இந்தியாவின் ஆந்திரா நெல்லூர் மாவட்டத்தில் அண்மையில்கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்தார் .அப்பெண்ணுக்கு இரத்தம் ஏற்றிய போது, எய்ட்ஸ் கிருமி (HIV) தொற்றிய இரத்தத்தை ஏற்றிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, அப்பெண்ணுக்கும், பிறந்த சிசுவுக்கும் புதிய மருத்துவ சோதனைகளை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், முந்தைய, பிந்தைய பரிசோதனைகளின் இரத்த மாதிரிகள் சேகரிக்க ப்பட்டு மேலாய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனவென்றும், ஓரிரு நாள்களில் முடிவு தெரியவரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருபதே வயதான ஹசீனா என்னும் அப்பெண் ஆரோக்கியமானவர் என்றும், பிரசவத்திற்கு முந்தைய சோதனைகளில் ஹெச் ஐ வி கிருமியோ, பிற குறைபாடுகளோ இல்லை என்று தெரியவந்ததாம்.ஆனால் பிரசவத்திற்குப் பிந்தைய சோதனையில் ஹெச் ஐ வி கிருமி தொற்றியுள்ளதாகக் காணப்பட்டதாம் . இதனால் அவருடைய குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர்.
நெல்லூரிலுள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூன்று அலகுகள் குருதி தானம் வழங்கியதாம். அவை தொற்றுக்கிருமிகளைக் கொண்டிருந்ததாக கோபமுற்ற உறவினர்கள் அந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
thank u yarlmuslim
0 comments:
Post a Comment