக அழைக்கப்படும் வல்லரசு நாடுகளின் பிரதிநிதிக் குழுவுக்கு தலைமை வகிப்பவர் ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை காதரின் ஆஷ்டன் ஆவார். ஈரானின் சுப்ரீம் நேசனல் செக்யூரிட்டி கவுன்சில் தலைவர் ஸஈத் ஜலீலி ஈரான் பிரதிநிதிக் குழுவிற்கு தலைமை வகிக்கிறார்.
பேச்சுவார்த்தைக்கு முன்பாக அவர் ஈராக் அதிபர் ஜலால் தலபானி, ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி ஆகியோருடன் பேச்ச்வார்த்தை நடத்தினார். புதன் கிழமை நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இன்றும் பேச்சுவார்த்தை தொடருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாக்தாதில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், இரு பிரிவினருக்கும் இடையேயான கருத்தொற்றுமைக்கு எதிராக ஈரானின் மீது கடுமையான அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் கூறுகின்றன.
இதன் அடிப்படையிலேயே நேற்று முன் தினம் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் யூகியோ அமானோ டெஹ்ரானுக்கு வருகை தந்தார். பாக்தாத் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக பிரிட்டனில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் சிறப்பு கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக புதிய அழுத்தங்களை கொடுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எவ்வித மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலேஹி தெரிவித்துள்ளார்.
ஈரான் அமைதியான காரணங்களுக்காகவே அணுசக்தி தயாரிக்கிறது. இதில் பின்வாங்க மாட்டோம். ஆனால், பாக்தாத் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் என டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
thanks to asiananban

மாயாவதிக்கு சிலை வடித்தவர் காசுக்காக கண்ணீர் வடிக்கிறார் !


உ.பி.,யில் முன்னாள் முதல்வர் மாயாவதியின் சிலைகளை அமைப்பதற்கான பொருட்களை சப்ளை செய்தவர், தனக்கு கொடுக்க வேண்டிய மூன்று கோடி ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்துள்ளார். உ.பி.,யில், கடந்த பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக் காலத்தில், லக்னோ உள்ளிட்ட பல இடங்களில், முதல்வர் மாயாவதி சிலைகள் மற்றும் அவரது கட்சியின் தேர்தல் சின்னமான யானைச் சிலைகள் ஆகியவை
அமைக்கப்பட்டன. இதற்காக, பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன.

புகார்:ராஜஸ்தானைச் சேர்ந்த ராம் ஆவ்தார் சைனி என்பவர், கோமதி நகர் போலீஸ் ஸ்டேஷனில், ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "முன்னாள் முதல்வர் மாயாவதியின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் சிலைகளை அமைப்பதற்கான பொருட்களை சப்ளை செய்யும் பொறுப்பு, எனக்கு அளிக்கப்பட்டது. 

சிலைகள் வடிவமைப்பில் முக்கியப் பொறுப்பு தரப்பட்டது. இதற்காக, 6.21 கோடி ரூபாய் செலவானது. இதில், 3.16 கோடி ரூபாய் மட்டுமே எனக்கு அளிக்கப்பட்டது. மீதமுள்ள 3.05 கோடி ரூபாய், இதுவரை எனக்கு அளிக்கப்படவில்லை. எனவே, என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார். இந்த புகார், உ.பி., அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மாயாவதி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு மின்சாரம் தொடர்பான வேலைகளைச் செய்வதற்காக, ஒப்பந்தம் எடுத்திருந்த புபேந்திர அகர்வால் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர். 

தரமற்ற பொருள்:வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி, தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த குற்றத்துக்காக, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanks to asiananban

