Friday, December 16, 2011

பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதைவிட ஆப்கானிஸ்தானுக்கு உதவுவது சிறந்தது - ஹலாரி


அமெரிக்க - பாகிஸ்தான் நாடுகளிடையே தற்போது ஸ்திரத்தன்மையற்ற நிலை இருந்து வருகிறது. இதன்காரணமாக, இருநாடுகளுக்கிடையேயான உறவின் பிணைப்பு வலுவின்றி உள்ளதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

 தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து‌கொண்ட பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தான் உடனான நட்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை, இதை நாங்கள் எக்காலத்திலும் மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானிற்கு நிதியுதவி செய்வதைக் காட்டிலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு தாங்கள் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாக அவர் த‌ெரிவித்தார்.
yarlmuslim

0 comments:

Post a Comment