Friday, May 24, 2013

மண்குடம்


சென்னை இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. இது போன்று பழமை பேசிகள் சிலர் பேசுவதைக் கேட்டிருப்போம் அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. முஸ்லிம் பெயருள்ளவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது.

இந்தியாவின் டெட்ராய்ட் என்று பெயர் எடுக்க சென்னை விரும்புகிறது. நல்ல விஷயம் தான், ஹுண்டாய், போர்டு என்று கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சென்னையைச் சுற்றி தொழிற்சாலைகள் அமைத்துள்ளன. இதனால் பல்வேறு மாநிலத்தவர்களோடு பல்வேறு நாட்டவர்களும் சென்னையில் நடமாடுகிறார்கள்.


இருக்கட்டும் அதனால் என்ன?

தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தைப் படம் பிடித்தாராம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் படம் பிடித்துள்ளார் அவர். அவர் பெயர் முஸ்லிம் பெயர் ஆக வேறு போய்விட்டது. கேட்கவா வேண்டும் நம் காவல்துறை சிங்கங்களுக்கு? உள்ளே தள்ளி வழக்குப் போட்டனர். வழக்கு இப்போது  என்ன ஆனதோ? தெரியவில்லை.

அதிரையைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் என்ன எழவுக்கோ கடற்படை நிலையங்களையும் இன்னும் சில இடங்களையும்  படம் எடுத்தாராம். அவர் மேல் தொடுத்த தேசவிரோத வழக்குகளுக்கோ, பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் கைக்கூலி என்ற குற்றச் சாட்டுக்கோ தக்க ஆதாரம் காவல் சிங்கங்களால் நிரூபிக்க முடியாததால் நீதிமன்றமும் அவரை விடுதலை செய்தது. ஆனால் அவரை பயங்கரவாதியாகவே மாலைமலர் போன்ற நாளிதழ்கள் இன்னும் எழுதி வருகின்றன.

நேற்று சென்னை  பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தில் விஜயகர் என்பவர் அவரது வீட்டைக் காலி செய்யுமாறு நீதிமன்ற உத்தரவுப்படி கோரப்பட்டது. விஜயகர் மதுரைக் காரராம். விஜயகருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்ததால் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தன வீட்டுக்குள்  சென்று தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற ஜெர்மானியக் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து தற்கொலை செய்யப் போவதாகவும், தடுக்க வருவோரை சுட்டுவிடப் போவதாகவும் மிரட்டி உள்ளார். 11 மணிநேரம் நடந்த நாடகத்தை அடுத்து விஜயகருக்கு போரடித்துப் போனதோ என்னவோ, தன தோழியுடன் காரில் ஏற முயன்ற போது சுற்றி இருந்தவர்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

 நம் காவல் சிங்கங்கள் விஜயகர் மனநிலை பிறழ்ந்தவர் என்று சான்றளித்து இன்று அவரை அயனாவரத்தில் உள்ள மனநிலை மருத்துவ விடுதியில் சேர்த்துள்ளனர்.

நமக்குப் புரியாத செய்தி என்னவென்றால், மனநிலை பிறழ்ந்தவருக்கு கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமம் வழங்கும் அளவுக்கா நம் காவல்துறை மனநிலை பிறழ்ந்து  உள்ளது?

ஒருவேளை விஜயகரின் பெயர் விசாம் அல்லது வசீம் என்று இருந்திருந்தால் காவல் துறை மட்டுமின்றி பத்திரிகைகளும் தமிழகத்தில் ஒசாமா ஒற்றர் கைது என்றெல்லாம் பரப்பி இந்நேரம் தமிழகத்தை மாபெரும் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து காத்திருப்பார்கள். என்ன செய்வது? விஜயகர் மண்குடமாகி அல்லவா போய்விட்டார்?

-அபூஷைமா sinthikkavum

பொய் பேசும் படங்கள்!


 
பிரபலங்களின் அந்தரங்கத்தை அவர்களுக்கே தெரியாமல் இவ்வாறு புகைப்படம் பிடித்து ஊடகங்களுக்கு விற்பது புகைப்படத் துறையில் பணம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. இத்தகைய புகைப்படம் எடுப்பவர்களையே பேபரஸி (Paparazzi) என்று குறிப்பிடுவர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி டயானா, தனது காதலன் டோடி பயதுடன் சென்றபோது, அவ்விருவரையும் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் சிலர் பின்தொடர்ந்தபோது, கேமராக் கண்களிலிருந்து தப்பித்துவிடும் பதைபதைப்பில் காரை அதிவேகமாக ஓட்டியதில் விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தனர். டோடி - டயானா கள்ளக்காதல் விவகாரம் இங்கிலாந்து அரச குடும்பத்தில் வாரிசு சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்காக அவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
 
கடந்த 15-20ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மிகச் சிறிய ரகசிய கேமராக்களை உபயோகித்து எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும் காட்சிகள் அனைவரையும் மலைக்க வைத்தன. ஆனால், தற்போது விலை மலிவான, மிகச் சாதாரண செல்பேசியிலேயே நவீன கேமராக்களும் வந்துவிட்டன. விஞ்ஞானம் வியக்க வைக்கிறது.

ஊடகத்துறையின் இந்த அசுர வளர்ச்சிக்குப் புகைப்படத் துறையின் பங்களிப்பு கணிசமாக உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. பாஜகவின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியதை, கையும் களவுமாக விடியோ கேமராவில் பதிவு செய்த ஆதாரத்தைத் தெஹல்கா தளம் வெளியிட்டது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து பங்காரு லட்சுமனன் பதவி இழந்ததும், பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல என்பதை மக்கள் அறிந்து கொள்ளவும் இது உதவியது. இதே போன்று "மோடியின் உத்தரவின் பேரில் குஜராத் முஸ்லிம்களைக் கொன்றழித்தோம்!" என்று புன் சிரிப்புடன் பேசும் கயவர்களின் வீடியோக்களையும் ரகசியமாகப் பதிவு செய்து டெஹல்கா வெளியிட்டிருந்தது. இதனை ஊடகத் துறையில் sting operation என்பர்.

இவ்வாறாக, தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த புகைப்படத்துறை பல்வேறு வழிகளிலும் பிரபலமாகி, சர்வதேச அளவில் சிறந்த புகைப் படங்களுக்கு விருது வழங்குவதும், அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களுக்குப் பின்னணியில் - உண்மையோ, பொய்யோ - ஒரு சிலகதைகளைப் பரப்பி சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் யுக்திகளும் புகுத்தப்பட்டன.

File:Kevin-Carter-Child-Vulture-Sudan.jpg1993 மார்ச் மாதம் சூடானில் பசி பட்டினியால் தவித்த ஒரு குழந்தையையும், அதன் அருகில் பிணம் திண்ணிக் கழுகு கொத்தித் தின்பதற்காகக் காத்திருப்பதையும் இணைத்து படம் எடுத்தார் புகைப்படக் கலைஞர் Kevin Carter - அவர் வந்த பணி "முடிந்து" விட்டதால் அத்துடன் வந்த வழி திரும்பி விட்டார். அப்படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு நல்ல விலைக்கு விற்ற கையோடு அதை மறந்தும் போனார்.
ஆனால் 26 மார்ச் 1993 இல் முதன் முதலாக நியூயார்க் டைம்ஸில் வெளியான அப்புகைப்படம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1994 இல் பிரபலமான Pulitzer Prize விருது பெற்றது.  ஒரே புகைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் புகைப்பட நிபுணர் கெவின். ஆயினும், "பிணம் தின்னிக் கழுகு அருகில் இருக்க, நீங்கள் படம் பிடித்து முடித்த பின்னர் அக்குழந்தையின் கதி என்னவானது?" என்று உலகம் முழுவதும் மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், மன உளைச்சலும் கழிவிரக்கமும் அதிகரித்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற கெவின் கார்ட்டர் 27 ஜூலை 1994 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

வருடங்கள் உருண்டோட, விஞ்ஞான நுட்பங்கள் உச்ச நிலைக்குச் சென்று கொண்டே இருப்பதால், உண்மையா பொய்யா என்று பிரித்தறிந்து கொள்ள முடியாதளவுக்கு கணினி வரைகலையும் சேர்ந்து கொண்டது. சாதாரண புகைப்படத்தை ஃபோட்டோஷாஃப் மென்பொருள் உதவியால் அற்புத புகைப்படமாக மாற்றி மக்களை ஏமாற்ற முடியும். அவ்வாறுதான் இணையதளங்களில் வலம்வரும் பல அரிய புகைப்படங்களின் பின்னணியில் கணினி வரைகலை உத்திகள் மறைந்துள்ளதை அறியாமல் FaceBook  போன்ற சமூக வலைத் தளங்களில் ஒருவருகொருவர் பரப்பியும் பகிர்ந்தும் சிலர் பூரிப்பு அடைகின்றனர்.

சமீபத்தில், பெயர் தெரியாத விஷமி ஒருவர் வடிவமைத்து அனுப்பிய மூன்று தலைகள் கொண்ட நாகத்தை, ஐந்து தலைகள் கொண்ட அற்புத நாகமாக உருமாற்றி வேறொருவர் அனுப்ப, (எவரின் படமாக இருந்தாலும் Water mark சேர்த்து அதை தன் படமாக ஆக்கிக் கொள்ளும் வழக்கம் கொண்ட) தினமலர் நாளிதழ் அதைப் பிடித்து, பக்திப் பரவசம் பொங்க மஹா விஷ்ணுவின் ஆதிசேஷனுக்கு ஐந்து தலைகள் உண்டு என்று புராணக் கதைகளை கட்டியடித்து ஆன்மீகச் செய்தியாக வெளியிட்டிருந்தது. வாசகர்களின் வசவுகள் எழுந்தவுடன் காதும் காதும் வைத்தது போல், செய்தியை சத்தமில்லாமல் தூக்கியது.

மூட நம்பிக்கைகள் என்பவை இந்து மதம் லேபிள்கள் ஒட்டி மட்டும் வெளியாவதில்லை. இதே புனைவுகளில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மின்மடல் குழுமங்களிலும் அவரவர் மதம் சார்ந்த புனிதப் படங்கள் வந்து, அந்தந்த மதங்களின் மகிமைகளைப் பறை சாற்றும் வகையில் அவ்வப்போது பரப்பப்படுகின்றன. டிசைனரின் கற்பனைக்கு ஏற்றவாறு மீனின் வயிற்றில், மரத்தில், வானத்தில் இறைவனின் பெயர் தூள் பறக்கும். இது உண்மையென்று நம்பி, சுபஹானல்லாஹ் , மாஷா அல்லாஹ் என்று பின்னூட்டங்கள் குவியும் போது, கிளப்பி விட்டவர், அப்பாவி முட்டாள்களின் நம்பிக்கையின் மீது ஏறி நின்றி வெற்றிக் களிப்பில் சிரிப்பார்.

அதே போன்று சமீபத்தில் நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் ஒரு புகைப்படம் மின்மடலில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆப்பிரிக்க கறுப்பினச் சிறுமியை மலைப்பாம்பு ஒன்று காலைச் சுற்றிக் கொண்டிருப்பது போன்றும், அச் சிறுமி மரண பயத்தில் அலறுவது போன்றும் எடுக்கப்பட்டுள்ள படம். மற்றொரு புகைப்படத்தில் அச்சிறுமியை புகைப்படம் எடுத்தவர் காப்பாற்ற முயன்றபோது, மலைப் பாம்பு காப்பாற்ற முயன்றவரை சுற்றிக் கொண்டிருப்பது போன்று வெளியாகியிருந்தது.

முதல் படத்தில் புகைப்படம் எடுப்பவரின் கேமராவும் சேர்த்தே பதிவாகியுள்ளதால், மூன்றாவது நபர் ஒருவரால்தான் அந்தப் படம் எடுக்கப்பட்டு இருப்பது தெளிவாகிறது. அதுபோல், பாம்பு சுற்றி வளைத்திருக்கும் படமும் அவரால் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதிலிருந்து இவை அனைத்தும் ஒரு குழுவினரால் எடுக்கப்பட்டுள்ளன என அறியலாம்.

