புதுடெல்லி:நேசனல் சாம்பிள் சர்வே அறிக்கையின் படி இந்திய குடிமக்களில் 65 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
இந்த சர்வேயின் அடிப்படையில் ஒரு இந்திய குடிமகனுக்கு நகரங்களில் அன்றாட வாழ்க்கைக்கு தேவை ரூ.66.10ஆகும். கிராமங்களில் 35.10 ரூபாய் ஆகும்.
இதன் அடிப்படையில் ஒருவருக்கு ஒரு மாதம் நகரங்களில்1984 ரூபாயும், கிராமங்களில் 1054 ரூபாயும் அன்றாட அடிப்படைச் செலவு ஆகும்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையான 120 கோடியில் 65 சதவீத மக்களுக்கும் இத்தொகை வருமானமாக கிடைப்பதில்லை.
ஆனால்,திட்டக் கமிஷனின் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 37 சதவீதம் ஆகும். காரணம், அவர்களின் பார்வையில் இந்தியாவில் ஒருவருக்கு அன்றாட வாழ்வை கழிக்க நகரங்களில் 28.65 ரூபாயும், கிராமங்களில் 22.42 ரூபாயும் போதுமானது. அடிப்படைச் செலவுகளை முந்தைய ஆண்டுகளை விட குறைத்து கடந்த மார்ச் மாதம் திட்டக்கமிஷன் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியானதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையை வாபஸ் பெற்ற மத்திய அரசு புதிய சர்வேயை நடத்த கமிஷனை நியமித்தது.
டெண்டுல்கர் கமிட்டி ஃபார்முலாவை பின்பற்றி திட்டக்கமிஷன் வறுமைக்கோட்டை நிர்ணயிக்கிறது. ஆனால், நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக கொண்டு சராசரி செலவை கணக்கிடும் சாம்பிள் சர்வே அறிக்கையைத்தான் உண்மையான நிலைமைக்கு நெருங்கியது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
thanks to asiananban
0 comments:
Post a Comment