Saturday, May 26, 2012

கல்வி கட்டணமா? கவலை வேண்டாம் !! அருகிலுள்ள தரமான பள்ளியில் இலவசமாக பெறுங்கள்

தொடக்க கல்வி முதல் மேல்நிலை உயர்நிலை வகுப்புகள் உட்பட அனைத்து குழந்தைகளும் பள்ளிபடிப்பை தொடரவும் பள்ளிக்கூடம் செல்வதையும் உறுதிசெய்ய பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டின் துவக்கத்தில் "கோ டு ஸ்கூல் - பள்ளி செல்வோம் " பிரசாரத்தை தொடக்கிவைக்கிறது.


பெரும்பாலான மாநிலங்களில் கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்குவதால் இந்த பிரச்சாரம் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் நாடெங்கும் உள்ள பாப்புலர் பிரான்ட் யூனிட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் பாப்புலர் பிரான்ட் செயல்வீரர்களால் அந்தந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிடும் களப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பிரசாரத்தின்போது கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போஸ்டர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது, மாணவர்களை தேடி வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுப்பு மேற்கொள்வது, பள்ளிகூடத்தில் குழந்தைகளை சேர்த்துவிடுவதற்கு உதவிகள் மேற்கொள்வது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி மீண்டும் பள்ளியில் சேர்பதற்கு ஆலோசனை வழங்குவது, மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் நோட்டு புத்தகங்கள் உட்பட அனைத்தும் வழங்குவது, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வது பெற்றோருக்கான ஆலோசனை வழங்குவது போன்ற சேவைகள் உள்ளூர் அளவில் செய்யப்படுகிறது.

குறிப்பாக கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு கல்வியில் தன்னிறைவு பெற்ற கிராமமாக "சர்வ சிக்ஷா கிராம் " திட்டமும் நாடுமுழுவதும் பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஸ்கூல் சலோ பிரசாரதின் முக்கியமான அம்சம் என்னவெனில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களிடம் "கல்வியுரிமை சட்டம்" குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதாகும், கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் கல்வி நிலையங்களில் இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளூர் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்குவதை கட்டாயப்படுத்துகிறது . ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எட்டு ஆண்டுகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள பள்ளிகூடத்தில் கல்வி வழங்கப்படும், இதற்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 , 2012 மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலவச கட்டாய கல்வி பெறுவதற்கான குழந்தைகளின் உரிமை சட்டம் 

2009 , ஏப்ரல் 1 ,2009 முதல் அமுலுக்கு வருகிறது
இச்சட்டத்தின்படி மாணவர்களிடம் எந்தவித கல்வி கட்டணத்தையும் வசூலிக்க கூடாது, இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசாங்கத்திடமிருந்து திரும்பபெற்றுக்கொள்ளலாம்.
இச்சட்டத்தின்படி பள்ளிகல்வியை தடுக்கும எந்த கட்டண சுமையையும் அரசாங்கமே ஏற்கும் அதுபோல குழந்தைகளின் எட்டு ஆண்டுகள் பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் மாணவர் சேர்கை முதல் மாணவர் வருகையை உறுதிப்படுத்துவது உட்பட அனைத்து பொறுப்புகளும் அரசை சாரும்.

ஒரு சில சான்றிதல்கள் இல்லை என்று கூறியோ சேர்கை முடிந்துவிட்டது என்று கூறியோ அல்லது ஏதாவது தகுதி தேர்வு என்ற பெயரிலோ மாணவர்களை திருப்பி அனுப்ப முடியாது. குறைபாடுள்ள குழந்தைகள் கூட அனைவருக்கும் பொதுவான மையநீரோட்ட பள்ளிக்கொடத்தில்தான் கல்வி கற்பிக்கப்படவேண்டும்.

எல்லா தனியார் பள்ளிகூடங்களிலும் (சிறுபான்மை அந்தஸ்துள்ள பள்ளிகூடங்கள் தவிர) பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ளவர்கள் மற்றும் பின்தங்கிய சமுதாயங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். எவ்வித கட்டுபாடின்றி மாணவர் சேர்கை நடைபெறவேண்டும் அனைத்து இடங்களும் முழுமையாக நிரப்பப்படவேண்டும். இந்த குழந்தைகளையும் எவ்வித பாகுபாடுமின்றி மற்ற குழந்தைகளோடு சமமாக நடத்தப்படவேண்டும் மற்ற குழந்தைகளுக்கு ஆகும் சராசரி கல்வி கட்டணத்தை அரசு மானியமாக வழங்கும்.
ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி முற்றிலும் இலவசம் என்பதை இந்த சட்டம் உறுதிப்படுத்துகிறது. கல்வியாண்டின் எந்த நேரத்திலும் பள்ளிகூடம் சென்று இந்த சட்டம் மதிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்ப மாணவர்களுக்கு உரிமை உண்டு.
ஏழை குழந்தைகளை பிரித்துவைத்து வெவ்வேறு இடத்திலோ அல்லது வெவ்வேறு நேரத்திலோ பயிற்றுவிக்கவில்லை என்பதை தனியார் மற்றும் அரசு உதவி பெறாத அனைத்து பள்ளிகளும் உறுதிசெய்ய வேண்டும்.
மேற்குறிய குழந்தைகளின் உரிமைகள் ஏதேனும் மறுக்கப்பட்டால் பஞ்சாயத் மற்றும் கல்வி துறை அதிகாரிகளிடமோ அல்லது குழந்தை உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்திடமோ முறையிட முடியும். இறுதியில் நீதிமன்றத்திற்கு கூட எடுத்து செல்ல முடியும் காரணம் ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவது இன்று சட்டமாக்கப்பட்டுள்ளது அது அவர்களின் அடிப்படை உரிமையாகும்.
எனவே தங்கள் பகுதிகளில் வசிப்பவர்கள் யாரும் கல்வி பெறாமல் விடுபட்டு போகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என பாப்புலர் பிரான்ட் அனைத்து மக்கள் இயக்கங்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
மேலும் மொத்த மாணவர் சேர்கையில் இருபத்தைந்து சதவீதம் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்
thanks to popularfront of india

0 comments:

Post a Comment