Tuesday, May 22, 2012

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம்



ஆந்திரபிரதேசம்: மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு ஐந்தாம் ஆண்டை முன்னிட்டு போலீஸ் நடத்திய பந்தோபஸ்து நாடகம் முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாக பழைய ஹைதராபாத் மக்களை பயமுறுத்தி பீதிவயப்படுத்தியுள்ளது. ஒரு சில அரசியல், மனித உரிமை இயக்கங்கள் தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த கோர நிகழ்வை மறந்திருக்கும் நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் காவல்துறை குறிவைத்து தொந்தரவு செய்து வருகிறது.
குறிப்பாக 17 அன்று இரவு சோதனை என்ற பெயரில் ஏதோ மறுநாள் காவல்துறைக்கும முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரும் போரே நடந்துவிடப்போகிறது என்ற பாணியில் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையை குவித்துள்ளது. இந்த வருடமும் இந்த நாளில் முஸ்லிம்கள் பகுதிகளில் மட்டும் ஒரு பாதுகாப்பற்ற சூழலை பயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி அரசு ஒரு மதசார்பற்ற அரசு என்பதை நிருபிக்க மறுபடியும் தவறியுள்ளது.
காவல்துறை ஏற்படுத்திய இந்த பய சூழ்நிலை காரணமாக (Securitarianism) மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுவதற்கே அஞ்சுகின்ற நிலை காணப்படுகிறது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் அநியாயமாக பலியானோருக்கும பாதிக்கப்பட்டோருக்கும தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டுவருகிறது .
எனவே மதபிரிவினைவாத ஹிந்துத்வா சக்திகளுக்கும் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் பல்வேறு மதசார்பற்ற இயக்கங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் துணையுடன் முஸ்லிம்களை ஜனநாயக வழியில் சட்டரீதியாக ஒருங்கிணைத்து போராட அம்ஜதுல்லா கான் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை இந்திரா பார்க் தர்ணா சௌக் என்ற இடத்தில் நடத்தினார்கள்.
எனவே சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான அரசாங்கத்தின் இத்தகைய மதபாகுபாட்டை எதிர்க்கவும் காவல்துறை கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளை கண்டிக்கவும் மதசார்பற்ற இயக்கங்கள் உட்பட அகன்ற ஹைதேராபாத் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்றும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய சிறுபான்மை ஆணையம் பரிந்துரைத்த பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என பாப்புலர் பிரான்ட் கேட்டுக்கொள்கிறது

இந்திய தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை - முஸ்லிம்களைக் கவரும் முயற்சி


உலகமே கிராமம் போன்று சுருங்கி விட்ட நவீன யுகத்தில் வணிகத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது. தங்கள் பொருட்களை விற்க பல்வேறு உத்திகளை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வகையில் இந்திய  வணிகப் பொருள் தயாரிப்பாளர்கள் பலரும் தங்கள் தயாரிப்புகள் உலகளவில்  வெற்றிகரமாகச் செல்லும் வகையில் தங்கள் பொருட்களுக்கு ஹலால் முத்திரை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள்
உணவு தயாரிப்புகள் மட்டுமின்றி மற்ற அழகுச்சாதனத் தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்புகள் ஹலாலான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதை உலகிற்குத் தெரிவிக்க விரும்புகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக  கெவின்கேர், தாவத், பிகானோ, கோல்ட் வின்னர் ஆயில், வாடிலால் ஐஸ்க்ரீம், அம்ருதாஞ்சன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சிங்கை, மலேஷியா, அரபு நாடுகளில் சந்தையை விரிவுபடுத்தவும், உள்நாட்டு முஸ்லிம்களைக் கவரவும் ஹலால் சான்றிதழ் உதவும் என்று கூறப்படுகிறது.

thanks to asiananban

ஃபேஸ்புக்கில் ஆசிரியைகளை விலைமாதுகளாக சித்தரித்த +2 மாணவன்


மதுரை: மாணவி ஒருவர் சரியாக படிக்காததால் அவரைக் கண்டித்த ஆசிரியைகளின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போட்டு தேவைக்கு அழைக்கலாம் என்று விளம்பரம் செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்தவர் சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஆண் நண்பருடன் சேர்ந்து ஊர் சுற்றுவதாகவும், ஒழுங்காக படிப்பதில்லை என்றும் கூறி ஆசிரியை ஒருவர் அவரை கண்டித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த சந்தியா அந்த ஆசிரியை பழிவாங்க தீர்மானித்தார். இது குறித்து அதே பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் தனது ஆண் நண்பரிடம் தெரிவித்தார். பள்ளி சுற்றுலா சென்றபோது தனது செல்போனில் எடுத்த போட்டோக்களில் தன்னை கண்டித்த ஆசிரியை மற்றும் இன்னொரு ஆசிரியையின் போட்டோக்கள் உள்ளன என்று சந்தியா தெரிவித்துள்ளார்.

உடனே அந்த மாணவன் அந்த 2 ஆசிரியைகளின் போட்டோக்களையும் வாங்கி தேவைக்கு அழைக்கலாம் என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த ஆசிரியைகளின் இமெயில் முகவரிகளையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த மாணவரை நேற்று கைது செய்தனர். 
thanks to asiananban

Sunday, May 20, 2012

பள்ளிகளில் பாலியல் உள்ளிட்ட தொல்லைகள்: தமிழகம் முதலிடம்!


