Sunday, December 18, 2011

எகிப்தில் மீண்டும் மோதல் - 10 பேர் மரணம், 350 பேர் படுகாயம்


எகிப்தின் தலைநகரமான கெய்ரோவில் கேபினட் கட்டிடத்தின் முன்னில் போராட்டம் நடத்திய போராட்டத்தில் எதிர்ப்பாளர்களும், பாதுகாப்பு படையினரும் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

கடந்த வியாழக்கிழமை போராட்டம் நடத்திய இளைஞரை போலீஸ் அடித்து உதைத்த வீடியோ படங்கள் இணையதளம் வழியாக வெளியானதை தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் வீதியில் இறங்கி போராடத் துவங்கினர்.

ராணுவ கவுன்சிலை கலைத்துவிட்டு வெகு விரைவாக ஆட்சியை சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தண்ணீர் பீரங்கி மற்றும் கல்வீசி எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாதுகாப்பு படை. காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.
thanks to yarlmuslim blogger

0 comments:

Post a Comment