Sunday, May 6, 2012

சீனாவின் பழமைவாய்ந்த பள்ளிவாசலை இடித்தற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவிததுள்ளனர்.






சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த பள்ளிவாசலை
இடிப்பதற்கான எச்சரிக்கை சீன அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,இவ்வார ஆரம்பத்தில் வட மேற்கு சீனாவின் நின்ஸ்கியா பகுதியின் தவ்ஸான் கிராமத்தில் அமைந்திருந்த சீனாவின் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் அந்நாட்டு அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. 19ஆம் நூற்றண்டில் வாழந்த கிங் வம்சத்தினால் 
அமைக்கப்பட்ட இப்பள்ளிவாசலானது சீனாவின் சட்டரீதியான பள்ளிவாசலாக பதிவுசெய்யப்பட்டிருந்தது.எனினும் இப்பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் உள்ள குடியிருப்புக்களை புணர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், இப்பள்ளிவசாலானது சட்டரீதியற்றமுறையில் அமைக்கப்பட்டதாகும் 
என தெரிவித்துள்ளனர்.பள்ளிவாசலை இடிக்கும் நிகழ்வின்போது பொதுமக்களுக்கும் பொலீஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  தவ்ஸான் கிராமத்தில் பள்ளிவாசல் இடிக்கும் விடயத்தில் பாதிக்கப்பட கிராவாசிகள் ஹூய் இனத்தைச்சோந்த முஸ்லிம்களாவர்.சீனாவில் சிறுபான்மையினராக வாழும் 20 மில்லியன் முஸ்லிம்களில்,10மில்லியன் முஸ்லிம்கள் ஹூய் இனத்தை சேர்ந்தவர்களாவர். சீனாவில் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நிகழ்வானது, முஸ்லிம்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையே பதற்ற நிலையைத் தோற்றுவிக்கும் என சீன முஸ்லிம்கள் கவலை கொண்டுள்ளனர்.




சீன முஸ்லிம்களின்மொத்த சனத்தொகை 20மில்லியன் என அரசாங்கத்தின்உத்தியோகபூர்வ சனத்தெகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.க்ஸினிஜாங்,நிங்க்ஸ்கியா,கன்சு மற்றும் கின்ங்ஹாய் போன்ற மகாணங்களில் அவர்கள் அதிகமாகவாழ்கின்றனர். எனினும் 65 முதல் 100 மில்லியன் வரையான முஸ்லிம்கள் சீனாவில் வாழ்வதாகவும்,நாட்டின் மொத்தசனத்தொகையில் 7.5வீதத்துக்கும் அதிகமானவர்களாக முஸ்லிம்கள் காணப்படுவதாகவும் சீனாவின் முஸ்லிம்அமைப்பொன்றின் சனத்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது .

thnaks to muslismulagam

0 comments:

Post a Comment