புதுடெல்லி:பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
மாநிலங்களவையில் நேற்று(வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தில் பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் இதுத்தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதாக தமிழ்நாட்டிலிருந்துதான் 115 புகார்கள் ‘தேசிய குழந்தை நல உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்’ (என்.சி.பி.சி.ஆர்.) என்ற அமைப்புக்கு வந்துள்ளது.
மாணவ மாணவிகளை அடிப்பது, அலைக்கழிப்பது, அவமானப்படுத்துவது, பாலியல் ரீதியாகத் தொல்லை தருவது ஆகியவை தொடர்பானவை இந்தப் புகார்கள். மொத்தம் 570 புகார்கள் வந்தன. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக தில்லியிலிருந்து 105 புகார்கள் வந்துள்ளன. ஆந்திரத்திலிருந்து 43 புகார்கள் வந்துள்ளன என்று இ.அஹ்மத் கூறினார்.
thanks to asiananban

முதல்ல அவங்க சொல்லட்டும்; அப்புறம் நாங்க சொல்லுறோம்: மாயாவதி


 உத்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மாயாவதி, அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, ராஜ்யசபா எம்.பி.,யாகியுள்ள அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு, முதன் முறையாக, நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, மாயாவதி பதிலளித்தார்.
ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு,"தற்போதைய சூழ்நிலையில், இதற்கு பதிலளிப்பது சரியாக இருக்காது. எங்கள் கொள்கைக்கும், இயக்கத்திற்கும் தோதான வேட்பாளருக்கே ஆதரவு தரப்படும். இப்போதைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என இரண்டும், என்ன செய்கின்றன என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். யார் தத்தமது வேட்பாளர் என்பதை, இரு அணிகளும் அறிவிக்கட்டும். இந்த அணிகள் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை காத்திருந்து விட்டு, அதன் பிறகு எங்களது முடிவை அறிவிக்கிறோம்' என்றார்.

தெளிவாகட்டும்: பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டால், ஆதரவு தருவீர்களா என்று கேட்டதற்கு, "காங்கிரசின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி தானா என்பதே தெரியவில்லை.அதுவே, இன்னும் தெளிவாகவில்லையே' என்றார். பிஜு ஜனதா தளமும் அ.தி.மு.க.,வும் முன்னிறுத்தியுள்ள முன்னாள் சபாநாயகரும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவருமான பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க முன்வருவீர்களா என்று கேட்டபோது, "அவரது பெயர் முன்னிறுத்தப்பட்டுள்ளதை, பத்திரிகைகள் வாயிலாகவே அறிந்து கொண்டேன். இன்னும் நேரம் உள்ளது. சூழ்நிலைகள் முழுமையடையட்டும். அதன் பிறகு, நாங்கள் முடிவு செய்து அறிவிக்கிறோம்' என்றார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஐந்து ஆண்டு காலம் முழுமையாக ஆட்சியில் இருக்குமா என்ற கேள்விக்கு, "மதவாத சக்திகளை தடுப்பதற்காகவே, மத்திய ஆட்சியை வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் ஆதரிக்கிறது. இந்த ஆட்சி நீடிக்குமா, நீடிக்காதா, கவிழுமா, கவிழாதா என்பதை எல்லாம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்.
thanks to asiananban

மத்திய அரசுக்கு முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க அச்சம்!-ஹர்ஷ் மந்தர் சாடல்!


புதுடெல்லி:சிறுபான்மை மக்கள் வாழும் மாவட்டங்களை மையமாக கொண்டு மத்திய அரசு தயாராக்கிய சிறப்பு திட்டம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர் மத்திய அரசை சாடியுள்ளார்.
முஸ்லிம்களின் நிலைமையை மாற்ற உண்மையிலேயே மத்திய அரசு விரும்புமானால் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் மறுதலிக்கும் போக்கை கைவிடவேண்டும் என்று ஹர்ஷ் மந்தர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம்களுக்கான நலத்திட்டம் என்ற பெயரால் கொண்டுவந்த சிறுபான்மை மாவட்டங்களுக்கான முழுமையான வளர்ச்சித் திட்டம் என்ற நோக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதனை நிறுத்தவேண்டும் என்று கூறும் பாராளுமன்ற குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில் ஹர்ஷ் மந்தர் இதுக்குறித்து விமர்சனத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
திட்டம் அமல்படுத்துவதுக் குறித்து பாராளுமன்ற குழு உண்மையை கூறியதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ள ஹர்ஷ் மந்தர், அவர்கள் கண்டறிந்தவை ஏற்கனவே தாங்கள் கண்டறிந்த காரியங்களுடன் ஒத்துப்போவதாக கூறினார்.
முஸ்லிம்களை திருப்திப்படுத்துகிறார்கள் என்று பா.ஜ.க குற்றம் சாட்டிவிடும் என அஞ்சி முஸ்லிம்களுக்கான சிறப்பு திட்டங்களை தீட்டாமல், சிறுபான்மை திட்டம் என்ற பெயரால் சிறுபான்மை மக்களை மையமாக கொண்ட மாவட்டங்களை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டங்களை துவங்கியதாக ஹர்ஷ் மந்தர் குற்றம் சாட்டுகிறார்.
முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க மத்திய அரசு அஞ்சுவதன் மூலம் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு தொடர் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. 25 சதவீதம் சிறுபான்மை மக்கள் வாழும் மாவட்டங்களுக்கான திட்டங்களை தயார் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை மையமாக கொண்ட திட்டங்களைத்தான் தயாரித்திருக்க வேண்டும். இனிமேலும் இத்தகைய மறுதலிக்கும் போக்கை விட்டுவிட்டு அதற்கு பதிலாக விளிம்புநிலை மக்களான முஸ்லிம்களில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கான வளர்ச்சி திட்டங்களை தயாரிக்க முன்வரவேண்டும் என்று மத்திய அரசை ஹர்ஷ் மந்தர் வலியுறுத்தியுள்ளார்.
thanks to asiananban

