2011-ஆம் ஆண்டு முடிவுறும் வேளையில் பிரிட்டன் மனிதஉரிமையை பாதுகாப்பதில் மிகவும் பின் தங்கியுள்ளது. இவ்வாண்டு நடந்த பல்வேறு சம்பவங்களில் அரசு அணுகுமுறைகளை ஆராயும் வேளையில் பிரிட்டனின் மனித உரிமை பாதுகாப்பில் மிகவும் மோசமான ஆண்டாக 2011 மாறியுள்ளது.
அரசின் 2011-ஆம் ஆண்டைய தீவிரவாத எதிர்ப்பு சட்டம்தான் மனித உரிமை மீறலுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இச்சட்டம் மனிதஉரிமைகளை வெளிப்படையாக மீறுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட அமைப்புகள் கூறியுள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதுதான் பிரிட்டனின் தீவிரவாத எதிர்ப்பு சட்டம் என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.
ஃபலஸ்தீன் தலைவர் ஷேக்ரஈத் ஸாலிஹ் கடந்த ஜூன் 28-ஆம் தேதி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார். இதனை மனிதஉரிமை மீறல் என பிரிட்டன் நீதிமன்றம் கூறியது.
இஸ்ரேலிய போர்க் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்கான ஜெனீவா கன்வென்சனின் பொது சட்டப் பிரிவை திருத்துவதற்கான அரசின் தீர்மானம், செலவுகளை குறைப்பதற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல், லண்டனில் கலவரத்தை உருவாக்கிய டாட்டன் ஹாம் மார்க்டக்கனின் கொலை, கலவரக்காரர்களை கூட்டாக கைது செய்தது, சமூக இணையதளங்கள் மீது கட்டுப்பாட்டை விதிக்க முயற்சி ஆகியன மனிதஉரிமைகள் மீது அரசு நடத்திய அத்துமீறல்களுக்கான உதாரணங்களாகும்.
மேலும் பிரிட்டனில் சிறுபான்மையின வகுப்பினரான முஸ்லிம்கள் மீது நடக்கும் இனரீதியான தாக்குதல்களும் மனித உரிமையை பாதுகாப்பதில் சவாலாக எழுந்துள்ளது.
thanks to yarlmuslim
0 comments:
Post a Comment