தெஹ்ரான்:இதுவரை இஸ்ரேல் மட்டுமே உலகில் அணுஆயுதப் போர் ஏற்பட்டால் இந்த உலகத்தையே அழிப்போம் என்று கூறியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் பிரஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வைத்திருக்கும் அணு ஆயுதம் குறித்து ‘கிரேசென்ட் அண்ட் சாலிடாரிட்டி’ என்னும் அமைப்பைச் சேர்ந்த மார்க் க்லென் என்னும் அரசியல் ஆய்வாளர் பிரஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது; ‘டெல் அவிவ் மட்டுமே தாங்கள் அழிக்கப்பட்டால் தங்களுடன் சேர்த்து இந்த உலகத்தையும் அழிப்போம் என்று கூறியுள்ளதாகவும் வேறு எந்த நாடும் இதுபோல் கூறியது கிடையாது’ என்று இஸ்ரேலை அவர் சாடினார்.
மேலும் இஸ்ரேலின் அணுஆயுதம் குறித்து அந்நாட்டின் முதன்மை ராணுவ பேராசிரியரான மார்டின் வான் க்ரிவேல்ட் இஸ்ரேலின் அணுஆயுத தயாரிப்பு குறித்தும் மற்றும் இஸ்ரேல் நூற்றுக்கணக்கான அணுஆயுதங்களை வைத்திருப்பது குறித்தும் மேலும் அவை அனைத்தும் ஐரோப்பிய தலைநகரங்களை குறிவைத்து நிற்பதாகவும் தெரிவித்திருந்ததை நினைவுக் கூறினார்.
இவ்வாறு இருக்கையில் இஸ்ரேல் மேற்கத்திய ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு தன்மீது உள்ள குற்றங்களை மறைத்தும் ஈரான் போன்ற நாடுகள் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும் உலகத்திற்கு கூறிவருகிறது என்றும் அவர் கூறினர்.
மேலும் இஸ்ரேல் கடந்த 1958 முதலே நெகெவ் பாலைவனத்தில் அணு ஆயுதம் தயாரித்து வருவதாகவும் மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மட்டுமே அணுஆயுதம் வைத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் முன்னால் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டரின் கூற்றுப்படி இஸ்ரேல் அப்போதே 200 முதல் 300 வரையிலான அணுஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment