அறபுலகில் நிகழ்ந்துவரும் மாற்றங்களுக்கு மத்தியில் ஸியோனிஸத்தின் எதிர்காலம் குறித்து உரையாடும் கட்டுரை ஒன்றை பிரித்தானியாவின் பிரபல நாளேடான ‘த இன்டிபென்டன்ட்‘ (The Independent) வெளியிட்டிருக்கின்றது. மேரி டேச் பிஸ்கி எழுதிய ‘‘2048 இல் இஸ்ரேல் இருக்குமா?”எனும் இவ்வாக்கம் இஸ்ரேல் தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இஸ்ரேல் உலக வரைபடத்தின் நிரந்தரமாக இல்லாமல் போகும் வாய்ப்புள்ளது என்று அவர் எழுதியிருக்கிறார். அதற்கான பல காரணங்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
முதலாவது, இஸ்ரேல் மேற்குக் கரையில் பாரிய செலவில் தடுப்புச் சுவரை எழுப்பி அரண் அமைத்த போதிலும், அதன் எல்லைகள் பாதுகாப்பற்றவையாகவே உள்ளன. ஏனைய நாடுகளுடனான எல்லைகள் இலகுவில் ஊடுருவ முடியுமானவை.
சிரியாவின் தற்போதைய நிகழ்வுகள் மேலும் கூர்மையடைந்தால், அது உள்நாட்டு யுத்தத்திற்கு வழியமைக்கலாம். சிரியாவில் ஏற்படும் குழப்பம் இஸ்ரேல் மீது மிகப்பெரும் அபாயங்களைக் கொண்டுவரக் கூடும்.
அவ்வாறே எகிப்துடனான நீண்ட தென்பகுதி எல்லைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறலாம். தற்போதைய குழப்பங்கள் ஜோர்தான் மற்றும் மேற்குக் கரைக்கு நகர்ந்தால், இஸ்ரேல் என்றுமில்லாதவாறு பாரிய பாதுகாப்பு அபாயத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
அறபுப் புரட்சிகளின் பின்னர் பிராந்திய நிலவரங்களுடன் இஸ்ரேல் கொண்டுள்ள தொடர்புகள் இரண்டாவது காரணியாகும். அறபு நாடுகளில் ஜனநாயக தேர்தல்கள் நடைபெறுவதால், இஸ்லாமியவாதிகள் ஆட்சியைப் பிடிக்கும் சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு நிகழுமாயின், பிராந்தியத்திலிருக்கும் ஒரேயொரு ஜனநாயக நாடு என்று அடிக்கடி புகழப்படும் இஸ்ரேலின் அந்தஸ்து இல்லாமல் ஆகிவிடும்.
மூன்றாவது, ஸியோனிஸத்திற்குள்ளால் திகழ்ந்துவரும் உள்ளார்ந்த மாற்றங்கள். களத்தைவிட்டு தூரமாகிய அதேவேளை, நாஸி படுகொலை போன்று இஸ்ரேலியர்களை ஒன்றிணைத்த காரணிகளை விட்டும் தூரமாகும் புதிய தலைமுறையொன்று அங்கு உருவாகி வருகிறது.
இன விகிதாசாரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடிப்படைவாத யூதர்களின் விகிதாசாரம், அறபிகளது விகிதாசாரம், வேகமாக அதிகரித்துவரும் ரஷ்யாவிலிருந்து வந்து குடியேறிய யூதர்களின் இரண்டாவது தலைமுறையினரின் எண்ணிக்கை என்பவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இஸ்ரேல் இனியும் உயிர்பிழைக்குமா என்ற பெரும் கேள்வியை இவை எழுப்பியிருக்கின்றன.
source-meelpaarvai.net nov30/11
* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.
ReplyDelete