அ.தி.மு.க. ஆதரவுடன்தான் இளைய ஆதினமாக பொறுப்பேற்றேன்: நித்யானந்தா பேட்டி


மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள செக்ஸ் அசாமி  நித்யானந்தா, திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலில் தரிசனம் செய்ய வந்தபோது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன். இந்த அரசு எங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் பல இடங்களுக்கு சென்றுவர முடிகிறது என கூறினார்.
மேலும், இவர் மீது ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவிப்பதை குறித்து கேட்டபோது ஜெயேந்திரர் எனக்கு எதிராக இனி குற்றச்சாட்டு எழுப்பினால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
ஆதீன இடம் ஆக்கிரமிப்பு குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஆதீனம் இடத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களை ஓடஓட விரட்டுவேன் என கூறினார்.
ஆசியா நண்பன் கருத்து :
(அட ஒபாமா , பான் கி மூன் ,ஆஞ்சலினா ஜோலி ஆதரவுடன்தான் ஆதீனமாகினீங்கன்னு நம்பிக்கிட்டிருந்தேன், ஆனால் நீங்க என்னவோ சொல்றீங்க.)
thanks to asiananban

புரட்சி தலைவியின் போறம்(பிற்)போக்குதனம்!!


சென்னை: ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது.

தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.
ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.
ஒருவருட சாதனைகள் தாம் (சாதனையா? வேதனையா? என்பது வேறு விஷயம்) பல மொழி விளம்பரங்களின் உள்ளடக்கம். விளம்பரத்திற்கு இந்தியாவில் செலவழிக்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவே. பெரும் நிறுவனங்களோ, கார்ப்பரேட்டுகளோ இதுவரை இவ்வளவு தொகையை விளம்பரத்திற்காக செலவிட்டதில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெரும்பாலான இந்திய பதிப்புகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ், த ஹிந்து, எக்கணாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், பிசினஸ் லைன், மிண்ட், பிசினஸ் ஸ்டாண்டர்ட்ஸ் ஆகிய பத்திரிகைகளில் நாட்டின் பெரும் நகரங்களின் அனைத்து பதிப்புகளிலும் விளம்பரம் வெளியிடப்பட்டது.
முதல் பக்கம் மட்டுமல்ல மூன்று உள்பக்கங்கள் முழுவதும் பல வர்ணங்களில் விளம்பரத்திற்காக பத்திரிகைகள் இடத்தை ஒதுக்கின. சென்னையிலும், மும்பையிலும் வெளிவராத கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மன், டெலிக்ராஃப் போன்ற பத்திரிகைகளிலும் கூட விளம்பரம் வெளியானது. வழக்கமாக பெரும் நிறுவனங்கள் தேச முழுவதும் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறியடிக்கும் விதமாக ஜெயாவின் விளம்பர சாதனை அமைந்துள்ளது.
தமிழகத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பல மணிநேரங்கள் மின் தடையால் மக்கள் பெரும் அவதியுறும் வேளையிலும் மின்கட்டண உயர்வு, கூடங்குள போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், சட்ட ஒழுங்கு சீரழிவு என அரசு நிர்வாகம் சீரழிந்துள்ள சூழலில் அவற்றை மூடி மறைக்க அரசு கஜானாவில் இருந்து இவ்வளவு பெரிய ஆடம்பர விளம்பரங்களை மேற்கொண்டுள்ள ஜெயாவின் அரசு கடந்த ஓர் ஆண்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
thanks to sinthikkavum