ஒரு சிறிய ஆய்விலேயே, இவை அனைத்தும் டிஸ்கவரி சானலின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக புணைவாக காட்சியமைக்கப்பட்டு (Dramatically) எடுக்கப்பட்ட படங்கள் என்பவை வெளிச்சத்துக்கு வருகின்றன. அதை மறைத்து கறுப்பினச் சிறுமியை வெள்ளையர் ஒருவர் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவது போன்ற கருத்தை விதைப்பதற்காகவே அத்தகைய படங்கள் நேஷனல் ஜியோகரஃபி டிவியின் லோகோவை இணைத்து பொய்யாக மின் மடல்களில், சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகின்றன என்பதை ஓர் Opera.com இணையதளம் தெளிவான ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.
இதே போல், ஒஸாமா பின் லேடனைக் கொன்று விட்டோம் என்று அமெரிக்க படைவீரர்களின் அறிக்கையுடன் கீழ்க்கண்ட படம் வெளியாகி இருந்தது. அமெரிக்க அரசு ஒன்றைச் சொல்லி விட்டால் மறு கேள்வியுண்டா? எனவே, Reuters' மற்றும் the British Press உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களும் அதே படத்தை முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்து பின் லேடனை அமெரிக்க வீரர்கள் கொன்ற "ஆதாரத்தை" வெளியிட்டிருந்தன. இரு நாட்கள் இடைவெளியில், அமெரிக்கா வெளியிட்ட அந்த புகைப்படம் கிராஃபிக்ஸ் செய்யபட்டது எனும் உண்மை வெளியானவுடன் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் விழித்த சர்வதேச ஊடகங்கள், மக்களின் மறதியை முதலீடாகக் கொண்டு, அடுத்தடுத்த சூடான செய்திகளைக் கவர் செய்யச் சென்று விட்டன. (கண்டிப்பாக காண வேண்டிய சுட்டி: http://whatreallyhappened.com/WRHARTICLES/galleryoffakebinladens.php) ஆக, பின் லேடன் கொல்லப்பட்ட புகைப்படமோ, திட்டமிட்டு நடத்தப்பட்ட 9/11 சம்பவமோ, அல்லது சமீப போஸ்டன் குண்டு வெடிப்பு திறமையான சினிமா நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட ஒரு ஒட்டு மொத்த அரசியம் நாடகம் எனும் உண்மைகள் வெளி வந்தாலும், அவை அதிகார வர்க்கத்தின் வலிமையான பூட்ஸ் காலின் கீழ் நசுங்கி, நாளடைவில் செத்துப் போய் விடுவது என்னவோ உண்மை.
பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி ஒரு செய்தியை விவரிப்பதைவிட, ஒரேயொரு வீடியோ அல்லது புகைப்படத்தின் மூலம் சொல்லவரும் கருத்தைச் சூசகமாகச் சொல்லி கருத்துருவாக்கம் செய்ய முடியும் என்பதற்கு இவை சான்றாகும். எனவே, ஊடகங்களில் வலம் வரும் இது போன்ற படங்களின் பின்னணியில் பொதிந்துள்ள மோசடிகளை உணர்ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம்மால் இயலாத பட்சத்தில் கிராஃபிக்ஸ் / கணினியில் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு அனுப்பி தெளிவு பெற்ற பின்பு அனுப்பலாம். [தெளிவு கிடைக்க எவரிடம் கேட்பது? என்று குழப்பமடையும் வாசகர்கள் சத்தியமார்க்கம்.காம் நுட்பக் குழுவினரைத் தாரளமாகத் தொடர்பு கொண்டு தெளிவடையலாம்]
"கண்டதையும் / கேட்டதையும் தீரஆராயாது அப்படியே பரப்புபவன் பொய்யன்" என்ற நபிமொழிக்கும் ஏற்பவும்  "எப்பொருள் யார்வாய் கேட்பினும்.." என்ற குறளுக்கு ஏற்பவும் சமூகத்தில் இவை விளைவிக்கும் கேடுகளைத் தவிர்க்கவாவது பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.


- அதிரைக்காரன் thanks. sinthikkavum

காலித் முஜாஹிதின் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்!-பார் அசோசியேசனில் இருந்து நீக்கம்!

     புதுடெல்லி: போலீஸ் காவலில் வைத்து மர்மமான முறையில் மரணித்த காலித் முஜாஹிதின் வழக்கறிஞர்கள் மீது பாசிச சிந்தனைக்கொண்ட வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஃபைஸாபாத் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழக்கறிஞர்களான ஜமால் காலித், ஜூனியரான முஹம்மது ஸலீம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்ட முஹம்மது ஸலீம் மாவட்ட மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்றுவருகிறார்.
 
     இரண்டு வழக்கறிஞர்கள் மீது போலிஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. காலிதின் மரணத்தில் நீதி கோரி மனித உரிமை அமைப்புகளும், வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்தியிருந்தனர். இதனை சகிக்க முடியாத பாசிச சிந்தனைக் கொண்ட ஃபைஸாபாத் பார் அசோசியேசன் ஜமால் காலித், முஹம்மது ஸலீம், முஹம்மது நதீம், ஸைலுல்ரஹ்மான் ஆகியோரை உறுப்பினர் பதவியில் இருந்து எதேச்சதிகாரமாக நீக்கம் செய்துள்ளது.

     தீவிரவாத வழக்குகளில் அநியாயமாக சிக்கவைக்கப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது என்று பாராபங்கியில் காலித் முஜாஹிதிற்காக ஆஜரான வழக்கறிஞர் ரந்தீர் சிங் சுமன் கூறுகிறார். காலித் முஜாஹிதிற்காக ஆஜரான தன் மீதும் தாக்குதல் நடந்துள்ளது என்று வழக்கறிஞர் முஹம்மது சுஐப் கூறுகிறார்.


     தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவேண்டும் என்று ரிஹாய் மஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உ.பி மாநில சி.பி.எம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண் பரிசோதனை முகாம்!


     கடலூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு நலப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருகிறது.


     அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் கடந்த 13.04.13 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

     கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் K.முஜிப் அவர்கள் தலைமை தாங்கினார். இம்முகாமில் பொது மக்கள் சுமார் 120 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


திண்டுக்கல்லில் பாப்புலர் ஃப்ரண்டின் ஸ்கூல் சலோ பிரச்சார மாநில துவக்க விழா!

    திண்டுக்கல்: சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் கடந்த மாதம் இந்நிகழ்ச்சி துவங்கியது.


     அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில துவக்க விழா 19-05-2013 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத் துறை நடத்திய பள்ளி செல்வோம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா 19-05-2013 அன்று மாலை மணி அளவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டிப்பள்ளி அருகில் திப்பு திடலில் வைத்து பேரணி தொடங்கியது. கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டியதையும் வலியுறுத்திய மாணவ, மாணவிகள், கையில் பதாகைகளையும், முழக்கங்களையும் கொண்ட பேரணி திண்டுக்கல் நகர வீதிகளில் வீறு நடை போட்டது. இப்பேரணி ஹஜ்ரத் அமீருன்னிஷா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. அதன் பின்பு பள்ளி செல்வோம் பிரச்சார துவக்க விழா தொடங்கியது.


     இவ்விழாவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் திண்டுக்கல் மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமாகிய A. கைசர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் A. நைனார் முஹம்மது வரவேற்புரை ஆற்றினார். ஹஜ்ரத் அமீருன்னிஷா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப் பள்ளி வக்பு ஆய்வாளர் M.இப்ராஹீம், தொழிலதிபர் K.A.H. ஷாஜஹான், சமூக ஆர்வலர், புரவலர் N.M.B. காஜா மைதீன், P.C.N.M. ஓரியண்டல் பள்ளி அப்துல் கரீம், சுப்ஹானி ஹாஜியார் பேகம்பூர் பள்ளி ஜமாஅத் கௌரவ உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை மாநில செயற்குழு உறுப்பினர் சபியுல்லாஹ், ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர் A.S. இஸ்மாயில் சிறப்புரையாற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர் K. முஹம்மது அப்துல் காதர், தொழிலதிபர் M. முஹம்மது நஸ்ருதீன், மேட்டுப்பட்டி பங்குத்தந்தை V. செல்வராஜ், தொழிலதிபர் Lion. M. அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநிலத்தில் பன்னிரெண்டாவது வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் அபினேஷ், திண்டுக்கல் ஹஜ்ரத் அமீருன்னிஷா பேகம் ஓரியண்டல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவிகள் ஆகியோருக்கு கேடயம், விருது மற்றும் மணமுடிப்பு வழங்கப்பட்டது.

     இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் நகர தலைவர் M. கலீல் ரஹ்மான் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்(புத்தக பை, நோட்டுகள்) விழா மேடையில் வழங்கப்பட்டன.

     கல்வி சர்வே, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூடங்களில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, பள்ளிக்கூட கிட் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் நடத்தி வருகிறது.


காலித் முஜாஹித் மரணம்: விசாரணை நடத்தக் கோரி உ.பி மாநில சட்டப்பேரவையை நோக்கி எஸ்.டி.பி.ஐ பேரணி!






       உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் 2008 டிசம்பரில் எஸ்.டி.எஃப் படையினரால் கைதுச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹிதின் மர்மமான கஸ்டடி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தியது.



     பேரணியை சட்டப்பேரவை கட்டிடத்தின் 100 மீட்டருக்கு முன்பாக போலீஸ் தடுத்து நிறுத்தியது. ‘முந்தைய மாயாவதி அரசால் நியமிக்கப்பட்ட நிமேஷ் கமிஷன், காலித் முஜாஹிதும், அவருடன் கைதுச் செய்யப்பட்ட டாக்டர்.தாரிக் காஸ்மியும் நிரபராதிகளன்று கண்டறிந்த பிறகும் தற்போதைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று எஸ்.டி.பி.ஐ கூறுகிறது.

     நிமேஷ் கமிஷன் அறிக்கையை உடனடியாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவேண்டும், தாரிக் காஸ்மியை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எஸ்.டி.பி.ஐ பேரணி நடத்தியது.

     இப்பேரணிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் உ.பி மாநில தலைவர் வழக்கறிஞர் ஷரஃபுதீன் அஹ்மத், லக்னோ மாவட்ட தலைவர் முஹம்மது ரஈஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்




     நெல்லை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ மாவட்ட  அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா அவர்கள் தலைமை தாங்கினார் .இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான் கான், மாவட்ட பொது செயலாளர் அன்வர், மாவட்ட துணை தலைவர் சாகுல் உஸ்மானி மற்றும் கான் மாவட்ட செயாலாளர் ஹயாத் முஹம்மத், ஹபீப் ரஹ்மான் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .செயற்குழு கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

     1.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அணைத்து பள்ளிகளிலும் 25%ஏழை மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யபடுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

      2.சமீபத்தில் முக்கூடல் அருகில் தாமிரபரணி நதி கரையில் உரிய அனுமதி இன்றி நடத்தப்பட்ட ஆலைக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நிரந்தரம் ஆக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 



Add caption

மாலேகான் குண்டுவெடிப்பு:அஸிமானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

                         22 May 2013 asimananda
 
     புதுடெல்லி:37 பேர் பலியான மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மீது தேசிய புலனாய்வு ஏஜன்சி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. குண்டுவெடிப்பில் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை அநியாயமாககைதுச் செய்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்று தெளிவுபடுத்தியே இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
 
     அஸிமானந்தா, பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளான லோகேஷ் சர்மா, ராஜேந்தர் சவுத்ரி, டான்சிங், கொலைச்செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா, அமித் சவுஹான் ஆகியோரின் பெயர்களும்குற்றப்பத்திரிகையில் இடம்பெறும்.இதில் டாங்கே, கல்சங்கரா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகளில் பங்கும்குறிப்பிடப்படும்.
 
     ஷபீர் அஹ்மத் என்ற முஸ்லிம் இளைஞரின் கோடவுனில் இருந்து வெடிக்குண்டுகளை கைப்பற்றியதாக கூறி மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை முஸ்லிம் இளைஞர்களை மாலேகான் குண்டுவெடிப்பில் கைதுச் செய்திருந்தது. என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பதன் மூலம் இவர்கள்விடுவிக்கப்படுவார்கள்.தற்போது ஜாமீனில் இருக்கும் இவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கோரவும் உரிமை உண்டு.ராம்ஜி கல்சங்கராவும், சந்தீப் டாங்கேவும் தயாரித்த குண்டுகளை சுனில் ஜோஷி, ராஜேந்தர் சவுத்ரிக்கும், டான்சிங்கிற்கும் வழங்கியதாக என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது. இவர்கள் தாம் வெடிக்குண்டு பொருத்திய மோட்டார் சைக்கிளை மாலேகான் மஸ்ஜிதுக்கு அருகே கொண்டு வைத்துள்ளனர்.குண்டுவெடிப்பிற்கு தேவையான பணத்தை திரட்டியதும், குற்றவாளிகளை தலைமறைவாக தங்கச்செய்ய ஏற்பாடுகளை அஸிமானந்தா செய்துள்ளார்.
 
