Friday, December 16, 2011

மலேசியா; கிப்பன் வகை மனித குரங்கு தாக்கி சிறுவன் படுகாயம்.




மலேசிய உயிரியல் பூங்காவில், பார்வையாளராக வந்திருந்த சிறுவன் ஒருவனை கிப்பன் வகை மனிதக் குரங்கு கடித்தது.

மலாக்கா பகுதியிலுள்ள உயிரியல் பூங்காவுக்கு முகமது அஃபிக் ஹசிக் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வந்திருந்தான். அவனது பெற்றோர்கள் அங்குள்ள மற்றொரு இடத்தில்

ஓய்வாக இருந்தபோது சிறுவன் முகமது, மற்ற பார்வையாளர்களுடன் மனிதக் குரங்கு இருந்த பகுதிக்கு வந்துள்ளான். அப்போது மரத்திலிருந்து கீழே இறங்கி வந்த குரங்கு திடீரென்று பார்வையாளர்களைத் தாக்கியது. அனைவரும் அலறியபடி தப்பியோடினர்.

ஆனால் சிறுவனான முகமது, குரங்கிடம் மாட்டிக் கொண்டான். குரங்கு அவனது வலது காலைக் கடித்துக் குதறியது. குரங்கிடமிருந்து மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். முகத்திலும், காலிலும் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளான முகமதுவின் நிலை அபாயகரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தக் குரங்கு ஏற்கெனவே ஒரு சிறுவனைத் தாக்கியுள்ளது.
தாக்குதல் குறித்துத் தெரிவித்த உயிரியல் பூங்கா அதிகாரிகள், குறிப்பிட்ட அந்தக் குரங்கை தனியாகப் பிரித்து வைத்துள்ளதாகவும், தனக்கென உள்ள இடத்திலிருந்து அந்தக் குரங்கு எப்படி பூங்கா பகுதிக்கு வந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்தனர். பொதுவாகவே கிப்பன் வகை மனிதக் குரங்குகள் தங்களை யாரேனும் தொந்தரவு செய்தால் மட்டுமே தாக்கும் தன்மையுடையவை.

as
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment