Friday, May 4, 2012

ரஞ்சிதாவின் அருளால் மடாதிபதியான நித்யானந்தா!

1) ரஞ்சிதாவுடன் ஆபாச லீலைகளை அரங்கேற்றிய நித்தியானந்தா மாடாதிபதி ஆனார்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீன பதவி வழங்கப்பட்டுள்ளது.அடுத்து காஞ்சி சங்கராச் சாரியாரின் இடத்தை பிடிப்பார் என்று நம்புவோம்.

2) குஜராத் முதல்வர் இனகலவர வெறியர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. 
3) போலி ஆயுத இடைத்தரகரிடமிருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் நேற்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை.

4) அரசியல் கோமாளி சுப்ரமணியம் சுவாமி மீது அவமதிப்பு வழக்கைத் தொடரப் சென்னையை தலைமையிடமாக் கொண்டுள்ள  அட்வான்ஸ் ஸ்டாடஜிக் கன்சல்டிங் ப்ரைவட் லிமிடட். நிறுவனம் முடிவுச் செய்துள்ளது.

5) இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ஏப்ரல் 30-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


6) ஏழை மீனவர் ஒருவர் ஒரே நாளில் கோடிஸ்வரர் ஆனார். கடலில் மீன் பிடிக்க சென்ற இவருக்கு உலகிலேயே விலை உயர்ந்த 380 கோல் ரக மீன்கள் சிக்கின. மீன்களிலேயே மிக உயர்ந்த ரக மீனாக இந்த மீன்கள்தான் கருதப்படுகின்றன.  இந்த மீனின் இதயப் பகுதி, "கடல் தங்கம்' என, அழைக்கப்படுகிறது. இந்த மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பல வகையான மருந்துக்கள் தயாரிக்க இது பயன்படுகிறது.
THANKS TO SINTHIKKAVUM

0 comments:

Post a Comment