     2010 நவம்பர் மாதம் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தா, இவ்வழக்கில் முதன் முதலாக வாக்குமூலம் அளித்தஹிந்துத்துவா தீவிரவாதி ஆவார். விசாரணை வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ள போதும் குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை என்.ஐ.ஏ இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக பழைய ராணுவ தளவாடங்கள் விற்பனைச் செய்யும் இடங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தூர் மற்றும் நாசிக்கில் ராணுவ முகாம்களுக்கு அருகே பழைய இரும்புப் பொருட்களை விற்கும் பகுதிகளில் இருந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெடிப்பொருட்களை வாங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
     கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தை மாலேகான் குண்டுவெடிப்புடன் தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வழக்கில் புரோகித்தை என்.ஐ.ஏவால் இதுவரை விசாரணைச் செய்ய இயலவில்லை.விசாரணைச் செய்ய என்.ஐ.ஏவிடம் தன்னை ஒப்படைக்க கூடாது என்று புரோகித், அளித்த மனு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. புரோகித் கஸ்டடியில் கிடைத்தால் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. சுனில் ஜோஷி கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்தியதில் லோகேஷ் சர்மாவும், ராஜேந்தர் சவுத்ரியும்தான் குற்றவாளிகள் என்பதை என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.செய்தி:தேஜஸ்

சட்டீஷ்கர் போலி என்கவுண்டர்:உயிரிழந்த அப்பாவி கிராமவாசிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு!

22 May 2013
 
     புதுடெல்லி:சட்டீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினர்  விதை தூவும் திருவிழா கொண்டாட்டத்தில்ஈடுபட்டிருந்த அப்பாவி கிராமவாசிகள் மீது அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தி எட்டுபேரை கொலைச் செய்தனர்.இச்சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவிகிராமத்தினர் 8 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 9 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
     கடந்த வாரம் நடந்த மோதலில் உயிரிழந்த 8 பேரில் 3 பேர் சிறுவர்களாவர். இவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதில் ரூ. 3 லட்சம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தனி நிதியத்திலிருந்தும்,  ரூ. 3 லட்சம் தொகையானது தீவிரவாத வன்முறையால் பாதிப்புக்குள்ளாவோரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிதியத்திலிருந்தும், ரூ. 1 லட்சம் பாதுகாப்பு சார்ந்த செலவினத்துக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதென மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 
     சிஆர்பிஎப் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீதிபதி வி.கே. அகர்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே குழுவினர்தான் இப்போது கடந்த ஆண்டு ஜூன் 28 மற்றும் 29-ம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல்:குஜராத் அமைச்சருக்கு எதிராக விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

           22 May 2013
 
     அஹ்மதாபாத்:400 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் குஜராத் மோடி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புருஷோத்தம் சோலங்கி மீது விசாரணை நடத்த காந்தி நகர் சிறப்பு நீதிமன்றம் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.ஆறு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
     ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவுச் செய்யுமாறு நீதிபதி ஜி.கே.உபாத்யாய தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.விசாரணையை ஊழல் ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்குமாறு காந்தி நகர் போலீஸ் சூப்பிரண்டிற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.இஷாக்மராடியா என்பவர் சோலங்கி மீது புகார் அளித்துள்ளார். மாநிலத்தின் 58 நீர் நிலைகளில் மீன் பிடிக்க சட்டவிரோதமாக ஒப்பந்தம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அமைச்சரை விசாரணைச் செய்ய அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி மராடியா உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அமைச்சரவை மட்டத்தில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அமைச்சரவை விசாரணைச் செய்ய அனுமதி அளிக்கவேண்டாம் என்பது மோடி அரசின் தீர்மானமாகும்.ஆனால், அமைச்சரவையின் தீர்மானத்தை மீறி ஆளுநர் கமலா பெனிவால் சோலங்கியை விசாரணைச் செய்ய அனுமதி வழங்கினார்.இதனைத் தொடர்ந்து மராடியா ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தை அணுகினார்.அமைச்சருக்கு எதிரான புகார் தொடர்பாக விசாரணைச் செய்ய ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம், 2012 ஆகஸ்ட் மாதம் மாவட்ட சூப்பிரண்டிற்கு உத்தரவிட்டது.2012 அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரியிருந்தது.
 
     2009-ஆம் ஆண்டு இவ்வழக்கு தொடர்பான ஊழல் நடந்தது.அன்று மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் சோலங்கி.கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்ற சோலங்கிக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.இவ்வழக்கில் சி.பி.ஐ விசாரணைக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டிருந்தார் மராடியா.